தலையணை விளையாட்டு !

ஒருபுறம் கணினி நிறுவனங்களின் கண்ணாடி மாளிகைகளும், கரன்சிகளும், இளைஞர்களின் வாழ்க்கை முறையும் துறை சாராத நபர்களிடையே ஒருவித வியப்பு கலந்த பொறாமையை விளைவித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் கணினி நிறுவன ஊழியர்கள், குறிப்பாக இளைஞர்கள் உண்மையான வாழ்வின் சுவாரஸ்யங்களை இழந்து கணினி அடிமைகளாக மாறி மன அழுத்தத்தில் உழல்கின்றனர்.

வாழ்வின் மீதான பிடிப்பு தளர்தலும், சட்டென உணர்ச்சி வசப்பட்டு வாழ்வின் மீது வெறுப்பு கொள்வதும், சமூகப் பிணைப்பு குடும்ப உறவு பிணைப்பு இல்லாமலும் பல தரப்பிலான இளைஞர்களின் கூடாரமாகி விட்டது கணினி துறை.

பெங்களூரில் மட்டும் தினமும் 6 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம் ஒன்று. இவற்றில் பெரும்பாலானோர் 23 வயதுமுதல் 35 வயதுக்கு உட்பட்டோராம்!

கணினி நிறுவனங்கள் இத்தகைய மன அழுத்தங்களைத் தவிர்க்க (மென்பொறியாளரை மிரட்டும் மன அழுத்தம்), பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக குழுவாக வெளியே செல்தல், நிகழ்ச்சிகள் நடத்துதல், சுற்றுலா செல்தல், நகைச்சுவை மேடைகள் அமைத்தல், போட்டிகள் நடத்துதல் இன்ன பிற என இந்த பட்டியல் நீள்கிறது.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு மேலை நாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தலையணை விளையாடு. இந்த விளையாட்டில் தலையணைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், விரட்டுவதும் என மக்கள் சட்டென உற்சாகமாகி விடுகின்றனராம்.

அப்படி ஒரு இடத்தில் நடந்த மன அழுத்தம் விலக்குதல் நிகழ்வின் படங்கள் தான் இவை…

 

17 comments on “தலையணை விளையாட்டு !

  1. /
    உங்க படத்தில் இருக்கிற விளையாட்டு விவகாரமா இல்ல இருக்கு?
    /

    அதானே

    இன்னைக்கு தலைகாணி வெல்லாட்டுல குறையற மன அழுத்தம் நாளைக்கு ‘வேற’ எதாவது இருந்தாதான் குறையும் நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய

    :((

    Like

  2. எனக்குத் தெரிந்து வெற்றிலை விளையாட்டு என்று ஒன்று இருக்கிறது. சேவி அண்ணன் அனுமதி தந்தால் அதை பின்னூட்டத்தில் எழுதுவேன்.

    பின் குறிப்பு: புது மாப்பிள்ளைகளுக்கான விளையாட்டு அது…

    Like

  3. //இன்னைக்கு தலைகாணி வெல்லாட்டுல குறையற மன அழுத்தம் நாளைக்கு ‘வேற’ எதாவது இருந்தாதான் குறையும் நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய//

    🙂

    Like

  4. //எனக்குத் தெரிந்து வெற்றிலை விளையாட்டு என்று ஒன்று இருக்கிறது. சேவி அண்ணன் அனுமதி தந்தால் அதை பின்னூட்டத்தில் எழுதுவேன்.

    பின் குறிப்பு: புது மாப்பிள்ளைகளுக்கான விளையாட்டு அது…

    //

    அட.. எச்சில் துப்பற விளையாட்டு மேட்டர் இல்லேன்னா சொல்லுங்க சார்… 🙂 இது உங்க இடம் மாதிரி 😉

    Like

  5. அதாகப் பட்டது இந்த வெளையாட்டுக்கு ரெண்டு பேரு வேணும். யாருன்னு உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புது மாப்பிள்ளையும் புதுப் பெண்ணும் தான் அந்த ரெண்டு பேர்.

    மாப்பிள்ளை பையன் என்ன பண்ணனும், ஒரு வெத்தலைய எடுத்து நடுவில சின்னதா ஒரு ஓட்டை மாதிரி கிழிச்சி அத மடியில வச்சிரணும். ஒரு கையில இன்னொரு வெத்தலையையும் இன்னொரு கையில பாக்கையும் வச்சிக்கிட்டு (அதாவது ரெண்டு கையும் பிசியா இருக்கற மாதிரி காட்டிக்கனும்) பொண்ணக் கூப்பிட்டு வெத்திலைக்கு சுண்ணாம்பு வைன்னு சொல்லணும்.

    மடியில இருக்கற வெத்தலையில் கிழிசல் வழியா வெள்ளை வெளேர்னு இருக்கற வேட்டி தெரியும். பொண்ணு அத சுண்ணாம்புன்னு நெனைச்சு வெரலால எடுக்கப் பாப்பா. ஆனா வராது. சத்தியமா இது தாங்க நான் சொன்ன வெத்திலை வெளையாட்டு.

    இன்னொரு முக்கியமான விஷயம் இருக்குங்க, அதையும் கேட்டுகிருங்க. இந்த வெளையாட்டுக்கு நல்ல லைட்டிங் இருக்கறது ஆபத்துங்கோ.

    தகவல் உதவி நம்ம கவிப்பேரரசு வைரமுத்து. அவருடைய “இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்” புத்தகத்தில சொல்லிருக்காருங்கோ.

    Like

  6. //இந்த வெளையாட்டுக்கு நல்ல லைட்டிங் இருக்கறது ஆபத்துங்கோ.
    //

    இப்போ முழுசா புரிஞ்சுச்சு 🙂

    Like

  7. அதெல்லாம் இருக்கட்டும்.. வைரமுத்து கஷ்டப்பட்டு இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் ன்னு ஒரு புக் எழுதினா, அதில இருந்து ஓட்டை வெத்தலையை மட்டும் எடுத்துக்கு கிளம்பறீங்களே நியாயமா ?

    Like

  8. ///
    ஓட்டை வெத்தலையை மட்டும் எடுத்துக்கு கிளம்பறீங்களே நியாயமா ?
    ///

    என்ன பண்றது? இன்னும் ரெண்டு மாசத்தில நானே வெத்தலை கிழிக்க வேண்டிய நெலைமை வந்திருச்சு. (லவ் மூட்ல இருக்கும் பொது நியாய அநியாயம் பேசக் கூடாது.)

    Like

  9. கிராமங்களில், நிலாவெளிச்ச‌த்தில் பெரிசுக‌ள் வெற்றிலை போடும் போது யாரையாவது ஏமாற்றி சிரிக்க கையாளும் ஒரு உபாய‌ம். கி.ராஜ‌நாராய‌ண‌ன் அவ‌ர்களின் புதின‌ம் ஒன்றில் இதை விவ‌ரித்திருப்பார் (கோப‌ல்ல‌ கிராம‌ம் அல்ல‌து கோப‌ல்ல‌புர‌த்து ம‌க்க‌ள், இர‌ண்டில் ஏதோ ஒன்று என நினைவு).

    Like

Leave a comment