அப்பாடா ! பா.ம.க விரும்பியது நடந்தது !

பா.ம.க விரும்பியபடியே நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க கூட்டணியிலிருந்து தற்போது விலக்கப்பட்டிருக்கிறது.

எப்படியாவது எப்பாடுபட்டாவது வெளியே வந்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் ஏன் மருத்துவருக்கு உதித்தது என்பது அவருக்கே வெளிச்சம், அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னே !!

2011 ல் நான் தான் முதல்வர் என்று சின்ன பிள்ளைகள் விஜயகாந்த், சரத் மாதிரி ஆசை ஆசையா அப்பளம் சுட்டு கலைஞருக்கே அனுப்பி வைத்ததில் ஆரம்பித்தது இந்த விலகல் புராணம்.

முரசொலி மாறனுடன் இணைந்து கொண்டு, மதிமுக மற்றும் இன்னபிற நக்கா பிச்சா கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கட்சிக்கு அடிகோலுகிறார் என்று தகவல்கள் கசிந்து திமுகவை மேலும் எரிச்சலுக்குள் இழுத்தது. காதுக்குள் ரீங்காரமிடும் கொசுபோல அவஸ்தை கலைஞருக்கு.

எல்லா விஷயங்களையும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதன் மூலம் தான் கூடவே இருந்தாலும் கூட்டணியை துச்சமென மதிக்கும் மக்கள் தலைவன் என தன்னைக் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருந்தது சமீபகாலமாக உச்சத்துக்கே சென்றுவிட்டது.

ஆந்திராவில் தயாரான விஷ சாராய புராணத்தை முழுதும் தமிழகத்திலேயே தயாரானது போலவும், கலைஞரின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி என்றும் தமிழோசையில் முதல் செய்தியாக வெளியிட்டு உரசலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டது பாமக தான்.

இத்தனை ஆண்டு இல்லாத பிரச்சனை, அது இது, புள்ளி விவரம், விலைவாசி, எங்கே தமிழ் இருக்கிறது என்றெல்லாம் தமிழோசையை திமுக எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிடவே பயன்படுத்தி வந்தார்களோ எனுமளவுக்கு ஒரே அரசியல் அம்புகள்.

இப்போது காடுவெட்டி குரு ! இது பழைய சமாச்சாரம், இதை ஏன் கலைஞர் இப்போது கையில் எடுக்க வேண்டும் என மருத்துவர் நேற்றும் இன்றும் தமிழோசையில் வீரமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். எனினும் கா.வெ.குரு சொன்னதற்காக தலைவர் என்னும் முறையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக பா.ம.க செயற்குழுவில் தான் அப்படிப் பேசப்பட்டது என்றார். அப்படியெனில் செயற்குழுவில் அப்படிப் பேசுவது சகஜமப்பா என திமுகவை உசுப்புவது போல் இருக்கிறதல்லவா ?

கச்சா எண்ணையின் விலை 139 டாலர்களாம் இப்போது. இன்னும் பதினெட்டு மாதங்களில் அது 250 டாலர்களை எட்டிப் பிடிக்குமாம். எனில் விலைவாசியும், பெட்ரோல் விலையும் இன்னும் பல மடங்கு உயரும் எனும் அச்சம் உலக அளவில் நிலவுகிறது. இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதவர் போல எல்லா நிகழ்வுகளுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் சர்வரோக நிவாரணி போல தன்னைக் காட்டிக் கொள்ளவே முயன்று கொண்டிருக்கிறார் மருத்துவர்.

எதற்கேனும் மாற்றுக் கருத்து சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம். சும்மா எதிர்ப்பது வேடிக்கை பார்ப்பவன் வேலை, சரியான மாற்று வழிகளுடன் எதிர்ப்பதே ஆரோக்கியமான எதிர்கட்சியின் வேலையாக இருக்கவேண்டும்.

தன்னைத் தூய்மையாய் காட்டிக் கொள்ளும் பா.ம.க இன்னும் தனது ஊடகங்களில் சாதி சார்ந்த முன்னுரிமையையே வழங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மை உலகம் அறியும்.

கலைஞர் எப்போதுமே அமைதியாய் இருந்து, யாரேனும் விலகினால் அந்தப் பழி தன் மேல் விழாதவாறு தந்திரமாய் நடந்து கொள்வதுண்டு.

இத்தனை அவமானமாய் பேசிய காடு வெட்டியை மருத்துவர் கண்டிக்கவில்லையே என உள்ளம் உருகி, கண்ணீர் வடித்து கூட்டணியைக் கலைத்ததன் மூலம் இப்போதும் அப்படியே செய்திருக்கிறார்.

தி.மு.க எதையும் இழக்குமென்று தோன்றவில்லை.
சம்பந்தி காங்கிரஸ் இருக்கும் வரை அன்புமணி பதவிக்கு ஆபத்து வருமென்றும் தோன்றவில்லை.
ஆனால், பா.ம.க இனிமேல் முன்வைக்கும் எதிர்ப்புகளெல்லாம் முன்பு போல் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதே கேள்வி.

எல்லாம் அரசியல், உள்ளுக்குள்ளே என்னென்ன இருக்கோ ? யாருக்குத் தெரியும்.

Advertisements

29 comments on “அப்பாடா ! பா.ம.க விரும்பியது நடந்தது !

 1. இந்திய அரசியல் புரியாது. புரியாததை படித்துவிடேன் என்பதற்கு அடையாளமாக இந்த பின்னூட்டம்…

  Like

 2. சரியாக சொன்னீர்கள். கருத்து சொல்லத்தான் கொஞ்சம் தர்ம சங்கடமாக உள்ளது. ஒத்த தரப்பு கருத்து சொன்னால் நெல்லைதமிழன் “இன்ன கட்சிக்காரன்” என்று பாகுபடுத்த பார்க்க வாய்ப்புள்ளதால் ஒரே வரியில் நீங்கள் சொன்னது போல… எல்லாம் அரசியல், உள்ளுக்குள்ளே என்னென்ன இருக்கோ ? யாருக்குத் தெரியும். என்பது மட்டும் தெளிவாகிறது.

  Like

 3. இது எல்லாம் அரசியலில் சகஜம் சேவியர்
  புள்ள சண்டையை பெரிசாகம ||அழகிரியா, ஸ்டாலினா||
  கட்சிகாரனை குழப்ப எடுக்கப்பட்ட முடிவு
  புதுவை சிவா.

  Like

 4. செய்தியை மிக நன்றாக கொடுத்திருக்கிறீர்கள். இந்த நடை அமைப்பு தான் நம்மை போன்ற பதிவுகள் எழுதுபவர்களுக்கு தேவை,

  உங்கள் கருத்தை திணிக்காமல் செய்தியை மிக நன்றாக கொடுத்திருக்கிறீர்கள் இந்த செய்தியை பத்திரிக்கைகளில் கூட அறிந்து கொண்டிருக்க முடியும் ஆனால் இந்த நடை அமைப்போடு ஒரு நடுநிலையோடு செய்தியை கொடுத்திருக்க மாட்டார்கள் எனபது தான் இதில் செய்தியின் சிறப்பு. ஒரு பத்திரிக்கையாளன் இப்படித்தான் செய்தியை கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த செய்தி எனக்கு தெரிகிறது!, பலருக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் அதற்காக நான் கவலைப்படுவதற்கில்லை.

  Like

 5. //எதற்கேனும் மாற்றுக் கருத்து சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம். சும்மா எதிர்ப்பது வேடிக்கை பார்ப்பவன் வேலை, சரியான மாற்று வழிகளுடன் எதிர்ப்பதே ஆரோக்கியமான எதிர்கட்சியின் வேலையாக இருக்கவேண்டும்.//

  நல்லா உரைக்கிற மாதிரி சும்மா நச்சுனு சொன்னீங்க!

  Like

 6. பீலிபைச் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
  சால மிகுத்துப் பெயின்.

  மயில் தோகையானாலும் ஒரு வண்டியில் அளவுக்கு அதிகமாக ஏற்றப்படும்போது அதன் அச்சு முறிந்துதான் போகும்.

  Like

 7. எனக்கென்னவோ அவர் ஆதிமுக-உடன் கூட்டணி சேர்வதற்காகவே இப்படி செய்கிறார் என தோன்றுகிறது. ஆதிமுக-பாஜாக-பாமாக. கூட்டு வரும் ஏன நினைக்கிறேன். பாமாக எப்போதுமே ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்பது தெரிந்ததுதானே. இந்த முறை பாஜாகதான் மத்தியில் ஆட்சிக்கு வரும். இங்கும் திமுக செய்வது எதுவும் சரியாக தெரியவில்லை.

  Like

 8. //இந்திய அரசியல் புரியாது. புரியாததை படித்துவிடேன் என்பதற்கு அடையாளமாக இந்த பின்னூட்டம்…
  //

  மலேஷிய அரசியல் மட்டும் புரியுமாக்கும் !

  Like

 9. //சரியாக சொன்னீர்கள். கருத்து சொல்லத்தான் கொஞ்சம் தர்ம சங்கடமாக உள்ளது. //

  🙂

  Like

 10. //இது எல்லாம் அரசியலில் சகஜம் சேவியர்
  புள்ள சண்டையை பெரிசாகம ||அழகிரியா, ஸ்டாலினா||
  கட்சிகாரனை குழப்ப எடுக்கப்பட்ட முடிவு
  புதுவை சிவா.

  //

  ஓ… !!!

  Like

 11. //செய்தியை மிக நன்றாக கொடுத்திருக்கிறீர்கள். இந்த நடை அமைப்பு தான் நம்மை போன்ற பதிவுகள் எழுதுபவர்களுக்கு தேவை,

  உங்கள் கருத்தை திணிக்காமல் செய்தியை மிக நன்றாக கொடுத்திருக்கிறீர்கள் இந்த செய்தியை பத்திரிக்கைகளில் கூட அறிந்து கொண்டிருக்க முடியும் ஆனால் இந்த நடை அமைப்போடு ஒரு நடுநிலையோடு செய்தியை கொடுத்திருக்க மாட்டார்கள் எனபது தான் இதில் செய்தியின் சிறப்பு. ஒரு பத்திரிக்கையாளன் இப்படித்தான் செய்தியை கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த செய்தி எனக்கு தெரிகிறது!, பலருக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் அதற்காக நான் கவலைப்படுவதற்கில்லை.

  //

  அட ! இப்படி ஒரு பின்னூட்டம் கிடைப்பதை விட பதிவு எழுதுவதில் வேறென்ன நிறைவு இருக்க முடியும் ? நன்றிகள் பல.

  Like

 12. //பீலிபைச் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
  சால மிகுத்துப் பெயின்.

  மயில் தோகையானாலும் ஒரு வண்டியில் அளவுக்கு அதிகமாக ஏற்றப்படும்போது அதன் அச்சு முறிந்துதான் போகும்.

  //

  அப்படியே எல்லா குறளுக்கும் விளக்கம் எழுதுங்க… இன்னும் 1329 பாக்கி இருக்கே.

  Like

 13. //எனக்கென்னவோ அவர் ஆதிமுக-உடன் கூட்டணி சேர்வதற்காகவே இப்படி செய்கிறார் என தோன்றுகிறது//

  இன்றைக்கு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுவதைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.

  Like

 14. //எனக்கென்னவோ அவர் ஆதிமுக-உடன் கூட்டணி சேர்வதற்காகவே இப்படி செய்கிறார் என தோன்றுகிறது//

  மாயவரத்தானா கொக்கா… மன்னிச்சுக்கோங்க, மகனுக்குப் பதிலா அப்பனை இழுத்துட்டேன் 😦

  Like

 15. ///
  அப்படியே எல்லா குறளுக்கும் விளக்கம் எழுதுங்க… இன்னும் 1329 பாக்கி இருக்கே.
  ///

  ஏற்கெனவே ஒருத்தர் எழுதிட்டார். அவரு இப்போ தமிழ்நாட்டில முதலமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.

  Like

 16. Hi good arguments political in tamil nadu

  but ‘vijayakanth’ not small boy him party

  third party in tamil nadu political

  Like

 17. //ஏற்கெனவே ஒருத்தர் எழுதிட்டார். அவரு இப்போ தமிழ்நாட்டில முதலமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.//

  ஐயா Vi.Go (வை.கோ இல்லை) குறளுக்கு விளக்கம் எழுதினவங்களை எல்லாம் கணக்கில சேர்த்தா குறளை விட அதிகமாகும் அந்த எண்ணிக்கை.. தெரியுமா இல்லையா ?

  Like

 18. //but ‘vijayakanth’ not small boy him party//

  ம்ம்… அவரோட அரசாங்கம் – படம் கூட ஓடல ! அரசாங்கத்துல என்னத்த ஓட்டப் போறாரோ !!!

  Like

 19. ///
  ஐயா Vi.Go (வை.கோ இல்லை) குறளுக்கு விளக்கம் எழுதினவங்களை எல்லாம் கணக்கில சேர்த்தா குறளை விட அதிகமாகும் அந்த எண்ணிக்கை.. தெரியுமா இல்லையா ?
  ///

  நான் ஏதாவது தவறாக எழுதி அவர்கள் அத்தனை பேரும் என்னை துவைத்துக் காயப் போட வேண்டும், இது தானே உங்கள் விருப்பம்! அதற்கு நான் ஆளில்லை.

  Like

 20. கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவாச்சிவாதம்

  Like

 21. //நான் ஏதாவது தவறாக எழுதி அவர்கள் அத்தனை பேரும் என்னை துவைத்துக் காயப் போட வேண்டும், இது தானே உங்கள் விருப்பம்!//

  மனசை வாசிக்கும் மந்திரச்”சாமி” யா இந்த கோபால் சாமி ?

  Like

 22. Kacha ennai vilai 139 dollar sari….Petrol vilai 55 rupayil mathiya, maanila arasugalin tax 57% i xavier marandthathu eno? panakkaran oil company valara mathia, maanila arasugal varindhu kattuvathu eno?

  pin kurippu:- Ramados kku indha fact theriyumanu theriali

  Like

 23. kurankirkku kaayam vanthaal sorindhu sorindhu saagumam appadothan indha P.M.K iruntha agum ponadhu sarithan……

  Like

 24. // maanila arasugalin tax 57% //

  விழுக்காடு சரியா தெரியாது. ஆனால், அதை குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைத்தால் அந்த இழப்பைச் சரிசெய்ய எத்தனை இடங்களில் கை வைக்க வேண்டி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறதே !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s