குழந்தைகள் எந்த வயதில் உடற்பயிற்சி ஆரம்பிக்கலாம் ?

குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களை சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டுமென பெற்றோர் முடிவு செய்து விடுகிறார்கள். இதன் விளைவு தான் இரண்டரை வயதாகும் போதே குழந்தைகள் பால் மணம் வீசும் வாயுடன் “பிளே ஸ்கூல்” செல்வதும், மழலைக்கே உரித்தான மகத்துவங்கள் மறுதலிக்கப்படுவதும்.

இதன் தொடற்சியாக பல கூத்துகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஐந்து வயது சிறுவன் அதைச் செய்தான், ஆறு வயதுச் சிறுவன் இதைப் புரட்டினான் என்று சொல்வதைப் பெற்றோர் பெருமை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிஞ்சைப் பழுக்க வைக்கும் பெற்றோரின் மனநிலையை மருத்துவர்களும், உளவியலார்களும் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சமீபத்தில் அமெரிக்கன் குழந்தைகள் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தைகள் மீதான சுமைகள் குறித்து பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக குழந்தைகளை உடற்பயிற்சி நிலையங்களில் சேர்த்து அவர்களைப் பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வைப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை செய்கிறார் இதன் இயக்குனர் மெக்காம்பிரிட்ஜ்.

உண்மையிலேயே குழந்தைகளுக்குத் தேவையானது ஓடியாடும் மகிழ்ச்சியான விளையாட்டுள் மட்டுமே. கடினமான உடற்பயிற்சிகள் அல்ல என்பதே அவருடைய வாதம். பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தியே ஆவேன் என பிடிவாதம் பிடிப்பவர்களும் குறைந்த பட்சம் குழந்தை ஏழு வயது ஆகும் வரையாவது பொறுத்திருத்தல் மிக மிக அவசியம் என்கிறார் இவர்.

ஏழு – எட்டு வயதாகும் வரை குழந்தைகளின் உடலமைப்பு ஒரு சமநிலைக்கு வருவதில்லை எனவும், அதற்கு முன்பே பளு தூக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வைப்பது ஆபத்து என்பதையும் அவர் முதன்மைப் படுத்துகிறார்.

குழந்தைகள் இத்தகைய உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் கண்டிப்பாக முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பயிற்சிகள் யாவற்றையும் தேர்ந்த பயிற்சியாளரின் முன்னிலையில் தான் செய்ய வேண்டும், குறைந்த நேரம் மற்றும் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பயிற்சி என்பதைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் பல அறிவுரைகளை அவர் வழங்குகிறார்.

இயற்கையோடு இணைந்து வாழாத வாழ்க்கையும், எதிர்த்து நின்று உடைக்க நினைக்கும் மனப்பான்மையும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இயல்பான வளர்ச்சியே நிலையானது என்பதை உணர வேண்டும். முளைக்கும் வரை காத்திருந்து விட்டு முளைத்த உடன் தலையில் பாறாங்கல் வைப்பதைத் தவிர்த்து மழலைச் செடிகளைக் காப்பதே பெற்றோரின் கடமையாகும்.

6 comments on “குழந்தைகள் எந்த வயதில் உடற்பயிற்சி ஆரம்பிக்கலாம் ?

 1. திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, சென்னையில் ஒரு விழாவில் பேசியது:

  “குழந்தைப் பருவத்தில் மழலையர் கல்வி சொல்லிக் கொடுக்கின்ற பழக்கம் நம்முடைய நாட்டில்தான் இருக்கின்றது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எட்டு வயது ஆனபிறகுதான் எந்தக் குழந்தையையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

  ஆனால், இங்கு 8 மாதத்தில் குழந்தையைச் சேர்க்கக்கூடிய பள்ளிக்கூடம் கிடைக்குமா? என்று பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் செய்யும் கொடுமை, இதைவிட வேறு ஒன்றும் கிடையாது.

  ஒரு குழந்தையின் கையைப் பிடித்து எழுதுகிற நேரத்தில், அந்த குழந்தையின் விரல்கள் அதற்குரிய நரம்பு வளர்ச்சி அடைந்திருக்கிறதா? எழுதக்கூடிய அளவிற்கு வலு அமைந்திருக்கிறதா? என்பதை வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால், நம்முடைய நாட்டிலே அந்த நரம்பு வளர்ச்சியைப் பற்றி எந்தத் தாயும், எந்தத் தந்தையும் கவலைப்படுவதில்லை.

  நன்றி: ராணி (13.4.2008)

  Like

 2. ஆமாம். பெற்றோர்கள் ஏன் தான் இப்படி நடந்துக் கொள்கிறார்களோ?? நிறைய வீட்டுப் பாடம் கொடுக்காதப் பள்ளிகள் நல்ல பள்ளிகள் இல்லை என முடிவு செய்கிறார்கள். எல்லா subjects -ம் தினம் வீட்டுப் பாடம் கொடுக்காத ஆசிரியர் திட்டு வாங்க வேண்டும் பள்ளி முதல்வரிடம். ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக் கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்.தனியார்ப் பள்ளிகள் அவர்களாகவே அவர்களுக்கு ஒரு சட்டம் போட்டுக் கொண்டு நடந்து வருகின்றன.

  Like

 3. //நிறைய வீட்டுப் பாடம் கொடுக்காதப் பள்ளிகள் நல்ல பள்ளிகள் இல்லை என முடிவு செய்கிறார்கள்//

  நச்சுன்னு சொன்னீங்க அமுதா !

  Like

 4. ulagathula periya periya manushallellam olunga schooluku ponathillangara unmaiya sollungapa plz from…… schooluku poga varuthapaduvor sangam

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s