நானும் வழங்குகிறேன் விருது !

எதெதுக்கோ விருது வழங்குகிறார்கள்  நாம் எதற்கு விருது வழங்கலாம் என உட்கார்ந்து யோசித்ததில் இந்த சிந்தனை முளைத்திருக்கக் கூடும். நன்றி நண்பரே !

நம்ம தளத்தைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் நிறைய பேர் இருப்பதனால் யாருக்கு இந்த விருதை வழங்குவது எனும் குழப்பம் எழுந்தது. இதோ எனக்கு சட்டென நினைவுக்கு வந்த இவர்களுக்கு எனது விருதுகள். இன்னும் சிலர் நினைவுக்கு வந்தனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களாம் 🙂

வரிசை ஏதும் இல்லை…
1. குகன் – வலைத்தளங்கள் ஏதும் அமைத்துக் கொள்ளாமல், நல்ல எழுத்துக்களைத் தேடித் தேடிப் படிப்பவர். இலக்கியங்களை தினத்தந்தி போன்ற இதழ்களிலிருந்து கூட பொறுக்கி எடுக்கும் நுணுக்கமான வாசகர். இவருடைய பின்னூட்டங்களே ஒரு பதிவு அளவுக்கு அடர்த்தியாய் இருக்கும்.

ரயில் நிலையத்தில், கசகசப்பாய் ஒருநாள் பைகளைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் ஓடிக் கொண்டிருந்த ஒரு அசௌகரியமான சூழலில் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது

“நீங்க சேவியரா ?”

என்னோட பெயரைக் கூப்பிட்டு கேட்பது யார் என்று கொஞ்சம் வியப்புடன் திரும்பினால் ஒரு மெல்லிய இளைஞர்.

ஆமா… நீங்க ? என்றேன்…

குகன் – என்றார் புன்னகை கலையாத அமைதியுடன்.

இருட்டுக்கே கருப்படித்தது போல இருக்கும் எனது புகைப்படத்தை  எப்படி நினைவில் வைத்திருந்தார், எப்படி அடையாளம் கண்டு கொண்டார் என்பது இன்று வரைக்கும் எனக்குப் புரியாத புதிர்.

2. விக்கி   . விக்கியின் பின்னூட்டங்கள் அறிமுகமானபோது அவனுக்குள் இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் என நினைக்கவில்லை. ஆழமான வாசிப்பும், தகவல் சேமிப்பும் அவனுடைய கட்டுரைகளில் காணக் கிடைக்கின்றன. கூடவே அருமையான படங்களும்.

சமீபத்திய ஆச்சரியம், அவனது கவிதைகள் !

நடையில் பிசிறடிக்காத கவனமும், எழுத்துப் பிழைகளை விலக்கும் நுட்பமும் இருந்தால் தம்பிப் பயல் சென்று சேரும் இடம் மிக உயரிய இடம் என்பதில் ஐயமில்லை.

3. ஹேமா தாய் நாட்டை விட்டுத் தூரமாகிப் போன சூழல் எல்லோருக்கும் தமிழ் மீதும், இனத்தின் மீதும் அளப்பரிய நேசத்தை உருவாக்கி விடுகின்றது. இயல்பிலேயே ஆர்வம் இருப்பவர்களின் அந்த ஆர்வம் பலமடங்கு தூண்டப்பட்டு விடுகிறது.

ஹேமாவின் அறிமுகம் தூரத்துச் சகோதரியின் நேசம் போல தூய்மையாய், உற்சாகமாய் ஆனந்தமாய் விரிகிறது.

எளிமையாய், ஆனால் வலிமையான கவிதைகள் இவரது பக்கங்களில்.

4. குந்தவை  ஊர் ஊராக அலைந்து சோர்ந்து திரும்பும் ஒருவனை அன்னியோன்யமாய் அரவணைக்கும் குழந்தை போல மழலை நிகழ்வுகளில் மலர்ந்து கிடக்கிறது குந்தவையின் பக்கம்.

நல்ல எழுத்துக்களின் ரசனைக்காரி, அந்த ரசனையை மழலையின் வார்த்தைகளிலிருந்து பெற்றாரோ எனும் ஐயமும் உண்டெனக்கு

 5 பாஷா கவிதைகள் ரசனைக்குரியவை. சரளமான எழுத்து. மெல்லிய நகைச்சுவை என உரைநடை எழுதுபவர் கவிதைகளில் பல வேளைகளில் கலங்கடித்து விடுகிறார்.

கேரளக் கரையோரம் ஒதுங்கினாலும் இன்னும் தமிழ் வாசம் வீசும் எழுத்தாளர். நல்ல நண்பர்.

6. வி.கோ – கோபால்சாமி அபரிமிதமான நகைச்சுவை உணர்வை உள்ளுக்குள் வைத்திருப்பவர். எழுத்துக்களில் அவருடைய நகைச்சுவை இழையோடும். நகைச்சுவையை மீறி நல்ல சிந்தனை வைத்திருப்பவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டுணர முடிந்தது.
நல்ல நண்பர்.

நல்ல அரசியல், சினிமா சார்ந்த சூடான விஷயங்களை எடுத்து அவற்றை நகைச்சுவையாய் விமர்சிக்கத் துவங்கினால் இவர் வெகுஜன இதழ்களில் ஜொலிக்க வாய்ப்பு நிரம்பவே உண்டு.

31 comments on “நானும் வழங்குகிறேன் விருது !

 1. என் தம்பி விக்கிக்கு விருது கொடுத்ததுக்கு நன்றி. நீங்க விருது கொடுத்த மத்தவங்கள எனக்கு தெரியலை. இனிமே அவங்கப்பத்தியும் தெரிஞ்சுக்கிறேன்.

  Like

 2. //என் தம்பி விக்கிக்கு விருது கொடுத்ததுக்கு நன்றி. நீங்க விருது கொடுத்த மத்தவங்கள எனக்கு தெரியலை. இனிமே அவங்கப்பத்தியும் தெரிஞ்சுக்கிறேன்//

  நன்றி பால்… வருகைக்கும், தருகைக்கும்.

  Like

 3. //விக்கிக்கு நீங்கள் அளித்த விருதால் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள்

  //

  உங்க “வால்”த்து தான் அவனுக்கு முக்கியம் 😉

  Like

 4. மேலே இருக்கும் பூனையின் படத்தை இன்று காலை நாளிகையில் பார்த்தேன். ஒரு நாளில் ஃபேமஸ் ஆகிடுச்சாமே.. என் நெற்றியில் ரெண்டு கண்ண ஒட்டிக் கொண்டால் நானும் ஃபேமஸ் ஆகிடுவேன்ல…

  Like

 5. அண்ணா நன்றி,விருது வழங்கிற வரிசைல என்னையும் ஞாபகம் வச்சு சேர்த்ததுக்கு.அது சரி விருது தரேன் சொல்லிட்டு ஏன் ஒரு கறுப்புப் பூனை?
  யார் சொன்னா நீங்க கறுப்புன்னு!அழகா பல் வெள்ளையா இருக்கே!

  Like

 6. //நடையில் பிசிறடிக்காத கவனமும், எழுத்துப் பிழைகளை விலக்கும் நுட்பமும் இருந்தால் தம்பிப் பயல் சென்று சேரும் இடம் மிக உயரிய இடம் என்பதில் ஐயமில்லை.//

  சரியாகச் சொன்னீர்கள் சேவியர்.

  Like

 7. // இருந்தால் தம்பிப் பயல் சென்று சேரும் இடம் மிக உயரிய இடம் என்பதில் ஐயமில்லை.//

  விக்கி எவரெஸ்ட் போக போறீங்களா சொல்லவே இல்லை, போகும் பொழுது விக்ஸ் இன் ஹெல்லரும், போர்வையும் எடுத்து போங்க குளிர் அதிகமாக இருக்கும்:))

  Like

 8. /////Hi Xavi
  I want one award ,what should i do

  //
  repeatttu
  //

  இன்னும் நீங்க இந்த ரிப்பீட்டை உடலையா 🙂

  நீங்க எல்லாம் பெரிய தலைகளிடமிருந்து விருது வாங்கும் தகுதி பெற்றவங்க… நாங்க எல்லாம் சின்னப் பசங்க கூட்டம் 🙂

  Like

 9. //
  சேவியர் அண்ணே ரொம்ப நன்றி. இந்த விருது எனக்கு கிடைச்சதில் ரொம்ப சந்தோஷம்.

  //

  அப்படியே நிறைய எழுத ஆரம்பி 😉

  Like

 10. //மேலே இருக்கும் பூனையின் படத்தை இன்று காலை நாளிகையில் பார்த்தேன். ஒரு நாளில் ஃபேமஸ் ஆகிடுச்சாமே.. என் நெற்றியில் ரெண்டு கண்ண ஒட்டிக் கொண்டால் நானும் ஃபேமஸ் ஆகிடுவேன்ல…

  //

  ஆமா… ஒரு வாரம் ஆச்சு இந்த செய்தி வந்து ! 🙂

  நெற்றியில எதுக்கு இரண்டு கண் ?
  சிவனுக்கே மூணு இவனுக்கு நாலா ?
  அப்படி கேக்க மாட்டாங்களா ?

  Like

 11. //விக்கி எவரெஸ்ட் போக போறீங்களா சொல்லவே இல்லை, போகும் பொழுது விக்ஸ் இன் ஹெல்லரும், போர்வையும் எடுத்து போங்க குளிர் அதிகமாக இருக்கும்:))//

  ஒரு வித்தியாசமான இடைவார் தயார் செய்துக் கொண்டிருக்கிறேன். அதை சுற்றினும் விஸ்கியும் பிராந்தியும் பியர்களும் வச்சிகளாம். சூடு தாங்கலனா குடிப்பதற்கு. உள் போர்வை இருக்கும் போது வெளி போர்வை எதுக்கு?

  Like

 12. அதானே பார்த்தேன் 🙂 அப்படியே நாலு மிளகா பஜ்ஜியும் கொண்டு போக வேண்டியது தானே 😉

  Like

 13. அன்புள்ள சேவியருக்கு,

  நன்றிகள் ஆயிரம் , விருதுக்கு.:)
  நம்முடைய துறையில் வேலை செய்து கொண்டு,நேரத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் மிச்சப்படுத்தி ,தமிழுக்காய் சுயநலமே இன்றி பாடுபட்டு கொண்டிருக்கும் உங்களிடம் இருந்து விருது வாங்குவது பெருத்த மகிழ்ச்சி . 🙂
  இந்த சமயத்தில் ஒன்று நிச்சயம் சொல்லியாக வேண்டும்.
  தளத்தில் மறுமொழி இடும் அனைவரின் கருத்துக்களுக்கும் பதிலளித்து,கடுமையான விமர்சனங்களையும் புன்முறுவலோடு ஏற்று , ரசிகனுக்கு தான் எழுதும் படைப்பை விடவும் அதிக மரியாதை செய்கிறீர்கள் !!!!!போற்றுதலுக்குரிய மிகப் பெரிய பணிவன்பான செயல் அது !!!!!!!
  அந்த செயலுக்காய் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் !!!!!

  சிறு நினைவூட்டல்:
  “என்னைப் பற்றி” பதிவில் மறுபடியும் கவிப்பேரரசுடன் நீங்கள் நிற்கும் புகைப்படம் இடம் பெறச் செய்யுங்கள் .
  அது தான் உங்களை பாவம் என்னிடம் மாட்டி விட்டது ரயில் நிலையத்தில் ! 😉

  நட்புடன்
  குகன்

  Like

 14. /////Hi Xavi
  I want one award ,what should i do

  //
  repeatttu
  //

  இன்னும் நீங்க இந்த ரிப்பீட்டை உடலையா …//
  udalai…. repeatuuuu

  Like

 15. நன்றி குகன். மனம் திறந்து பாராட்டும் குணம் உங்களுக்கே உரியது 🙂 நன்றிகள் பல.

  புகைப்படமா .. போடுகிறேன் மறுபடியும் 🙂

  நன்றி மீண்டும்

  Like

 16. நான் வேலையில் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் . அதான் லேட்.
  அண்ணா ரெம்ப நன்றி. டானிக் குடித்தமாதிரி இருக்கு.
  (ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், கிண்டல் பண்ணலியே)

  //நல்ல எழுத்துக்களின் ரசனைக்காரி, அந்த ரசனையை மழலையின் வார்த்தைகளிலிருந்து பெற்றாரோ எனும் ஐயமும் உண்டெனக்கு
  //
  உண்மைதான் சந்தேகமே வேண்டாம்.

  அடுத்த வார இறுதியில் ஊருக்கு வரேங்கோ

  Like

 17. ////நடையில் பிசிறடிக்காத கவனமும், எழுத்துப் பிழைகளை விலக்கும் நுட்பமும் இருந்தால் தம்பிப் பயல் சென்று சேரும் இடம் மிக உயரிய இடம் என்பதில் ஐயமில்லை.//

  சரியாகச் சொன்னீர்கள் சேவியர்.//

  இதுக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஎயும்,

  தம்பி விக்கிக்கு வாழ்த்துக்களும்

  சொல்லிக்கிட்டு எஸ்கேப்பிக்கறேன்!

  Like

 18. //நான் வேலையில் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் . அதான் லேட்.
  அண்ணா ரெம்ப நன்றி. டானிக் குடித்தமாதிரி இருக்கு.
  (ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், கிண்டல் பண்ணலியே)//

  என்னங்க… இதுல எல்லாமா கிண்டல் பண்ணுவாங்க ??

  //

  //நல்ல எழுத்துக்களின் ரசனைக்காரி, அந்த ரசனையை மழலையின் வார்த்தைகளிலிருந்து பெற்றாரோ எனும் ஐயமும் உண்டெனக்கு
  //
  உண்மைதான் சந்தேகமே வேண்டாம்.

  அடுத்த வார இறுதியில் ஊருக்கு வரேங்கோ

  //

  வருக … வருக… சென்னை வந்தால், வீட்டுக்கு வாங்க என அன்புடன் அழைக்கிறேன் 😀

  Like

 19. /இதுக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஎயும்,

  தம்பி விக்கிக்கு வாழ்த்துக்களும்

  சொல்லிக்கிட்டு எஸ்கேப்பிக்கறேன்
  //

  விக்கி ரசிகர் மன்றம் உலகம் பூரா இருக்கு போலிருக்கே !!!

  Like

 20. அண்ணா மனதின் வேதனைகளை கவிதை எனும் பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.என் அப்பாவிடமிருந்து வாழ்த்துக் கிடைத்திருந்தது மட்டுமே.அதன் பிறகு உங்களிடமிருந்து விருது முதன் முதலாக.நேற்று பின்னூட்டம் இடும்போது புரியவில்லை.
  பிறகு யோசித்தபோது மிகவும் சந்தோஷமாகவும் இன்னும் நிறைவாக எழுதவேணும் என்கிற அக்கறையையும் தந்திருக்கிறது.மீண்டும் நன்றி அண்ணா,

  Like

 21. நன்றி தங்கையே.. உங்கள் வளர்ச்சியில் ஆனந்தமடைவதே இந்த அண்ணனின் விருப்பம் 🙂

  Like

 22. நானும் உங்கள் நினைவில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் பேசாத ஒரு மாநிலத்தில், தொலைக்காட்சியைத் தவிர வேறு எதிலும் தமிழ் கேட்காமல் வாழ்ந்து வந்த (அடுத்த மாதம் நிலைமை மாறிவிடும். ஹி ஹி) எனக்கு வலைப்பூ ஒரு சொர்கமாகவே தெரிகிறது.

  இங்கே, நீங்கள், மதிமாறன், லதனந்த் அங்கிள், விக்னேஸ்வரன், பரிசல்காரன் இன்னும் பலர் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷம். விருதுக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன். நன்றி நமக்கிடையே தூரத்தை அதிகப்படுத்திவிடும். இந்த விருது தராவிட்டாலும் என் மனதில் எப்போதும் இருக்கும் நண்பர் நீங்கள்.

  (தொலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லையே, வீட்டிலும் அலுவலகத்திலும் ஆணி அதிகமோ?)

  Like

 23. அப்பாடா… ஒரு வழியா வந்தாச்சா… தேன் நிலவு எல்லாம் முடிஞ்சாச்சா 🙂 ( அதுக்கு மொழி தெரியாத ஊர் பிரச்சனை இல்லை .. கூடவே கரண்ட் கட் கூட ஒருவிதத்துல உனக்கு சந்தோசமா தான் இருந்திருக்கும் )

  தொலை பேசி ஆணி ஏதும் இல்லாமல் அமைதியா தானே இருக்கு… எனக்கு ஏதும் மிஸ்ட் கால் வந்த மாதிரி தெரியலையே ? கனவுல அடிச்சீங்களோ 😉

  Like

 24. அடடா எனக்கு விருது வழங்கின சேதி இப்பத்தான் தெரிஞ்சது.
  என் சார்பா யாரு வாங்குனாங்கனு சொன்னா போய் வாங்கிக்குவேன்:)

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s