பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !

ponniyin_selvan.jpg

பரபரப்புப் புயலைக் கிளப்பி இதோ இது தான் சின்னத்திரையையே கலக்கப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியா கொக்கா? ன்னு அடித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் சூறாவளி பின் வாசல் சன்னல் வழியே வெளியேறிவிட்டது.

இனிமேல் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று (நமது பாழாய்ப்போன எதிர்பார்ப்பின் உச்சந்தலையில்) அடித்துச் சொல்கின்றனர் அந்த தொடரில் தொடர்புடையவர்கள்.

முக்கியமாக பணம். மிகப் பெரிய செலவு செய்தால் மட்டுமே பொன்னியின் செல்வனை கொஞ்சமேனும் கௌரவத்துடன் காட்ட முடியும். இதெல்லாம் மேடவாக்கத்துத் தெருவில் எடுக்கப்படவேண்டிய சமாச்சாரமல்ல. இதுக்கெல்லாம் செலவு செய்றதுக்குப் பதிலா வாயாட, பேயாட என்று இன்னொரு தொடரைப் போடலாம்.

இரண்டாவதாக, எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்ததில் என்னய்யா பொன்னியின் செல்வனை அவமானப் படுத்தறதுக்காக இப்படிப் படுத்தி வைத்திருக்கிறீர்களா ? என்று எகிறுமளவுக்கு இருந்ததாம் காட்சிகள்.

அப்புறம் நாடகத்துக்கான ஆட்கள் தேர்வு நல்ல நகைச்சுவையாம் ! மஹாராஜாவைப் பார்த்தால் முனியாண்டி விலாஸ் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் குமாரசாமி போல் இருக்கிறாராம். அவர் கம்பீரமாய் பேசினால் அவரே பயந்து விடுகிறாராம். குதிரை சின்ன சைஸ் கழுதையாய் இருக்கிறதாம். 🙂 ( ஏரியை டம்பரில் காட்டியிருக்கிறார்களோ என்னவோ ? )

போங்கடா நீங்களும் உங்க பொன்னியும் ன்னு சொல்லி நிக் ஆர்ட்ஸ் பொட்டியை (வாலை)ச் சுருட்டிட்டு வேற படம் எடுக்கப் போயிட்டாங்க.

அப்போ பொன்னியின் செல்வன் ?

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு தயாரிப்பாளரும், கல்கியும் சந்தோசப் படறதோட சரி.

அப்போ கலைஞர் தொலைக்காட்சில அதுக்குப் பதிலா ஏதாச்சும் நல்ல தொடர் வருமோ என நினைக்கிறீர்களா ?

மற்ற தொலைக்காட்சிகல் வரும் நிகழ்ச்சிகளையே எழுத்து மாற்றி, வார்த்தை மாற்றி எல்லா தொலைக்காட்சிகளும் பின்பற்றும் இந்த சூழலில் ஒருவேளை வரலாம்

தள்ளு சபா” என்றொரு புத்தம் புதிய தொடர்.

பின் குறிப்பு : இந்த பதிவுக்கு தொடரின் இயக்குனர் ஒரு விரிவான பதிலை அளித்துள்ளார்.

உலகின் மெல்லிடையாள் !

waisted.jpg

மெல்லிடையாள், காற்றிடையாள், இல்லா இடையாள் என்றெல்லாம் கவிஞர்கள் இடை மெலிந்தவர்களைக் குறித்து கற்பனை செய்து இன்னும் ஓயவில்லை.

“இடையா அது இடையே, அது இல்லாதது போல் இருக்குது” என்று இன்னும் வயதான தாத்தாக்கள் பாட்டிகளைப் பார்த்து கிராமத்தில் வெற்றிலை ஒழுக பாடிக்கொண்டு திரிகிறார்கள்.

இருக்கட்டும். ஆனா அப்படிப்பட்ட இடை வசீகரிக்குமா ? இல்லையா என்பதை இந்த படத்தைப் பார்த்து நீங்களே முடிவெடுங்கள்.

இந்த மெல்லிடையாள், கேத்தி ஜங், இன்று உலகில் வாழும் பெண்களிலேயே மிக மெல்லிய இடையுடைய பெண் என்னும் உலக சாதனை(?) யைப் பெற்றுள்ளாள். (அப்படியா ? பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் இடையையெல்லாம் இதுல சேத்துக்க மாட்டாங்களோ )