முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!

முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.

 சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து  விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.

கிராமத்தில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்கு உள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போது அனுப்பப்படும். அப்புறம் ? 

பள்ளி நாட்களில் முட்டை ஓட்டின் மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையை வைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்க வைக்கிறார் இவர்.

அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….


கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….

வாவ் !!!! முட்டை நாட்டைப் பிரதிபலிக்குமா !!!!

இல்லை நோட்டைப் பிரதிபலிக்குமா ?

நான் படித்ததிலே : விக்ரம் மொபைல் எண் ரசிகர்களுக்காக

நடிகர் விக்ரம் மற்ற நடிகர்களிடமிருந்து சற்றே வித்தியாசமானவர் எனப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு படியாக ஏறி இன்றைய நிலையை அடைய அவர் செய்த பிரம்மப் பிரயர்த்தனங்கள் காரணமாய் இருக்கலாம்.

ஹாலிவுட் நடிகர் ஜான் டிராவோல்டா நடிக்க வந்த காலகட்டத்தில் முகம் சதுரமாக இருக்கிறது, நடிகனுக்குரிய முகவெட்டு இல்லை என நிராகரிக்கப்பட்டாராம். அதே போன்ற ஒரு அவஸ்தையைச் சந்தித்தவர் தான் நமது விக்ரம்.

எனினும் எதிலும் மனம் தளராத வேதாளம் சுமக்கும் விக்கிரமாதித்யனைப் போல விமர்சனங்களைச் சுமந்து இன்று நடித்துப் பெயரும் பணமும் பெறும் நடிகராக இருக்கிறார்.

இரண்டு படத்தில் ஓரமாய் எட்டிப்பார்த்தாலே தன்னை தனியாய் அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் நடிகர்கள் மத்தியில் விக்ரம் வித்தியாசப்படுகிறார். ரசிகர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் அறிய விரும்புகிறார்.

98841-11111 இதுதான் எனது மொபைல் எண் இதற்கு ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பி கேள்விகளையோ, கருத்துக்களையோ தெரிவியுங்கள் என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறாராம். இன்றைய டெக்கான் குரோனிகிள் நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

விழிக்கொடை, சமூகசேவை என பல்வேறு நல்ல செயல்களைச் செய்துவரும் விக்ரம் இப்போது ரசிகர்களுடன் நெருங்கி அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க விரும்புகிறார்.

நடிகர்கள் என்றாலே மக்களை விட நான்கு படி மேலே எனும் சிந்தனையிலிருந்து இறங்கி வந்து முன்மாதிரிகை காட்டும் நடிகர் விக்ரம் பாராட்டுதலுக்கு உரியவரே…