ரோபோ : நேற்று வெளியான புகைப்படங்கள் !

ஷங்கரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன், சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் ரோபோ (ரோபோ படத்திலிருந்து ஐஸ் விலகவில்லையாமே !) படத்தைப் பற்றிய நினைவுகள் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கின்றன.

சிவாஜி என்றால் ரஜினி நினைவுக்கு வருவது போல இனிமேல் ரோபோ என்றாலும் ரஜினியே நினைவுக்கு வருவார் என்பதால், உண்மையான ரோபோ குறித்த ஒரு பதிவை எழுதி ரோபோவுக்கு ஒரு நிம்மதி தரலாம் என்னும் எண்ணத்தில் இந்தப் பதிவு. கோபப்படாமல் படிங்க, இது சூப்பர் மேட்டர்.

இது REEM-B ரோபோ. அபுதாபியில் நேற்று ஜூன் பதினொன்றாம் தியதி இந்த ரோபோ அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 உலகிலேயே மிக அதி நவீன ரோபோ இது என்கின்றனர் இதை உருவாக்கிய பால் டெக்னாலஜீஸ்.

இதன் சிறப்பு அம்சம்ங்களில் சிலவற்றைச் சொல்லவேண்டுமெனில்,

நாம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும்

(நீயாவது நாங்க சொல்றதை கேளு…)

நமது முகத்தை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த முறை பார்க்கும் போது பெயர் சொல்லி அழைத்து இன்ப அதிர்ச்சியளிக்கும்

(என்னை மறந்துட மாட்டியே…)

பொருட்கள் இருப்பதையெல்லாம் அறிந்து தானாகவே சாமர்த்தியமாக அலுவலகம் முழுதும் அலைந்து திரியும், யாரையும் மோதிவிடாமல். !

ஷங்கர் கேள்விப்பட்டால் இரண்டு வாங்கி ஐஸ்வர்யாராயுடன் ஆட விட்டாலும் விடுவார். லக்கி ஐஸ்வர்யா !

23 comments on “ரோபோ : நேற்று வெளியான புகைப்படங்கள் !

 1. // லக்கி ஐஸ்வர்யா ! //

  இதனை வன்மையாக கண்ணடிக்கிறேன் !

  உடனே ‘லக்கி ரோபோ’ன்னு மாத்துங்க…

  Like

 2. //(நீயாவது நாங்க சொல்றதை கேளு…)//

  ஹையா எனக்கு ஒன்னு வேணும் இது மாதிரி…
  இப்போல்லாம் என் நாலு வயசு பையன் கூட
  நான் சொன்னா நீயாவது கேளுன்னு என்கிட்டே சொல்றான் 🙂
  இது அப்பிடி சொல்லாதுல?

  Like

 3. //ஷங்கரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன், சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும்//

  சிறு திருத்தம். சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் 🙂

  Like

 4. கிரி,
  //சிறு திருத்தம். சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் //

  நானும் அப்படி சொல்லனும்னு ஆசபடற ஒரு ரஜினி ரசிகன் தான்,
  ஆனா தலைவர் இத்தன நாளா ஐஷ்வர்யாவ துரத்தினத பாத்தா சேவியர் எழுதினது கரெக்டா இருக்கு….

  Like

 5. Pingback: Pirabuwin Weblog

 6. நல்லா இருங்க. இப்டி மனுஷ மக்களை கடுப்பேத்தி பாக்கறதுல ஒரு சந்தோஷம்! என்ன நல்ல மனசு

  Like

 7. //// லக்கி ஐஸ்வர்யா ! //

  இதனை வன்மையாக கண்ணடிக்கிறேன் !

  உடனே ‘லக்கி ரோபோ’ன்னு மாத்துங்க…
  //

  ரோபோவுக்கெல்லாம் எப்படிங்க….

  Like

 8. //ஹையா எனக்கு ஒன்னு வேணும் இது மாதிரி…
  இப்போல்லாம் என் நாலு வயசு பையன் கூட
  நான் சொன்னா நீயாவது கேளுன்னு என்கிட்டே சொல்றான்
  இது அப்பிடி சொல்லாதுல//

  அட… வீட்டுக்கு வீடு வாசப்படி !! 🙂

  Like

 9. //சிறு திருத்தம். சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் //

  கிரி… கவனம். இங்கே சூப்பர் ஸ்டாருக்கு இருக்கிறதை விட நமீதாவுக்கு அதிக ரசிகர்கள். எதுக்கு வம்புன்னு தான் நானும் ஐஸ் ஐ முதல்ல சொன்னேன்.

  Like

 10. //ஆனா தலைவர் இத்தன நாளா ஐஷ்வர்யாவ துரத்தினத பாத்தா சேவியர் எழுதினது கரெக்டா இருக்கு….//

  இது !!!! நச் பதில் 🙂

  Like

 11. //போர் அடிச்சா கம்பேனிக்கு உக்காந்து தண்ணி அடிக்குமா இது.//

  ஊத்தி குடுத்து, ஊதியும் குடுக்கும் … பேச்சைப்பாரு பொடியனுக்கு 😉

  Like

 12. /நல்லா இருங்க. இப்டி மனுஷ மக்களை கடுப்பேத்தி பாக்கறதுல ஒரு சந்தோஷம்! என்ன நல்ல மனசு//

  ஒரு நல்ல விஷயத்தைத் தெரிஞ்சுக்கறதுல கடுப்பாக என்ன இருக்குங்க 🙂

  Like

 13. //பதினொன்றாம் தியதி// u mean தேதி or வேரு பொருல் இருக்கா

  Like

 14. ///
  ஊத்தி குடுத்து, ஊதியும் குடுக்கும் … பேச்சைப்பாரு பொடியனுக்கு
  ///

  ஏன்ப்பா அவன திட்டினீங்க, சேட்டிங்ல ஓன்னு அழுவுறான்…. பாவம் விட்டுடுங்களேன்.

  Like

 15. ////பதினொன்றாம் தியதி// u mean தேதி or வேரு பொருல் இருக்கா

  //

  தேதி தான் சேதி !! வேற ஒண்ணுமில்லை 😉

  Like

 16. //Hi arabian picture good

  ‘Super Star’
  ‘Super Beauty’ good selation
  //

  குவைத் ல இருந்தா அராபியன் பிக்சர் நல்லா இருக்குன்னு தான் சொல்லுவீங்க….

  Like

 17. //ஏன்ப்பா அவன திட்டினீங்க, சேட்டிங்ல ஓன்னு அழுவுறான்…. பாவம் விட்டுடுங்களேன்.//

  🙂 அவனைப் பாத்தா அழுவற பையனா தெரியலையே …ம்ம்ம்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s