பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !

ponniyin_selvan.jpg

பரபரப்புப் புயலைக் கிளப்பி இதோ இது தான் சின்னத்திரையையே கலக்கப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியா கொக்கா? ன்னு அடித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் சூறாவளி பின் வாசல் சன்னல் வழியே வெளியேறிவிட்டது.

இனிமேல் கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னியின் செல்வன் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று (நமது பாழாய்ப்போன எதிர்பார்ப்பின் உச்சந்தலையில்) அடித்துச் சொல்கின்றனர் அந்த தொடரில் தொடர்புடையவர்கள்.

முக்கியமாக பணம். மிகப் பெரிய செலவு செய்தால் மட்டுமே பொன்னியின் செல்வனை கொஞ்சமேனும் கௌரவத்துடன் காட்ட முடியும். இதெல்லாம் மேடவாக்கத்துத் தெருவில் எடுக்கப்படவேண்டிய சமாச்சாரமல்ல. இதுக்கெல்லாம் செலவு செய்றதுக்குப் பதிலா வாயாட, பேயாட என்று இன்னொரு தொடரைப் போடலாம்.

இரண்டாவதாக, எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்ததில் என்னய்யா பொன்னியின் செல்வனை அவமானப் படுத்தறதுக்காக இப்படிப் படுத்தி வைத்திருக்கிறீர்களா ? என்று எகிறுமளவுக்கு இருந்ததாம் காட்சிகள்.

அப்புறம் நாடகத்துக்கான ஆட்கள் தேர்வு நல்ல நகைச்சுவையாம் ! மஹாராஜாவைப் பார்த்தால் முனியாண்டி விலாஸ் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் குமாரசாமி போல் இருக்கிறாராம். அவர் கம்பீரமாய் பேசினால் அவரே பயந்து விடுகிறாராம். குதிரை சின்ன சைஸ் கழுதையாய் இருக்கிறதாம். 🙂 ( ஏரியை டம்பரில் காட்டியிருக்கிறார்களோ என்னவோ ? )

போங்கடா நீங்களும் உங்க பொன்னியும் ன்னு சொல்லி நிக் ஆர்ட்ஸ் பொட்டியை (வாலை)ச் சுருட்டிட்டு வேற படம் எடுக்கப் போயிட்டாங்க.

அப்போ பொன்னியின் செல்வன் ?

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு தயாரிப்பாளரும், கல்கியும் சந்தோசப் படறதோட சரி.

அப்போ கலைஞர் தொலைக்காட்சில அதுக்குப் பதிலா ஏதாச்சும் நல்ல தொடர் வருமோ என நினைக்கிறீர்களா ?

மற்ற தொலைக்காட்சிகல் வரும் நிகழ்ச்சிகளையே எழுத்து மாற்றி, வார்த்தை மாற்றி எல்லா தொலைக்காட்சிகளும் பின்பற்றும் இந்த சூழலில் ஒருவேளை வரலாம்

தள்ளு சபா” என்றொரு புத்தம் புதிய தொடர்.

பின் குறிப்பு : இந்த பதிவுக்கு தொடரின் இயக்குனர் ஒரு விரிவான பதிலை அளித்துள்ளார்.

15 comments on “பொன்னியின் செல்வன் தொடர் : தற்போதைய நிலவரம் !

 1. வருத்தமாக இருக்கிறது. ஒரு எபிசோட் ஷூட்டிங்கை நேரில் பார்த்தேன் – இந்தப்பதிவில் சொல்லப்பட்ட அளவுக்கு எல்லாம் மோசமில்லை என்றே சொல்வேன்.

  Like

 2. ஒருவேளை எனது பதிவு சற்று மிகைப்படுத்தலாம் தெரியலாம். ஆனால் நான் நேரடியாக கேள்விப்பட்டவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

  Like

 3. 90 நாட்கள் ஷ¥ட்டிங் நடத்தி, அதில் 7 எபிஸோட் மட்டுமே கையில் தயாராக இவைத்திருந்து, அதற்கான செலவாக 64 லட்சம் ரூபாயைக் கணக்குக் காட்டி, வாங்கிய 1 கோடி அட்வான்ஸில் மீதியிருந்த 36 லட்சம் ரூபாயையும், கேமிரா இன்ன பிற கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள் என்று வாங்கிக் குவித்து.. மொத்த 1 கோடிக்கும் 3 மாதத்தில் காலியான கணக்கைச் சொல்லிவிட்டு இயக்குநர் எஸ்கேப்பாகிவிட்டார்.

  இப்போது அவர் ஷங்கரின் S பிக்சர்ஸ்க்காக புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு S பிக்சர்ஸை காலி செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்.

  நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அந்த 7 எபிஸோட் கேஸட்டுகளை கையில் வைத்திருக்கிறார். 60 லட்சம் ரூபாய் கொடுத்து யார் வேண்டுமானாலும் அதை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளராகலாம்.

  நீங்கள் போகத் தயாரா..?

  முதல் மற்றும் இரண்டாம் எபிஸோட்களை பார்த்து எடிட்டிங்லேயே கதறியிருக்கின்றனர் படத்தொகுப்பு செய்தவர்கள்..

  அவர்கள் படிக்காத பொன்னியின் செல்வனா..? அவர்கள் கனவில் எப்படி இருந்திருப்பான் வந்தியத்தேவன்.. எபிஸோடில் பார்க்க வேண்டுமே..

  நல்லவேளை.. இத்தொடர் தயாரிப்பிலேயே நிறுத்தப்பட்டதால் தப்பித்தது கலைஞர் டிவி.

  இதைவிடக் கொடுமை.. 90 நாட்கள் இரவு, பகலாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பேட்டா பணம்கூட இன்னமும் தரப்படவில்லை.

  பாதிப் பேர் அலுவலக வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துத் திட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள்.

  ஆனால் இயக்குநர் மட்டும் மிகச் சரியாக ஒரு தொகையை லவட்டிக் கொண்டு போய்விட்டார். அவ்வளவு விவரமானவர் அவர்..

  இப்படி நபர்களால்தான் சினிமா உலகம் சீரழிகிறது..

  Like

 4. //இதைவிடக் கொடுமை.. 90 நாட்கள் இரவு, பகலாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பேட்டா பணம்கூட இன்னமும் தரப்படவில்லை//

  உண்மை.. உண்மை.. !!!

  Like

 5. கொடுமை.. கொடுமை….
  என்று பொன்னியின் செல்வன் வரும் என்று காத்திருக்கின்றோம்!!!! 😦

  Like

 6. மஹாராஜாவைப் பார்த்தால் முனியாண்டி விலாஸ் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் குமாரசாமி போல் இருக்கிறாராம். அவர் கம்பீரமாய் பேசினால் அவரே பயந்து விடுகிறாராம். குதிரை சின்ன சைஸ் கழுதையாய் இருக்கிறதாம். ( ஏரியை டம்பரில் காட்டியிருக்கிறார்களோ என்னவோ ? )

  Really a comic comment.
  🙂
  Instead of spoiling the charater which is in our mind it is better to stop the serial.

  Bala

  Like

 7. ellorukum vanakam

  im sathish … associated with ponniyin selvan project and tis really pathetic to see such rubbish and false information – which has been portrayed real …. I dont see any authenticity in this information given …. i see them as just simple exagerating comments

  There has been no official information shared in the media on Ponniyin Selvan project …. at this juncture – giving this kind of unrealistic information -varuthathai kodukkiradhu ….

  aanal enakku ondru theriyavillai indha projectin varavu selavu pathiya kanakku eppadi ungalukku theriya vandhadhu?appo neengalum indha team’il panipurindhirukka vaendum allava?bcas these r classified informations.

  and mister xavier can u pls tell me ur source of information?

  Like

 8. தங்களின் பார்வைக்கு நன்றி.
  நான் இந்தத்தொடரின் இயக்குனர்.
  பொது ஊடகங்களுக்கு என்று ஒரு தர்மம் உண்டு. சந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பின்னர் வெளியிடுவது.
  என்னை தொடர்பு கொள்ள எனது மின்னஞ்சல் முகவரி
  naga001 at gmail dot com
  நன்றி.

  Like

 9. அன்பின் நாகா, தகவல் தவறெனில் மன்னிக்கவும். உண்மை நிலவரத்தைச் சொன்னால் ஆனந்தமாய் இருக்கும் !

  Like

 10. In the era of blogs ….. autheticity is the key .. Requesting you to consult with the concerned before quoting strong public comments !!!
  Mr.Naga is a very respected and responsible individual – staunch quotes on such person should really have a proper source and base …. Requesting you to mail Mr. Naga for further clarifications on the current status of Ponniyin Selvan …

  Rgds
  Vasanth

  Like

 11. அன்பு வசந்த். ஏற்கனவே ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பதிலைப் பதிவு செய்கிறேன்.

  Like

 12. Pingback: பொன்னியின் செல்வன் தொடர் : இயக்குனரின் நேரடி பதில். « அலசல்

 13. நாகா அவர்களின் மின்னஞ்சலை திருத்த முடியுமா என்று பாருங்கள். இல்லை சில நாட்களிலேயே அவரின் அஞ்சல் பெட்டி முழுவதும் எரிதம் தான்

  உதாரணமாக naga001 at gmail dot com என்று போடலாம்

  Like

 14. ஓ.. அப்படியா ? மாத்திடறேன். ! புள்ளி வைக்கவே பயப்பட வேண்டியிருக்கு பாருங்க 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s