உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?

 

உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் “டிராவலர்ஸ் டைஜஸ்ட்” இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன்.

ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.

ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், “பழகுதற்கு” இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம்.

அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் பகுதியிலுள்ள பெண்களே 3 முதல் 8 வரையிலான இடத்தை இட்டு நிரப்புகிறார்கள்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒட்டுமொத்த அமெரிக்காவில் உள்ள அழகான பெண்களை விட அதிகமான அழகிகள் இருக்கின்றனர் என கூறி அந்தப் பத்திரிகை அமெரிக்கப் பெண்களின் எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த பட்டியலில் மூலையிலும் இடம் பிடிக்கவில்லை. நெதர்லாண்டில் சைக்கிளோட்டும் பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் சைக்கிள் ஓட்டி ஓட்டி நல்ல உடலமைப்பைப் பெற்றது தானாம்.

பல்கேரியாவிலுள்ள பெர்னா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிசுலாவின் கராகஸ் கனடாவின் மாண்டிரியல் இஸ்ரேலின் டெல் அவிவ் என எல்லா நாடுகளிலும் வலம் வரும் அழகிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நாட்டில் இந்திய நாட்டைக் காணவே காணோம்.

அட ! என்னப்பா எத்தனை உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகளைப் பிரசவித்த நாடு இது. மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே.
 

35 comments on “உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?

 1. ivargalukku asia nadugal kannu thiryaathu. Namellam sernthu oru pathive pottiralaam. Athula namithavukkm oru idam kodithirallam

  Like

 2. ரொம்ப முக்கியமான மேட்டரு. படிச்சுட்டு போகலானு வந்தேன்.

  Like

 3. IVANGALA PORUTHAVARAIKKUM KAVARCHIYATHAN AZHAGUNNU SOLRANGAUNMAIYANA AZHAGUNNA ENNANU THARIYATHAVANGA AVLATHAN.

  OVARATHARUKKUM OVVAR AZHAGU PIDIKKUM
  AZHAGUNKIRATHU AVARAVAR KANNA PORUTHATHU. SARI VERA ENNA SOLLA MANASU ETHUKIDAMATHAN ITHELLAM SOLLUTHU

  Like

 4. ஹும்ம்ம்…..
  புகைப்படத்தில் உள்ள பெண் எந்த ஊரோ?

  நான் பார்த்த வரையில் இந்திய பெண்களே கண்ணை உறுத்தாத அழகோடு மிளிர்கிறார்கள் …..

  Like

 5. “அழகான” தகவலை “சுவையாக” தந்த பாங்கு பாராட்டுதலுக்குரியது நண்பரே..

  என் ஆர்க்குட் தனியின உறுப்பினர்கட்கு இச்செய்தியை மடலில் அனுப்பியுள்ளேன்.. தங்கள் களத்துக்கு நன்றி என்ற இணைப்புடன்..

  அரசர்.

  Like

 6. //ivargalukku asia nadugal kannu thiryaathu//

  அப்பாடா தப்பிச்சோம்.. இல்லேன்னா பேடெண்ட் போட்டாலும் போட்டுடுவாங்க 🙂

  Like

 7. //ரொம்ப முக்கியமான மேட்டரு. படிச்சுட்டு போகலானு வந்தேன்//

  அதானே !! முக்கியமில்லாத மேட்டரெல்லாம் நாம போடறதே இல்லை 🙂

  Like

 8. //நான் பார்த்த வரையில் இந்திய பெண்களே கண்ணை உறுத்தாத அழகோடு மிளிர்கிறார்கள் …..

  //

  “கண்ணை உறுத்தாத…” அப்படின்னா ?

  Like

 9. //என் ஆர்க்குட் தனியின உறுப்பினர்கட்கு இச்செய்தியை மடலில் அனுப்பியுள்ளேன்.. //

  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் 😀

  Like

 10. //இந்திய நாட்டைக் காணவே காணோம். ….

  ரசிக்க தெரியாதவர்கள்.//

  இந்தியர்களோட ரசிப்பையே தாங்க முடியாம பெண்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க, இதுல அடுத்தவன் வேற ரசிக்க ஆரம்பிச்சா அவ்ளோ தான் 😉

  Like

 11. //“கண்ணை உறுத்தாத…” அப்படின்னா ?//

  சீ போங்க சேவியர் , ரொம்ப மோசம்…

  Like

 12. //இந்தியர்களோட ரசிப்பையே தாங்க முடியாம பெண்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க, இதுல அடுத்தவன் வேற ரசிக்க ஆரம்பிச்சா அவ்ளோ தான்//

  Haa…Haa..
  நீங்க சொன்னா சரிதான் அண்ணாச்சி.

  Like

 13. ///
  nan vanthuden…
  ///

  எங்க போனான் ஏன் போனான்னு ஒன்னும் சொல்லமாட்டான், ஆன நேரங்கெட்ட நேரத்தில வந்துடுவான்… வா மகனே

  ///
  மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே
  ///

  அண்ணா, என்னை தடுக்காத, (கைய புடிச்சிருக்கே பாரு, அத மட்டும் நா என்ன சொன்னாலும் உட்டுடாத) நமிதாவ புறக்கணிச்சத கண்டிச்சு நான் தீக்குளிக்க போறேன்…

  Like

 14. ////INIDIANS BEAUTY BOYS ONLY NO GIRLS

  NEXT GENARATION BEAUTY GIRLS DON’T WORRY EVERYBODY

  //

  அட.. எவ்ளோ தைரியம் உங்களுக்கு ?? துபாய்ல இருக்கிறதனாலயா ?

  Like

 15. //அண்ணா, என்னை தடுக்காத, (கைய புடிச்சிருக்கே பாரு, அத மட்டும் நா என்ன சொன்னாலும் உட்டுடாத) நமிதாவ புறக்கணிச்சத கண்டிச்சு நான் தீக்குளிக்க போறேன்…//

  முதல்ல நீ குளிக்கப் போ
  அப்புறம் தீக்குளிக்கப் போ…

  Like

 16. //INIDIANS BEAUTY BOYS ONLY NO GIRLS

  அட.. எவ்ளோ தைரியம் உங்களுக்கு ?? துபாய்ல இருக்கிறதனாலயா ?//

  அது ஒண்ணுமில்ல, பொண்ணுங்களை பாக்காம காய்ஞ்சு போய்யிருக்கார்.

  Like

 17. // நமிதாவ புறக்கணிச்சத கண்டிச்சு நான் தீக்குளிக்க போறேன்//

  அதை நான் வரவேற்கிறேன். (கைய வுட்டுட்டேன்)

  Like

 18. //எங்க போனான் ஏன் போனான்னு ஒன்னும் சொல்லமாட்டான், ஆன நேரங்கெட்ட நேரத்தில வந்துடுவான்… வா மகனே//

  யோவ் சித்தப்பு நான் சீனாவுக்கு போனபோது உன் கிட்ட சொல்லிட்டுதானய்யா போனேன்.

  சீனாவில வலைபதிவுக்கு தடைதான். இருந்தாலும் நம்ப சேவியர் அண்ணாச்சி பதிவ தடை செஞ்றிருக்க கூடாது. அலசல்னு சொன்ன சும்மா அதிருதுல… சீனாவின் நில நடுக்கத்தை சொன்னேன்…

  Like

 19. ////INIDIANS BEAUTY BOYS ONLY NO GIRLS

  அட.. எவ்ளோ தைரியம் உங்களுக்கு ?? துபாய்ல இருக்கிறதனாலயா ?//

  அது ஒண்ணுமில்ல, பொண்ணுங்களை பாக்காம காய்ஞ்சு போய்யிருக்கார்.
  //

  சரி.. என்னென்னமோ சொல்றீங்க….

  Like

 20. //// நமிதாவ புறக்கணிச்சத கண்டிச்சு நான் தீக்குளிக்க போறேன்//

  அதை நான் வரவேற்கிறேன். (கைய வுட்டுட்டேன்)
  //

  அப்படி போடுங்க அருவாள 🙂

  Like

 21. //அலசல்னு சொன்ன சும்மா அதிருதுல… சீனாவின் நில நடுக்கத்தை சொன்னேன்…//

  சும்மா இருந்த சீனாவையே உலுக்கிட்டு வந்துட்டு பேச்சைப் பாரு பேச்சை 😉

  Like

 22. //நான் பார்த்த வரையில் இந்திய பெண்களே கண்ணை உறுத்தாத அழகோடு மிளிர்கிறார்கள் …..//
  adakkodumaiyae… appidiyae north india vanthu paarungka…(kuRippa indore)… kaNNai mattumalla manathaiyum uRuththum azhagikaL ulaavukiRaarkaL…
  namma kaRpaik kaappaaththuRathu perumpaadaa irukku,,

  Like

 23. I think Travellers digest survey is not correct, how can they ignore India,venezuvela (Most of miss world and miss universe title golders) ,Palestine and also some other countries. But one thing I tell sure that they are not select at culutre point of view.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s