உலகின் மிகச் சிறிய பாம்பு !

யூ.எஸ் குவார்டர் நாணயத்தின் மேல் ஒய்யாரமாகப் போஸ்கொடுத்துக் கொண்டிருப்பது உலகின் மிகச் சிறிய பாம்பு. பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இதனிடம் பலிக்காது போல.

கரீபியன் தீவு பார்படாசில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு மண் புழுவைப் போல கிடந்த இந்த உயிரினம் பாம்பு என கண்டறியப்பட்டதே ஒரு வியப்புக்குரிய செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மொத்த நீளமே 10 செண்டீ மீட்டர்கள் தானாம். இது வளர்ந்த ஒரு பாம்பின் நீளம். சின்ன குட்டிப் பாம்புகள் இதில் பாதியளவு தானாம்

லெப்டோடைப்ளோஸ் கார்லே என பெயரிடப்பட்டுள்ள இந்த பாம்பைப் பார்ப்பதற்கு ஒரு நூடுல்ஸ் இழை போலிருக்கிறது என்கிறார் இதைக் கண்டு பிடித்த பிளேர் ஹெட்ஜஸ். இவர் அமெரிக்க உயிரியல் நிபுணர் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தனை சின்னதா இருக்கே ! விஷம் இல்லாம இருந்தா சரி, அப்படித் தானே நினைக்கிறீங்க ?

19 comments on “உலகின் மிகச் சிறிய பாம்பு !

 1. கடுகு சிருசா இருந்தாலும் காட்டம் பெருசா இருக்கும்னு விஜயபோபால்சாமி சித்தர் சொல்லி இருக்காரு…

  Like

 2. ஐயோ….சீசீசீ….சின்னதோ பெரிசோ… பாம்பு என்றாலே ஒரு அருவருப்பும் பயமும்.

  Like

 3. ///
  கடுகு சிருசா இருந்தாலும் காட்டம் பெருசா இருக்கும்னு விஜயபோபால்சாமி சித்தர் சொல்லி இருக்காரு…
  ///

  ஏண்டா மகனே, இதை எப்படா சொன்னேன்? என்னைக்காவது பொங்கலும் சாம்பாரும் ஒரு கட்டு கட்டிட்டு பரவச நிலைல இருந்தப்போ சொல்லிருப்பேனா இருக்கும். நோட் பண்ணாதிங்கப்பா…. ஏய்… நோட் பண்ணாதிங்கப்பா…

  Like

 4. //ஐயோ….சீசீசீ….சின்னதோ பெரிசோ… பாம்பு என்றாலே ஒரு அருவருப்பும் பயமும்//

  இது பயப்படற பாம்பு இல்லையாம். சும்மா புழு பூச்சிகளைச் சாப்பிட்டு வாழற பாம்பு (அதுவே ஒரு புழு மாதிரி.. அதுக்கு ஒரு புழு கேக்குதாம் )

  Like

 5. //பாம்பு சிருசா இருந்தாலும் விசம் பெருசா இருக்கும்னு நான் சொல்றேன்.//

  ஏதோ ஒரு பெரிய விஷ-ய-ம் சொல்ல வரே ன்னு நினைக்கிறேன் 😉

  Like

 6. //ஏண்டா மகனே, இதை எப்படா சொன்னேன்? என்னைக்காவது பொங்கலும் சாம்பாரும் ஒரு கட்டு கட்டிட்டு பரவச நிலைல இருந்தப்போ சொல்லிருப்பேனா இருக்கும். நோட் பண்ணாதிங்கப்பா…. ஏய்… நோட் பண்ணாதிங்கப்பா…//

  பொங்கல் சாம்பாருக்கே பரவச நிலையா ? அப்போ சித்தர் இல்லேன்னே… பித்தர் 🙂

  Like

 7. ‘மண்னுண்ணிப் பாம்பு’ கேள்விப்பட்டதில்லையா?
  சிறிய புழு போன்றதாக இருக்கும்.
  அதுவா தான் இருக்க வேண்டும்!.சிறிலங்காவிலே, நிறைய பார்த்தாச்சு.
  இந்தியாவில் இல்லையா?
  என்னங்கய்யா,இந்தியாவில் இல்லாததா…இலங்கையில் இருக்கப் போகிறது. சிலவேளை அது,வேற சாதியாய்யும் இருக்கலாம்.

  Like

 8. idhi soizhanpambu endru soluvanga idhu enga ooru la nariya iruku idhu irukura idem nama kadhu nu enga vetu periyanga soluvanga

  Like

 9. How to control this??
  I’m facing a big prob.. With this.. Even today v found two snakes in my house..
  Plz help me guys

  Like

 10. I am also facing this problem, From the past 2 months, we found around 7 or 8 in our home, Please help me, how to prevent ?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s