பெற்றோரின் கவனத்துக்கு…

வாகனங்கள் ஓடும் சாலைகளின் அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா மற்றும் அது தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலக அளவில் வாகனங்களின் பயன்பாடும், எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது சுற்றுப் புறச் சூழலை பெருமளவில் மாசுபடுத்தியிருக்கிறது. பிரிட்டனின் முப்பத்து ஐந்து விழுக்காடு மக்கள் ஆஸ்த்மா தொடர்பான ஏதோ ஒரு நோயின் பாதிப்பில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்கள் அதிகரித்திருப்பதும், அதன் நச்சுப் புகையும், அதனால் உருவாகும் புழுதி மண்டலமும் குழந்தைகளின் உடல்நலத்தை பெருமளவில் பாதிக்கிறது என்பது புதிய தளமாகும்.

இதற்கு முன் புழுதிகளோடு விளையாடாமல் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள் சரியான நோய் எதிர்ப்புச் சக்தி இன்றி அல்லலுறும் என ஆய்வுகள் சேதி தெரிவித்திருந்தன. இப்போது வாகனப் புழுதியில் விளையாடுவது ஆபத்தானது எனும் அச்சமூட்டும் ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

பல்வேறு வயது வரம்புகளில் சுமார் ஆறாயிரம் பேரை பல ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

வாழும் இடம், சூழல், வாழ்க்கைத் தரம், பெற்றோரின் உடல்நலம், மருத்துவ வசதிகள், காலநிலை என பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு நிகழ்த்தப்பட்ட விரிவான ஆய்வு இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வில் பணிபுரிந்த “மருத்துவர் ஹெயின்ரிச்” குறிப்பிடுகையில், சாலைகளின் அருகே வசிக்கும் குடும்பங்களுக்கு மாசு மட்டுமன்றி வாகனப் புகையில் உள்ள விஷத் தன்மை கூட மிகவும் ஊறு விளைவிக்கக் கூடியது என தெரிவித்தார்.

ஆனால் புழுதி, விலங்குகள், தூசு என குழந்தைகள் கலந்து பழகும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும், அப்படி வளராமல் மிகவும் தூய்மையிலேயே வளரும் குழந்தைகளுக்கு “ஹைஜின் ஹைப்பாத்திசிஸ்”  எனும் அலர்ஜி நோய்கள் உருவாகும் எனவும், மேலை நாடுகளில் இது மிகவும் அதிகம் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விரிந்து பரந்த வயல்வெளிகள், குளங்கள், ஆறுகள், அடர்ந்த மரங்கள் என உன்னதமான வாழ்க்கைச் சூழல் நகரவாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அத்தகைய சூழலில் குறைந்த பட்சம் வாகன மாசு தாக்காதபடி குழந்தைகளைக் காத்துக் கொள்தல் அவசியம் என்பதே இந்த ஆய்வின் மையமாகும்

13 comments on “பெற்றோரின் கவனத்துக்கு…

 1. Vannakam Xevier

  But in our Indian Govt Poluction control board doing their job well? in many very worst share Auto and Audo was run in chennai or most of our tamilnadu by police peoples.

  puduvai siva.

  Like

 2. உண்மைதான், முன்பு வாகனப் புகையினால் கண் எரிச்சல் மற்றும் கண் பாதிப்பு ஏற்படும் கட்டுரை ஒன்றை படித்த ஞாபகம் உண்டு….

  Like

 3. சூழலையும் சுகாதாரமாக வைத்திருக்கக் கூடிய கல்வி நமக்கு அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க வேண்டும்.

  Like

 4. //But in our Indian Govt Poluction control board doing their job well? in many very worst share Auto and Audo was run in chennai or most of our tamilnadu by police peoples.//

  உண்மை புதுவை சிவா. என்ன பண்றது ? எமிஷன் கண்ட்ரோல் – ன்னா என்னன்னு வண்டி வெச்சிருக்கிற முக்கால் வாசி பேருக்கு தெரியாது. என் வண்டி புகை வுடுது, நீ இன்னா கேக்கறது ங்கறாங்கோ 🙂

  Like

 5. //உண்மைதான், முன்பு வாகனப் புகையினால் கண் எரிச்சல் மற்றும் கண் பாதிப்பு ஏற்படும் கட்டுரை ஒன்றை படித்த ஞாபகம் உண்டு….//

  “புகை” எதுவானாலும் பிரச்சனை தான் போலிருக்கு 😉

  Like

 6. //சூழலையும் சுகாதாரமாக வைத்திருக்கக் கூடிய கல்வி நமக்கு அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க வேண்டும்//

  இந்த “கல்வி”-யில் புள்ளி உண்டு தானே ? 😉

  Like

 7. மனிதன் வசதிக்காக எதெல்லாம் கண்டு பிடித்தானோ அவை எல்லாம் இயற்கைக்கு எதிராகவும்,
  உடல்நிலையை கெடுக்கவுமே செய்கின்றன.

  Like

 8. //மனிதன் வசதிக்காக எதெல்லாம் கண்டு பிடித்தானோ அவை எல்லாம் இயற்கைக்கு எதிராகவும்,
  உடல்நிலையை கெடுக்கவுமே செய்கின்றன//

  சரியா சொன்னீங்க. முக்கியமா, இயற்கையை விட்டு மனிதன் எவ்வளவு தூரம் விலகி ஓடுகிறானோ அவ்வளவு தூரம் இன்னல்களுக்கு நெருக்கமாய் செல்கிறான் என்பதே பொருள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s