எந்தக் குழந்தை வேண்டும் ? தாய்மார்களே முடிவு செய்யலாம் !!!

எந்தக் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை நிர்ணயம் செய்வதில் தாய்மார்களின் உணவுப் பழக்கமும் இடம்பெற்றிருக்கிறது என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும், குறைந்த கலோரி கொண்ட உணவுப் பொருட்களை உண்ணும் பெண்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக காலை உணவை உண்ணாமல் விட்டு விடும் தாய்மார்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.

ஆக்ஸ்போஃட் மற்றும் எக்சீடர் பல்கலைக்கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இத்தகைய சுவாரஸ்யங்கள் தெரிய வந்துள்ளன.

குழந்தையின் பாலியலை நிர்ணயிக்கும் நிரூபிக்கப்பட்ட காரணியாக விந்தணுக்களே இருக்கின்றன. எனினும் இரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவுக்கும் இந்த பாலியல் நிர்ணயத்துக்கும் கூட தெளிவிக்கப்படாத நெருங்கிய பந்தம் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

இதனால் தான் குறைந்த கலோரி உணவை வழக்கமாகக் கொண்டிருக்கும் மேலை நாடுகளில் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாய் இருக்கிறது என்று நம்புகிறார் எக்சீடர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபியோனா மாத்யூஸ்.

தாயாகப் போகும் பெண்கள் இதை சோதித்துப் பார்க்கலாம் மருத்துவரின் உணவுப் பட்டியலை மீறாமல் 🙂

10 comments on “எந்தக் குழந்தை வேண்டும் ? தாய்மார்களே முடிவு செய்யலாம் !!!

 1. ஜாக்கிரதை. மொத்த உலகமும் சேவல்பண்ணை ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  Like

 2. நண்பர் விஜயகோபாலசாமி அந்தக்காலம் மலையேறிடுச்சு. இப்ப எல்லாரும் பெண்பிள்ளைதான் கடைசி காலத்துல ஒரு வாய்த்தனண்ணீஈற் விடும்னு நினைக்கிறாங்க!கொஞ்ச காலமாக கல்யாண மார்கெட்டுலயும் பெண்பிள்ளைகளுக்கு ஏக டிமான்டு!அது வேற யோசிக்க வச்சுருக்கு!
  அன்புடன்
  கமலா

  Like

 3. இல்லைங்க அது நிரூபிக்கபடாத பொய்யான தகவல் ஏன் என்றால் ஆணின் விந்தில் இருப்பாலருக்கு உண்டான உயிரணு உள்ளதாகவும். அதன் பெயர் எக்ஸ் மற்றும் ஒய் அதே போல் பெண்ணிற்கு அந்த முட்டையின் பெயர் கூட எக்ஸ் இப்ப ஆணின் விந்தின் ஒரு துளியில் ஆணின் எக்ஸ்யும், பெண்ணின் முட்டை எக்ஸ்யும் சேர்ந்தால் ஆண் பிள்ளையும். அல்லது ஆணின் ஒய்யும், பெண்ணின் எக்ஸ்யும் சேர்ந்தால் பெண்பிள்ளை பிறக்கும் என்று ஏற்க்கனவே படித்த விஞ்ஞான உண்மை அதனால் முட்டைக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. அதாவது ஆணை தேர்ந்தேடுப்பதா! அல்லது பெண்ணை தேர்ந்தேடுப்பதா என்று. ஏன் என்றால் நீந்தக்கூடியது உயிரணு தான்.
  அப்துல் அசீஸ்.

  Like

 4. அந்த சதவீத அளவை ஒரு பக்கத்துக்கு மட்டும் சொல்லியுள்ளது. ஐந்பத்தாறு சதவீத மக்கள் அதிகமாக ஹை எனேர்ஜ்ய்யும் அதுமட்டும் அல்லாமல் அதிகமான அளவு நுட்ரியன்த்ஸ், போட்டசயும், கால்சியம், வைட்டமின் சி, இ, பிபன்னிரண்டு, அதோடு காலை உணவையும் ஹெவியாக க்ர்எல்ஸ் சேர்த்து சாப்பிட்டதால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. மற்றும் நார்ப்பத்தி ஐந்து சதவீத பெண்கள் குறைவான எனெர்ஜி எடுத்துக்கொண்டதாள் பெண் குழந்தை பெற்றார்கள் என்று ஏன் போடவில்லை ? அல்லது நார்ப்பத்தி ஐந்து சதவீதத்திலும் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் கலந்து பிறந்ததால் தானே. அதை போடாமல் விட்டதற்கு காரணம். அந்த உணவு எனெர்ஜி சதவீத கணக்கு நம் நாட்டுக்கு பொருந்துமா எல்லா தரப்பு மக்களும் இருக்க தான் செய்கிறார்கள். அடி தட்டு ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு யார் கால்சியம் நுட்ரியன்த்ஸ், போட்டசயும், கொடுக்கிறார்கள். அப்படி இருந்தும் ஆண்,மற்றும் பெண் பிரக்கத்தானே செய்கிறது. இன்னும் நம் பெண்கள் டாக்டர் எழுதி கொடுக்கும் பிரசவ கால மருந்து முறைகளை கூட ஒழுங்காக சாபிடுவதில்லை.வீட்டிலேயே இன்னொரு பார்மசி வைத்துவிடலாம்.அந்த அளவுக்கு உட்கொள்ளாமல் மருந்து மாத்திரைகள் அப்படியே கிடக்கும். அதனால் உலக அளவில் உள்ள மக்களின் உணவு முறைகளை வைத்து சோதனை செய்யாமல். வெறும் குறிப்பிட்ட இடத்தில் உள்ளவர்களிடம் மட்டும் சதவீத கணக்கு எடுத்து இது அனைவருக்கும் சரியா வரும் என்று எப்படி உறுதி படுத்த முடியும்.
  அப்துல் அசீஸ்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s