வரும் வழியில் : குசேலன் vs குஜாலன்

குசேலன்

வரும் வழியில் குசேலன் பத்தாவது நாள் எனும் போஸ்டர்கள் பல்வேறு வடிவங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டபோது வியப்பாய் இருந்தது.

ரஜினி படத்துக்குக் கூட “பத்தாவது நாள்” போஸ்டர் ஒட்டவேண்டிய நிலமை வந்து விட்டது என்பதே குசேலனின் படு தோல்வியை ஒத்துக் கொள்வது போல் இருக்கிறது.

அடுத்த வாரம் பதினைந்தாவது நாள் போஸ்டர் ஒட்டப்படலாம். அதில் நயன் தாராவின் படம் முன்னிலைப்படுத்தப் படலாம். ரஜினிக்காக யாரும் வரலேன்னாலும் நயந்தாராவுக்காகவாவது சிலர் வரட்டுமே எனும் நல்ல நோக்கில்….

குசேலன் நவீன யுகத்திலும் பரம ஏழையாய் தான் இருக்கிறான் போல !
தரத்திலும், வசூலிலும்.

குஜாலன்

தாம்பரம் வரை வரும் வழியில் தினமும் பல்வேறு வயது வந்தோருக்கு மட்டுமான திரைப்பட போஸ்டர்களைக் காண முடிகிறது.

மாலினி – காமினி, படுக்கையறை , விருந்து என்றெல்லாம் பல போஸ்டர்கள். அந்தப் போஸ்டர்களைப் பார்த்தபோது மனதில் இரண்டு கேள்விகள் தோன்றின.

முதல் கேள்வி

தெருமுனை இண்டர்நெட் செண்டரில் பத்து ரூபாய்க்கு அரை மணி நேரம் இணைய பலான படம் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கும் சூழல் இது. சென்னையில் பலான சிடிக்கள் கடல் போல எங்கும் பிடிபடுவதாக பத்திரிகைகள் பறைசாற்றும் காலம் இது. இந்தக் காலகட்டத்தில், இன்னும் மக்கள் பாலியல் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களா ? அரையிருட்டில் இடைவேளையில் இரண்டு நிமிடம் ஓடும் மஞ்சள் துண்டுக்காக முகத்தில் துண்டு போட்டு திரையரங்கிற்குள் மக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்களா ?

இரண்டாவது கேள்வி.

தூயதமிழில் படுக்கையறை பத்மா என்றோ, காமம் கையளவு என்றோ தலைப்பு வைக்கும் இந்தப் படங்களுக்கு அரசின் வரிவிலக்கு உண்டா ?

Advertisements

22 comments on “வரும் வழியில் : குசேலன் vs குஜாலன்

 1. Pingback: ஒரு அருமையான க …

 2. இணையம் என்பது நமது மக்கள் தொகையில் 20 சதம் மக்களுக்கு கூட பரிச்சயமான விஷயம் அல்ல ஆகியவை

  அதிலும் ஒரு உலாவகத்திற்கு செல்வது 20 சதம் என்றால், யாரிடமும் உதவி கேட்காமல் விரும்பும் தளத்தை பார்க்க தெரிந்தவரின் எண்ணிக்கை எவ்வளவு

  குறுந்தகடு,

  தமிழகத்தில் எத்தனை நபர்களிடம் குறுந்தகடு கருவி உள்ளது

  அவர்களில் எத்தனை பேருக்கு வீட்டிற்கு தெரியாமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பார்க்கும் வசதி உள்ளது

  என்று சிந்தித்தால் ”இந்தக் காலகட்டத்தில், இன்னும் மக்கள் பாலியல் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களா ?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்

  Like

 3. //அரையிருட்டில் இடைவேளையில் இரண்டு நிமிடம் ஓடும் மஞ்சள் துண்டுக்காக முகத்தில் துண்டு போட்டு திரையரங்கிற்குள் மக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்களா ?//

  இந்த வாசகத்தில் பல பொருட் குற்றங்கள் உள்ளன

  இரண்டு நிமிடம் – இல்லை அதை விட அதிகம் என்று நினைக்கிறேன்
  மஞ்சள் துண்டுக்காக – நிறம் தவறு. விபரங்களுக்கு http://www.ularal.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2/

  முகத்தில் துண்டு போட்டு – அப்படியார் போகிறார்கள்

  Like

 4. இணையம் என்பது நமது மக்கள் தொகையில் 20 சதம் மக்களுக்கு கூட பரிச்சயமான விஷயம் அல்ல ஆகியவை

  அதிலும் ஒரு உலாவகத்திற்கு செல்வது 20 சதம் என்றால், யாரிடமும் உதவி கேட்காமல் விரும்பும் தளத்தை பார்க்க தெரிந்தவரின் எண்ணிக்கை எவ்வளவு

  குறுந்தகடு,

  தமிழகத்தில் எத்தனை நபர்களிடம் குறுந்தகடு கருவி உள்ளது

  அவர்களில் எத்தனை பேருக்கு வீட்டிற்கு தெரியாமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பார்க்கும் வசதி உள்ளது

  என்று சிந்தித்தால் ”இந்தக் காலகட்டத்தில், இன்னும் மக்கள் பாலியல் படங்களை விரும்பிப் பார்க்கிறார்களா ?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்

  Like

 5. //அரையிருட்டில் இடைவேளையில் இரண்டு நிமிடம் ஓடும் மஞ்சள் துண்டுக்காக முகத்தில் துண்டு போட்டு திரையரங்கிற்குள் மக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்களா ?//

  இந்த வாசகத்தில் பல பொருட் குற்றங்கள் உள்ளன

  இரண்டு நிமிடம் – இல்லை அதை விட அதிகம் என்று நினைக்கிறேன்
  மஞ்சள் துண்டுக்காக – நிறம் தவறு. விபரங்களுக்கு http://www.ularal.com/color-of-sex/

  முகத்தில் துண்டு போட்டு – அப்படியார் போகிறார்கள்

  Like

 6. வரிவிலக்கு மட்டும் இல்லை… மானியம் கூட கொடுக்கிறார்கள்.. 🙂

  //தமிழகத்தில் எத்தனை நபர்களிடம் குறுந்தகடு கருவி உள்ளது//

  அடுத்த ஆட்சியில் தொலைகாட்சி பெட்டியுடன் இலவச குறுந்தகடு கருவி கொடுத்தால், ஒருவேளை, இப்படங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் மாற்றம் வரலாம்… 🙂

  Like

 7. //அதிலும் ஒரு உலாவகத்திற்கு செல்வது 20 சதம் என்றால், யாரிடமும் உதவி கேட்காமல் விரும்பும் தளத்தை பார்க்க தெரிந்தவரின் எண்ணிக்கை எவ்வளவு

  குறுந்தகடு,

  தமிழகத்தில் எத்தனை நபர்களிடம் குறுந்தகடு கருவி உள்ளது

  அவர்களில் எத்தனை பேருக்கு வீட்டிற்கு தெரியாமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் பார்க்கும் வசதி உள்ளது
  //

  நியாயமான பதில் 🙂 நன்றி !

  Like

 8. //முகத்தில் துண்டு போட்டு – அப்படியார் போகிறார்கள்//

  ஹெல்மெட் மாட்டிக் கொண்டே கூட போவார்களாமே !!

  Like

 9. //வரிவிலக்கு மட்டும் இல்லை… மானியம் கூட கொடுக்கிறார்கள்.. //

  விட்டால் டிக்கெட் கூட வித்துக் கொடுப்பாங்களோ 😉

  //தமிழகத்தில் எத்தனை நபர்களிடம் குறுந்தகடு கருவி உள்ளது//

  அடுத்த ஆட்சியில் தொலைகாட்சி பெட்டியுடன் இலவச குறுந்தகடு கருவி கொடுத்தால், ஒருவேளை, இப்படங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் மாற்றம் வரலாம்
  //

  ஹா..ஹா !!!

  Like

 10. இதற்குக் ”அவர்” பதில் சொல்லியிருந்தால்:

  காமத்துப் பால் வரைந்தா காவியக் கண்டமடா கண்மணி நம் குமரிக்கண்டம். சாமத்தில் சிலர் உரக்கம் வாராமல் தவித்தல் கண்டே அரங்குகளில் அணங்குகள், குறையாடையில் வரும் துண்டுகளை இணைத்துப் படம் காட்டுகிறார், பிலிம் ஓட்டுகிறார். இதைக் குற்றமென்று சொல்வீரோ, மறக்குலத்து மாணிக்கங்காள்?

  கண்டுகொள்ளாதேயடா கண்மணி, நீ கண்டுகொள்ளாமல் இருந்தால் கழகத்தின் சிறுபாண்மைப் பிரிவுத் தலைவர் பதவி உனக்கே வந்து சேருமடா. பொறுத்திரு… காலம் கணியும்… இத்தகு பதிவுகள் வேண்டாம் இனியும்…

  Like

 11. //

  உடன் பிறப்பே… எனக்கினி கிடைக்கும் நிம்மதியான இறப்பே….

  Like

 12. //தூயதமிழில் படுக்கையறை பத்மா என்றோ, காமம் கையளவு என்றோ தலைப்பு வைக்கும் இந்தப் படங்களுக்கு அரசின் வரிவிலக்கு உண்டா ?//

  கண்டிப்பாக உண்டு.. ஆனால் அதற்குமுன்
  சிறப்பு காட்சிக்கு தலைமை தாங்க அழைப்பு வேண்டும் 🙂

  Like

 13. ///// You don’t see like this poster only see 100 days please /////

  குருவி 100 வது நாள் பாத்தேன் 🙂 சிரிச்சுட்டீங்களா ? போதுமா ?

  Like

 14. //கண்டிப்பாக உண்டு.. ஆனால் அதற்குமுன்
  சிறப்பு காட்சிக்கு தலைமை தாங்க அழைப்பு வேண்டும்//

  சிக்கல்ல மாட்டி வுட்டுடுவீங்க போலிருக்கே.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s