காலைல பிரட், கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடற பார்ட்டியா நீங்க ?

bread.jpg

அவசரமாய் அலுவலகம் ஓடுபவர்கள் காலையில் அரக்கப் பரக்க, இரண்டு மூன்று பிரட் துண்டுகளை உண்பதோ, அல்லது சீரியல்ஸ் உண்பதோ சர்வ சாதாரணம்.

அத்தகையோரை திகைப்புக்குள்ளாக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. அதாவது வெள்ளை பிரட் மற்றும் இனிப்பு கலந்த சீரியல்களை உண்பதால் நீரிழிவு, இதயநோய், புற்று நோய் உட்பட பல நோய்கள் வந்து சேர்கின்றன என்பதே அந்த ஆராய்ச்சி முடிவு.

இத்தகைய உணவுகளிலுள்ள கிளைசமிக் இண்டெக்ஸ் உடலிலுள்ள குருதி குளுகோஸ் அளவை அதிகரிப்பதால் இத்தகைய விளைவுகள் நேரிடுகிறதாம்.

உலக அளவில் மிக அதிகம் பேர் உண்ணும் உணவு வகைகள் இவை என்பதால் ஆராய்ச்சி கூட மிகவும் விரிவான அளவிலேயே நடத்தப்பட்டிருக்கிறது.

சுமார் 20 இலட்சம் பேர் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்திருக்கின்றனர் என்பதே இந்த ஆராய்ச்சியின் நம்பகத் தன்மையை அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று இனிப்பு கலந்த சீரியல்கள் உண்பதால் பதின் வயதினருக்கு அதிக நினைவாற்றல் கிடைக்கிறது என்று கூறியிருந்தது. அதை நம்பி அத்தகைய உணவுகளை நாடியவர்கள் இப்போது இந்த புதிய ஆராய்ச்சி முடிவு கண்டு கலங்கியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகம் நிகழ்த்திய இந்த ஆராய்ச்சி முடிவு வராமல் இருந்திருந்தால் நிம்மதியாக பிரட்டாவது சாப்பிட்டு அலுவலகம் ஓடியிருக்க முடியும். இப்போது என்ன செய்வது என தெரியாமல் கையைப் பிசைகின்றனர் செய்தி கேள்விப்பட்டோர்.

11 comments on “காலைல பிரட், கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடற பார்ட்டியா நீங்க ?

 1. >>> கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று இனிப்பு கலந்த சீரியல்கள் உண்பதால் பதின் வயதினருக்கு அதிக நினைவாற்றல் கிடைக்கிறது என்று கூறியிருந்தது. அதை நம்பி அத்தகைய உணவுகளை நாடியவர்கள் இப்போது இந்த புதிய ஆராய்ச்சி முடிவு கண்டு கலங்கியிருக்கின்றனர். <<<

  :-))))) idhelaam paartha uyir vaala mudiyuma 😉

  Like

 2. என்னத்த சாப்பிட்டாலும் ஆப்பு வெக்குறாய்ங்கப்பா!! 😦
  நான் தினமும் சீரியல் தான் சாப்பிடுவேன்!! அந்த பழக்கத்தை மாத்தியாகனுமா?? 😉

  Like

 3. உண்மை தான் யாத்திரீகன் 🙂

  CVR, மாத்த ஆரம்பிச்சா மாத்திகிட்டே இருக்க வேண்டியது தான். கற்காலத்துல மனுஷன் கலோரி பாத்தா சாப்பிட்டான் 😉

  Like

 4. அதனால்தான் அமெரிக்காஅவில் இப்போது சர்க்கரை குறைந்த முழு தானியங்கள் நிறைந்த காலை சீரியல் கிடைக்கிறது. அதேபோல வெள்ளை பிரட்டுக்கு பதில் மக்கள் கோதுமை பிரெட், பல வகை தானியங்களால் செய்யப்பட்ட (bran ) நீக்காத பிரட், கைக்குத்தல் அரிசி என்று மாறிவிட்டனர். வெட்டப்பட்ட பழக்கலவை (low glycemic index fruits) , தயிர், கொழுப்பு நீக்கப்ப்பட்ட பால் என்று காலை உணவு மாரி ரொம்ப நாளாச்சு.

  Like

 5. முன்னாடி காலத்துல எங்க தாத்தா கல்லைச் சாப்பிட்டா கூட கரையணும்டா ன்னு சொல்லுவார். காலம் மாறிப் போச்சு. 🙂

  Like

 6. Pingback: அரிசி சேவை (Instant) « தாளிக்கும் ஓசை

 7. ஹ்ம்ம்ம்ம்… இது முடிவல்ல! இன்னும் நெறய இருக்கு!!
  இயற்கையை வெல்ல நினைக்கும் மனிதனின் ஒரு தோல்வி …

  நானும் அந்தக் கருமங்களச் சாபிடறவந்தான். என்ன செய்றது? உயிர் வாழனுமே?

  Like

 8. நோர்வே நாட்டிற்கு விடுமுறையின் போது போன சமயம் அங்குள்ள குழந்தைகளிற்கு இனிப்பு பண்டங்கள் எதுவுமே கொடுப்பதில்லையாம் பாடசாலை நாட்களில். என்ன ஏது என கேட்ட போது பிள்ளைகள் பாடசாலையில் அளவுக்கு அதிகமான துடியாட்டத்துடன் காணப்படுவர்: என்றும் அதனால் பெற்றோர்களிற்கு கொடுத்தனுப்பவோ காலை உணவாக அன்றி மதிய உணவாக எதுவுமே கொடுக்க படாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆச்சரியப்பட்டுப்போனேன். இனிப்பு பண்டங்களை உண்கிறபோது அவை நமக்கான அதிக எனேஐpயை தருவது உண்மை தான்.

  இத்தகைய ஆராய்ச்சிகள் ஒரு வித விளம்பர உக்தி தானோ என எண்ணத்தோன்றுகிறது. இப்போது எல்லோரும் bio உணவுக்க மாறுவதை பார்க்கிற போது எல்லாம் ஒரு fashion என எண்ணத்தோன்றுகிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s