குசேலன் – உண்மையிலேயே நல்ல படம்

குசேலன் திரைப்படத்தை இத்தனை தாமதமாய் பார்த்ததற்குக் காரணம் நான் இணையத்தில் வாசித்த எதிர் விமர்சனங்கள் தான் காரணம். குசேலன் மகா குப்பை என்றும், இதை விட பத்து பத்து படத்தை பத்து வாட்டி பார்க்கலாம் என்றும் விமர்-ஜனங்கள் சொன்ன பின் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஓரமாய் ஒதுங்கிவிட்டேன்.

இந்த வார இறுதியில் தான் “பார்த்தேன் குசேலனை

சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படத்தையும் பார்த்து அழுத ஞாபகம் இல்லை. கடைசியாக மனதை உலுக்கிய படம் சேரனின் “தவமாய் தவமிருந்து” என நினைக்கிறேன். அதற்குப் பிறகு அந்த அளவுக்கு மனதை உலுக்கி எடுத்த படம் குசேலன்.

பசுபதி எனும் அற்புதமான நடிகனும், ரஜினி எனும் சூப்பர்ஸ்டாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்வையாளர்களை உறைய வைத்த அந்த கடைசி பதினைந்து நிமிடங்களுக்காகவே குசேலன் படம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் பெரும்பாலான காட்சிகள் பசுபதியையும், அவருடைய நடிப்பையும் (வெயிலுக்கு அடுத்தபடியாக) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. யதார்த்தங்களை தனது அசைவுகளில் வெளிப்படுத்தும் பசுபதியை அவனுக்குள் உரம் போட்டுக் கிடந்த நடிப்பின் இன்னோர் பரிமாணத்தை குசேலன் வெளிக்கொணர்ந்தது எனலாம்.

குசேலனின் பலவீனங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டாலும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒன்றே ஒன்று தான். தமிழ்ப்படமெனில் குறைந்தது இரண்டரை மணி நேரம் ஓடியே ஆகவேண்டும் என நினைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் கூட்டு முட்டாள் தனம்.

அப்படி இரண்டரை மணி நேரம் இட்டு நிரப்புவதற்கு சரக்கில்லையெனில் என்ன செய்வது ? அருவருக்கத் தக்க அரைகுறை நகைச்சுவையையும், கவர்ச்சியையும் இட்டு நிரப்புவது. எது சிறந்தது ? அரை மணி நேரம் முன்னதாகவே படத்தை முடிப்பதா ? அல்லது அரை மணி நேரம் திரையில் ஏதேனும் கோணங்கித் தனத்தைக் காட்டி ரசிகனை வெறுப்பேற்றுவதா என்பதை மேற்கூறிய அந்த பெருந்தலைகள் நிர்ணயிக்கட்டும். அப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என அந்தப் பழியை தயவு செய்து ரசிகர்களின் தலையில் போடாதிருக்கக் கடவது.

காலேஜ் டே அன்று பிரின்சிபல் சேர்மேனைக் கூப்பிட்டுச் சொல்வார் “பாருங்கப்பா… இன்னிக்கு ஸ்டேஜ் உங்களுது. காலைல இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் நீங்க அதுல ஆட்டம் போடலாம்… ஏழு மணிக்கு மீட்டிங் இருக்கு அப்போ ஒதுங்கிடுங்க.”

மாணவர்களும் ஆட்டம் போடுவார்கள். எல்லா கோணங்கித் தனத்தையும், சில்மிஷங்களையும் மேடையில் போட்டு துவைப்பார்கள். முடிந்த அளவுக்கு டேபிள் செயரை உடைத்துப் போடுவார்கள். ஏழுமணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும், அமைதியாய் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அழுத்தமாய் நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

இது தான் பெரும்பாலான வெற்றி பெற்ற மலையாள சினிமாவின் பார்முலா. முதல் எழுபத்தைந்து சதவீதம் ஆட்டம், பாட்டம், நகைச்சுவை. கடைசி கால்வாசி அழுத்தமான கதை. பெரும்பாலும் ஆனந்தமாய் ஆடிப்பாடும் கதாநாயகனின் மனசுக்குள் இருக்கும் இன்னோர் சோகக் கதை! மோகன்லாலின் வெற்றிபெற்ற பத்து படங்களைப் பட்டியலிடுங்கள் அதில் எட்டு இப்படித் தான் இருக்கும்.

அந்த பார்முலா அங்கே வெற்றி பெறக் காரணம், முதல் முக்கால் வாசியில் இருக்கும் எதார்த்தமான நகைச்சுவை மட்டுமே.

குசேலனில் இல்லாமல் போனதும் அது மட்டுமே. அவசர அவசரமாய் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் இட்டு நிரப்பப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் பயங்கர சலிப்பு.

எனினும், விமர்சனங்கள் சொன்னது போல குசேலன் மட்டமான படம் அல்ல. விமர்சனங்கள் பெரும்பாலும் ரஜினி எனும் தனிமனிதன் மீதான வெறுப்பாகவே வெளிப்பட்டிருக்கின்றனவோ எனும் ஐயம் எழுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அருகில் இருந்து படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே இறுக்கமாய் அமர்ந்திருந்ததையும், அவ்வப்போது கண்களைக் கசக்கியதையும் பார்க்க முடிந்தது.

தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் சமீபகாலமாக வந்த படங்களில் தரமான படங்களின் வரிசையில் வைக்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஒரு படம் குசேலன்.

38 comments on “குசேலன் – உண்மையிலேயே நல்ல படம்

  1. அண்ணா,உண்மை.உங்கள் உணர்வோடு ஒத்தே நானும் குசேலன் பார்த்தேன்.விமர்சனங்கள் சரியில்லாததால் நேற்றுத்தான் பொழுதைப் போக்கலாம் என்றுபார்த்தேன்.அழுதேவிட்டேன்.
    கவர்ச்சிக் காட்சிகளும்.தேவையற்ற”சப்”என்ற காமெடிகளையும் ஓடவிட்டுப் பார்த்தேன்.நட்பின் நாடி…பழைய ரஜனி படம் மாதிரி பிடிச்சிருக்கு குசேலன்.

    Like

  2. Hi Sir,

    Your thoughts about the film kuselan is purely correct. Tamil cinema fans only enjoy masala films and sometimes they authorize some good movies like “veyil” “parutthiveeran” like this.

    But this film is very good movie but could not encourage by the fans and medias and press.

    Like

  3. ஸேவியர்!
    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றிகள் பல!
    நான் இன்னும் படம் பார்க்கலை! ஆனா ஞாநியின் விமர்சனங்களும் வலைப்பதிவர்களின் பார்வைகளும் எதிரெதிர் துருவத்தில் நின்றதால் சற்றே தோற்ற மயக்கம்! உங்கள் பதிவு அதைப் போக்கியது!
    மீண்டும் தங்களின் தனித்தன்மையை பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    நன்றி
    வெங்கட்ரமணன்!

    Like

  4. அப்படி என்றால் கடைசி 15 நிமிடங்களுக்கு மட்டும் படம் பார்க்கலாம் என சொல்கிறீர்கள். அந்த 15 நிமிடங்கள் ஆரம்பிக்கும் போது மட்டும் அரங்கில் நுழைந்து பார்த்துவிட்டு வந்துவிட வேண்டிதான். இரசிகர்களுக்கு இது ஒத்துவருமா அண்ணே…

    செண்டிமெண்ட் காட்சிகளை மட்டும் வைத்து படத்தை ஓட்டினால் போதுமா? 😦

    Like

  5. சேவியர்,

    இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ‘ஒரு வரிக் கதை’. அதாவது – பணக்கார கிருஷ்ணனிடம் யாசக்மே கேட்கப் புறப்படும் குசேலன் இதிகாசத்தில். ஆனால் இங்கே யாசகம் கேட்கப் போவது ஏழையான பால’கிருஷ்ணன்’. குசேலன் பெரிய பணக்காரனாக இருக்கிறான்.

    இதை அழுத்தமாக சொல்வது ‘கத பறயும்போள்’. அந்தப் படத்திற்கு ‘குசேலன்’ என்றுப் பெயர் வைத்தவுடனே அது படத்தில் ‘குசேலனாக’ வரும் பெரிய நடிகரை நோக்கி நகர்ந்து விட்டது. அங்கேயே கதையை குலைக்க ஆரம்பித்துவிட்டனர்.

    சந்திரமுக் – II, அண்ணாமலை – II எல்லாம் அரைகுறையான காட்சியமைப்புகள். ஒரு படம் உருவாவதை எப்படியெல்லாம் அழகாக காட்டலாம்? கோட்டை விட்டுவிட்டார்கள்.

    ரஜினியின் 15 நிமிட சொற்பொழிவு மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் அது மட்டும்தான் நன்றாக இருக்கிறது.

    இரண்டாவது – சிவாஜி போன்ற படங்களில் இருக்கும் ரிச்னெஸோ அல்லது படம் முழுக்க பயனப்படும் ஆழமான கதையே இதில் கிடையாது.. அப்படியிருக்க தேவையில்லாமல் இதை அதிக விலைக்கு பேரம் பேசி எதிர்பார்ப்பை எக்கசக்கத்திற்கு ஏற்றிவிட்டிருக்க வேண்டாம். சராசரி ரஜினி ரசிகன் எக்கசக்கமாக டிக்கெட் விலை கொடுத்து வாங்கி அதில் ரஜினி ஸ்டைல் காட்சிகளோ (தொடை தட்டி சவால் விடும் காட்சிகள்) அல்லது அதிரடி சண்டைக் காட்சிகளோ இல்லாத பொழுது ஏமாற்றமடைகிறான். நல்ல கதையை எதிர்பார்த்து வருகிறவர்கள், முதல் இரண்டு மணி நேரமும் நொந்து போய் உட்கார்ந்திருக்கின்றனர். இதுதான் மிகப் பெரிய பலவீனம். 😦

    Like

  6. //இது தான் பெரும்பாலான வெற்றி பெற்ற மலையாள சினிமாவின் பார்முலா. முதல் எழுபத்தைந்து சதவீதம் ஆட்டம், பாட்டம், நகைச்சுவை. கடைசி கால்வாசி அழுத்தமான கதை.//

    மலையாள சினிமாவில் இருக்கும் ‘யதார்த்தம்’. எத்தனையோ படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம். உ.தா; அமரம் (மம்மூட்டி நடித்தது). ‘கிலுக்கம்’ மாதிரி ஒரு படத்தை ‘எங்கிருந்தோ வந்தான்’ மாதிரி சொதப்ப நம்மால் மட்டுமே முடியும். 😉

    //தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் … //
    ;(

    Like

  7. //காலேஜ் டே அன்று பிரின்சிபல் சேர்மேனைக் கூப்பிட்டுச் சொல்வார் “பாருங்கப்பா… இன்னிக்கு ஸ்டேஜ் உங்களுது. காலைல இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் நீங்க அதுல ஆட்டம் போடலாம்… ஏழு மணிக்கு மீட்டிங் இருக்கு அப்போ ஒதுங்கிடுங்க.”
    முடிந்த அளவுக்கு டேபிள் செயரை உடைத்துப் போடுவார்கள். ஏழுமணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும், //

    காலேஜ் டே, பிரின்சிபல் சேர்மேன், ஸ்டேஜ், மீட்டிங், டேபிள், செயர் என்பவற்றைத் தமிழகத்தின் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் கூட அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதைக் கண்டிருக்கிறேன். தமிழில் கவிதை எழுதுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு இவற்றுக்கெல்லாம தமிழ்ச் சொற்கள் தெரியவில்லையே என்பது தமிழகத்தின் வெட்கக் கேடு. இதனால்தான் உங்களுடைய இன்னொரு இடுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டீர்களோ?

    “இது உலகத் தமிழர்களுக்கு ஆனந்தமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத் தமிழர்களின் போலிக் கலாச்சார மோகத்தின் மீதோர் சாட்டையாகவும் இறங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.’

    Like

  8. நன்றாக விமர்சித்தீர். நானும் படம் பார்த்தேன். நல்ல படம். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காத காரணம் பன்ச் வசனங்களும் சவால் விடும் காட்சிகளும் பல அடியாட்களை ஒருவராய் பந்தாடுவது போன்ற கதாநாயக தன்மை இல்லாதது.அதே சமயம் நல்ல படத்தை வாசு இயக்கி கெடுத்து விட்ட வருத்தம் உள்ளது.மலையாளத்தில் உள்ளது போல யதார்த்தத்தை தமிழ் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கெட்ட அபிப்பிராயம் தான் நயதாராவை நிறைய தேவையின்றி உபயோகித்துள்ளார்கள்.பசுபதி இன்னும் நன்றாக நடிக்க கூடியவர் (வெயில்)அவரிடம் இருந்து இன்னும் அதிகம் வெளிப்படாததுற்கு காரணம் கூட வாசு தான்.மற்றபடி நானும் இறுதி கட்டத்தில் நெகிழ்ந்து விட்டேன்.
    “தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் சமீபகாலமாக வந்த படங்களில் தரமான படங்களின் வரிசையில் வைக்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஒரு படம் குசேலன்.”
    இறுதி கட்டம் மட்டுமே மிஞ்சும்.

    Like

  9. /அண்ணா,உண்மை.உங்கள் உணர்வோடு ஒத்தே நானும் குசேலன் பார்த்தேன்.விமர்சனங்கள் சரியில்லாததால் நேற்றுத்தான் பொழுதைப் போக்கலாம் என்றுபார்த்தேன்.அழுதேவிட்டேன்.
    கவர்ச்சிக் காட்சிகளும்.தேவையற்ற”சப்”என்ற காமெடிகளையும் ஓடவிட்டுப் பார்த்தேன்.நட்பின் நாடி…பழைய ரஜனி படம் மாதிரி பிடிச்சிருக்கு குசேலன்.//

    பழைய ரஜனி படம் மாதிரி – உண்மை !!!

    Like

  10. //But this film is very good movie but could not encourage by the fans and medias and press.//

    ஊடகங்களின் நேர்மை தான் நமக்குத் தெரிந்ததாச்சே !

    Like

  11. //what it do rajini bad luck //

    படம் ஓடுறது, ஓடாதது அவங்க கவலை… நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை 😀

    Like

  12. //உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றிகள் பல!
    நான் இன்னும் படம் பார்க்கலை! ஆனா ஞாநியின் விமர்சனங்களும் வலைப்பதிவர்களின் பார்வைகளும் எதிரெதிர் துருவத்தில் நின்றதால் சற்றே தோற்ற மயக்கம்! உங்கள் பதிவு அதைப் போக்கியது!
    மீண்டும் தங்களின் தனித்தன்மையை பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
    //

    நன்றி வெங்கட் ரமணன். குசேலன் நல்லா இருக்குன்னு சொல்றது பாவம் என்பது போல மக்கள் பாவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    Like

  13. //அந்த 15 நிமிடங்கள் ஆரம்பிக்கும் போது மட்டும் அரங்கில் நுழைந்து பார்த்துவிட்டு வந்துவிட வேண்டிதான். இரசிகர்களுக்கு இது ஒத்துவருமா அண்ணே…
    //

    தம்பி படம் பாத்துட்டியா ?

    Like

  14. //தேவையில்லாமல் இதை அதிக விலைக்கு பேரம் பேசி எதிர்பார்ப்பை எக்கசக்கத்திற்கு ஏற்றிவிட்டிருக்க வேண்டாம். சராசரி ரஜினி ரசிகன் எக்கசக்கமாக டிக்கெட் விலை கொடுத்து வாங்கி அதில் ரஜினி ஸ்டைல் காட்சிகளோ (தொடை தட்டி சவால் விடும் காட்சிகள்) அல்லது அதிரடி சண்டைக் காட்சிகளோ இல்லாத பொழுது ஏமாற்றமடைகிறான். நல்ல கதையை எதிர்பார்த்து வருகிறவர்கள், முதல் இரண்டு மணி நேரமும் நொந்து போய் உட்கார்ந்திருக்கின்றனர். //

    அருமையா சொன்னீங்க ஸ்ரீதர் நாராயணன். நன்றி !

    Like

  15. //மலையாள சினிமாவில் இருக்கும் ‘யதார்த்தம்’. எத்தனையோ படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம். உ.தா; அமரம் (மம்மூட்டி நடித்தது). ‘கிலுக்கம்’ மாதிரி ஒரு படத்தை ‘எங்கிருந்தோ வந்தான்’ மாதிரி சொதப்ப நம்மால் மட்டுமே முடியும்//

    ஹா..ஹா.. சரியா சொன்னீங்க. 🙂 எனக்குத் தெரிந்து பாஸில் மட்டும் விதிவிலக்கு இந்த ரீமேக் விஷயத்துல…

    Like

  16. //காலேஜ் டே, பிரின்சிபல் சேர்மேன், ஸ்டேஜ், மீட்டிங், டேபிள், செயர் என்பவற்றைத் தமிழகத்தின் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் கூட அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதைக் கண்டிருக்கிறேன். தமிழில் கவிதை எழுதுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு இவற்றுக்கெல்லாம தமிழ்ச் சொற்கள் தெரியவில்லையே என்பது தமிழகத்தின் வெட்கக் கேடு. //

    உங்கள் தமிழ் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன். பெரும்பாலும் தமிழிலேயே எழுதும் வழக்கம் எனக்கு உண்டு, இங்கே ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது. மன்னியுங்கள்.

    Like

  17. //அதே சமயம் நல்ல படத்தை வாசு இயக்கி கெடுத்து விட்ட வருத்தம் உள்ளது.மலையாளத்தில் உள்ளது போல யதார்த்தத்தை தமிழ் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கெட்ட அபிப்பிராயம் தான் நயதாராவை நிறைய தேவையின்றி உபயோகித்துள்ளார்கள்.//

    ரொம்ப ரொம்ப ரொம்ப …. ரொம்ப சரி !!

    Like

  18. அரிதான ஒரு உண்மையான விமர்சனம்.

    //சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படத்தையும் பார்த்து அழுத ஞாபகம் இல்லை. கடைசியாக மனதை உலுக்கிய படம் சேரனின் “தவமாய் தவமிருந்து” என நினைக்கிறேன். அதற்குப் பிறகு அந்த அளவுக்கு மனதை உலுக்கி எடுத்த படம் குசேலன்.//
    //எனினும், விமர்சனங்கள் சொன்னது போல குசேலன் மட்டமான படம் அல்ல. விமர்சனங்கள் பெரும்பாலும் ரஜினி எனும் தனிமனிதன் மீதான வெறுப்பாகவே வெளிப்பட்டிருக்கின்றனவோ எனும் ஐயம் எழுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அருகில் இருந்து படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே இறுக்கமாய் அமர்ந்திருந்ததையும், அவ்வப்போது கண்களைக் கசக்கியதையும் பார்க்க முடிந்தது.//

    எந்தso called விமர்சனமும் படத்தின் நல்ல விஷயங்களையும் சொல்லியதாக தெரியவில்லை. 😦

    //தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் சமீபகாலமாக வந்த படங்களில் தரமான படங்களின் வரிசையில் வைக்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஒரு படம் குசேலன்.//

    well said.

    Like

  19. என்ன நண்பரே, தளத்தின் பெயரை மாற்றி விட்டீர்கள்?

    குசேலன் நானும் பார்த்தேன். எதார்த்தமான படம். ஆனால் தமிழ் ரசிகர்களுக்குத்தான் நல்ல படங்களையே ரசிக்கத் தெரியாதே

    Like

  20. //என்ன நண்பரே, தளத்தின் பெயரை மாற்றி விட்டீர்கள்?
    //

    இல்லையே !!!

    கவிதைச் சாலை (http://xavi.wordpress.com) ஐ சொல்கிறீர்களா ?

    //

    குசேலன் நானும் பார்த்தேன். எதார்த்தமான படம். ஆனால் தமிழ் ரசிகர்களுக்குத்தான் நல்ல படங்களையே ரசிக்கத் தெரியாதே
    //

    நன்றி ஐயா… நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தருகிறீர்கள் 🙂

    Like

  21. Same thing happened to me also. I almost decided not to watch the movie because of reviews in blogs. When I watch the movie, I did not think it was a bad movie as described in blogs. It is eveident from this, when bloggers do not want to write the truth and want to criticize the movie, it can even unfairly affect a not-too-bad movie.

    It was really unfair to write reviews about Kuselan.

    Like

  22. மலையாலப்படத்தை அப்ப்டியே ரீமேக் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    Like

  23. Climax scene was the greatest joke ever in Tamil cinema.
    Most of the audience laughed at that scene.

    Any person who is not out of his district or state can be traced in 2 weeks, by paying 10,000 Rs to Detective agencies in Chennai. You can check that…..
    So for your SS, it took 25 years ah….huh…Stupid Star, Bull shit film and Mann soru eating rasigars….

    Like

  24. Also, think what would be the result if the same film was done by Ramki ….
    it would not have even bought by the distributors.

    Like

  25. //Same thing happened to me also. I almost decided not to watch the movie because of reviews in blogs. When I watch the movie, I did not think it was a bad movie as described in blogs. It is eveident from this, when bloggers do not want to write the truth and want to criticize the movie, it can even unfairly affect a not-too-bad movie.

    It was really unfair to write reviews about Kuselan.

    //

    உண்மை A.G… வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். 🙂

    Like

  26. //மலையாலப்படத்தை அப்ப்டியே ரீமேக் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

    ஆம். ஆனால் நடிகர் ஜெயராமுக்கு மலையாளத்தை விட தமிழில் தான் படம் பிடித்திருக்கிறதாம். ( ஸ்ரீனிவாசன் கூட ஏதோ சண்டையா ? )

    Like

  27. //

    Any person who is not out of his district or state can be traced in 2 weeks, by paying 10,000 Rs to Detective agencies. //

    அடடா… ஒசாமா பில் லேடன் ன்னு ஒருத்தனை இந்த மேட்டர் தெரியாம ரொம்ப நாளா தேடிட்டிருக்காங்களே !!!

    Like

  28. //Also, think what would be the result if the same film was done by Ramki ….
    it would not have even bought by the distributors.

    //

    அதை நீங்க சம்பந்தப்பட்டவங்க கிட்டே தான் கேக்கணும் 😀

    Like

  29. //Unmai suttadho??//

    தனிநபர் தாக்குதலும், துதிபாடலும், தரக்குறைவான விமர்சனங்களும் இங்கே நடக்காது நண்பரே.. வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன. போய் வாருங்கள்.

    Like

Leave a comment