தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !

உலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் புனித தோமையார் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பதே கிறிஸ்தவ வரலாறுகள் கூறும் உண்மை. எப்படியோ… அதற்கும் தசாவதாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே கதாபாத்திரங்களைக் காட்டி சட்டென பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் தாவி, அங்கிருந்து அமெரிக்கா, தமிழகம் என கதை பயணிக்கும்  போது குழப்பாமல் சம்பவங்களின் அழுத்தம் கெடாமல், வீரியம் கெடாமல், தனது தியரிகளைக் கலைக்காமல், புதுப் புதுக் கதாபாத்திரங்களைக் கதையில் நுழைத்துக் கொண்டே வரும் கமலில் திரைக்கதை வியக்க வைக்கிறது.

தசாவதாரம் குறித்து எல்லோருமே எழுதி சலித்து விட்டாலும் என் பங்குக்கு நானும் என்னைக் கவர்ந்த அம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.

முதலாவது, கமலின் சிரத்தை. எப்போதுமே தனது அசைவுகளின் மூலம் முக்கால் வாசி பேசிவிட்டு, வார்த்தைகளின் மூலம் கால்வாசி பேசுவதே கமலில் வழக்கம். அதையே இதிலும் செய்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்கக் கமலின் ஆங்கில உச்சரிப்பும், ஹாலிவுட் நடிகர்களின் அலட்சியப் பார்வையும், அவர்கள் பயன்படுத்தும் வாக்கியங்களும் ஒருபுறம் மிகுந்த கவனத்துடன் அடுக்கப்பட்டிருக்க,

இன்னொரு புறம் வின்செண்ட் பூவராகன் நடை, உடை, நிறம், உச்சரிப்பு என வியக்க வைக்கிறார். சற்றே மிகைப்படுத்தப்பட்ட “மக்களே” வசன உச்சரிப்பே அவருடையது எனினும் “தீட்டத்தில் நெழியும் புழுக்கள்” என்பன போன்ற வசனங்கள் பூவராகனின் உழைப்பில் தினமும் ஒலிக்கும் குரல். எந்தத் திரைப்படமும் பதிவு செய்யாத, செய்ய விரும்பாத வசனங்கள்.

அமெரிக்க ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தை அவருடைய குணாதிசயங்களோடே எடுத்திருப்பது நகைச்சுவையோடு சேர்ந்து கமலில் பார்வையை தெளிவாக்கியிருக்கிறது. குறிப்பாக மேடையில் நடக்கும் புஷ் ( சமீபத்தில் வீரர் ஒருவருடன் நெஞ்சோடு நெஞ்சு குதித்து மோதி வேடிக்கை காட்டிய நிகழ்ச்சியை நினைவூட்டுகிறார் ) , என்ன அது என்.ஏ.சி.எல், அது மேல அணுகுண்டு போடலாமா போன்ற நிகழ்ச்சிகள்.

பாட்டியின் கதாபாத்திரத்தில் மனநிலை பாதித்தும், பாதிக்காமலும் இருக்கும் கமலின் நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தானது.

நாயுடு அசத்துகிறார். நாயுடு மட்டும் இல்லையென்றால் சாமான்ய கமல் ரசிகர்களுக்கு விருந்து இல்லாமலேயே போயிருக்கக் கூடும். தெலுங்கனைக் கண்டுவிட்டால் பார்வையில் நுழைக்கும் பரிவும், “அப்பாராவா “ எனக் கேட்கும் போது ஒலிக்கும் தெலுங்கு தனமும், “மடத்திலே தப்பு நடக்காதா” எனக் கேட்கும்போது அவருடைய உடலசைவும் என வியக்க வைக்கிறார் நாயுடு.

கடவுளுக்காக உறவுகளை துச்சமென தூக்கி எறிந்து இறந்து போகும் கமல் சிலிர்ப்பூட்டுகையில், உறவுகளுக்காக தனக்குக் கடவுள் போல இருக்கும் இசையை தூக்கி எறிய முன்வரும் சர்தார் கமல் விழியோரங்களைத் துளிர்க்க வைக்கிறார்.

இந்தத் திரைக்கதையை இன்னும் சிக்கலாக கடைசிப் புள்ளியில் இணைவது போல ( அதாவது பாபேல் எனும் ஆங்கிலப்படம் போல ) உருவாக்கியிருக்க முடியும். எனினும் இந்த அளவுக்கு நேர்கோட்டில் அவர் திரைக்கதையை உருவாக்கியிருப்பதற்கு கே.எஸ்.ரவிகுமார் ஒரு காரணகர்த்தாவாக இருக்கக் கூடும் எனும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கமலுடன் இணைந்து வியக்க வைக்கும் நடிப்பு அசினுடையது. பிசின் போல சிலையுடனும், கமலுடனும் ஒட்டிக் கொண்டே இருக்கும் அசின் கமலுடன் இணைந்ததாலோ என்னவோ நடிப்பின் இன்னோர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறார். இனிமேல் விஜயுடன் டூயட் பாடும்போது சற்றே உறுத்தக் கூடும் அவருக்கு, நடிக்காமல் காசு வாங்குகிறோமே என்று.

கடைசிக் காட்சிகளில் சுனாமி பீறிட்டெழும்போது கிராபிக்ஸும், இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட துயரங்களை மீண்டும் ஒருமுறை அள்ளிக்கொண்டு வந்து மனதுக்குள் கொட்டுகிறது திரைப்படம்.

தசாவதாரம் படத்தில் முதல் பத்து நிமிடங்கள் கமல் விரைவில் மருதநாயகம் எடுப்பார் எனும் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. அப்போதேனும் அவர் நெப்போலியனை தமிழ் பேச அழைக்காதிருப்பாராக.

கமலுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. தன்னுடைய முகத்தின் ஒவ்வோர் அணுக்களையும் நடிக்க வைக்கும் திறமை அவருக்குக் கைவந்த கலை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு நடிப்பதால் முகத்தில் கண்கள் மட்டுமே நடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

கண்களில் மட்டுமே மின்னி மறையும் பர்தாப் பெண்ணின் வெட்கம் போல, கமலில் நடிப்பையும் பல வேளைகளில் கண்களை மட்டுமே வைத்து கண்டு கொள்ள வேண்டியிருப்பதே குறையெனப் படுகிறது.

விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு வேகமான திரைப்படம். அறிவு ஜீவி ரசிகர்களுக்கு கேயாஸ் தியரி மற்றும் பட்டர்ஃபிளை தியரி.

33 comments on “தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !

 1. //கடைசிக் காட்சிகளில் சுனாமி பீறிட்டெழும்போது கிராபிக்ஸும், இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட துயரங்களை மீண்டும் ஒருமுறை அள்ளிக்கொண்டு வந்து மனதுக்குள் கொட்டுகிறது திரைப்படம்.//

  சேவியர்,

  கமல் இந்த காட்சிகளை சேர்த்திருக்க கூடாது…

  என் நண்பர் ஒருவர் அவருடைய உறவினர்களை சுனாமியில் இழந்துவிட்டார் . நான் எதேச்சையாக அவருடன் நேற்று பெசிகொண்டிருக்கும்போது தசாவதாரம் பார்த்தீர்கள என்று கேட்டு விட்டேன்.அவர் அவருடைய சோகத்தை கொட்டி விட்டார்.கேட்பதற்கே மிகவும் வருத்தமாக இருந்தது.
  எத்தனையோ பேர் இதே போல தான் தோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.

  கமல் பரபரபிற்காக இதை செய்வது மிகவும் வருத்ததிற்குரியது.

  அன்புடன்
  முகுந்தன்

  Like

 2. பர்தா பெண்ணின் கண்களிலும் அழகுள்ளதே…. கமல் கண்கள் மட்டுமே போதுமே நடிக்க….

  Like

 3. //பிசின் போல சிலையுடனும், கமலுடனும் ஒட்டிக் கொண்டே இருக்கும் அசின் கமலுடன் இணைந்ததாலோ என்னவோ நடிப்பின் இன்னோர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறார். இனிமேல் விஜயுடன் டூயட் பாடும்போது சற்றே உறுத்தக் கூடும் அவருக்கு, நடிக்காமல் காசு வாங்குகிறோமே என்று.//

  சரியாகச் சொன்னீர்கள். 🙂

  Like

 4. kamal’s dasavadhar film excellent! this film suitable for highly understanding
  peoples only. if anybody not understand this film pls avoid their coments…

  Like

 5. dasavathar film’s story fentastic!!! what s beautiful concept! those who are having problem to understand… pls avoid comments over this film!!!

  Like

 6. //kamal’s dasavadhar film excellent! this film suitable for highly understanding peoples only. if anybody not understand this film pls avoid their coments…

  dasavathar film’s story fentastic!!! what s beautiful concept! those who are having problem to understand… pls avoid comments over this film!!!
  //

  First you avoid comments like this…. everyone has right to comment and
  dont think those who comment doesnot understand anything….

  Like

 7. //kamal’s dasavadhar film excellent! this film suitable for highly understanding peoples only. if anybody not understand this film pls avoid their coments…

  dasavathar film’s story fentastic!!! what s beautiful concept! those who are having problem to understand… pls avoid comments over this film!!!
  //

  There is nothing like highly understanding … those who know tamil and who are mentally fit :-)) can undertsnad this. doesnot require any special skills to understand a tamil movie.

  Like

 8. //என் நண்பர் ஒருவர் அவருடைய உறவினர்களை சுனாமியில் இழந்துவிட்டார் . நான் எதேச்சையாக அவருடன் நேற்று பெசிகொண்டிருக்கும்போது தசாவதாரம் பார்த்தீர்கள என்று கேட்டு விட்டேன்.அவர் அவருடைய சோகத்தை கொட்டி விட்டார்.கேட்பதற்கே மிகவும் வருத்தமாக இருந்தது.
  எத்தனையோ பேர் இதே போல தான் தோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்//

  😦

  Like

 9. //பர்தா பெண்ணின் கண்களிலும் அழகுள்ளதே…. கமல் கண்கள் மட்டுமே போதுமே நடிக்க….

  //

  யார் இல்லேன்னு சொன்னது 🙂

  Like

 10. //அசினுடன் முத்தக் காட்சி மிஸ் ஆகிவிட்டதே அதை பற்றி ஏதும் கூறவில்லையே நீங்கள்….

  //

  மாஸ்க் போட்டு கிஸ் பண்ணினா மாஸுக்கு புடிக்காம போயிடும்னு பாஸு நினைச்சிருக்கலாம் 😉

  Like

 11. //There is nothing like highly understanding … those who know tamil and who are mentally fit :-)) can undertsnad this. doesnot require any special skills to understand a tamil movie.//

  நெற்றியடி !!!! இதுக்குமேல நான் சொல்ல என்ன இருக்கு 😉

  Like

 12. //ஒரு எட்டு வந்துட்டு போங்க… உங்கள பத்தி ரெண்டு வரி எழுதி இருக்கேன்…//

  வந்துட்டேன்..பார்த்துட்டேன்.. ரொம்ப. நன்றி 🙂

  Like

 13. mad guy movie…full and full atheist principles… i don’t like this movie…hey already before actors did 27 roles also… but this guy is telling world number 1 hero 10 roles… mhmmm really shit trick… o.kkk i went before aalavandha, hey ram movies also.. i vomitted thrice.. reallyyy funny and crazyyy movieee.. don’t thinkkk too muchhh.. be a normal firsttt.. ahhh..if u need tension with pressure go and watch this idiot movie…tc

  Like

 14. கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

  காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

  காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

  அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

  ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

  அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

  எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

  Like

 15. superb review of a superb film..

  but u missed to mention about Kamal’s dialogues and the martial arts fight..

  wat u said about Asin is cent percent correct..

  Like

 16. நன்றி… 🙂 கமலில் வசனங்கள் ஓரிரண்டு சுட்டிக் காட்டியிருக்கிறேன் 🙂 வசனங்கள் சிறப்பாக இருந்தன, குறிப்பாக கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப.

  Like

 17. //oru nadigana kamal jeyithurukalam.. but oru kalaignana jeyikala.. sorry!!!
  //

  புரியவில்லை. இருந்தாலும் உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. 🙂

  Like

 18. //Ada neenga unaralengradhu varuthama iruku Sir!!!//

  சரி விடுங்க 😉 நம்ம சிற்றறிவுக்கு எட்டினது அவ்ளோ தான் 😀

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s