அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!

ரொம்ப தாமதமாகப் பார்க்க நேர்ந்தது அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தை. தாமதமாய் பார்த்ததால் எதுவும் நஷ்டமில்லை என்பதை சிம்பு தேவன் திரைப்படம் மூலம் விளக்கியிருந்தார்.

கதாநாயகி என்ன தொழில் செய்கிறார் என்பதைச் சொல்லும் இடம் தமிழ் சினிமாவின் மரபுகளை மீறியதாய் வலியும், அழகும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆபாசம் வன்முறை மீறிய திரைப்படம் எனுமளவில் சிம்பு தேவனின் திரைப்படத்தை மனதாரப் பாராட்டலாம். எனினும் சிம்பு –“தேவனாக” மாறி போதனைகள் செய்வது தான் நெளிய வைக்கிறது.

காரணம் போதனைகளில் எதிர்பார்த்த வலு இல்லை. அட ! போட வைக்கும் வசனங்களோ, அசர வைக்கும் சிறு சிறு அறிவுரைகளோ இல்லை. எங்கேயோ, கேட்ட, படித்த, பார்த்தவற்றின் தொகுப்பாகவே இருக்கிறது.

“யாருமே ஏறிப் போகாத மலையில ஏறிப் போயிருக்கீங்களா ?”  அப்புறம் எப்படி நீங்க நல்லா வாழ்ந்ததா அர்த்தம் என கடவுள் கேட்பதிலுள்ள லாஜிக் புரியவில்லை.

கடவுள் எதிர்பார்ப்பது மலையில் ஏறிப் போவதும், ஆற்றுக்குள் படகு ஓட்டுவதும் என தனி மனித ரசனைகளையா அல்லது சக மனிதன் மீதான மனித நேயத்தையா என்பதிலேயே குழப்பம் இயக்குனருக்கு.

கடவுள் என்பவர் வெகு சாதாரண மனிதர் போலவும் ஆத்தா மகமாயி திரைப்பட மந்திர தாயத்து கணக்காக கேலக்ஸி சமாச்சாரம் கையிலிருந்தால் மட்டுமே கடவுளுக்குப் பவர் என்று சொல்வதெல்லாம் ஆத்திகர்களை கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கும் சிம்பு தேவனின் சித்து விளையாட்டு எனலாம்.

சென்னையில் வசிக்கும் இரண்டு வருட முன்னனுபவமுள்ள ஜாவா டெவலப்பர் 85கே – டேக் ஹோம் என்கிறார் 🙂 அது ஒன்று தான் இந்த படத்தில் நன்றாகச் சிரிக்க வைத்த சமாச்சாரம்.

சந்தானம் லொள்ளு சபாவுக்கே திரும்பிப் போகலாம், விட்ட இடத்தைப் பிடிக்க அவருக்குக் கிடைத்த கடைசி எச்சரிக்கை மணி அறை எண் 305.

கடவுளாய் அழுத்தமான ஷேவ் , பளீர் வெள்ளை சட்டை, முழு நேர சிரிப்பு என வந்தாலும் கடவுளாகப் பார்க்க ஒத்துக் கொள்ளாத முகம் பிரகாஷ் ராஜுக்கு.  அதனால் தானோ என்னவோ கடவுளோடு இருக்கும் சந்தானம், க.க இருவரும் கூட ஒத்துக் கொண்டது போல தெரியவில்லை படத்தில், பல இடங்களில் !

8 என்பது ஷங்கருக்கு ராசி என்பதை மாற்றி எழுதியிருக்கிறது இந்த 305.

இந்த படம் பார்த்தபின் மீண்டும் ஒரு முறை “புரூஸ் ஆல்மைட்டி” பட டிவிடியை பார்த்தேன். நாம போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு !

19 comments on “அறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் !!!

 1. //
  சென்னையில் வசிக்கும் இரண்டு வருட முன்னனுபவமுள்ள ஜாவா டெவலப்பர் 85கே – டேக் ஹோம் என்கிறார் 🙂 அது ஒன்று தான் இந்த படத்தில் நன்றாகச் சிரிக்க வைத்த சமாச்சாரம்.
  //
  ஏப்ரல் மாதத்தில், என்ற படத்தில் MCA முடித்து புதிதாக வேலைக்கு சேரும் கதாநாயகனுக்கு 20K முன்பணமும்(?) கம்பனி கார், கம்பனி குவார்டர்ஸ் (குவாட்டர் குடுத்தாங்களானு தெரியாது!) எல்லாம் குடுக்கும் போது 80K எல்லாம் சும்மா தூசு!!!!!!

  Like

 2. /*சென்னையில் வசிக்கும் இரண்டு வருட முன்னனுபவமுள்ள ஜாவா டெவலப்பர் 85கே – டேக் ஹோம் என்கிறார் அது ஒன்று தான் இந்த படத்தில் நன்றாகச் சிரிக்க வைத்த சமாச்சாரம்*/

  ippadi than oora yemathurangala ha ha ha

  Like

 3. அப்போ எவ்வளவு தான் சம்பளம் தருவாங்க நீங்களாவது சொல்லுங்களேன், நாங்க எல்லாம் ஐடி பீல்ட்ல இப்படித்தான்
  சம்பளம் வாரித்தருவாங்கன்னு நினைத்துக்கொ்ண்டடிருக்கிறோம். யாராவது விபரமா எடுத்துச் சொன்னா கேட்டுக்கொள்கிறோம். அன்பர்களே…

  Like

 4. //உங்களது விமர்சனம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே…!//

  மிக்க நன்றி நிருபர் 🙂

  Like

 5. //ஏப்ரல் மாதத்தில், என்ற படத்தில் MCA முடித்து புதிதாக வேலைக்கு சேரும் கதாநாயகனுக்கு 20K முன்பணமும்(?) கம்பனி கார், கம்பனி குவார்டர்ஸ் (குவாட்டர் குடுத்தாங்களானு தெரியாது!) //

  அப்பாடா.. நல்ல வேளை அந்த படத்தை நான் பார்க்கவில்லை 🙂

  Like

 6. //அப்போ எவ்வளவு தான் சம்பளம் தருவாங்க நீங்களாவது சொல்லுங்களேன், நாங்க எல்லாம் ஐடி பீல்ட்ல இப்படித்தான்
  சம்பளம் வாரித்தருவாங்கன்னு நினைத்துக்கொ்ண்டடிருக்கிறோம். //

  மற்ற துறைகளை விட அதிகம் என்பது உண்மையே. வேலைக்கு நுழையும் போதே ஐந்திலக்க சம்பளம் சர்வ சாதாரணம்.. மற்றபடி 85 கே டேக் ஹோம் என்பதெல்லாம் குறைந்தபட்சம் 10 – 12 வருட எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்புறம் தான் என்பது என் கணிப்பு.

  Like

 7. நன்றி, பொதுவாக நமது மக்கள் (தமிழகம்) இவ்வாறே எண்ணிக்
  கொண்டிருப்பதால் விலைவாசி விர்…….

  Like

 8. /சந்தானம் லொள்ளு சபாவுக்கே திரும்பிப் போகலாம், விட்ட இடத்தைப் பிடிக்க அவருக்குக் கிடைத்த கடைசி எச்சரிக்கை மணி அறை எண் 305./

  Santhana thukku Nalla Ye cha rik kai 🙂

  Like

 9. //ம்..அலசல் நல்லா இருக்க.. ரொம்ப deep ஆ போகாம, இயல்பான ரசிகனின் பார்வையில் இருக்கு…//

  மிக்க நன்றி பாலமுருகன்.

  Like

 10. ம் கரெக்டா சொன்னீங்க சேவியர் சார். கடவுளே நேரில் வந்து கடிச்சது மாதிரி பல சீன்கள் இருந்தது. குறிப்பா பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்துல “சொல்லாததும் உண்மை” பிரகாஷ்ராஜா மாறி அட்வைஸ்களை அள்ளிவிடும்போது பத்து நாட்களுக்கு முன்பு வந்த பழைய எஸ்.எம்.எஸ்களைத்தான் தியேட்டரில் உட்கார்ந்து படிக்க வேண்டி இருக்கிறது.

  Like

 11. மகாவிஷ்ணு வேசத்தில் பிரகாஷ்ராஜைப் பார்த்து மனசு கஷ்டப்பட்டுச்சு.

  ராமன், கிருஷ்ணன், விஷ்ணு எல்லாம் என் டி ஆர்தான் பொருத்தம்.

  ஆமாம்…கடவுள்ன்னு காமிக்க தன்னை விஷ்னு , ஏசு, புத்தராக் காமிச்சவர் ஏன் இன்னொரு பெரிய மதக்கடவுளை விட்டுட்டாங்க?

  Like

 12. //ஒரு கட்டத்துல “சொல்லாததும் உண்மை” பிரகாஷ்ராஜா மாறி அட்வைஸ்களை அள்ளிவிடும்போது பத்து நாட்களுக்கு முன்பு வந்த பழைய எஸ்.எம்.எஸ்களைத்தான் தியேட்டரில் உட்கார்ந்து படிக்க வேண்டி இருக்கிறது.
  //

  கலக்கறீங்க போங்க 🙂

  Like

 13. //
  மற்ற துறைகளை விட அதிகம் என்பது உண்மையே. வேலைக்கு நுழையும் போதே ஐந்திலக்க சம்பளம் சர்வ சாதாரணம்.. மற்றபடி 85 கே டேக் ஹோம் என்பதெல்லாம் குறைந்தபட்சம் 10 – 12 வருட எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்புறம் தான் என்பது என் கணிப்பு.
  //

  மிக சரியாக சொன்னீங்க.ஆனால் வெளியே பாக்கறவங்க ITல இருக்கறவங்க எல்லோருக்கும் நல்லா கொட்டி குடுக்கறாங்கதான் நெனைக்கறாங்க.எது எப்படியோ ஒருவேளை அவ்வளோ சம்பளம் கொடுக்க கம்பனி ரெடியா இருந்தாலும் நம்ம
  இன்கம் டாக்ஸ் பார்த்தால் தல சுத்துது.

  Like

 14. //மிக சரியாக சொன்னீங்க.ஆனால் வெளியே பாக்கறவங்க ITல இருக்கறவங்க எல்லோருக்கும் நல்லா கொட்டி குடுக்கறாங்கதான் நெனைக்கறாங்க.//

  பிற தொழில்களை விட கணினி துறையில் சம்பளம் மிக அதிகம் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

  கடந்த பதினேழு ஆண்டுகளில் சம்பளம் ரூ.3500 லிருந்து 7200 வரை மட்டுமே உயர்வடைந்துள்ள பல நண்பர்கள் எனக்குண்டு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s