வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

இன்று வரும் வழியில் சுவாரஸ்யமான ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது.

ஒபாமா சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் அது. இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை ? ஒபாமா தன்னுடைய கட்சி அலுவலகத்தை சென்னையில் துவங்கியிருக்கிறாரா ? இல்லை ஓட்டு கேட்க (கவனிக்க, ஒட்டுக் கேட்க அல்ல ) சென்னை வந்திருக்கிறாரா ? என்று குழம்பியபடியே உற்றுப் பார்த்தால் இன்னொரு ஆச்சரியம்.

அருகிலேயே கோட் சூட்டுடன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். கூர்மையாய் பார்த்தேன் அட !!! நம்ம வை.கோ ? கையில் ஒரு புக், பேனா வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதற்கு நிற்பவரைப் போல நிற்கிறாரே !

என்ன நடக்குது ? ஒருவேளை ம.தி.மு.க வுடன் ஒபாமா கூட்டு சேர்ந்துவிட்டாரா ? இல்லை
அவருக்கு இவர் தமிழ் கத்துக் கொடுக்கிறாரா ? இது உண்மையா இல்லை குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ?  என்று யோசித்துக் கொண்டே காரோட்டினேன்.

அடுத்த போஸ்டரில் தான் என்ன எழுதியிருந்தது என்பதை வாசிக்க முடிந்தது.
“ஒபாமாவைச் சந்தித்து வந்த மக்கள் தலைவன் வைகோவை வரவேற்கிறோம்”  !!
ஆஹா… ஆஹா… சுவாரஸ்யமாய் இருக்கிறதே என நினைத்துக் கொண்டே பார்த்தால்,

காஞ்சி புர மதிமுக இன்னும் ஒரு படி மேலே போய்
“அமெரிக்காவின் அதிசயம் ஒபாமாவைச் சந்தித்து வந்த
முதல் இந்தியன் வை.கோ
இந்தியாவின் அதிசயம் “ என்று ஒரு அட்டகாச போஸ்டர்.

மதிமுகவின் போஸ்டர்கள்… மன்னிக்கவும், வை.கோ ரசிகர் மன்றத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களின் குருவி போஸ்டரை விட விர்ரென்று பறக்கிறது. சென்னை முழுவதும்.

அதிலும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா எனும் வாசகங்கள் வேறு :!!! ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது.

உங்களால புஷ்ஷை தான் பார்க்க முடியும், எங்கள் தலைவர் ஒபாமாவையே சந்திப்பார் என நாளை மதிமுக தெருமுனை கூட்டங்கள் புகழ் பாக்கள் பாடலாம்.

ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின்  ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.

எப்படியோ, காடுவெட்டி குருவை விடுவித்தால் மத்திய அரசுக்கு ஆதரவு என பா.ம.க பரபரப்பைக் கிளப்புகிறது. அரசு கவிழும் என பா.ஜ.க பட்டையைக் கிளப்புகிறது, பா.ஜ.கவின் எம்.பிக்களே எங்கள் பக்கம் என காங்கிரஸ் கலக்குகிறது. இந்தப் பரபரப்பில் காணாமல் போன வர்கள் இரண்டு பேர் ஒன்று அம்மா.. இன்னொன்று வை.கோ..

வை.கோ முந்திக் கொண்டு ஒபாமாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டார்.

மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.

29 comments on “வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

 1. Good moring Xevier Sri
  How are you?

  “குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ? ”

  :-)))

  Puduvai siva

  Like

 2. //ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின் ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.//

  //மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.//

  வைகோ வேண்டுமானால் ஒபாமாவை சந்திக்கலாம் ,
  ஆனால் ஒபாமா தான் தன்னை சந்திக்க வேண்டும்
  என்று தானே இன்னொருவர் நினைப்பார் 🙂

  குறிப்பு : நான் எதிர்கட்சிக்காரன் இல்லை . எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது.

  Like

 3. //ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின் ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

  கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.
  //

  ஏதோ உங்களால முடிந்ததை எடுத்துகொடுத்திட்டீங்க.

  Like

 4. \\ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. //

  அதை கடற்கரைல விழா எடுத்துக் கொண்டாடினாக் கூட ஆச்சரியமில்லை. 25 வருஷத்துக்கு முன்னாடி கிரிக்கெட்ல உலக கோப்பைய கெலிச்சதைக் கூட 25 ஆம் ஆண்டு நினைவு விழா கொண்டாடுறாங்களே...... உருப்படுமா தேசம்.

  ஒபாமா பத்தி அடிக்கடி எழுதுங்க..... உங்களுக்கு ஏதாவது விருது கிடைச்சாலும் கிடைக்கும்

  Like

 5. //ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது

  🙂

  Like

 6. எல்லாம் சரி. அப்படி என்னதான் ஒபாமாவிடம் பேசினாராம்…தெரிந்துகொள்ள மிக ஆவலாக உள்ளது.

  நித்தில்

  Like

 7. //எல்லாம் சரி. அப்படி என்னதான் ஒபாமாவிடம் பேசினாராம்…தெரிந்துகொள்ள மிக ஆவலாக உள்ளது. //
  இது தானே வேண்டாம்ன்றது. போஸ்ட்டர் ஒட்டினால் பாத்துட்டுபோவிங்களா. ஏற்கெனவே கட்சி தேறுமான்னு கவலையா இருக்கு…

  Like

 8. அப்பாடா, மசாலா கலக்காம ரொம்ப நாளைக்கப்புறம் கொழந்தைங்க சிரிச்சி சந்தோஷப்படுற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.

  Like

 9. //Good moring Xevier Sri
  How are you?

  “குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ? ”

  :-)))

  Puduvai siva
  //

  நல்லா இருக்கேன் சிவா. நீங்க எப்படி இருக்கீங்க ?

  Like

 10. //வைகோ வேண்டுமானால் ஒபாமாவை சந்திக்கலாம் ,
  ஆனால் ஒபாமா தான் தன்னை சந்திக்க வேண்டும்
  என்று தானே இன்னொருவர் நினைப்பார் //

  அட ஆமா ! முகுந்தன் நீங்க சொல்றது செம மேட்டராச்சே 😀

  Like

 11. ////ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின் ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

  கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.
  //

  ஏதோ உங்களால முடிந்ததை எடுத்துகொடுத்திட்டீங்க.
  //

  ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சமூக சேவை 😀

  Like

 12. ////ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது//

  வருகைக்கு நன்றி சரவணகுமார்.

  Like

 13. //எல்லாம் சரி. அப்படி என்னதான் ஒபாமாவிடம் பேசினாராம்…தெரிந்துகொள்ள மிக ஆவலாக உள்ளது.

  //

  அமெரிக்காவில் நீங்க ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியாவில் நடந்தது போல ஒரு “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடத்தலாமா – என்று கேட்டதாக குருவியார் கிசுகிசுத்தார் 😉

  Like

 14. ////எல்லாம் சரி. அப்படி என்னதான் ஒபாமாவிடம் பேசினாராம்…தெரிந்துகொள்ள மிக ஆவலாக உள்ளது. //
  இது தானே வேண்டாம்ன்றது. போஸ்ட்டர் ஒட்டினால் பாத்துட்டுபோவிங்களா. ஏற்கெனவே கட்சி தேறுமான்னு கவலையா இருக்கு//

  போஸ்டர் ஒட்டற அளவுக்கு கட்சியில ஆள் இருக்கேன்னு சந்தோசப்பட வேண்டியது தான் 🙂

  Like

 15. //அப்பாடா, மசாலா கலக்காம ரொம்ப நாளைக்கப்புறம் கொழந்தைங்க சிரிச்சி சந்தோஷப்படுற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்//

  வா… குழந்தை. எப்படி இருக்கே.. என்ன ஆளையே காணோம்.. ஆபீஸ்ல வேலை இல்லையா 😉

  Like

 16. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்…. வைகே யாரு… காடுவெட்டி குரு யாரு…. அவர் சந்தன மரம் வெட்டி மாட்டிக்கிட்டாரா?

  Like

 17. குழந்தை கொஞ்சம் பிசி. இந்தக் குழந்தைய இல்லத்தரசராக்கப் போறாங்க. அதனால சமையல், துணி துவைக்கிறது, வீடு கூட்றது இதுக்கெல்லாம் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டிருக்கேன். வேலைய விட்டுட சொல்லிட்டாங்க. அவங்க வேலை முடிஞ்சு வரும்போது சிரிச்ச முகமா காஃபி கொண்டு வந்து குடுத்தா போதுமாம். நான் வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாமாம்.

  ஒரு முக்கியமான விஷயம், உங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி செய்யத் தெரியுமா? தெரிஞ்சா மெயில்ல ரெசிபி அனுப்புங்களேன்.

  Like

 18. ஒ..ஓ…. நல்லது நல்லது 🙂 என்ன தான் மாஞ்சு மாஞ்சு டெவலப்பர்ஸ் கோட் எழுதினாலும் டெஸ்டர் கண்ணுக்கு ஒரு பத்தாவது சிக்கும். … இங்கே ஏன் சொல்றேன்னு புரிஞ்சிருக்கும் 😀

  Like

 19. Xavier nalla oru padhivu ungalin naiyandi super, obama patri ezhudhiyae ezthulahaa maamedhai Xavi vaazgae (eppadi)

  Like

 20. ஒரு கருப்பினத்தைச்சார்ந்த ஒருவன் அமெரிக்க அதிபராக வேண்டும் என விரும்புவதும் அதற்கு வாழ்த்து தெரிவிப்பதும் எப்படி தவறாகும், மேற்படி செய்தியை வேடிக்கையாக பார்ப்பதுதான் நமது பின்னைடைவுக்கு காரணம், எனறு நான் கருதுகிறேன். உலகத்தமிழருக்காக குரல் கொடுக்கும் ஒருவர் அமெரிக்க அதிபராகப்போகும் வாய்ப்புள்ளவரை சந்தித்து நமக்கான பெருமை. பார்வை வேண்டும். உங்கள் கருத்தில் மாற்றம் வேண்டும்.

  – சென்னைத்தமிழன்

  Like

 21. //ஒரு கருப்பினத்தைச்சார்ந்த ஒருவன் அமெரிக்க அதிபராக வேண்டும் என விரும்புவதும் அதற்கு வாழ்த்து தெரிவிப்பதும் எப்படி தவறாகும், மேற்படி செய்தியை வேடிக்கையாக பார்ப்பதுதான் நமது பின்னைடைவுக்கு காரணம், …
  //
  வேடிக்கை போஸ்டர் தான் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s