முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

study published in the American Journal of Clinical Nutrition.

44 comments on “முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

 1. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டால் நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு இல்லை. மஞ்சள் கரு உண்டால் பல உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பது திண்ணம் ஏனென்றால் அதில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது.
  அதிக முட்டை உண்பவர்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை தூக்கி எரிந்துவிடுவது நல்லது. ஆஃப் பாயில் எனப்படும் புல்ஸ் ஐ சாப்பிடுவதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது. ஆம்லெட், பொரியல் சமைத்து சாப்பிடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவது இல்லை.

  Like

 2. அய்யய்யோ.. முட்டைய சைவத்துல சேத்துட்டதா நம்ப வச்சு இன்னிக்கே எமனுக்கு சொல்லி அனுப்பறாங்களே :((

  Like

 3. நீங்க சொல்றது சரிதான் சார்!!!!!!!!!!!!

  தினமும் முட்டை வாங்குறாய் பிற்காலத்துக்கு நல்லதில்ல என டீச்சர் சொன்னா.
  இதைக் கண்டுபிடிக்க அமெரிக்கனுக்கு 27 வருசம் தேவைப்பட்டிருக்கா?
  புத்தியில்லாத பசங்க‌

  புள்ளிராஜா

  Like

 4. அடப்பாவிகளா !!! தெனமும் ஜிம்-முக்கு போறதுக்கு முன்னாடி ஒடம்புக்கு சக்தி வேணுமே-ன்னு ரெண்டு முட்டைகள வேகவச்சு உள்ள தள்ளிட்டு போயிட்டுருந்தேன். அப்டீனாக்கா வாரத்துக்கு 10 முட்டை ? (சனி ஞாயிறு ஜிம்முக்கு லீவு உட்டுறது வழக்கம், ஹி..ஹி) அய்யோடா !!!

  இந்த வெள்ள கரு சமாசாரம் பத்தி 2 குறிப்புகள் :

  – இணையத்துல தேடினதுல வெள்ளை கருல புரோட்டீன்தான் அதிகமா இருக்கறதாவும், மஞ்சள் கருல சுலபத்துல கரையாத கொழுப்பு அதிகமா இருக்கறதாவும் தெரிஞ்சுது.
  – கமல் வேகவச்ச வெள்ளை கரு மட்டும்தான் சாப்புடுவாராம்
  – சமீபத்துல குமுதத்துல வைரமுத்து, ரெண்டு பேர உதாரணம் காட்டி சொன்னாரு. ஒருத்தர் எஸ்.எஸ்.ஆர், இன்னொருத்தர் பேரு சட்டுனு ஞாபகம் வரலை. (தங்கவேலு ?) முன்னவர் வெறும் வெள்ள கரு மட்டும் சாப்பிடறவர், ஆரோக்கியமா இருக்கார். பின்னவர் இருபது முட்டைகளை பால்ல ஊத்தி அடிப்பாராம், கெளம்பிட்டார் முன்னாடியே !

  இனி வெள்ளைக்கருவ மட்டும் உள்ள தள்ளிட்டு மஞ்சள வெளில தள்ளிடவேண்டீதான்.

  நன்றி நண்பரே !

  அன்புடன்
  முத்து

  Like

 5. //முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டால் நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு இல்லை//

  உண்மை தான். ஆசை யாரை விட்டது !

  Like

 6. //அய்யய்யோ.. முட்டைய சைவத்துல சேத்துட்டதா நம்ப வச்சு இன்னிக்கே எமனுக்கு சொல்லி அனுப்பறாங்களே :(( //

  முட்டையை சைவத்தில் சேர்த்தது எல்லோருக்கும் வீடு பேறு அளிக்கத் தான் போலிருக்கிறது 🙂

  Like

 7. //தினமும் முட்டை வாங்குறாய் பிற்காலத்துக்கு நல்லதில்ல என டீச்சர் சொன்னா.
  இதைக் கண்டுபிடிக்க அமெரிக்கனுக்கு 27 வருசம் தேவைப்பட்டிருக்கா?
  புத்தியில்லாத பசங்க‌

  புள்ளிராஜா

  //

  புள்ளி ராஜா.. நீ ஒரு கில்லி ராஜா !

  Like

 8. நான் சைவம் அதனால எனக்கு பயம் இல்லை… எல்லாரும் சீக்கிரம் சைவத்துக்கு மாறுங்கப்பா…

  அப்படியே என்னுடைய வலைப்பூவுக்கு வாங்கப்பா…

  சாய்கணேஷ்

  Like

 9. நல்ல முட்டை தகவல்.
  என் வயது 50. நான் தினமும் முட்டை ஆம்லெட் சாப்பிடுவேன், அப்புறம் செக் பண்ணி பார்த்தால் கொழுப்பு 240. இப்ப சுத்தமாக் விட்டு விட்டேன். எதுக்கு ரிஸ்க்?

  Like

 10. புதிய தகவல்கள் தலைகீழாய் பல்டியடிக்கின்றன. பாவம் நம்மைப் போன்ற ஆட்கள் தான் குழம்பிப் போய் கிடக்கிறோம் 🙂

  Like

 11. oru nalaikku 10 muttai sappitukiren athil ulla vellai karuvai mattumthan sappiduven manja karuvai thukki erindhu viduven.ithanal ethuvum apathu irukkuma irunthal sollunga please

  Like

 12. muddai vellai karu manjal karu appadinu illlai ellaaam alavoodu../ ok usa resalt avarkal kalasaara vunavooduthaan aarassi panni iruppaanka naama full meelaku vathal podi meelakai vuppu ippadinu kaara saaramaaa saapdivoom antha aarassiyai indiyan panninaaal reslt resove…
  Ezra rajamono uk

  Like

 13. வாழ்க வழமுடன் . நான் சுமார் 45  வருடங்களாக ஹாங்காங்கில் வாழ்பவன் . சென்ற 10 வருங்களுக்கு முன் ஒரு பஸ்ஸில் போய்கொண்டு இருக்கும்பொழுது ரோடு ஷோ  எனும் அந்த சீனவித்தையின் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது . அதில் ஒரு காழ்ச்சியில் ஒரு அற்புதம் என்னெவென்றால்  ஒரு முட்டையை  அவித்து  தோட்டைஉடைக்கிறார்கள் .அப்போது அந்த முட்டையின் மஞ்சக்கரு மேலாகவும்  வெள்ளை கருஉள்ளாகவும் நம் வழமைக்கு  மாறாக இருப்பதைக் கண்டு மிக மிக ஆச்சர்யப் பட்டேன் . அந்த சீனவித்தையின் டெக்னிக்கை  THERINTHAAL
   த..செய்து ஈமெயில் பண்ணுங்கள்   (No.875434 Ref. No)12-12-2012 SAT 23-30 CLOCK

  Like

 14. i accept your comment sir.after reading this many peoples would afraid to buy egg.so many small organisms are given birth.this good name goes to u only sir.bz u have saved the life of many organisms

  Like

 15. இது பொய்யான தகவல் நன்பர்களே, நம்பாதிங்க ,,,,,,,,,,,

  Like

 16. சும்மா வெறும் பரபரப்புக்காக பரப்பப்படும் பொய் செய்தி இது! நம்ப வேண்டாம்….முட்டை ஒரு சத்துணவு! குழந்தை முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்! நான் கடந்த 20 வருடங்களில் மட்டும் 10,000 முட்டை சாப்பிட்டு இருக்கிறேன்! இன்று வரைக்கும் எந்த நோயும் இல்லாமல் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிரேன்! எனவே இது போன்ற ஆதாரமில்லாத வீனர்களின் கருத்தை புறம்தள்ளிவிட்டு தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள்! 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம்! 25 வயதுக்குள் இருப்பவர்கள் நாளொன்றுக்கு மூன்று முட்டைகள் சாப்பிடலாம்! என்ன்னுடைய 20 வயதில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 முட்டை சாப்பிடுவேன்! இன்று எனக்கு வயது 42.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s