வரும் வழியில் ….

( முன் குறிப்பு : படத்துக்கும் சொல்லப் போகும் சமாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை )

ஒன்று

காலையில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளச்சேரி மெயின் ரோட்டில் நுழைந்த மூடிய காருக்குள் சட்டென நுழைந்தது துர்நாற்றம். பார்த்தால் எனக்கு முன்னால் கேரள யானை போல பின் பாகத்தை பெருமளவுக்கு ஆட்டியபடி சென்று கொண்டிருந்தது ஒரு கார்ப்பரேஷன் லாரி.

சாலையின் பல்லாங்குழிகளில் குதித்துக் குதித்துச் சென்ற லாரியிலின் பின்னாலிருந்தும், இரண்டு பக்கங்களிலிருந்தும் சாலைக்கு அஞ்சலி செலுத்துவது போல சொரிந்து கொண்டிருந்தன குப்பைகள். இருசக்கர வாகன ஓட்டிகள் ரேசில் செல்வது போல செல்லவேண்டியிருந்தது குப்பைகள் தலையில் விழாமல் பாதுகாத்துக் கொள்ள.

அதெல்லாம் சரி,

ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம் என்கிறார்கள்
குப்பை வண்டியே குப்பை கொட்டினால் ?

இரண்டு

கத்திப்பாரா பாலத்துக்குக் கீழே வைகோவைப் பார்த்தேன். போஸ்டரில் தான். பழைய போஸ்டர். கண்களில் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தார். ஒருவேளை போட்டோ எடுத்தபோது “மெட்ராஸ் ஐ” இருந்திருக்கலாம் என்றேன் அருகில் இருந்த நண்பரிடம்.

கண்ணாடி போட்டால் தன்னை மக்கள் “அடுத்த கலைஞர்” என ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறார் போலிருக்கிறது என்றார்.

மெதுவா சொல்லுங்க அம்மா காதில் விழுந்து விடப் போகிறது என்றேன்.

முறைத்துப் பார்த்த நண்பர், பல போஸ்டர்களில் அரசியல் தலைவர்கள் செல்போனும் கையுமாக இருக்கிறார்களே ? ஏன் ? என்று என்னிடம் எசகு பிசகான கேள்வியைக் கேட்டார்.

“அட… அப்படியா ? நான் கவனிக்கவே இல்லையே” என்றேன். நக்கலாகச் சிரித்தார். இது கூடக் கவனிக்காம நீ என்னத்த பாத்துக் கிழிச்சுட்டே என்பது போல் இருந்தது அவருடைய பார்வை.

மூன்று

திரிசூலம் தாண்டியதும் சாலையின் இரண்டு பக்கமும் போஸ்டர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தன.

அபாய அரக்கர்கள், அசுரர்கள், பயங்கரங்கள், அதிரடி வீரர்கள் – என்று பல போஸ்டர்கள். நீளமான நகங்களும், கோரமான முகங்களும் போஸ்டர்களில் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தன.

நினைத்துப் பார்த்தேன், இன்னும் இப்படிப்பட்ட மிரட்டும் தலைப்பைப் பார்த்து படத்துக்குப் போகும் மக்கள் இருக்கிறார்களா என்ன ?

யோசித்துக் கொண்டே திரும்பிய இடத்தில் “இது சிட்டுக் குருவியல்ல ஹிட்டுக் குருவி” என சிறகில்லாத குருவிக்கு கிரீடம் சூட்டியிருந்தார்கள் ரசிகர்கள்.

நான்கு

பல்லாவரம் சந்திப்பில் வழக்கத்துக்கு மாறாக இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்கள் உரத்த குரலில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

பொதுவா இவங்களுக்கு வாய் நீளாதே ? கை தானே நீளும் ? பாகப் பிரிவினையில் பிரச்சனை ஏதாவது இருக்குமோ ? என யோசித்துக் கொண்டே வந்தேன். உள்மனது குத்தியது.. ஏண்டா.. கொஞ்சம் நல்லதா யோசிக்கவே மாட்டியா ?

ஐந்து

காரில் செல்லும் போது செல்போனில் பேசுவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அப்படி என்னதான் அவசரமான அழைப்பாக இருந்தாலும் பத்து நிமிடத்துக்குப் பின் பேசிவிடலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.

சமீபத்தில் ரசித்த ஒரு டிராபிக் வாசகம்

“காரோட்டும் போது போனை எடுக்காதீர்கள், அழைப்பது எமனாகவும் இருக்கலாம்”

Advertisements

9 comments on “வரும் வழியில் ….

 1. Vanakam Xevier

  சமீபத்தில் ரசித்த ஒரு வாசகம்

  “ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம் என்கிறார்கள்
  குப்பை வண்டியே குப்பை கொட்டினால் ?”

  :-))

  Puduvai siva

  Like

 2. //ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம் என்கிறார்கள்
  குப்பை வண்டியே குப்பை கொட்டினால் ?//

  ரசிக்ககூடிய வாசகம், காமடி பசார் மாதிரி 🙂

  //காரில் செல்லும் போது செல்போனில் பேசுவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். //

  இது நம்புர-மாதிரி இல்ல

  Like

 3. //காரில் செல்லும் போது செல்போனில் பேசுவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அப்படி என்னதான் அவசரமான அழைப்பாக இருந்தாலும் பத்து நிமிடத்துக்குப் பின் பேசிவிடலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.//

  நானும் அப்படிதான் சேவியர், என்ன போன் பேசாவிட்டால் உயிரை போய்விடும்?

  //சமீபத்தில் ரசித்த ஒரு டிராபிக் வாசகம்

  “காரோட்டும் போது போனை எடுக்காதீர்கள், அழைப்பது எமனாகவும் இருக்கலாம்”

  //

  போன் பேசி எங்காவது இடித்தால் நம் உயிருடன் மற்றவர்கள் உயிரும் போகும்…

  Like

 4. //கண்களில் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தார். //

  சார் உங்களுக்கும் கருப்புக் கண்ணாடி சூப்பராக இருக்கும்..

  Like

 5. சரியாகச் சொன்னீர்கள் முகுந்தன். பாவம் ரோட்டில் போகும் நல்லவர்களை சோதிப்பானேன்.

  Like

 6. //சார் உங்களுக்கும் கருப்புக் கண்ணாடி சூப்பராக இருக்கும்..//

  எனக்கு கருப்புக் கண் சூப்பராவே இருக்கு, எதுக்கு கண் ஆடி ?

  Like

 7. Pingback: கில்லி - Gilli » Blog Archive » Chennai Traveler: On the way - Xavier

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s