அமெரிக்காவிலுள்ள வாகன வடிவமைப்பு நிறுவனம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக மரத்தாலான ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது.
இந்த வண்டியில் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். பாதுகாப்பும் அதிகம் என்கின்றனர் வடிவமைத்தவர்கள்.
1134 கிலோகிராம் எடையுள்ள இந்த கார், பொதுவான கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எடை குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு காலன் பெட்ரோலில் 36 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என்கிறார் இதை வடிவமைத்த ஜோ கார்மன்.
இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படாத இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.
உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு அப்படின்னா மாட்டுவண்டி, தள்ளுவண்டி எல்லாம் மரத்தினால செய்தது இல்லையா என கோயம்புத்தூர் குசும்புடன் விதண்டாவாதம் பண்ணக்கூடாது.. சரியா ?