நான் படித்ததிலே : விக்ரம் மொபைல் எண் ரசிகர்களுக்காக

நடிகர் விக்ரம் மற்ற நடிகர்களிடமிருந்து சற்றே வித்தியாசமானவர் எனப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு படியாக ஏறி இன்றைய நிலையை அடைய அவர் செய்த பிரம்மப் பிரயர்த்தனங்கள் காரணமாய் இருக்கலாம்.

ஹாலிவுட் நடிகர் ஜான் டிராவோல்டா நடிக்க வந்த காலகட்டத்தில் முகம் சதுரமாக இருக்கிறது, நடிகனுக்குரிய முகவெட்டு இல்லை என நிராகரிக்கப்பட்டாராம். அதே போன்ற ஒரு அவஸ்தையைச் சந்தித்தவர் தான் நமது விக்ரம்.

எனினும் எதிலும் மனம் தளராத வேதாளம் சுமக்கும் விக்கிரமாதித்யனைப் போல விமர்சனங்களைச் சுமந்து இன்று நடித்துப் பெயரும் பணமும் பெறும் நடிகராக இருக்கிறார்.

இரண்டு படத்தில் ஓரமாய் எட்டிப்பார்த்தாலே தன்னை தனியாய் அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் நடிகர்கள் மத்தியில் விக்ரம் வித்தியாசப்படுகிறார். ரசிகர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் அறிய விரும்புகிறார்.

98841-11111 இதுதான் எனது மொபைல் எண் இதற்கு ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பி கேள்விகளையோ, கருத்துக்களையோ தெரிவியுங்கள் என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறாராம். இன்றைய டெக்கான் குரோனிகிள் நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

விழிக்கொடை, சமூகசேவை என பல்வேறு நல்ல செயல்களைச் செய்துவரும் விக்ரம் இப்போது ரசிகர்களுடன் நெருங்கி அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க விரும்புகிறார்.

நடிகர்கள் என்றாலே மக்களை விட நான்கு படி மேலே எனும் சிந்தனையிலிருந்து இறங்கி வந்து முன்மாதிரிகை காட்டும் நடிகர் விக்ரம் பாராட்டுதலுக்கு உரியவரே…

10 comments on “நான் படித்ததிலே : விக்ரம் மொபைல் எண் ரசிகர்களுக்காக

 1. vanakam xevier

  I try that phone number its give replay ” you are trying that person out of service :-((((

  puduvai siva

  Like

 2. நான் முயற்சித்தேன் அது வேற்று கிரகத்தின் நெம்பர் என எளியன் சொல்கிறது… வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு…

  Like

 3. //I try that phone number its give replay ” you are trying that person out of service :-((((//

  அட !! நிஜமா ? பேப்பர்ல முதல் பக்கத்துல படிச்சேனே !!!

  Like

 4. //vikram no thaan iruka………..
  namitha……nayanthara????/

  //

  எனக்கு ஸ்ரேய நெம்பர் வேணும்….

  //

  அவங்களுக்கு நிறைய “நம்பர்” இருக்கு… நீங்க எந்த நம்பர் கேக்கறீங்க ?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s