பெட்ரோல் தட்டுப்பாடு + அரசின் நிலைப்பாடு = மக்கள் படும்பாடு

 

அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்தில் வந்துவிடக் கூடிய தூரம் தான் வேளச்சேரியிலிருந்து தாம்பரம். நேற்று காலை இரண்டரை மணிநேரமாகி விட்டது. ஏதோ அன்னதான மேடைக்கு சரியான நேரத்தில் வந்தது போல எல்லோரும் மதிய உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது தான் அலுவலகத்தில் நுழையவே முடிந்தது.

என் சென்னை வாழ்க்கையில் சந்தித்திராத பெட்ரோல் தட்டுப்பாடு. ஒவ்வோர் பெட்ரோல் பங்க் வாசலிலும் உள்ள வாகனங்கள் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்க சாலைகள் முழுவதும் டிராபிக் ஜாம். அவசர கதியில் இருந்த எத்தனைபேருக்கு அவஸ்தைகள் நேர்ந்ததோ தெரியாது.

சில நாட்களுக்கு முன்பே எல்லா பெட்ரோல் பங்க் களிலும் சாதாரண பெட்ரோல் இல்லை உயர்தர பெட்ரோல் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி சாதாரண பெட்ரோலை உயர் தரப் பெட்ரோல் என்று சொல்லி அதிக விற்றுக் கொண்டிருப்பதாக சென்னை முழுவதும் முணுமுணுப்பு நிலவியது.

பெட்ரோல் என்ன தோசை மாதிரியா இருக்கிறது சாதாவா, ஸ்பெஷலா என பார்த்தா கண்டு பிடிக்க முடியும் ? அல்லது காபி டீ மாதிரி குடித்தா பார்க்க முடியும்.

“பசி வந்தால் பத்தும் பறந்து போயிடும்” ங்கற மாதிரி, ஏதோ ஒரு பெட்ரோல் ஏதோ ஒரு விலைக்குக் குடு என்பது போலத் தான் இருந்தது காத்திருந்த அப்பாவி ஜனங்களின் வேதனை. அதை பயன்படுத்திக் கொண்டு பெட்ரோலையே ரஜினி பட டிக்கெட் மாதிரி விற்ற நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தில் ஓடுவதால் சப்ளையை மட்டுப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர் முழுவதும் ஸ்தம்பித்திருக்கக் கூடிய நிலைக்கு காரணமான பெட்ரோல் நிறுவனங்கள் மீது அரசின் சட்டம் நீண்டால் மட்டுமே அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம் கிடைக்கும்.

நேற்று நள்ளிரவு தாண்டியும், இன்று அதிகாலை 6 மணிக்கும் பங்க்களில் பெரிய வரிசையைப் பார்க்க நேரிட்டது. நீண்ட வரிசையில் காத்திருப்பதன் அவஸ்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த தட்டுப்பாட்டின் வீரியம் உறைக்கும்.

பாதி பங்க் களை மூடியும், மீதி பங்க் களை போலீசாரின் கண்காணிப்போடும் நிறுவனங்கள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. பெட்ரோல் வாங்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏதோ தியேட்டரில் டிக்கெட் வாங்க வருபவர்கள் போல அடி, ஏச்சு, முறைத்தலுக்கு ஆளாகியிருப்பது இன்னும் பரிதாபம்.

காஞ்சிபுரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், காஞ்சிபுரம் ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் போட்டார்களாம்.

சில இடங்களில் அம்மன் கோயில் கூழ் போல, 150 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோலாம்.

“கப்பல் வருது” என்று புலி வருது கணக்காக படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

அடிக்கிற இடத்தில அடிச்சா வலிக்கிற மாதிரி வலிக்கும் என்பதையே இந்த சுயநலம் பிடித்த எண்ணை நிறுவனங்கள் கையாள்கின்றன. எண்ணை விலையை இன்னும் ஒரு இருபது ரூபாய் ஏற்றினால் அவர்களுடைய வருவாயில் பல ஆயிரம் கோடிகள் அதிகமாகும். அப்போது இந்த அவஸ்தைகள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படும்.

அரசு ஒன்றும் தெரியாத பாப்பா போல பெருவிரலை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கிறது. தனியார் மயம், தனியார் மயம் என்றால் என்ன என்பதை கடை கோடி மனிதனுக்கு இதைவிட தெளிவாகப் புரிய வைக்க முடியாது.

இன்னும் இந்த தட்டுப்பாடு சில நாட்கள் நீடிக்கும் என்கிறார்கள். அலுவலகங்கள் இனிமேல் ஆளுக்கொரு பெட்ரோல் பங்க் அலுவலக வளாகத்திலேயே வைத்து ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கினால் தான் அலுவலகம் இயங்கும் போல.

எதிர்கட்சிகளுக்கு இது ஒரு அவல் கூடை. ஆளாளுக்கு மெல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் இதே நிலமை நீடிக்கட்டும் கொஞ்சம் அதிகமாய் மெல்லலாம் என்பது அவர்கள் கணிப்பு.

நம்ம சீட் பத்திரமா இருக்கணும், அதுக்கு பங்கம் விளைவிக்காம பங்க் மேட்டரை முடிங்க என்பது ஆளுங்கட்சியினரின் கோட்பாடு.

இடையே நசுங்கி பிழிபடும் நம்மைப்பற்றி…. ??

அடப்போப்பா…. எலக்ஷனுக்கு இன்னும் நாள் இருக்கு

 

16 comments on “பெட்ரோல் தட்டுப்பாடு + அரசின் நிலைப்பாடு = மக்கள் படும்பாடு

 1. வருத்தப்பட்டு பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.உணவுப்பொருட்களை பதுக்குவதுதான் பழக்கம்.இப்ப எரிபொருளையுமா பதுக்குகிறார்கள்?பாத்து பாதிக்கு பாதி காத்துல காணாமப் போயிடப் போகுது?

  Like

 2. Vanakam Xevier

  “அடப்போப்பா…. எலக்ஷனுக்கு இன்னும் நாள் இருக்கு”

  :-)))))))

  puduvai siva

  Like

 3. //பெட்ரோல் என்ன தோசை மாதிரியா இருக்கிறது சாதாவா, ஸ்பெஷலா என பார்த்தா கண்டு பிடிக்க முடியும் ? அல்லது காபி டீ மாதிரி குடித்தா பார்க்க முடியும்.
  //

  உண்மைதான்.. பதிவின் தலைப்பும் சூப்பர்..

  // நீண்ட வரிசையில் காத்திருப்பதன் அவஸ்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த தட்டுப்பாட்டின் வீரியம் உறைக்கும்.
  //

  உறைத்தது.. நன்றாகவே.. வரும் காலங்களை நினைத்து பயமா இருக்கு..

  Like

 4. //பெட்ரோல் என்ன தோசை மாதிரியா இருக்கிறது சாதாவா, ஸ்பெஷலா என பார்த்தா கண்டு பிடிக்க முடியும் ? அல்லது காபி டீ மாதிரி குடித்தா பார்க்க முடியும்.

  🙂

  //காஞ்சிபுரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், காஞ்சிபுரம் ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் போட்டார்களாம்.

  அடப்பாவிகளா…

  Like

 5. //உணவுப்பொருட்களை பதுக்குவதுதான் பழக்கம்.இப்ப எரிபொருளையுமா பதுக்குகிறார்கள்??//

  பதுக்கணும்ன்னு முடிவு பண்ணியாச்சு கிடைக்கிறதை எல்லாம் பதுக்க வேண்டியது தான்னு நினைக்கிறாங்க போல 😦

  Like

 6. //உறைத்தது.. நன்றாகவே.. வரும் காலங்களை நினைத்து பயமா இருக்கு..

  //

  எனக்கும்…

  Like

 7. இங்கே இந்த நிலை இல்லை… இருந்தாலும் எண்ணெய் விலையும் இந்த நாட்டிலும் விலை அதிகரிப்பு மக்களை கடுப்பேத்தி இருக்கிறது. காருக்கு எண்ணெய் ஊற்றும் போது என் வயிறு பற்றிக் கொள்கிறது.. 😦

  Like

 8. //தனியார் மயம் என்றால் என்ன என்பதை கடை கோடி மனிதனுக்கு இதைவிட தெளிவாகப் புரிய வைக்க முடியாது.////
  தனியார் மயமாக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் இப்படி பொறுப்பற்ற நிலை உள்ளதா???
  தனியாராக இருந்தாலும் lack of professionalism and professional ethics னாலே தான் இது போன்ற நிலை ஏற்படுமோ என்று தோன்றுகிறது! 😉

  Like

 9. //காருக்கு எண்ணெய் ஊற்றும் போது என் வயிறு பற்றிக் கொள்கிறது//

  வயிறு எரியும்போ எண்ணை ஊத்தாதீங்க 😉

  Like

 10. //தனியாராக இருந்தாலும் lack of professionalism and professional ethics னாலே தான் இது போன்ற நிலை ஏற்படுமோ//

  இருக்கலாம். எனது பார்வையில் காதுக்குள் புகுந்து கொண்ட எறும்பு தான் தனியார் மயம் என்பது. குடைச்சல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s