ஹை ஹீல்ஸ் கிளிகள் !

பொதுவா ஹை-ஹீல்ஸ் பெண்கள் பக்கத்துல வந்தா முருகனுக்காக அலகு குத்தற மாதிரி நம்ம காலில் ஓட்டை போட்டுடுவாங்களோ எனும் பயத்தில் நாலடி தள்ளியே நிக்கிறது என்னோட பழக்கம்.

இவங்க எப்படித் தான் நடக்கிறாங்களோ என்று அவ்வப்போது ஆச்சரியப்படும் ஆண்களின் கூட்டத்தில் நானும் ஒருத்தன்.

யாராவது இவங்க கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடினால் கூட, “எக்ஸ்கியூஸ்மி” என்று பின்னால் ஆமை வேகத்தில் அசைந்து தான் துரத்துவார்கள் என நேற்று வரை நினைத்திருந்தேன் ஆனால் இவங்க “விழுந்தடித்துக் கொண்டு” ஓடுவார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

பெல்கிரேட் என்னுமிடத்தில் நேற்று நடந்த ஹீல்ஸ் ஓட்டப் பந்தயக் காட்சி இது. ( என்ன கொடுமை சந்திரமுகி இது ? )

90 பெண்கள் கலந்து கொண்ட ஓட்டப் பந்தயத்தில் ஒரு பெண் நீச்சலடிக்கிறார்.
ஹீல்ஸ் குறைந்த பட்சம் 8 செண்டி மீட்டர்கள் இருக்க வேண்டும் என்பது இந்தப் போட்டியின் “கால்” விதி. விழுந்து விழுந்தே ஓட வேண்டும் என்பது போட்டியாளர்களின் தலை விதி.

ஜெயிச்சா சுமார் ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாய்கள் பரிசாம். அப்புறம் என்ன ? ஹீல்ஸ் போட்டுட்டு ஹில்ஸ் ல கூட ஓடுவோம்ல என்கின்றனர் இந்த ஹீல்ஸ் கிளிகள்.

Advertisements

6 comments on “ஹை ஹீல்ஸ் கிளிகள் !

 1. இப்படி ஆபத்தான விளையாட்டுக்களள தடை செய்ய வேண்டாம் என்று சுற்றி நின்னு பார்த்தவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். 😛

  Like

 2. சரியாக ஐந்து வருஷத்துக்கு முன்னால்…

  (ஒரு கொசுவத்தி சுருளை கொளுத்தி முகத்துக்கு முன்னால் ஐந்து வினாடிகள் சுற்றவும்)

  29-c பேருந்தில் மந்தைவெளியிலிருந்து நுக்கம்பாக்கம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது…

  உட்கார இருக்கை கிடைக்கவில்லை. ஏறக்குறைய முக்கால் வாசி தூரம் நின்றே வந்திருக்கிறேன். சரியாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிறுத்தத்தில் வலதுகால் கட்டைவிரலில் ஐந்து டன் கனமுள்ள ஒரு பொருள் விழுந்தால் ஏற்படக் கூடிய வலி ஏற்பட்டது.

  அய்யோ என்று அலறிக்கொண்டே கவனித்த போது ஒரு ஹை ஹீல்ஸ் கல்லூரிப் பெண் கடந்து போனது தெரிந்தது. அந்த இடத்தில் எனக்காகப் பரிதாபப் பட யாரும் இல்லை. மாறாக “இவன் அந்த புள்ளைய என்ன வம்பிழுத்தானோ” என்று சகபயணிகளால் என் மானம் போனதுதான் மிச்சம்.

  (மீண்டும் கொசுவத்திச் சுருள்…)

  அன்று பிளந்து போன வலது கால் பெருவிரல் நகம் நாலு ஆண்டுகள் கழித்து தான் சரியானது.

  ஆகவே இளைஞர்களே, சிங்கத்து வாயில வேணுமானாலும் தலைய வைங்கடா… ஹை ஹீல்ஸ் பக்கத்தில மட்டும் கால வைச்சிராதிங்க… அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கொங்கடா…

  Like

 3. //இப்படி ஆபத்தான விளையாட்டுக்களள தடை செய்ய வேண்டாம் என்று சுற்றி நின்னு பார்த்தவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்//

  ஜல்லிக்கட்டையே தடை செய்யல – உங்க
  ஜொள்ளிக் கட்டையா தடை செய்யப் போறாங்க 🙂

  Like

 4. //ஏதோ குறைய‌ற‌ மாதிரி இருக்கே….சே…சே கூடி போயிருக்கு,அதாங்க‌ ஆடை//

  இந்த நக்கலுக்கொண்ணும் கொறச்சலில்ல. கேரளா போனதில இருந்தே உங்க பேச்சு சரியில்லை 🙂

  Like

 5. //….. ஆகவே இளைஞர்களே, சிங்கத்து வாயில வேணுமானாலும் தலைய வைங்கடா… ஹை ஹீல்ஸ் பக்கத்தில மட்டும் கால வைச்சிராதிங்க… அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கொங்கடா//

  பதிவை விட சூப்பரா ; )ஒரு பதில் 🙂
  நன்றி !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s