போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.
எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?
ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !
இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.
திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.
தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.
தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.
தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.
லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.
லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.
இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.
உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.
இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.
உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.
மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.
செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.
செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.
பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.
செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.
விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.
உதாரணமாக,
விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.
இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !
ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.
இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்.
இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கண்டிப்பாக இவன் சொல்வது உண்மையாக இருக்கும் என்றே நினைக்கிறேன், மறுஜென்மம் பெற்று தனது பழைய ஜென்மத்தை பற்றிக் கூறியவர்கள் இருக்கவே செய்கிறார்கள், செவ்வாயில் பிறந்ததாக இவன் கூறுவது உண்மையா என்பது இன்னும் ஒரு வருடத்தில் தெரிந்துவிடும் , காத்திருப்போம்.
LikeLike
!!!
LikeLike
என்ன கொடுமை சார் இது!!! வாழ வேண்டிய வயசில நான் பொட்டுண்ணு போகவேண்டி ஆகிடுமொ???
LikeLike
Interesting!!!
இந்த செய்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது???
சுட்டி ஏதாவது இருக்கா???
பையன் போன ஜென்மத்துல science fiction எழுத்தாளரா இருந்திருப்பானோ?? 😉
LikeLike
Pingback: கில்லி - Gilli » Blog Archive » 2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!
Xavier, What happened to you? :-))
LikeLike
அப்போ பூமி தாய் அடுத்த வருஷம் வாயை திறந்து நம்மை எல்லாம் திங்கப் போறாளா?
“சிரிங்கடா, சிரிங்க… இன்னும் பத்தே மாசந்தேன்… பூமாதேசி சிரிக்கப் போறா, எல்லாம் மண்ணுக்குள்ள போக போறீங்க”
இந்த வசனத்தை ஏதோ ஒரு படத்துல கேட்ட மாதிரி ஞாபகம் !!! 🙂
நான் சொத்து எதும் சேர்க்கப் போறதில்லீங்கோ!!!!!!
LikeLike
//என்ன கொடுமை சார் இது!!! வாழ வேண்டிய வயசில நான் பொட்டுண்ணு போகவேண்டி ஆகிடுமொ???//
எனக்கும் அதே பீதிதான்.எங்கு படித்தீர்கள் இதை செவியர் சார்?
சிரிப்பதா அழுவதான்னு தெரியாமல் விழிக்கும்
kamala
LikeLike
ஏன் சார், அவன் ஏதாவது இடம் குறிப்பிட்டுச் சொன்னனல் அந்த இடத்துக்குப் போகி விடுகிறோம்.
சின்னவங்க நல்லா இருக்கணும்.
:(((
:))
LikeLike
2009???? So I hav 2 be very active…. In??
LikeLike
link pls…
LikeLike
A bag of salt free:
http://www.rumormillnews.com/cgi-bin/forum.cgi?read=120003
Try searching on “boris kipriyanovich” – googlaandavar thunai!
LikeLike
சிறுவன் சொல்லும் தகவல்கள் உண்மை என்றே கருதுகிறேன்.
இந்த உலகம் முடிவின் விளிம்பில் நிற்கிறது என்பதை இறைவன்
எனக்கு தெரியப்படுத்தி உள்ளார்
LikeLike
நான் முதலில் http://english.pravda.ru/science/mysteries/104375-0/ இந்த இடத்தில் தான் தகவலை வாசித்தேன். இது ரஷ்யாவின் நம்பகத் தன்மை உடைய ஒரு இணைய தளம். தகவல் வாசித்தபின் உண்மையானது தானா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன்.
வெகு சுவாரஸ்யமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.
LikeLike
//செவ்வாயில் பிறந்ததாக இவன் கூறுவது உண்மையா என்பது இன்னும் ஒரு வருடத்தில் தெரிந்துவிடும் //
அதே… ரொம்ப நாள் எதையும் மறைக்க முடியாது !
LikeLike
//என்ன கொடுமை சார் இது!!! வாழ வேண்டிய வயசில நான் பொட்டுண்ணு போகவேண்டி ஆகிடுமொ???
//
என்ன இப்படி சொல்லிட்டீங்க. தப்பிப் பிழைக்கிறதுல நீங்க ஒருத்தராச்சே. வேணும்னா பையன் கிட்டேயே கேட்டுடலாமே 🙂
LikeLike
//Interesting!!!
இந்த செய்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது???
சுட்டி ஏதாவது இருக்கா???
பையன் போன ஜென்மத்துல science fiction எழுத்தாளரா இருந்திருப்பானோ??
//
நன்றி CVR. போன ஜென்மத்துல எழுத்தாளரா இருந்தானோ இல்லையோ, இந்த ஜென்மத்துல நம்மள எழுத வெச்சுட்டான் 🙂
சுட்டி கொடுத்திருக்கிறேன். http://english.pravda.ru/science/mysteries/104375-0/ இதற்கு உள்ளே இன்னும் சில சுட்டிகள் உள்ளன.
LikeLike
//Xavier, What happened to you? :-))//
என்னத்த சொல்ல… 🙂
LikeLike
//“சிரிங்கடா, சிரிங்க… இன்னும் பத்தே மாசந்தேன்… பூமாதேசி சிரிக்கப் போறா, எல்லாம் மண்ணுக்குள்ள போக போறீங்க”//
ஹா..ஹா… டைமிங் 🙂
LikeLike
//ஏன் சார், அவன் ஏதாவது இடம் குறிப்பிட்டுச் சொன்னனல் அந்த இடத்துக்குப் போகி விடுகிறோம்.
சின்னவங்க நல்லா இருக்கணும்.
:(((
:))//
அவன் என்ன “செவ்வாய்” ன்னு தான் சொல்லுவான். நாம என்ன வைரமுத்துவா .. உன் செவ் வாயில் உள்ளதடி எனது ஜீவன் ன்னு பாட்டு பாட 🙂
LikeLike
//2009???? So I hav 2 be very active…. In??//
2009 வரையாச்சும் 😉
LikeLike
//சிறுவன் சொல்லும் தகவல்கள் உண்மை என்றே கருதுகிறேன்.
இந்த உலகம் முடிவின் விளிம்பில் நிற்கிறது என்பதை இறைவன்
எனக்கு தெரியப்படுத்தி உள்ளார்//
திருந்த இன்னொரு சந்தர்ப்பம்ன்னு சொல்லுங்க 🙂
LikeLike
இச்சிறுவன் கூறுவது உண்மையென்றால் , நாம் ( நம் விஞ்ஞானிகள் ) ஏன் அவனிடம் , செவ்வாய் கிரகம் பற்றிய பல அறிய , புதிய தகவல்களை கண்டறியக் கூடாது ……இதற்காக மெனக்கெட்டு ஏவுகணைகள் எல்லாம் விட்டுக்கொண்டு , நாசா ஏன் பண மற்றும் நேர விரயம் செய்ய வேண்டும்…. இல்லையா ??!!
யாரங்கே …..கூப்பிடுங்கள் அமெரிக்க உளவுத்துறையை…..வேண்டாம் வேண்டாம் ….நம் அப்துல் கலாமிடம் ஆலோசனை கேட்போம் முதலில் …..
ஹ் ஹஹா ! ஹ் ஹஹா
LikeLike
உண்மையைச் சொல்லவேண்டுமெனில், விஞ்ஞானிகள் அவனிடம் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, ஏன் செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலங்கள் எல்லாம் எரிகின்றன என்ற கேள்விக்கு, இவற்றிலிருந்து வரும் கதிர்கள் செவ்வாய் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால் கதிர்கள், சமிக்ஞைகள் மூலம் அழிக்கிறார்கள் என்கிறான் சிறுவன் 🙂
//இச்சிறுவன் கூறுவது உண்மையென்றால் , நாம் ( நம் விஞ்ஞானிகள் ) ஏன் அவனிடம் , செவ்வாய் கிரகம் பற்றிய பல அறிய , புதிய தகவல்களை கண்டறியக் கூடாது ……இதற்காக மெனக்கெட்டு ஏவுகணைகள் எல்லாம் விட்டுக்கொண்டு , நாசா ஏன் பண மற்றும் நேர விரயம் செய்ய வேண்டும்…. இல்லையா ??!!//
ஏன், ஜாதகம், ஜோசியம், குறி சொல்லுதல், தீர்க்கத் தரிசனங்கள் எல்லாம் தான் உண்மைன்னு நம்பறோம், அதுக்காக மத்த விஷயங்கள் எல்லாம் பண்ணாமலா இருக்கோம் 🙂
LikeLike
அங்கிருப்பவர்கள் அவ்வளவு முன்னெச்சரிக்கை முத்தண்ணா வாக இருப்பார்கள் என்றால் , செவ்வாய் கிரகத்து மனிதனான அச்சிறுவன் செவ்வாயைத் தாண்டி நம் பூமிக்கு வந்ததெப்படி ? திரும்ப அக்கிரகத்துக்கே செல்லக்கொடிய வழியும் ( பரம ரகசியம் ) அச்சிறுவன் தெரிந்திருக்க வேண்டும் ….. அல்லவா….?
அதை நாம் ஏன் தெரிந்து கொள்வதில் முயற்சி எடுக்கக் கூடாது ??!!
>>>ஜாதகம் , ஜோசியம், குறி சொல்லுதல், தீர்க்கத் தரிசனங்கள் எல்லாம் தான் உண்மைன்னு நம்பறோம்…..அதுக்காக மத்த விஷயங்கள் எல்லாம் பண்ணாமலா இருக்கோம் ?
மனப் பொருத்தம் பார்க்கும் பொழுது , பின்பு ஏன் அவர் கூறியபடி , ஜாதகங்களைத் தட்டிக் கழிக்கின்றோம் ….
மூலம் , கேட்டை என்று பெண் வரங்களை ஒதுக்குகின்றோம் ?
இப்படி ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்த திருமணங்கள் பல (தற்சமயம்) , விவாகரத்து , திடீர் மரணம் போன்ற அவலங்களில் முடிவது ஏன் ??!!
LikeLike
//அதை நாம் ஏன் தெரிந்து கொள்வதில் முயற்சி எடுக்கக் கூடாது ??!!//
நல்ல கேள்வி. தேவையில்லாமல் விண்கலங்கள் அனுப்பும் செலவாவது மிச்சமாகுமே 🙂
LikeLike
படிக்க ருசியாக இருக்கிறது. ஆனால் அந்த சிறுவன் சொன்ன ஒரு கருத்தை ஒத்துக் கொள்ளலாம் போல நினைக்கிறேன். நம் மூப்புக்குக் காரணம் ஆக்சிஜன் என்பதை! ஏனெனில் கரியமில வாயுவை சுவாசிக்கும் மரங்கள் தான் அழியும் வரை பசுமையாக இருக்கிறதே?!
மேலும் மனிதனை விட மரங்களின் ஆயுள்தான் அதிகம். 10 ஆயிரம் ஆண்டுகள் வயதுள்ள மரங்கள் கூட உலகத்தில் உள்ளன.
LikeLike
வாங்க ஒளிர்ஞர்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க. ஒரு நல்ல செய்தியோடு. நன்றிகள் பல.
LikeLike
இந்த மாதிரியான பயமுறுத்தல்கள் எல்லாம் இறைவன் ஏற்படுத்திய ஒன்று என்று தான் நினைக்கிறேன் …..
இந்த நவீன வேக உலகில் , சாந்தமாக சொன்னால் எதுவும் எடுபடாது . நவின குருக்கள் அறிவுரை சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள் நம் மக்கள் . மக்களைச் சொல்லியும் குற்றம் இல்லை …..ஏனென்றால் கலப்படமான குருக்களும் கலந்திருப்பதால் தான் இந்த மனத் தயக்கம்.
இப்படியாகப் பட்ட சூழ்நிலையில் , உலகம் அழியப் போகிறது ( எப்படியும் மனித வாழ்க்கை நிரந்தரம் இல்லை ) , நாம் வாழும் காலம் கொஞ்சமே கொஞ்சம் , அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது …..அதற்குள்ளாக நாம் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ , எவ்வளவு மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் , நாம் நம் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் வாழ்க்கையும் மகிழ்வுடையுதாக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே , இந்த மாதிரி sensational -ஆக இயற்கை நமக்குத் தெரிவிக்கிறது….
இருக்கும் காலத்தில் , நிகழ்காலம் மட்டுமே நம் கையில் , நம்முடையது….
அதைச சந்தோஷமாக அனுபவிக்கலாமே……என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே…!!
LikeLike
கண்டிப்பாக !!! பிறருக்கு ஆனந்தம் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆனந்தம் கொள்ளப் பழகிக் கொண்டால் வாழ்க்கை அர்த்தம் பெறும்
LikeLike
GOD BLESS
LikeLike
🙂
LikeLike
நடந்து கொண்டிருக்கும் இந்தக் கலியுகத்தில் என்னுடைய கருத்துப்படி அடுத்து இறைத்தூதராக வருகின்றவர் ஒரு பெண்ணாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இவன் பையனாக இருக்கிறானே! ஒன்று இந்தப் பையன் பொய் சொல்கிறான். அல்லது இந்தப் பையன் பையனல்ல பெண். 😀
LikeLike
/நடந்து கொண்டிருக்கும் இந்தக் கலியுகத்தில் என்னுடைய கருத்துப்படி அடுத்து இறைத்தூதராக வருகின்றவர் ஒரு பெண்ணாக அல்லவா இருக்க வேண்டும்//
அட ! புதுசா சுவாரஸ்யமா இருக்கே ! இந்தக் கருத்து எப்படி வந்தது ?
LikeLike
இல்லியே ஜிரா .. எனக்குக் கிடைத்த அந்த ஜோதிமயமான விஸ்வரூப தரிசனத்தில் பெண்ணென்று சொல்லவில்லையே …
🙂
LikeLike
ஜோதி – மயமா ?
LikeLike
what to say… anyhow thnx for the article –
nambuvatha…vendaama…
mysteries one… ellam unarakoodiya sitharaka,,gnani yaga maara aasai
appavavathu unmaiyai therinthu kollalaamae..
generally, gnanikal.. apparpatta ragasiyankalai solvathillai… only pothanai thaan.
LikeLike
நல்லா சொன்னீங்க 🙂
LikeLike
நண்பர்களே,
இந்த வீடியோ பதிவு மேலும் செய்திகளை தரலாம்.
அன்புடன்,
விஜய்ராஜேஷ்
LikeLike
நன்றி விஜய்
LikeLike
பையனுக்கு பைத்தியம். 2009 க்கு அப்புறம் மறுமொழி
LikeLike
பையனுக்கு பைத்தியம். 2009 க்கு அப்புறம் மறுமொழி தரேன்
2000,2009 எல்லாம் சும்மா. கடவுள் காப்பாற்றூவார்
LikeLike
அப்பாடா ஸ்டமக்ல மில்க் வார்த்தீங்க 🙂
LikeLike
Pingback: ஏலியன்ஸ் – கிட்டே டி.வி.டி பிளேயர் இருக்குமா ? « அலசல்
போரிஸ் கிப்ரியானோவிச் பற்றிய கட்டுரை மிகவும் சுவாரசியம். ஆனால் கூகிளில் சர்ச் செய்த போது ஒன்றுமே கிடைக்க வில்லையே?
எனது வலைத்தளம் : sharepress.wordpress.com
LikeLike
நிறைய கிடைக்கிறதே !!!
எ.கா http://english.pravda.ru/science/mysteries/104375-0
LikeLike
sutha useless talk
LikeLike
Interesting to read.
After reading the links, I will post my comments.
LikeLike
Is it happen? Wait … wait…..wai…..wa….w… …w ……………….w..
LikeLike
நம் நிகழ்கால வாழ்கையை விட்டு விட்டு எதிகால வாழ்கையை நெனைப்பு எதுக்கு
LikeLike
Pozhudhu pogaatha yaaro oruvar kilappi vittirukkum purali idhu!! Let us not waste our time in worrying about such stories and focus on our targets in life!!
LikeLike
இந்த உலகம் இருந்து என்னத்த கிழிக்கப் போகுது.. அழிஞ்சா அழிஞ்சுட்டுப் போகுது.. அது வரை நம்ம வேலையப் பார்க்கலாம்.ஆனா உலகம் உண்மையிலேயே அழியும் வரை நான் இவன் சொல்வதை நம்பப் போவது இல்லை. வளர்ந்த பிறகு இவன் இந்தியாவில் சுப்ரமணிய சுவாமிக்குப் போட்டியாலராகலாம் அல்லது இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளராகலாம்
LikeLike
Really a very super article.
LikeLike
நல்ல தகவல்.
you tube ல் மேடிப்பாருங்கள்ஃ இச்சிறுவனின் பேட்டி மற்றும் விஞ்ஞான விளக்க வீடியோக்கள் கிடைக்கும். நாள் முழுக்க பார்க்கலாம். ( ஆங்கில மொழியில் உள்ளதாக பார்த்து ஓபின் பண்ணவும்)
LikeLike
hai,
this boy said all 90% true. Because any body need more information please check tamilish.com september 15, 2008. Please check this web site.(blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html)
LikeLike
idhai nambamaden i am posstive man
LikeLike
siddhara irukumo
LikeLike
/siddhara irukumo
//
சித்தனா ? சுத்தனா தெரியலையே !
LikeLike
/idhai nambamaden i am posstive man
/
ம்ம்.. நல்லது 😉
LikeLike
//hai,
this boy said all 90% true. Because any body need more information please check tamilish.com september 15, 2008. Please check this web site.(blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html)
/
http://xavi.wordpress.com/2008/08/18/godsparticle/
LikeLike
//நல்ல தகவல்.
you tube ல் மேடிப்பாருங்கள்ஃ இச்சிறுவனின் பேட்டி மற்றும் விஞ்ஞான விளக்க வீடியோக்கள் கிடைக்கும். நாள் முழுக்க பார்க்கலாம். ( ஆங்கில மொழியில் உள்ளதாக பார்த்து ஓபின் பண்ணவும்)
//
தகவலுக்கு நன்றி.. அப்படியே இணைப்பையும் கொடுத்திருக்கலாமே 🙂
LikeLike
வருகைக்கு நன்றி சுஜி.
//Interesting to read.
After reading the links, I will post my comments.
//
நன்றி செல்வகுமார்
LikeLike
//Is it happen? Wait … wait…..wai…..wa….w… …w ……………….w..
//
y…….e…………………s
LikeLike
//நம் நிகழ்கால வாழ்கையை விட்டு விட்டு எதிகால வாழ்கையை நெனைப்பு எதுக்கு//
எதிர்காலத்துக்குப் போகும்போது அது நிகழ்காலம் ஆயிடும்லயா 😉
LikeLike
//Pozhudhu pogaatha yaaro oruvar kilappi vittirukkum purali idhu!! Let us not waste our time in worrying about such stories and focus on our targets in life!!//
🙂 !
LikeLike
//இந்த உலகம் இருந்து என்னத்த கிழிக்கப் போகுது./
நிஜமா சொல்றீங்களா ? ஒரு பேச்சுக்கு சொல்றீங்களா ?
LikeLike
Hi Xavier !!
happy to see you back and got a good new,
En Iniya mozhil koorinal, Samudayamum kalachaaramum seeralindu pogum inda ulam irundalum ondru than, irandalum ondru than. nan irppadu enaku Achhamillai, ulagam selika en uyir neeka naan thayaraga ullen,
i think you could forget me !! but i remember you
see you xavier,, keep going….
LikeLike
என்ன சிவா… உங்களை எப்படி மறப்பேன் நான் !!!!!! வருகைக்கு நன்றிகள் பல 🙂
LikeLike
FGGBBBBJUYADGHH
LikeLike
ESTAS MUY GUAPO
LikeLike
http://english.pravda.ru/science/19/94/378/16387_Boriska.html
LikeLike
http://www.projectcamelot.org/boriska.html
LikeLike
pl see
LikeLike
Dear sir/madam
kindly send me like this..
LikeLike
super dooper
Hai I won’t believe it !
LikeLike
i don’t believe this…god will save….
LikeLike
வருகைக்கு நன்றி பெயரிலி 😀
LikeLike
hjjjg
LikeLike
now june 2009 came,just 6 month only to complete 2009….
LikeLike
My belief will be nothing will happen….
If happen we are all has to go so no problem
Let’s see 2009 December 31 definitely something happen in India
Regds,
Ganesan R
LikeLike
nan edhai nambukiren. andha boy soldradhu unmaiya irukalam
LikeLike
ofcourse.i beleive this
LikeLike
//nan edhai nambukiren. andha boy soldradhu unmaiya irukalam//
😀
LikeLike
இரஷ்யா தம்பி, பீச் மணல செய்த உலகம் தானோ. !!!
LikeLike
this is true !!!!!!
next week i will see uour news.
LikeLike
ண்ணா சூப்பர் தகவல் ண்ணா.. கொன்ஞ்சம் லேட்டா பார்கிறேன்..
சும்மா போட்டு தாக்குங்கன்னா..
LikeLike
2009 ? or 9002?…. 😉
LikeLike
2009 la ஏன் உலகம் அழியலை. சீக்கிரம் சொல்லுங்க சேவியர்
LikeLike
2009 la ஏன் உலகம் அழியலை. சீக்கிரம் சொல்லுங்க சேவியர் சார்
LikeLike
//2009 la ஏன் உலகம் அழியலை. சீக்கிரம் சொல்லுங்க சேவியர்//
வேற உலகத்தைப் பத்தி பையன் சொன்னானோ தெரியலையே 😀
LikeLike
//வேற உலகத்தைப் பத்தி பையன் சொன்னானோ தெரியலையே //
இதுக்க்ப்பேருதான் சமாளிக்கிறது =)
LikeLike
//வேற உலகத்தைப் பத்தி பையன் சொன்னானோ தெரியலையே //
இதுக்க்ப்பேருதான் சமாளிக்கிறது =))
LikeLike
mmmm.. mudiyala … 2010m poiduchi innum ulagam azhiyaliye….
LikeLike
very intersting
LikeLike
ENNAKU ETHU PUDUSU ELLA PA
LikeLike
sari yellaru poi cheruvom . ethium enjoy pannuvom
LikeLike
01m.vijayakumar
m.vijayakumar
01m.vijayakumar
LikeLike
SUPER /// ATHU VARAIKUM LIFEFA SANTHOSAMA KONDU PONGA PLSS…..
LikeLike
ac ciruvanin pachu comediaka irukkalam annal ithye namathu world scientist kal purinthu varum apathukali thadukka acchiruvani payan paduthi kollunkal ananil ivanathu mun jenma memory naladivil maranthu vidalam annave bayan baduthikollunkal
by
bavithran
LikeLike
panakkarargal payamkollattum namakku kavalai ellai
LikeLike
super //
LikeLike
Pingback: 2012!!! உலகஅழிவு!!! எல்லாம் பொய்!!!
சேவியர் 2012 ஆச்சு. டிசம்பர்ல உலகம் அழியலைன்னா உங்க மேல கேஸ் போடுவேன்
LikeLike
Pingback: மாயன் மக்களும் உலக அழிவும்,… | அமெரிக்கா
ஐயா சேவியர் 2012 இன்னும் கொஞ்ச நாள்ள உலகம் அழியல உங்களை உண்டு இல்லைன்னு பண்ணீடுவேன்
LikeLike
//ஐயா சேவியர் 2012 இன்னும் கொஞ்ச நாள்ள உலகம் அழியல உங்களை உண்டு இல்லைன்னு பண்ணீடுவேன்// நீங்க நிறைய பேரை உண்டு இல்லைன்னு பண்ண வேண்டியிருக்கும்ன்னு நினைக்கிறேன் 🙂
LikeLike
யோவ் உலகம் அழியல. பேசாம உன் தளத்தை மூடிவிட்டு போ. இல்லைன்னா நான் அடுத்த போலி டோண்டுவா மாறிடுவேன்
LikeLike
அண்ணே எப்போ உலகம் அழியும்
LikeLike