ஹை ஹீல்ஸ் கிளிகள் !

பொதுவா ஹை-ஹீல்ஸ் பெண்கள் பக்கத்துல வந்தா முருகனுக்காக அலகு குத்தற மாதிரி நம்ம காலில் ஓட்டை போட்டுடுவாங்களோ எனும் பயத்தில் நாலடி தள்ளியே நிக்கிறது என்னோட பழக்கம்.

இவங்க எப்படித் தான் நடக்கிறாங்களோ என்று அவ்வப்போது ஆச்சரியப்படும் ஆண்களின் கூட்டத்தில் நானும் ஒருத்தன்.

யாராவது இவங்க கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடினால் கூட, “எக்ஸ்கியூஸ்மி” என்று பின்னால் ஆமை வேகத்தில் அசைந்து தான் துரத்துவார்கள் என நேற்று வரை நினைத்திருந்தேன் ஆனால் இவங்க “விழுந்தடித்துக் கொண்டு” ஓடுவார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

பெல்கிரேட் என்னுமிடத்தில் நேற்று நடந்த ஹீல்ஸ் ஓட்டப் பந்தயக் காட்சி இது. ( என்ன கொடுமை சந்திரமுகி இது ? )

90 பெண்கள் கலந்து கொண்ட ஓட்டப் பந்தயத்தில் ஒரு பெண் நீச்சலடிக்கிறார்.
ஹீல்ஸ் குறைந்த பட்சம் 8 செண்டி மீட்டர்கள் இருக்க வேண்டும் என்பது இந்தப் போட்டியின் “கால்” விதி. விழுந்து விழுந்தே ஓட வேண்டும் என்பது போட்டியாளர்களின் தலை விதி.

ஜெயிச்சா சுமார் ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாய்கள் பரிசாம். அப்புறம் என்ன ? ஹீல்ஸ் போட்டுட்டு ஹில்ஸ் ல கூட ஓடுவோம்ல என்கின்றனர் இந்த ஹீல்ஸ் கிளிகள்.