சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.
தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.
ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.
உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?
சேவியர்,
//இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.//
உற்சாகம் மட்டுமில்லை, எச்சரிக்கை மணி அடிக்கறது என்றும் சொல்லுங்கள்.
முகுந்தன்
LikeLike
அதுவும் சரி தான் 🙂
LikeLike
தண்ணியடித்தால் வரும் மயக்கம்
LikeLike
//உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் //
அந்த இயக்கத்தை ஏற்கும் உடலுக்கு சிறு மயக்கத்தை தறுவதிலும் இல்லை எனக்கு தயக்கம்……
LikeLike
//உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் – அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் //
அந்த இயக்கத்தை ஏற்கும் உடலுக்கு சிறு மயக்கத்தை தறுவதிலும் இல்லை எனக்கு தயக்கம்……
LikeLike
nengal sonnathu utchakamai iruntha ennai meendum utchakapaduthi ullathu
LikeLike
//அந்த இயக்கத்தை ஏற்கும் உடலுக்கு சிறு மயக்கத்தை தறுவதிலும் இல்லை எனக்கு தயக்கம்……//
🙂 ம்ம்ம்… நடக்கட்டும்
LikeLike
//nengal sonnathu utchakamai iruntha ennai meendum utchakapaduthi ullathu//
அப்படி சொல்லுங்க !
LikeLike
//தண்ணியடித்தால் வரும் மயக்கம்//
தண்ணியடித்தால் மட்டுமல்ல… யாராவது ஓங்கி அடித்தாலும் வரும் மயக்கம் 🙂
LikeLike