(குரங்கு இப்படிச் சொறியாதே ! )
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா, ஹர்பஜன் என்ன செய்தாலும் அதை ஒரு பெரிய பிரச்சனையாகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன ஆஸ்திரேலிய பத்திரிகைகள்.
நேற்று ஹர்பஜன் சொறிந்ததைக் கூட குரங்கு பாஷை காட்டினான் என்று புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய மீடியாவுக்கு தங்கள் அணியைப் பற்றிப் பேச இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல, எனவே அடுத்த அணியினரின் நடவடிக்கைகளை துரத்தித் துரத்தி கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
ஹர்பஜன் குழப்பத்தில் இருக்கிறார். இனிமேல் சொறிவது, இருமுவது, தும்முவது, தின்பது, தூங்குவது, அதுக்கு இதுக்கு போவது எல்லாவற்றுக்கும் ஆஸ்திரேலிய மீடியாவிடமும், ஐ.சி.சி யிடமும் அனுமதி பெற வேண்டும் போலிருக்கிறது.
ஒவ்வொன்றாய் செய்து காட்டி, இது குரங்கு மாதிரி இல்லையே ? இது சைமண்ட்ஸ் மாதிரி இல்லையே என்று உறுதி படுத்திக் கொண்டு தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது.
ஹர்பஜன், எங்கெங்கே கேமரா இருக்குன்னு தெரியல.. அதனால, எதுக்கும் வீட்டுக் கதவு சன்னலையெல்லாம் நல்லா சாத்தி வெச்சுக்கோங்க. குறிப்பா வீட்டு பாத் ரூம் கதவு !!
மாறி மாறி எச்சில் துப்பி பந்தை ஒரு இடத்தில தேய்க்கிறாங்களே அத விடவா இது மோசம்!!!!!!!
LikeLike
good comments. keep it up
LikeLike
கர்ச்சிக்கும் ஹர்பஜனைப் பார்த்து கங்காருக்களுக்கு வயிற்றோட்டம் போல……
LikeLike
இம்சை அரசன் கிட்ட மாட்டின பால பத்திர ஓணாண்டி மாதிரி ஆகிட்டாரு ஹர்பஜன்…
LikeLike
//மாறி மாறி எச்சில் துப்பி பந்தை ஒரு இடத்தில தேய்க்கிறாங்களே அத விடவா இது மோசம்!!!!!!!//
பொது இடத்துல தேய்க்கல இல்ல 🙂
LikeLike
நன்றி அருள்.
LikeLike
//இம்சை அரசன் கிட்ட மாட்டின பால பத்திர ஓணாண்டி மாதிரி ஆகிட்டாரு ஹர்பஜன்…//
ஹா..ஹா.. சூப்பர் 🙂
LikeLike