அத்தி பூத்தார் போல கிடைத்த ஓய்வு வேளையில் வலைத்தளத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். சரி நம்ம தளத்தையெல்லாம் யாரெல்லாம் வந்து பாக்கறாங்க, எங்கெங்கே இணைப்பு கொடுத்திருக்கிறாங்க என பார்த்த போது நிறைய வியப்பு காத்திருந்தது.
முதல் வியப்பு சீனத் தளத்தில் , ஓவியம் போன்ற சீன எழுத்துக்களின் இடையே “கனியிலே கலை வண்ணம் கண்டார் “ எனும் நமது ஒரு பதிவின் சுட்டியும், பதிவின் சாராம்சமும்.
கவிப்பேரரசு பாணியில சொல்லணும்ன்னா சீன நதியிலும் என் ஓடம்
அதற்கும் நிறைய பேர் பின்னூட்டமிட்டிருந்தார்கள். என்னன்னு தான் புரியல. விவேக் கிட்டே கேட்டா, “ இங்கேயுமாடா ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க “ என்று கேட்டாலும் கேட்பார்.
சில ஸ்பானிஷ் தளங்களிலிருந்தெல்லாம் அலசல் வலைத்தளத்தின் சில பதிவுகளைப் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் படம் சார்ந்தவை. (அதை சொல்லணுமா என்ன ? )
Long Live China !
படத்துக்கான விளக்கம் : சீன தளத்தில் நம்ம படைப்பை பிரசுரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீன ஒலிம்பிக் படம் ஒன்று J
இந்த மாதிரி சைனிஸ் பின்னூட்டம் என் வலைப்பூலயும் சில பேர் போடறானுங்க என்னன்னே புரியலை ஏன்னும் புரியலை
:)))
LikeLike
உங்கள் blog-ஐ நான் சமீபமாக படித்து வருகிறேன். உங்கள் பதிவுகள் நன்றாக இருகின்றன. வாழ்த்துக்கள்.
சீனா தளத்தை translate செய்து பார்க்க இந்த கூகிள் link-ஐ பயன்படுத்துங்கள்.
http://translate.google.com/translate_t#
translate செய்தது
http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fqq0526.blogspot.com%2F2008%2F07%2Fblog-post_27.html&hl=en&ie=UTF-8&sl=zh-CN&tl=en
நன்றி
LikeLike
வலை மறைக்குது…
LikeLike
நான் இணையம் எனும் வலையையும் அதை மறைக்கும் சீன எழுத்துக்களையும் சொன்னேன்…
LikeLike
//வலை மறைக்குது…
நான் இணையம் எனும் வலையையும் அதை மறைக்கும் சீன எழுத்துக்களையும் சொன்னேன்…//
இதான் விக்கி ஸ்பெஷல் 😀
LikeLike
nice photo!
LikeLike
அண்ணே நீங்க எங்கயோ போய்டிங்க…
பாருங்களேன் சீனன் கூட வந்து கும்மி அடிக்கிறான்…
LikeLike
அதானே தம்பி… இப்போ தான் பாத்தேன்… சீனனும் உன்னை மாதிரி தான் இருக்கான் 😉
LikeLike