ஏலியன்ஸ் – கிட்டே டி.வி.டி பிளேயர் இருக்குமா ?

 
செவ்வாயில் இறங்கிய பீனிக்ஸ் – புகைப்படங்களை அனுப்பி அசர வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அங்கே ஒரு டி.வி.டியையும் இறக்கி வைத்திருக்கிறதாம்.

ஏலியன்ஸ் யாராவது வந்து பார்த்தால்… அடடே.. ஒரு நல்ல டி.வி.டி இருக்கே இதுல என்ன படம் ஓடுதுன்னு அவங்களோட ரீஜியன் ப்ஃரீ டி.வி.டி  போட்டுப் பார்த்து தெரிஞ்சுக்கலாமாம்.
ரொம்ப முக்கியமான தகவல்களும், கூடவே மகா அறுவை படங்களான “Mars Attack”, War of teh Worlds  எல்லாமே அந்த டி.வி.டி. ல இருக்கிறதாம்.

ஏலியன்ஸ் க்கு மிகவும் பரிச்சயமான 🙂 ஆங்கில மொழியில் எல்லா தகவல்களும் சொல்லப்பட்டிருக்கிறதாம்

செவ்வாய் குறித்த நமக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கிறதாம்.

உலகம் அழியப்போகிறது என்று சொன்ன செவ்வாய் சிறுவனின் பேட்டி இருக்கிறதா தெரியவில்லை !

இந்த டி.வி.டி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கக் கூடிய வகையில் சிறப்பாய் தயாரிக்கப் பட்டிருக்கிறதாம்.

எலியன்ஸ் சார்… டி.வி.டி பிளேயர் இல்லேன்னா ஒரு பறக்கும் தட்டு பிடிச்சு வால்மார்ட் வாங்க, சேல் போயிட்டிருக்கு !

 

3 comments on “ஏலியன்ஸ் – கிட்டே டி.வி.டி பிளேயர் இருக்குமா ?

  1. நம்ம T.R நடிச்ச வீராசாமி படத்தையும் இங்கிலீஷ் Dub பண்ணி செர்த்துரலம் :)-

    Like

  2. அந்தப் படத்துக்கு மொழி தேவையில்லை 🙂

    ஏலியன்ஸையாவது நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா லக்ஸ்

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s