ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் !


“ அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும்.

“ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?.

இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர்.

ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்லவே. ஐந்தாவது மாடியில் தான் தேவையான பொருள் கிடைக்கிறது என்றால் அந்த மாடிக்கே கடைசியில் தான் போவார்கள்.

ஆண்கள் அரைமணி நேரத்தில் வாங்கிய பொருட்களுடன் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களோ அத்தனை மணி நேரம் சுற்றி வாங்கி வந்த பொருளைக் கூட முழுமையாய் விரும்பாமல், இன்னும் கொஞ்சம் நல்லதாய் வாங்கியிருக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

பல வேளைகளில் வாங்கச் சென்ற ஒரு பொருளை வாங்காமல் நான்கு பை நிறைய பொருட்களை அள்ளிக் கொண்டு வருவதும் நடந்து விடுகிறது.

காரணம் ஆண்களுடைய மனம் ஒரு செயலை உள்ளுக்குள் உறுதிப் படுத்திக் கொண்டு சட்டென சென்று முடித்துவிட்டு வரும் கொள்கை வகையைச் சார்ந்ததாம்.

ஆண்கள் மனம் முடிவை மையமாய் கொண்டு இயங்குவது போல, பெண்கள் மனம் பார்வை சார்ந்து இயங்குகின்றது. அவர்களுக்கு சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்து, கடையை அலசி, பல கடைகளில் அந்த பொருட்களைப் பார்த்த பின்பே முடிவு ஏற்படுகிறதாம். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கே நிறைய நேரம் பிடிப்பதால் தான் அதிக நேரத்தைக் கடைகளில் செலவிடுகின்றனராம்.

ஒரு செயலைச் செய்ய வேண்டுமெனில் ஆண்கள் சட்டென அதை செய்து விடுவதும், பெண்களோ தங்கள் பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் விசாரித்து விட்டே செயல்களில் இறங்குவதும் இத்தகைய இயல்பு சார்ந்ததே.

ஆண்களும் பெண்களும் வாங்கும் புத்தகங்களில் கூட பல உளவியல் கூறுகள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களை வசீகரிக்க ஒரு கவர்ச்சிப் படமே போதும். பெண்களுக்கோ நல்ல இலட்சியவாதிகளான, உயர்ந்த கொள்கைகளை உடைய, வாழ்வில் வெற்றி பெற்ற பெண்கள் வேண்டும்.

காரணம், ஆண்களுடைய சிந்தனை அட்டைப் படத்தில் அழகிய ஒரு பெண்ணைக் கண்டவுடன்

“எனக்கு அவள் வேண்டும்” என விரிகிறதாம்.

பெண்களுடைய சிந்தனையோ, “அவளைப் போல ஆக வேண்டும்”  என விரிகிறதாம்.

எனவே தான் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனங்களுடனும், பெண்கள் உறுதியான தெளிவான கொள்கைகளுடனும் வாழ்கின்றனர். என்கின்றார் அந்த உளவியலார்.

சமீபகாலமாக கடைகளில் அளவுக்கு அதிகமாகவே சுற்றித் திரியும் ஆண்களைப் பற்றி உளவியலார்கள் என்ன சொல்லப் போகிறார்களோ ?

12 comments on “ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் !

 1. //சமீபகாலமாக கடைகளில் அளவுக்கு அதிகமாகவே சுற்றித் திரியும் ஆண்களைப் பற்றி உளவியலார்கள் என்ன சொல்லப் போகிறார்களோ ?
  //
  //எனவே தான் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனங்களுடனும், பெண்கள் உறுதியான தெளிவான கொள்கைகளுடனும் வாழ்கின்றனர். என்கின்றார் அந்த உளவியலார்.
  //

  இப்போதுதான் ஆண்கள் உறுதியான தெளிவான கொள்கைகளுடனும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது.

  Like

 2. “அவளைப்போல..ஆக வேண்டும்” என்பது..குறைந்த…சதவிகிதம்..தான்..
  மற்ற..எவரையும்..விடவும்..உயர்வாக..இருக்க வேண்டும்..என்பது தான்..இயல்பான..குணம்.
  அதனால்.தான்..அந்த..தேடுதல் வேட்டை..
  குறையாக்..காணாமல்..எம் பொண்களை..புரிந்து கொண்டமைக்கு…மிக்க..நன்றி.

  Like

 3. //இப்போதுதான் ஆண்கள் உறுதியான தெளிவான கொள்கைகளுடனும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது.//

  அடடா… 🙂

  Like

 4. //எவரையும்..விடவும்..உயர்வாக..இருக்க வேண்டும்..என்பது தான்..இயல்பான..குணம்.
  //

  வாழ்க இலட்சியம் 🙂

  Like

 5. சேவியர் அண்ணன் விவகாரமான படங்களோட பதிவு எழுதுறது கூட அது மாதிரி கவர்ச்சியால ஏற்பட்ட உந்துதல்தானா?

  Like

 6. //சேவியர் அண்ணன் விவகாரமான படங்களோட பதிவு எழுதுறது கூட அது மாதிரி கவர்ச்சியால ஏற்பட்ட உந்துதல்தானா?//

  அடப்பாவி… நாம செய்றது கலாரசனை 😉

  Like

 7. ///
  அடப்பாவி… நாம செய்றது கலாரசனை
  ///

  நா ப்ரியமைன சேவியர், எந்துக்கு இட்டுவண்ட்டி அபத்தாலு!!!

  (என் அன்பு சேவியர், எதற்காக இப்படிப்பட்ட பொய்கள்.)

  கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும் இப்படித்தான் தெலுங்கில் பொங்கித் தீர்த்துவிடுவேன்.

  Like

 8. //நா ப்ரியமைன சேவியர், எந்துக்கு இட்டுவண்ட்டி அபத்தாலு!!!//

  இப்போ தான் பாக்கறேன் இந்த பின்னூட்டத்தை 😀

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s