ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

கடைசியாய் கிடைத்த தகவல்

நம்ம கணிப்பெல்லாம் தப்பாயிடும் போலிருக்கு !!! விஷயம் உண்மையாம் !!!

9 comments on “ஒரு ஆண் தாயாகிறார்

 1. இந்த படம் தாய்மைக்குரிய அறிகுறியல்லவே. இந்த ஆண்கள் என்னதான் சாகசங்களை செய்தாலும் எப்போதுமே ஏதோ ஒன்றில் தோற்றுத்தான் போகிறார்கள்.முட்டாள்கள் எப்போதுமே மற்றவர்களையும் முட்டாள்களாகவே நினைபப்பதுண்டு.( ஆண்களையும் இந்த விளம்பர தாரர்களையும் சொன்னேன்.)

  Like

 2. //முட்டாள்கள் எப்போதுமே மற்றவர்களையும் முட்டாள்களாகவே நினைபப்பதுண்டு//

  என்ன நளாயினி.. கொஞ்சம் இலகுவா எடுத்துக்கலாமே 🙂 எதுக்கு இத்தனை கோபம் அப்பாவி ஆண்கள் மேல் 🙂

  Like

 3. சட்டுன்னு படத்தையும் தலைப்பையும் இணைத்துப் பார்த்ததில் அதிகமாக யோசிக்கத் தொணலை.
  அன்புடன் கமலா

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s