வரும் வழியில் : தசாவதாரம் படும் பாடு !


போஸ்டர்

தசாவதாரத்தின் அலை சற்று ஓய்ந்தது போலிருக்கிறது. உபயம் குசேலன். மாயாஜாலிலும் தினசரி நாற்பத்தைந்து காட்சிகள் என கலக்கிக் கொண்டிருந்த தசாவதாரம் நான்கைந்து காட்சிகள் என இறங்கிவிட்டது. படம் வந்து ஏறக் குறைய ஐம்பது நாளாகிவிட்டது எனவே அலை ஓய்வது ஆச்சரியமில்லை, ஆனால் நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல.

இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு வித்தியாசமான போஸ்டரைப் பார்த்தேன். “தசாவதாரம் திரைப்படத்தில் நாடார் சமூகத்தை இழிவு படுத்துவது போல வசனம் பேசி நடித்த கமலஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்பது தான் அந்த போஸ்டர். ஏதோ நாடார் சமூக தலை, உப தலை, உப உப உப தலை என்றெல்லாம் சில பெயர்கள் அதில் தெரிந்தன. சில பெண்களின் பெயர்கள் கூட !! அடடா !!!!

ஆஹா.. இதென்ன புதுக் கரடி ? முதலில் சைவம், வைணவம் என்றார்கள். வழக்கு, இழுக்கு என இழுத்து பரபரப்பைக் கூட்டி விட்டு அப்புறம் நைசாப் பேசி அப்படியெல்லாம் இல்லீங்கன்னா.. நீங்க பேசாம படத்தைப் பாருங்க என வழக்குப் போட்டவர்களை வழிக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

அதுக்கு அப்புறம், கமல் ஆத்திகராகியிருக்கிறார், மறைமுகமாக விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் தனது கதாபாத்திரமாக்கி, கடலில் கிடந்த கடவுள் சிலையை  கரைக்கு இழுத்து வந்து ஆத்திகர் பக்கம் அடிபணிந்திருக்கிறார் என ஸ்லோகங்கள் சொன்னார்கள். விட்டால் கமலையே கமல சுவாமிகள் ஆக்கியிருப்பார்கள். கமலும் நான் சுவாமிஜிகள் இல்லேன்னா சொன்னேன், சுவாமிஜிகளா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான் சொன்னேன் என வசனம் பேசியிருப்பார்.

இப்போது நாடார் சமூகத்தினரை கமல் இழிவு படுத்தியிருப்பதாக குட்டையைக் குழப்புகிறார்கள். அதென்ன இழிவோ எழவோ எனக்குப் புரியல. யாராவது புரிந்தால் சொல்லுங்கள் புண்ணியமாப் போவும்.

படம் வெளியாகி ஐம்பது நாளுக்கு அப்புறம் தான் இப்படி ஒரு போஸ்டர் வந்திருக்கிறது. அப்படின்னா நாடார் சமூகம் இதுக்கு முன் படத்தைப் பாக்கலையா ? அல்லது ஒருவேளை
தசாவதாரத்தின் அலை சற்று ஓய்கிறதே என கமல் ரசிகர்களோ, தயாரிப்பாளரோ நாடார் சமூகம் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்களா என்பதும் புரியவில்லை.

எப்படியோ என்னதான் அப்படி சொல்லியிருக்கான்னு போய் பாக்கணும் மக்களே – ன்னு நாடார் சமூகம் தியேட்டர்களை முற்றுகையிடும் ஒரு சிறு வாய்ப்பு இதனால் உருவாகியிருக்கிறது.

அடுத்தது எந்தப் பேரவைப்பா ?

சிக்னல் சந்திப்பு

மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் புதிதாக ஒரு டிஜிடல் போர்ட் வைத்திருக்கிறார்கள். நிறுத்தத்தில் நிற்பவர்களை சற்று யோசிக்கச் செய்கின்றன அந்த போட்டில் ஓடிக் கொண்டிருக்கும் வாசகங்கள்.

உதாரணமாக : எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால் முப்பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் தேவைப்படும். உங்கள் வண்டியின் சக்கரங்களில் காற்று சரியான அளவில் இல்லையெனில் பத்து விழுக்காடு எரிபொருள் அதிகம் செலவாகும்… என வாசகங்கள் வலமிருந்து இடமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

எப்படா சிகப்பு போயி பச்சை வரும் பாஞ்சுடலாம் என காத்திருந்த சில இருசக்கர வாகனவாசிகள் இரண்டொரு வினாடிகள் வாசகங்களைப் பார்த்து விட்டு, தங்கள் சக்கரங்களில் காற்று இருக்கிறதா என பார்த்ததையும் கவனிக்க முடிந்தது.

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ.. நல்லது நடந்தா சரி..

ஏதோ நல்லது நடந்தா சரி என சொல்லும்போ தான் ஞாபகத்துக்கு வருகிறது. வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் கால்வாய் குப்பைகளால் நிரம்பியிருக்கிறது, ஒரு கொசு கடலே அங்கே குடி இருக்கிறது என கடந்த வாரம் தினகரன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. கூடவே அந்த அசிங்கத்தின் அரைப் பக்க கலர் படமும்.

அந்தப் பக்கம் வழியாகத் தான் நான் தினமும் அலுவலகம் வரவேண்டிய சூழல். அன்றைக்கு காலை ஒன்பது மணிக்கு நான் அந்தப் பக்கம் வழியாக வந்த போது சில வாகனங்களும், பல அரசு அதிகாரிகளும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஆஹா.. இவ்ளோ ஸ்பீடா இருக்காங்களே என்று ஒரு நிமிடம் அசந்து தான் போயிட்டேன்.

இன்னிக்கு செய்தித் தாளில் இன்னொரு செய்தி படித்தேன் “தினகரன் செய்தியைப் பார்த்து விட்டு காமராஜரின் பேத்தியின் குறைகளை அரசு நிவர்த்தி செய்தது”.

அரசு அதிகாரிகள் பேப்பர் எல்லாம் படிக்கிறாங்களே !!! இது நல்ல விஷயமாச்சே !!! அதனால இன்னொரு வாட்டி அதையே சொல்லிக்கறேன். ஏதோ நல்லது நடந்தா சரி.

19 comments on “வரும் வழியில் : தசாவதாரம் படும் பாடு !

 1. //வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் கால்வாய் குப்பைகளால் நிரம்பியிருக்கிறது, ஒரு கொசு கடலே அங்கே குடி இருக்கிறது என கடந்த வாரம் தினகரன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. கூடவே அந்த அசிங்கத்தின் அரைப் பக்க கலர் படமும்.//

  B’coz the news appeared in Dinakaran?

  Like

 2. //இப்போது நாடார் சமூகத்தினரை கமல் இழிவு படுத்தியிருப்பதாக குட்டையைக் குழப்புகிறார்கள். அதென்ன இழிவோ எழவோ எனக்குப் புரியல. யாராவது புரிந்தால் சொல்லுங்கள் புண்ணியமாப் போவும்.//

  எனது பதிவில் நான் எழுதிய விமர்சணத்தை ( http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html ) படியுங்கள். முக்கியமாக பூவராகன் பற்றிய விமர்சணம். உங்களுக்கு புரியும் 🙂 🙂

  ஆனால் இழிவு படுத்துவதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை

  Like

 3. ///வேளச்சேரி ஏரியை ஒட்டியிருக்கும் கால்வாய் குப்பைகளால் நிரம்பியிருக்கிறது, ஒரு கொசு கடலே அங்கே குடி இருக்கிறது என கடந்த வாரம் தினகரன் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது.

  அன்றைக்கு காலை ஒன்பது மணிக்கு நான் அந்தப் பக்கம் வழியாக வந்த போது சில வாகனங்களும், பல அரசு அதிகாரிகளும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
  “தினகரன் செய்தியைப் பார்த்து விட்டு காமராஜரின் பேத்தியின் குறைகளை அரசு நிவர்த்தி செய்தது”.////

  ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன பிறகு தான் அதிகம் படிக்கிறாங்களோ……..

  ஏதோ நல்லது நடந்தா சரி.

  Like

 4. //படியுங்கள். முக்கியமாக பூவராகன் பற்றிய விமர்சணம். உங்களுக்கு புரியும் //

  புரியவில்லை புரூனோ.. படித்துப் பார்த்தேன். யாரேனும் என்னதான் அந்த இழிவு என சொன்னால் பதில் சொல்ல முடியுமா என்ன பார்க்கிறேன் 🙂

  Like

 5. //I guess, the RAW officer’s character has been made as some Nadar in telugu version. This could be the reason for those posters//

  இருக்கட்டுமே.. பல்ராம் நாயுடு ன்னா சிரிப்பாங்களாம், நாடார் னா போஸ்டர் ஒட்டுவாங்களாமா ? நல்ல காமெடி

  Like

 6. /ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன பிறகு தான் அதிகம் படிக்கிறாங்களோ……..

  ஏதோ நல்லது நடந்தா சரி.

  //

  அப்படி போடுங்க 🙂

  Like

 7. //B’coz the news appeared in Dinakaran?//

  எதுக்கு வம்பு.. முடிஞ்சா சரிபண்ணிடுவோமே என்று கூட இருக்கலாம் !

  Like

 8. //புரியவில்லை புரூனோ.. படித்துப் பார்த்தேன். யாரேனும் என்னதான் அந்த இழிவு என சொன்னால் பதில் சொல்ல முடியுமா என்ன பார்க்கிறேன்//

  படத்தில் பூவராகன் பேசுவது நெல்லை / குமரி மாவட்ட தமிழ். ஆனால் கதை நடப்பதோ சிதம்பரம் முதல் சென்னை வரை உள்ள இடங்களில் தான். ஏன் இதை கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை குமரி மாவட்ட போராளி செங்கல்பட்டில் மண் அள்ளுவதை தடுக்க போராடியிருக்கலாமோ ?? அதை போல் அந்த உச்சரிப்பு வேறொரு சமுகத்தின் உச்சரிப்பு (சாமி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா)

  இப்ப புரியுதா ?? 🙂 🙂 🙂

  Like

 9. தெலுங்கு தசாவதாரத்தில் சி.பி.ஐ. ஆபிசர் பெயர் பலராம் நாடார் கிடையாது, பலராம் நாயக்கர். பரங்கிமலை ஜோதி போன்ற ஒரு பாடாவதி தியேட்டரில் படத்தைப் பார்க்க நேர்ந்தது. (உடனே பரங்கிமலை ஜோதிக்கு போயிருக்கியான்னு கேக்கப்படாது, நண்பர்கள் சொல்லக் கேள்வி)

  Like

 10. /இப்ப புரியுதா //

  புரூனோ… எனக்குத் தோன்றுவது அதல்ல…

  தசாவதாரத்தில் மணல் அள்ளும் கும்பல் ஜா.ரா என்பவனுடைய கைக்கூலிகள். அதில் ஜாராப் பயலுவ தானே நீங்க என்னும் வாசகம் வரும். அதை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள் என்று நாடார் சமூகம் கருதியிருக்கலாம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் சமூகத்தினரை சாணாப் பயலுவ என்று அவமானப்படுத்தும் விதமாக மலையாள மேல்ஜாதி என கருதிக் கொள்பவர்கள் அழைத்துக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த ஜாரா அந்த சாணா போல ஒலிப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். உண்மை தெரியல !

  Like

 11. /தெலுங்கு தசாவதாரத்தில் சி.பி.ஐ. ஆபிசர் பெயர் பலராம் நாடார் கிடையாது, பலராம் நாயக்கர்//

  அட… ராமசாமி நாயக்கர் மகனைப் பிடிக்க பலராம் நாயக்கரா ? நல்லாயிருக்கே 😉

  //பரங்கிமலை ஜோதி போன்ற ஒரு பாடாவதி தியேட்டரில் படத்தைப் பார்க்க நேர்ந்தது. (உடனே பரங்கிமலை ஜோதிக்கு போயிருக்கியான்னு கேக்கப்படாது
  //

  சூரியன் சூடா இருக்குமான்னு ஏன் கேக்கணும் 😉

  Like

 12. தலைப்புல கடைசி வார்த்தை கெட்ட வார்த்தை ஆச்சே, தமிழ்மணத்துல மட்டுருத்தலியா? 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s