குசேலன் : பாடல் வரிகளும், விமர்சனமும்

பாடல் : சினிமா சினிமா சினிமா …

எம்ஜியாரு, சிவாஜிகாரு, என்.டி.யாரு ராஜ் குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இதுபோல் வருமா வருமா

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்துக் காட்டுவது சினிமா தான்
அதுக்கு யாரிங்கு சாட்சின்னா
அட வேறு யாரு நம்ம தலைவர் தான்.

மொத்த பூமியையும்
பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுதிந்த சினிமா தான்.

பாரு பாரு பட ஷூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்தினாங்க
நூறு கைகள் ஒண்ணு சேரவேணும் ஒரு
சினிமா உருவாக

காபி டீயும் தரும் புரடக்ஷன் பாயும் இங்கே ரொம்ப முக்கியம் தான்
டிராலி தள்ள பவர் லைட்டும் போட வேண்டும் உழைக்கும் வர்க்கம் தான்

மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கங்களை கோயிலாக்கும் இந்த சினிமா தொழில் தானே
ஏ குரூப் டான்ஸ் கோரஸ் பாட்டு என குடும்பம் வாழுதப்பா
வந்த பேரை இங்கு வாழ வைக்கும் இந்த சினிமா சினிமா தான்

சூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜ யோகமடா சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் நான் சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்

ஜப்பானில் பார் சூப்பர் ஸ்டாரு
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
காய்கறி விற்கும் தாய்குலம் தூக்கும்
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டார்.

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்

சூப்பர் ஸ்டார் பேரைத்தான்
திரைமீது மக்கள் பார்க்கும் போது விசில் வானைப் பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனை கூட்டி
பேனர் மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ

அந்தப் படையப்பாவின் படை தான்
இந்த பூமியெங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்

 
எனக்குத் தோன்றியது :

ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்ட இந்த சினிமா சினிமா பாடல் ஏதோ ரஜினியின் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு லோக்கல் ரசிகன் எழுதி ஒட்டிய போஸ்டர் போல இருக்கிறது.
( ரசிகர் மன்ற போஸ்டர் பல வேளைகள் இதைவிட நல்ல கவித்துவமாய் மிளிரும் என்பது வேறு விஷயம். உதா : எவரஸ்ட் யாருக்கு தெரியும் எவர் பெஸ்ட் பாருக்கே தெரியும் )
பல இடங்களில் பாடல் உரையாடல் போல ஊர்கிறது.

எனக்குப் பிடித்த வரி :

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
இந்தப் பாடலை வாலி எழுதியிருக்கிறார் என நம்ப முடியவில்லை. சுமாரான டியூன், ஒரு தடவைக்கு மேல் கேட்கத் தூண்டவில்லை என்பதே நிஜம்.

 

21 comments on “குசேலன் : பாடல் வரிகளும், விமர்சனமும்

  1. hmm..
    atleast you could hear once…ennakku addhu kodda mudiyalai..iddhaiuum sooper, sooper nnu solli, people make me think like (am i being strange) nnu…

    Like

  2. உங்கள் புத்தகங்கள் வாங்குவது குறித்து மின் மடல் ஒன்று அனுப்பி இருந்தேன் கிடைத்ததா??

    Like

  3. //ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்ட இந்த சினிமா சினிமா பாடல் ஏதோ ரஜினியின் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு லோக்கல் ரசிகன் எழுதி ஒட்டிய போஸ்டர் போல இருக்கிறது.//

    ஆமாங்க ..நானும் கடுப்பாகிட்டேன்..ரஜினி என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை

    இதே மாதிரி இன்னொரு பாட்டு இருக்குன்னு நினைக்கிறேன்..படத்தில் ரஜினி நடிகராக வருகிறார் என்பதால்.. எதோ ரசிகர் மன்ற பாடல் மாதிரி இருக்கு இரண்டு பாட்டு..

    Like

  4. //உங்கள் புத்தகங்கள் வாங்குவது குறித்து மின் மடல் ஒன்று அனுப்பி இருந்தேன் கிடைத்ததா??

    //

    கிடைத்தது… நேரில் பேசுவோம் 🙂

    Like

  5. //படத்தில் ரஜினி நடிகராக வருகிறார் என்பதால்.. எதோ ரசிகர் மன்ற பாடல் மாதிரி இருக்கு இரண்டு பாட்டு..//

    உண்மை உண்மை…

    Like

  6. இந்தப்படத்தில் பசுபதிதான் நாயகன் என்று சொல்லப்பட்டது முதலில், இன்னும் நான் அப்படியே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    Like

  7. kadha paraymboll
    oru arumaiyaana padam….

    indha padupaavigal adhai
    naasam panni vaippangalennu ninaichaaley
    vayiththa kalkkukiradu….

    neenga vera padaththa thooku thookunnu thooki vittudareengalappaa?

    konjamachchum naayam vendaaamaaa?

    jalliyadikkaradhukku?

    Like

  8. //இந்தப்படத்தில் பசுபதிதான் நாயகன் என்று சொல்லப்பட்டது முதலில், இன்னும் நான் அப்படியே நினைத்துக்கொண்டு இருக்கிறேன்//

    கௌரவ வேடத்துக்கே அனைத்து கௌரவமும் 😀

    Like

  9. //kadha paraymboll
    oru arumaiyaana padam….
    //

    படத்தை நிஜமாவே நீங்க பாத்தீங்களா என்ன ? சும்மா பிலிம் காட்டக் கூடாது !

    Like

  10. இந்த படத்தை மலையாளத்தில் பார்க்கும் போது நான் வேண்டிக்கொண்டது….கடவுளே நம்ம தமிழ் கசாப்பு கதை ஆசாமிகள் கண்ணில் இந்த படம் பட்டுவிடக்கூடாது என்று தான்….

    Like

  11. //எனக்குப் பிடித்த வரி :

    பாட்டாளிகளின் பனியனை கவனி
    பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி//

    எனக்கும் இந்த வரிகள்தான் பிடித்திருக்கிறது.

    Like

  12. //இந்த படத்தை மலையாளத்தில் பார்க்கும் போது நான் வேண்டிக்கொண்டது….கடவுளே நம்ம தமிழ் கசாப்பு கதை ஆசாமிகள் கண்ணில் இந்த படம் பட்டுவிடக்கூடாது //

    🙂

    Like

  13. ////எனக்குப் பிடித்த வரி :

    பாட்டாளிகளின் பனியனை கவனி
    பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி//

    எனக்கும் இந்த வரிகள்தான் பிடித்திருக்கிறது.

    //

    நன்றி நிரூபர்.

    Like

Leave a comment