வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்

தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.

முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக் கொண்டு வந்து முதல் பக்கத்தில் போடுவது. அதை வாசிப்பவர்களின் மனநிலையையோ, அந்த புகைப்படத்தைச் சார்ந்த மனிதர்களின் மனநிலையையோ சற்றும் கண்டு கொள்ளாத தினகரனின் போக்கு.

இன்றைய நாளிதழைப் புரட்டினால், இடிபாடுகளுக்கிடையே கடந்த 40 மணி நேரமாய் போராடும் சிறுமி என கண்களில், திகிலும், வேதனையும், பயமும் கலந்த ஒரு மழலையின் மரணப் போராட்டப் படம் ஒரு பக்கம்.

எரிந்து கொண்டிருக்கும் மனித உடல் இன்னொரு பக்கம்.

நெஞ்சில்  முழுவதுமாக இறங்கிய கத்தியுடன் படுத்திருக்கும் மனிதர் ஒரு பக்கம். குத்து, வெட்டு, கதறல் என ஒரு யுத்தக்களத்தில் பிசுபிசுப்புக் கையுடன் நடந்து செல்லும் உணர்வு மேலோங்குகிறது.

என்னதான் நிலை நிறுத்த விரும்புகிறதோ தினகரன். நாளிதழில் எடிட்டர், ஆசிரியர் எல்லோருமா இத்தகைய கொடூர ரசனையை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

மற்ற பத்திரிகைகள் எல்லாம் எப்படி இன்றைய செய்திகளை வெளியிட்டிருக்கின்றன என புரட்டிப் பார்த்தேன். பெரும் நாளிதழ்கள் எல்லாம் செய்திகளை, கட்டுரைகளை, விவரங்களை முழுமையாகப் போட்டு வெறுமனே பதட்டத்தையும், வலியையும், கூட்டும் படங்களை காட்டாமல் விட்டிருந்தன.

அது தான் நாளிதழ் தர்மம் என நினைக்கிறேன். அமெரிக்காவிலெல்லாம் கொலை நடந்தால் கூட அதை நாளிதழ்கள் பெரும்பாலும் வெளியிடுவதில்லை. பொதுமக்களிடையே பதட்டம் ஏற்படுத்தாமல் அந்த சிக்கலை காவல்துறை பிண்ணணியில் செயலாற்றி முடித்துக் கொள்வதே வழக்கம்.

இந்தியாவில் பரபரப்பு, பதட்டம், உடனடிச் செய்தி, எக்ஸ்குளூசிவ் என பல்வேறு பெயர்களுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.

நாளிதழ்களுக்கென சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அவற்றில் கொஞ்சமேனும் கற்றுக் கொள்வது தினகரனுக்கு நல்லது. மற்றபடி பத்து இலட்சம் பிரதி விற்பதை வைத்துக் கொண்டெல்லாம் தம்பட்டம் அடிப்பது வெறுப்படிக்கிறது.

இன்றைக்கு நாளிதழில் வெளியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு எனது மழலை மகளின் முகம் போன போக்கைப் பார்த்தபின் இனிமேலும் இதை வாங்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.

39 comments on “வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்

 1. ரொம்ப சரியா சொன்னீங்க போங்க…! தினகரனை சன் டி.வி., வாங்குனதுல இருந்தே இந்த கூத்து அரங்கேறிக்கிட்டுத்தானே இருக்கு. ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டால், அழுது ஒப்பாரி வைக்கும் காட்சிகள் சன் டி.வி.யில்தானே வருகின்றன. தினகரன், சன் குழும பத்திரிகை என்பதை இப்படியும் ‌வெளிப்படுத்துறாங்களோ….?

  Like

 2. திரு. அலசல் அவர்களே!

  தினகரன் ஒருநாள் லேட்டாக பூகம்ப படங்களை போட்டிருக்கிறார்கள். தினத்தந்தி, தினமலர் நேற்றே பூகம்ப ஸ்பெஷல் வண்ணப்படங்களை இருபக்க அளவுக்கு போட்டுவிட்டார்கள். இந்த ஒரே ஒரு மேட்டருக்கு இவ்வளவு சீரியஸாகி பதிவு போட தேவையில்லை. நீங்கள் தினமலர் படிக்க ஆரம்பித்தால் இதே போல தினமும் பத்து பதிவுகளாவது போடவேண்டியிருக்கும் 🙂

  Like

 3. //நீங்கள் தினமலர் படிக்க ஆரம்பித்தால் இதே போல தினமும் பத்து பதிவுகளாவது போடவேண்டியிருக்கும்//

  1990 – ல் தினமலர் படிப்பதை நிறுத்தவேண்டுமெனும் அறிவு வந்துவிட்டது 🙂

  Like

 4. நன்றி நிருபர். & மைக்கேல் ! நீங்களும் ஒத்த சிந்தனை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

  Like

 5. தினகரன் மட்டுமல்ல தினமலர் மற்றும் பல பத்திரிக்கைகளும் இப்படி தான். எதற்கும் சமூக பொறுப்பு கிடையாது. இதை நாம் பார்தால் பேப்பர் படிப்பதையே விட்டு விட வேண்டியது தான்

  Like

 6. //
  americal paper patri neengal sonnathai ninaithu siruppu varukirathu. ulag visayathil gnanam illamal pathivu podathirkal. please
  //

  திரு. பொய்யன்,

  உலக வர்த்தக கட்டிடத்தில் விமானங்கள் மோதிய பிறகு பயத்தில் பலர் அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சிதறி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன. உலக ஞானம் உள்ள பலருக்கும் இந்த செய்தி தெரிந்த ஒன்றுதான். உங்களுக்குத் தெரியவில்லை பாவம்.

  Like

 7. //americal paper patri neengal sonnathai ninaithu siruppu varukirathu. ulag visayathil gnanam illamal pathivu podathirkal. please//

  தெரிந்த அறிவை வைத்து எழுதுகிறேன். மேலதிக விவரங்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.

  Like

 8. //உலக வர்த்தக கட்டிடத்தில் விமானங்கள் மோதிய பிறகு பயத்தில் பலர் அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சிதறி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன//

  நன்றி கோபால் சாமி. நான் எதையும் மனதில் வைத்து இந்தப் பதிவைப் போடவில்லை. தினகரன் நாளிதழில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று இருப்பதைச் சுட்டிக் காட்டினேன் அவ்வளவே 🙂

  Like

 9. //தினகரன் மட்டுமல்ல தினமலர் மற்றும் பல பத்திரிக்கைகளும் இப்படி தான். எதற்கும் சமூக பொறுப்பு கிடையாது. இதை நாம் பார்தால் பேப்பர் படிப்பதையே விட்டு விட வேண்டியது தான்

  //

  பெய்த மழையில் நெஞ்சு நிமிர்த்தும் காளான்கள் போல செய்திச் சானல்கள் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கும் இன்றைய சூழல் பத்திரிகை படிப்பதன் தேவையையும் இல்லாமலாக்குகின்றன.

  எந்த செய்தித்தாளைப் படித்தாலும் “ஓ.. அப்படியா” என வியக்க முடிந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போது, ஆமா… நேற்று நள்ளிரவே கேள்விப்பட்டேன் என்று சொல்லும் காலம் தான் நமது.

  Like

 10. யோவ்! எவன்யா உங்களுக்கெல்லாம் அறிவைப் படைச்சான்?

  //அக்கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து உடல் சிதறி இறந்தனர். அமெரிக்கப் பத்திரிகை உலகம் பொறுப்புணர்வுடன் அந்தப் படங்களைத் தவிர்த்தன.//

  எது உங்களுக்கு பொறுப்புணர்வு? மக்களை வஞ்சிக்கிற ஒரு அரசு, அறிவிக்கப்பாத எமர்ஜென்சியைப்போல் செய்திகளை தனிக்கை செய்து வெளியிடும் ஜனநாயக் விரோதச் செயலை என்னமாய் பிரதிபலிக்கிறீர்கள். உங்களைப்போன்ற ஜால்றாக்கள்தான் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா போன்ற அரசுகள் விரும்புகிறது.

  கைநிறை சம்பாதிச்சினா கம்முனு மூடிக்கிட்டுத் தூங்குங்க. திருட முயன்ற குற்றத்துக்காக மூன்று மனிதர்களை உயிரோடு போட்டுக் கொளுத்தும் கும்பலை விமர்சிக்க வக்கில்லாத உங்களுக்கு அதை வெளியிட்ட தினகரன் மீது வாய் நீளுகிறதோ!

  காலங்காத்தால கொலைச் செய்தியை கண்ல காட்றான்யா”ன்னு நீ புலம்பற இல்ல… அது மாதிரிதான் இதுவும். உண்மையில் உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருந்ததென்றால் அந்த நிகழ்வுகளுக்குக் காரணமானவர்கள் மீது கோபம் கொந்தளித்திருக்க வேண்டும்?

  நாளைக்கு நீங்கள்லாம் ஒண்ணுகூடி சாதிய வண்கொடுமையோ, பாலியல் வண்கொடுமையோ செய்தீங்கன்னா, அதையும் தினகரனோ, தினமலரோ வெளியடக்கூடாது. அப்படித்தானே அதிர் பார்க்கறீங்க?

  Like

 11. வாங்க கடவுள். ஒரு சமூக அக்கறையுள்ள, தார்மீகக் கோபம் கொண்ட மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

  உங்கள் கோபத்தின் அளவீடுகளை அள்ளி வரலாம் என உங்கள் தளம் புகுந்த எனக்கு ஏமாற்றமே மேலிட்டது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
  (விருப்பம் : தற்போதைக்கு நமீதா நடித்த படங்கள். விருப்பங்கள் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கும், என்ற உங்களது பயோ டேட்டா சற்றே சுவாரஸ்யம் !)

  தினகரனோ என எழுதிவிட்டு கூடவே தினமலரோ என்றும் எழுதி வன்கொடுமைக்கு எதிராக முன்னிற்கும் நாளிதழ் தினமலர் என நீங்கள் உருவாக்க முயன்றிருக்கும் தோற்றமும் உங்களை சற்று அடையாளம் காண உதவியிருக்கிறது.

  எது எப்படியோ, வருகைக்கு நன்றி. இங்கே நீங்கள் எதிர்பார்க்கும் ஆயுதங்கள் விற்கப்படாது என்பதால் வேறு தளங்களை நாட அன்புடன் வேண்டுகிறேன்.

  Like

 12. Hello Jevier

  I agree in you are point of view that article but the same time you thhink about I God what he said one side we see many IT people get more money month other side there is more unemployement .
  any step take to balance the Govt??

  in many place in my pondicherry area people get one day wages Rs.40 so how can live this society?

  this is not only the paper issue it is refelet our society mirror.

  ok bye.
  siva
  pondy.

  Like

 13. என்னுடைய பூணூலை எளிதில் கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள் சேவியர். ஒருவேளை நீங்கள் சிறந்த படைப்பாளியாக வெளியுலகம் அறியும் பட்சத்தில் பிராமணப் பத்திரிகைகள் ஏதாகிலும் தங்களை பேட்டி கானவோ, தங்களைப் பற்றி எழுதவோ முன் வரும் பட்சத்தில் தாங்கள் அதை மறுத்து கொள்கையை நிரூபிப்பீர்கள் என நம்புகிறேன். இதைத் தங்களது நன்பர்களுக்கும் அறிவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்க மாட்டேன்.

  நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை(சுகமாக சமூகம் மறந்து) ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதே கேள்வி.

  Like

 14. ///
  எவன்யா உங்களுக்கெல்லாம் அறிவைப் படைச்சான்?
  ///

  “நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்ளும் முட்டாள்தனத்தை உங்களுக்குள் யார் படைத்தாரோ அவரே தான் எங்களுக்கும் அறிவைப் படைத்தார்.

  Like

 15. ஒரு யானை மனிதனை தூக்கிப்போட்டு மிதிக்கும் காட்சி சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்ப போடப்பட்டபோதும் எனக்கு இதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒன்னு இப்டிப்பட்ட படங்கள், இல்லைன்னா நடிகைகளோட க்ளோஸப் படங்கள், இவைகளை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கைகள் ‘நம்பர் ஒன்’ பெருமையைத் தேடறாங்க!!

  Like

 16. //என்னுடைய பூணூலை எளிதில் கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள் சேவியர். ஒருவேளை நீங்கள் சிறந்த படைப்பாளியாக வெளியுலகம் அறியும் பட்சத்தில் பிராமணப் பத்திரிகைகள் ஏதாகிலும் தங்களை பேட்டி கானவோ, தங்களைப் பற்றி எழுதவோ முன் வரும் பட்சத்தில் தாங்கள் அதை மறுத்து கொள்கையை நிரூபிப்பீர்கள் என நம்புகிறேன். இதைத் தங்களது நன்பர்களுக்கும் அறிவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்க மாட்டேன்.

  நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை(சுகமாக சமூகம் மறந்து) ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதே கேள்வி.
  //

  என் கொள்கை என்ன என்பதை நான் யாரிடமும் போஸ்டர் அடித்து ஒட்டியதில்லையே… 🙂
  நான் சொல்லியிருப்பதெல்லாம், எனக்குப் பிடித்ததும், பிடிக்காததும், கவர்ந்ததும், கவராததும் மட்டுமே. நீங்கள் என்னை ஒரு சாதியினரின் விரோதியாய் சித்தரிக்கப் பார்ப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. என்னைப் பற்றியும், என் நண்பர்களைப் பற்றியும் உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பதை இதை விட எளிமையாய் சொல்ல யாராலும் முடியாது.

  வாழ்க வளமுடன் !

  Like

 17. //ஒரு யானை மனிதனை தூக்கிப்போட்டு மிதிக்கும் காட்சி சன் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்ப போடப்பட்டபோதும் எனக்கு இதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒன்னு இப்டிப்பட்ட படங்கள், இல்லைன்னா நடிகைகளோட க்ளோஸப் படங்கள், இவைகளை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கைகள் ‘நம்பர் ஒன்’ பெருமையைத் தேடறாங்க!!

  //

  மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சரவ்.

  ஒரு செய்தியை ஊடகங்கள் சொல்லும்போது குறைந்த பட்சம் மூன்று கேள்விகளை தங்களுக்குள் கேட்பது நல்லது.

  1. இதை விட சிறப்பான விதத்தில் இந்த செய்தியைச் சொல்ல முடியுமா ?

  2. இதை சொல்வதால் சமூகத்தில் ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுமா ?

  3. இந்த செய்தி தன்னை(ஊடகத்தை) முன்னிலைப் படுத்தாமல் செய்தியின் உண்மைத் தன்மையை முன்னிலைப்படுத்துகிறதா ?

  இதை விட்டு விட்டு

  1. இந்த செய்தி அடுத்த பத்திரிகை சொன்னதை விட வீரியமாய்/கோரமாய்/பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறதா ?

  2. இந்த செய்தி சொல்வதனால் தான் சார்ந்த தளம் பலமடைந்து, எதிர் களம் பலவீனமடைகிறதா ?

  3. தன் பத்திரிகையில் வாசகர் வட்டத்தை இந்த செய்தி அதிகரிக்கிறதா ?

  என்பதிலேயே செல்கிறது பல வேளைகளில் பத்திரிகைகளின் கவனம் !

  Like

 18. Dear Jevier
  I jsut read your old article about the IT peoploe
  in the below your sentence I had long time.. and worry about the middle class people mentality.

  any way next 2011 capitan?? Vijiayakanth or DR. Ramadoss help the people so we are pray Parakimalai Jesus :]]]
  ok bye
  Jevier.

  “மென்பொறியாளர்களும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளும் வீடுகளை வாங்கி சென்னையில் குடும்பத்துடன் குடியேறுகையில் இவர்களால் மேலும் மேலும் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் மற்ற உழைப்பாளர்களையும், சராசரி மக்களையும் நினைக்கையில் மனசு பதறுகிறது.

  ஒரு வேளை உணவை நானூற்று ஐம்பது ரூபாய்க்கு பஃபே யில் வழங்கும் உணவகங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சென்னையில் மதிய உணவுக்கு பதினைந்து ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடியாத ஏழைகளும் பெருகி வருவது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் மனநிலை கொண்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.”

  Like

 19. This is basically a marketing strategy targetted at specific audience.

  These things are unavoidable when there is neck to neck competition.
  When more and more people come out with reaction like yours, there is a possibility of change.

  Like

 20. 10.04.2008 தேதியிட்ட குங்குமம் இதழ் கிடைத்தால் அதில் வெளியான “செய்தி” என்ற எனது சிறுகதையைப் படிக்கவும்

  Like

 21. Xavi,

  Your are well said. I agree with you. In present days media (News TV channels) are not giving the news rather making the news as bussiness. Any event is blown up to a greater extent. Responsiblity of the media are degraded. If you watch the same news on SunTV, Kalaingar TV and Jaya you can understand how it is intereperated to their own cause. Now a days I hate watching news and reading papers.

  Like

 22. //10.04.2008 தேதியிட்ட குங்குமம் இதழ் கிடைத்தால் அதில் வெளியான “செய்தி” என்ற எனது சிறுகதையைப் படிக்கவும்//

  இணையத்தில் இருந்தால் சுட்டி அனுப்புங்கள்.

  Like

 23. //making the news as bussiness. Any event is blown up to a greater extent. Responsiblity of the media are degraded. If you watch the same news on SunTV, Kalaingar TV and Jaya you can understand how it is intereperated to their own cause. //

  வாவ்… நச்சுன்னு சொல்லிட்டீங்க 🙂

  Like

 24. If we read dinamalar, daily the title starts with a big shock, or negative word almost everyday. very rare of positive words. ‘adirchi’ ‘ prachnai’ saavu’, thuyaram’,

  Like

 25. சில நல்ல நாளிதல்களை படிக்க ஆளில்லை. நல்லது போட்டாலும் படிக்க ஆளில்லை என்கிற நிலையில் அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம் தான் மாறவேண்டும் என்று அறிவுரை சொல்வதாகப் படுகிறது. என்ன என் புரிதல் சரியா நண்பரே!.

  – ஜெகதீஸ்வரன்.

  http://sagotharan.wordpress.com/

  Like

 26. //சில நல்ல நாளிதல்களை படிக்க ஆளில்லை. நல்லது போட்டாலும் படிக்க ஆளில்லை என்கிற நிலையில் அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம் தான் மாறவேண்டும் என்று அறிவுரை சொல்வதாகப் படுகிறது. என்ன என் புரிதல் சரியா நண்பரே!.

  – ஜெகதீஸ்வரன்
  //

  நாளிதழ்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணரவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் சக்கரத்துக்கு அடியில் 45 நிமிடம் போராடிய ஒருவரைப் பற்றிப் படத்துடன் போட்டிருந்தார்கள். என்னாலேயே இன்னும் மீண்டு வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எப்படி இருக்கும் ? வெறும் வியாபாரமும், பரபரப்பும் மட்டுமே பத்திரிகைத் தொழில் அல்ல !

  Like

 27. ஒரு வேளை உணவை நானூற்று ஐம்பது ரூபாய்க்கு பஃபே யில் வழங்கும் உணவகங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சென்னையில் மதிய உணவுக்கு பதினைந்து ரூபாய்க்கு மேல் ஒதுக்க முடியாத ஏழைகளும் பெருகி வருவது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் மனநிலை கொண்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்———-there are porters who earns more than the software engineers.Realters earn in crores with out putting much labour. You are envious about the software engineers who work for more than 14hours without time limit and personal conveniences.

  Like

 28. //You are envious about the software engineers who work for more than 14hours without time limit and personal conveniences//

  இல்லை. நானும் உங்களில் ஒருவன் தான் 🙂

  Like

 29. Dear Sir,

  I am also a Brahmin. I like the kindness of christians. Beacause “MATHANGAL VERU AYINUM KADAVUL UNARTHUVATHU ONDRE. ANBE SIVEM-KARUNAIYE KADAVUL”.

  Vanmurai Katchigal News Paperil Varuvathi Nanum Virumbuvathillai. Athrku pathil Arasukku Athu Anuppappattu thadukka Vendum.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s