பணம் இல்லையா ? பரவாயில்லை பாராட்டுங்க !!!

ஒருவரை மனம் திறந்து பாராட்டுவதும், புகழ்வதும் அவருக்கு நல்ல ஒரு தொகையைப் பரிசாக அளிப்பதும் மூளையில் ஒரே விதமான ஆனந்த அதிர்வலைகளை எழுப்புவதாக புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

பாராட்டும், புகழ்ச்சியும் மனதளவில் மிகப்பெரிய உந்துதலைத் தரும் எனும் நிரூபிக்கப்பட்ட உண்மை மனுக்குலத்தில் பன்னெடுங்காலமாகவே உண்டு. அது இப்போது அறிவியல் முறையாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் வெறும் வார்த்தைகளால் நாம் சொல்லும் உண்மையான பாராட்டு மனதளவில் நல்ல பரிசுத் தொகையைப் பெற்றதைப் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

ஜப்பானின் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பாராட்டு, அங்கீகாரம், மற்றும் பணம் அனைத்தும் மூளையின் ஒரே இடத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது இப்போது தான் தெரியவந்திருக்கிறது என்கிறார் இந்த ஆய்வில் பங்குபெற்றுள்ள மருத்துவர் நோரிகிரோ.

பொதுவாகவே பாராட்டுகளையும், அங்கீகாரங்களையும், புகழையும் எதிர்பார்க்கும் நாம் அதை பிறருக்குத் தருவதில் மிகவும் கஞ்சத்தனத்துடன் நடந்து கொள்வதுண்டு. பாராட்டு என்பது அலுவலகத்தில் மேலதிகாரி கீழதிகாரிக்குத் தருவது என்பதே பாராட்டைப் பற்றி நாம் வைத்திருக்கும் அளவு கோல்.

அந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். வீடுகளில் நம் குழந்தைகள், வாழ்க்கைத் துணை, சகோதரர்கள், சார்ந்திருப்போர், அயலார் என அனைவருக்கும் தேவையான நேரங்களில் பாராட்டுக்களைத் தரத் தவறக் கூடாது என்பதே உளவியலார் கருத்து.

பாராட்டுதலும், உதவுதலும் மனித குலத்தின் மாண்புகளைப் பிரதிபலிக்கும் செயல்பாடுகள்..இன்னும் என்ன பராக்குப் பாத்துட்டு இருக்கீங்க, பக்கத்துல இருப்பவருக்கு ஒரு புன்னகை கலந்த பாராட்டைக் கொடுத்து விட்டு வாங்க.

Advertisements

4 comments on “பணம் இல்லையா ? பரவாயில்லை பாராட்டுங்க !!!

 1. ஏன் சொல்ல மாட்டே, இந்த மாச கிரெடிட் கார்டு ட்யூவுக்கு பேங்க் மனேஜர நாலு மணிநேரம் பாராட்டிட்டு வாயேன். விட்ருவானா பாப்போம்.

  Like

 2. neenga perya aalunga………..
  nall article……………….
  super a iruku…………..
  kalakureenga……………….
  ungala enna solli paaratrathune theriyala

  ippo sollunga athirvalayin alai neelam evlavu

  Like

 3. //ஏன் சொல்ல மாட்டே, இந்த மாச கிரெடிட் கார்டு ட்யூவுக்கு பேங்க் மனேஜர நாலு மணிநேரம் பாராட்டிட்டு வாயேன். விட்ருவானா பாப்போம்.
  //

  ஹா…ஹா… இது வேற பாராட்டு 🙂

  Like

 4. //neenga perya aalunga………..
  nall article……………….
  super a iruku…………..
  kalakureenga……………….
  ungala enna solli paaratrathune theriyala

  ippo sollunga athirvalayin alai neelam evlavu
  //

  தலையில் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச முடியும் மடியுமளவுக்கு இருந்தது அதிர்ர்ர்ர்ர்ர்ர்வலை 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s