காபி குடிங்க.. ஆனா அதுக்கு முன்னாடி….

 

காலையிலே ஒரு கப் காஃபி குடிக்கலேன்னா என்னால வேலை எதுவுமே செய்ய முடியாது என்று சொல்லும் ஆசாமியா நீங்கள், உங்களுக்காகவே வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

அதாவது நீங்கள் குடிக்கும் காஃபியை விட அந்த காப்பியின் மணத்தில் தான் உங்கள் சோர்வை அகற்றும் வித்தையே இருக்கிறதாம்.

 

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் காஃபியைக் குறித்து நிகழ்த்திய ஆராய்சியில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. எலிகளை வைத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட இந்த ஆய்வு காப்பியின் மணம் எலிகளின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது.

 

இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்த “யோஸினாரி மாசே  இந்த ஆராய்ச்சி குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றார்.

 

அதாவது காப்பியில் இருக்கும் காஃபைன் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது, ஆனால் காஃபியின் மணம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு குறைவு. எனவே எதிர்காலத்தில் மக்கள் காப்பிக்குப் பதிலாக காலையில் காஃபியின் மணத்தை மட்டுமே நுகர்ந்து உற்சாகமடையலாம்.

 

அலுவலகங்களில் சோர்வை அகற்ற காஃபி குடிப்பதற்குப் பதிலாய் அவ்வப்போது காஃபியின் மணத்தை அலுவலகத்தில் மிதக்க விடலாம் என்றெல்லாம் தனது கற்பனைச் சிறகை விரித்தார்.

 

இனிமேல் காஃபி குடிக்கும் முன் சற்று நேரம் அதன் மணத்தை நிதானமாய் நுகர்ந்து விட்டு குடியுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் காப்பியை நுகரவும் காசு வசூலிக்கப்படலாம் !

17 comments on “காபி குடிங்க.. ஆனா அதுக்கு முன்னாடி….

  1. காப்பி மணம் போதும் என்பது சரிதான்!காப்பி மணம் காலையில் மூக்கைத் தாக்கியவுடன் நாக்கு உடம்பு எல்லாம் சும்மா கப கபன்னு வெலை செய்து காப்பி குடிக்காமல் நகரக் கூட முடியாமல் செய்து விடுகிறதே?காப்பி மணத்துக்கென்ன விலை வந்தால் என்ன? காப்பிப்பொடி விலை விஷம் போல ஏறினாலும் கொஞ்சம்கூட கவலைப்படாமல் கள்ளிச் சொட்டுப்போல திக்காக டிக்காஷன் போட்டு நைஸ் ஆவின் பாலில் கலக்கி ரசித்து காப்பி குடிக்கும் என்னைப்போன்ற மனிதர்கள் சென்னையில் நிறைய இருக்கிறார்கள்.எந்த கண்டத்துக்குப் போனாலும் நம்ம ஊரு காப்பி பொடியுடன்தான் நான் போகிறேன்.
    காப்பிப் பிரியை
    கமலா

    Like

  2. கமலாம்மா.. நீங்க விளக்கறதைப் பாக்கும்போ உடனே ஒரு காபி குடிக்கணும்போல இருக்கு !!!

    Like

  3. டீ பத்தின பதிவுல ஒரு அக்கா பின்னூட்டம் போட்டாங்களே (என் கணவர் இந்தப் பதிவைப் பார்க்காமல் இருக்கக் கடவது), அவங்க இங்க வரலியா….

    அவங்க சார்பா ஒரு கேள்வி. காஃபி வாசனை இருந்தா போதும்னு சொல்றீங்க, அதே மாதிரி டீயும் வாசனை மட்டும் காட்டினா போதுமா? ஏன்னா இந்த அக்காவோட வீட்டுக்காரர் நெறைய டீ குடிப்பாராம்.

    Like

  4. //அவங்க இங்க வரலியா..//.

    நாங்க தினமும் வந்துருவோம்.

    //அவங்க சார்பா ஒரு கேள்வி. காஃபி வாசனை இருந்தா போதும்னு சொல்றீங்க, அதே மாதிரி டீயும் வாசனை மட்டும் காட்டினா போதுமா?//

    இப்படி அக்காமேல அநியாயத்துக்கு பாசமாயிருக்கீங்களே. கண்ணீர்வருது.

    உங்க கேள்விக்கு பதில் சொல்லிவிடலாம்.
    ஆனா பாருங்க தம்பி உங்களை(ஏடா கூடா கற்பனையை) பார்த்தால் எனக்கு பயமாகயிருக்கிறது.

    Like

  5. //டீ பத்தின பதிவுல ஒரு அக்கா பின்னூட்டம் போட்டாங்களே (என் கணவர் இந்தப் பதிவைப் பார்க்காமல் இருக்கக் கடவது), அவங்க இங்க வரலியா….

    அவங்க சார்பா ஒரு கேள்வி. காஃபி வாசனை இருந்தா போதும்னு சொல்றீங்க, அதே மாதிரி டீயும் வாசனை மட்டும் காட்டினா போதுமா? ஏன்னா இந்த அக்காவோட வீட்டுக்காரர் நெறைய டீ குடிப்பாராம்
    //

    ஆஹா.. தம்பி தங்கக் கம்பியா இருக்கானே… அக்காவை மறக்காம.. 🙂

    Like

  6. //இப்படி அக்காமேல அநியாயத்துக்கு பாசமாயிருக்கீங்களே. கண்ணீர்வருது.//

    பாசம் காட்டி ஒரு ஓசி டீ குடிக்கலாம்னு நினைக்கிறான்னு நினைக்கிறேன்.

    //உங்க கேள்விக்கு பதில் சொல்லிவிடலாம்.
    ஆனா பாருங்க தம்பி உங்களை(ஏடா கூடா கற்பனையை) பார்த்தால் எனக்கு பயமாகயிருக்கிறது.//

    தம்பி நல்ல பையன். கற்பனை மட்டும் தான் கொஞ்சம் பயப்படுத்தற மாதிரி இருக்கும் 😀

    Like

  7. ///
    ஆனா பாருங்க தம்பி உங்களை பார்த்தால் எனக்கு பயமாகயிருக்கிறது.
    ///

    நீங்க பயப்படுறதோட நிறுத்திக்குங்க. என்னக் காட்டி “நாலு கண்ணன் வற்றான் பாரு”ன்னு உங்க பொண்ணுக்கு சோறெல்லாம் ஊட்டக் கூடாது. சொல்லிட்டேன்.

    Like

  8. காப்பி குடிங்க… ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பெக் சீமைச் சாராயம் அடிங்க…

    இந்த தலைப்பு எப்படி? ஓகேவா???

    Like

Leave a comment