பென்ஹர், மோசே : சார்ல்டன் ஹெஸ்டன் ஒரு நினைவலை.

சார்ல்டன் ஹெஸ்டன் ஹாலிவுட் திரையுலகில் மறக்கப்பட முடியாதவர்.

மோசஸ் திரைப்படத்தில் அவர் கோலை கைகளில் ஏந்தியபடி பேசும் வசனங்கள் மிகப்பிரபலம். அலட்சியமான பார்வையும், வித்தியாசமான வசன உச்சரிப்பும் “டென் கமாண்ட்மெண்ட்ஸ்” என்னும் திரைப்படத்தை உலகமெங்கும் கொண்டு சென்றது.

1956 களில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் சிறு வயது மோசேயாக நதிநீரில் ஒரு பேழையில் மிதந்து மிதந்து வந்தது அவருடைய மூன்று மாதக் குழந்தை ஃப்ராஸ்டர்.

1959ல் வெளிவந்த பென்ஹர் அவருக்கு ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படங்களில் பட்டியலில் பென்ஹர் திரைப்படம் நிச்சயம் இடம் பெறும்.

அதில் வரும் குதிரை வண்டிப் பந்தயம் இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நடிப்பில் கலக்கியது போல குடும்ப வாழ்க்கையிலும் தனது மரணம் வரை, சுமார் 64 ஆண்டுகாலம் ஒரே மனைவியுடன் வாழ்ந்து குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்தவராக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தனது ஐந்தாவது வயதிலேயே மேடை நாடகங்களில் தோன்ற ஆரம்பித்த ஹெட்சன் ஒரு படத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டில் இயக்கினார். அந்தத் திரைப்படம் ஆன்றனி அண்ட் கிளியோபாட்ரா ! அது தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த படம் எனலாம்.

“தி கிரேட்டஸ்ட் ஸ்டோரி எவர் டோல்ட்” எனும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படத்தில் திருமுழுக்கு யோவானாக வந்ததும் நினைவில் இருக்கிறது. அது தான் அவர் நடித்த கடைசிப் படமாம்.

கடைசி வருடங்களில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டிருக்கிறார். த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்கர், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், எர்த்க்வேக் என பல படங்களை அவருடைய அழியாச் சுவடுகளாகத் தந்த ஹெஸ்டன் கடந்த ஐந்தாம் தியதி அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பத்து நான்கு.

பாதங்கள் ஓய்வடைந்தன
சுவடுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன !

Advertisements

3 comments on “பென்ஹர், மோசே : சார்ல்டன் ஹெஸ்டன் ஒரு நினைவலை.

  1. இவர்தான் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாக உள்ள இயக்கத்துக்கும் தலைவர்- National Rifle Association from 1998 to 2003-. Bowling for Columbine விவணப்படத்தில் மைக்கில் மூர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஓடிவிடுவார்.

    Like

  2. ஆமா ! ஒருதடவை துப்பாக்கியை தலையில் வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூட வாசித்திருக்கிறேன். 🙂

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s