எனது நூல் : கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.

மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.

ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.

எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.

கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.

கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.

கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100

18 comments on “எனது நூல் : கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

 1. எனக்கு இப்புத்தகம் வேண்டும்… உங்களின் வேறு சில புத்தகங்களும் வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மின்மடல் என்னிடம் இல்லை. என்னுடன் மின் மடலில் தொடர்புக் கொள்வீர்களா?

  Like

 2. //எனக்கு இப்புத்தகம் வேண்டும்… உங்களின் வேறு சில புத்தகங்களும் வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மின்மடல் என்னிடம் இல்லை. என்னுடன் மின் மடலில் தொடர்புக் கொள்வீர்களா?

  //

  கண்டிப்பாக xavier.dasaian@gmail.com : பேசலாம் 🙂

  Like

 3. ஸேவியர்!

  URLஐ கவனித்தால் “My_10th_Book!”
  சூப்பர்! இதுவே ஒரு பிரத்தியேகத் தகவல்! கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு!
  படித்துப் பார்த்துக் கண்டிப்பாக மடலிடுகிறேன்!
  இப்போதைக்கு, அடுத்தடுத்து புத்தகங்கள் ‘உதயமாக’ வாழ்த்துக்கள்!

  நன்றி!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  Like

 4. நூலுக்கு வாழ்த்துகள்.

  //இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும்//

  இதற்கு சில எடுத்துக்காட்டுகளைத் தர இயலுமா? பெயர்களை ஏன் ஆங்கிலப் படுத்த வேண்டும் எனப் புரியவில்லை. ஏற்கனவே தமிழ் விவிலியத்தில் நிறைய பெயர்கள் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளனவே? இவை மூல மொழி, ஐரோப்பிய மொழி ஒலிப்புக்கும் கூட கூடிய நெருக்கம் உடையவை என நினைக்கிறேன். தமிழ் விவிலியப் பெயர்களுக்கு நீண்ட மரபு உண்டு தானே?

  Like

 5. உண்டு. எனினும் ஆங்கில விவிலியப் பெயர்களை மட்டும் அறிந்து கொண்டவர்களுக்கு ஸ்தேவானை விட ஸ்டீபன் வசதியாய் இருக்கும். மேலும் வரலாற்றைச் சொல்லும் போது ஆங்கிலப் பெயர்களோடு வெளியிட்டால் பிற வரலாற்று நூல்களைப் படிக்கும் போது ஒப்புமை செய்து கொள்ளவும் உதவும்.

  Like

 6. சுவடுகளின்றி உங்கள் எழுத்துக்களின் பின்னே பயணித்து வருபர்களில் நானும் ஒருவன். உங்கள் எழுத்துக்கள் அழகு. அதை விட உங்கள் எண்ணங்கள் மிகமிக அழகு, அதனை நம் “அன்னை”யின் மூலம் அறிந்திருந்தேன்.
  இன்னும் கிறிஸ்தவம் என்ற தங்களின் நூலை வாசிக்கவில்லை. மதம் மற்றும் அதன் பிரிவுகள் என்ற இந்த வகையராக்களில் விலகி நின்றே உங்கள் பார்வைகள் இதனை பகுப்பாய்வு செய்திருக்கும் என்று உளமாற நம்புகின்றேன். வாசித்ததும் நிச்சயமாய் எழுத்தின் மூலம் உங்களிடம் வருவேன். குன்று உங்களை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது. தொடருக தீபமாய் உங்கள் பயணத்தை…..

  Like

 7. இன்னும் படிக்கவில்லை.இருன்ததலும் உங்கள் புத்தகம் அல்லவா?நன்றாகத்தான் இருக்கும்.சீக்கிரம் படிக்கிறேன்

  எழுத்தாளர் சேவியர் அவர்களின் புதிய புத்தகம்

  http://thamilislam.blogspot.com/2008/07/blog-post_01.html

  Like

 8. Pingback: எழுத்தாளர் சேவியர் அவர்களின் புதிய புத்தகம் « தமிழ் முஸ்லீம்

 9. //சுவடுகளின்றி உங்கள் எழுத்துக்களின் பின்னே பயணித்து வருபர்களில் நானும் ஒருவன். உங்கள் எழுத்துக்கள் அழகு. அதை விட உங்கள் எண்ணங்கள் மிகமிக அழகு, அதனை நம் “அன்னை”யின் மூலம் அறிந்திருந்தேன்.
  இன்னும் கிறிஸ்தவம் என்ற தங்களின் நூலை வாசிக்கவில்லை. மதம் மற்றும் அதன் பிரிவுகள் என்ற இந்த வகையராக்களில் விலகி நின்றே உங்கள் பார்வைகள் இதனை பகுப்பாய்வு செய்திருக்கும் என்று உளமாற நம்புகின்றேன். வாசித்ததும் நிச்சயமாய் எழுத்தின் மூலம் உங்களிடம் வருவேன். குன்று உங்களை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது. தொடருக தீபமாய் உங்கள் பயணத்தை…..

  //

  அன்பின் டார்வின், இலைமறையாக ஒரு கனி நட்பு மரத்தில் தொங்குவதை அறிந்து மனம் மகிழ்கிறேன். உங்கள் மனம் திறந்த வார்த்தைகள் என் வாழ்வின், பணியின், எழுத்தின் பாதையை நியாயப்படுத்துகின்றன. மனமார்ந்த நன்றிகள். வாசித்து உங்கள் விமர்சனங்களைத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  Like

 10. //இன்னும் படிக்கவில்லை.இருன்ததலும் உங்கள் புத்தகம் அல்லவா?நன்றாகத்தான் இருக்கும்.சீக்கிரம் படிக்கிறேன்//

  உங்கள் நம்பிக்கைக்கு நன்றிகள் பல 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s