ரோபோ : நேற்று வெளியான புகைப்படங்கள் !

ஷங்கரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன், சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் ரோபோ (ரோபோ படத்திலிருந்து ஐஸ் விலகவில்லையாமே !) படத்தைப் பற்றிய நினைவுகள் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கின்றன.

சிவாஜி என்றால் ரஜினி நினைவுக்கு வருவது போல இனிமேல் ரோபோ என்றாலும் ரஜினியே நினைவுக்கு வருவார் என்பதால், உண்மையான ரோபோ குறித்த ஒரு பதிவை எழுதி ரோபோவுக்கு ஒரு நிம்மதி தரலாம் என்னும் எண்ணத்தில் இந்தப் பதிவு. கோபப்படாமல் படிங்க, இது சூப்பர் மேட்டர்.

இது REEM-B ரோபோ. அபுதாபியில் நேற்று ஜூன் பதினொன்றாம் தியதி இந்த ரோபோ அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 உலகிலேயே மிக அதி நவீன ரோபோ இது என்கின்றனர் இதை உருவாக்கிய பால் டெக்னாலஜீஸ்.

இதன் சிறப்பு அம்சம்ங்களில் சிலவற்றைச் சொல்லவேண்டுமெனில்,

நாம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும்

(நீயாவது நாங்க சொல்றதை கேளு…)

நமது முகத்தை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த முறை பார்க்கும் போது பெயர் சொல்லி அழைத்து இன்ப அதிர்ச்சியளிக்கும்

(என்னை மறந்துட மாட்டியே…)

பொருட்கள் இருப்பதையெல்லாம் அறிந்து தானாகவே சாமர்த்தியமாக அலுவலகம் முழுதும் அலைந்து திரியும், யாரையும் மோதிவிடாமல். !

ஷங்கர் கேள்விப்பட்டால் இரண்டு வாங்கி ஐஸ்வர்யாராயுடன் ஆட விட்டாலும் விடுவார். லக்கி ஐஸ்வர்யா !