சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் !

 

அளவுக்கு அதிகமாக விமர்சகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடிய சுப்பிரமணிய புரம் என்னும் படத்தைப் பார்த்தேன்.

1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்.

அமீர், பாலா இவர்களைப் பின் தொடர்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னோர் இயக்குனர் என்பது அவர்களுடைய சாயலில் வந்திருக்கும் படத்திலேயே தெரிகிறது.

கண்கள் இரண்டால் – என வசீகரிக்கும் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் மிளிர்ந்த பாடலையும், கதா நாயகனின் வசீகரச் சிரிப்பையும், கதாநாயகியின் வெட்கக் கண்ணசைவையும் தவிர்த்துப் பார்த்தால் படம் அசோக் நகர் சைக்கோக் கொலையாளியைப் போல எரிச்சல் படுத்துகிறது.

எடிட்டிங்கிலும், பழைய சூழலைக் கொண்டுவந்ததிலும் பிரமிக்க வைக்கின்றனர். ஆனால் பருத்தி வீரனைப் போல கொடூரமான ஒரு இறுதிக் காட்சி. சமுத்திரக்கனியை ஆட்டோவில் காலால் மிதித்து நர நரவென அறுத்து அதை பையில் போட்டுத் திரிவதும், கதாநாயகனை சரமாரியாக வெட்டிக் கொல்வதும் என காட்சிகளில் வீசும் குருதி நாற்றம் அருவருக்க வைக்கிறது.

இப்படிப் பட்ட திரைப்படங்களின் வெற்றி மீண்டும் சைக்கோ இயக்குனர்களை தமிழுக்கு இறக்கு மதி செய்துவிடுமோ எனும் பயம் மிளிர்கிறது. நேற்று தான் சென்னையில் புதிய ஒரு திரைப்பட போஸ்டரைப் பார்த்தேன் படத்தின் பெயர் : போர்க்களம்  துணை வாசகம் :  KILL or Get Killed  !!!. தமிழக அரசு சலுகை அறிவிக்காமல் இருந்திருந்தால் படத்தின் தலைப்பே KILL or Get Killed ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பருத்தி வீரனின் கொடுமையான இறுதிக் காட்சி எரிச்சலடைய வைத்தது. அந்தப் படத்தை தமிழ் சனங்கள் நானூறு நாள் ஓட வைத்தனர். இந்தப் படத்தில் குருவின் அடியொற்றி இன்னும் சிலரைக் கொன்றிருக்கிறார் சசி குமார்.. மக்கள் ஒரு வெள்ளி விழாவையேனும் கொடுப்பார்கள்.

காட்சிகளை இயல்பாய் காட்டினால் அதுவே அற்புதமான படம் என சில அறிவு ஜீவிகள் நினைக்கின்றனர். அந்தப் படங்கள் நல்லாயில்லை என்று சொன்னால் ஏதோ அவர்களுடைய ரசனையின் மதிப்பு மக்கள் மத்தியில் பலவீனப்படுவதாக நினைக்கிறார்கள். நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக குசேலனைக் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

மீண்டும் ஒரு இரத்தக் களறியை நோக்கி நகர்கிறது தமிழ் சினிமா. பருத்தி வீரன் முன் மொழிய, சுப்ரமணிய புரம் வழிமொழிய வழியப்போகிறது திரைகளில் பிசுபிசுப்பாய் தமிழனின் ரசனையும், ரத்தமும்.

112 comments on “சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் !

 1. :)) மாறுப்பட்ட கோணத்திலே விமர்சனமே வரலைன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்..

  நீங்க எழுதிட்டிங்க… 🙂

  Like

 2. //மீண்டும் ஒரு இரத்தக் களறியை நோக்கி நகர்கிறது தமிழ் சினிமா. பருத்தி வீரன் முன் மொழிய, சுப்ரமணிய புரம் வழிமொழிய வழியப்போகிறது //
  மிக சரியாக எழுதியுள்ளீர்கள்.

  Like

 3. நானும் ரத்தத்தை எதிர்க்கிறேன்…ஒரு நாயகன் தாதாக்கதையாக வந்து ஆரம்பித்து இன்னும் தாதாக்களின் ரத்தக்களறி ஓயவில்லை…

  அதற்க்குள் இப்படி ஆரம்பித்துவிட்டனரா?

  பி.கு. : நான் இன்னும் இந்த இரண்டையும் பார்க்கவில்லை….

  Like

 4. சுப்ரமணியபுரத்தை இதனாலேயே பார்க்கவில்லை. பருத்திவீரன் பற்றி மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள். தமிழ் மக்களின் ரசனை அதீதமானது… வன்முறைக்காட்சிகளாகட்டும், கிளுகிளுப்புக்காட்சிகளாகட்டும் எல்லாமே அதீத விளிம்பு நிலையையே பிரதிபலிப்பது மிகுந்த வருந்தக்கூடிய விஷயம்தான்!

  Like

 5. சில வருடங்களுக்கு முன் இது போல் ஒரே தாதா படங்களாக வந்தது . இடையில் சிறிது இடைவேளை. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்

  Like

 6. இதுவும் கடந்து போகும்….படம் எனக்குப் பிடித்திருந்தது.எனது ஊரைப் பற்றிய கதை.தற்பொழுதும் அதே சூழல் தொடரும் கொடுமை. இது போன்ற படத்தைப் பார்த்தாலாவது வெட்கி,திருந்துவார்களா பார்ப்போம், என ஒரு நம்பிக்கை. இதுபோல் அலையும் வாலிபர்களுக்கு எச்சரிக்கை.பலமாக அனுபவப்பட்டவர்களுக்குத்(என்னைப் போல்) தெரியும். சாதியம்,காதல் எதிர்ப்பு போன்றவற்றைப் பற்றிய பதிவுகள் அவசியம்.வன்முறையைச் சற்று குறைத்திருக்கலாம் எனபது என் வாதம்.

  Like

 7. ஆட்டோவில் கழுத்தை அறுக்கும் காட்சி சற்று அதீத வன்முறைதான். ஆனால் அந்தக் காட்சிதான் திரையரங்குகளில் நிறைய கைதட்டலைப் பெறுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.. வேலையில்லா இளைஞர்கள் தங்களின் அன்புக்குரியவருக்காக கொலை செய்கிற மட்டும் போவார்களா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் கவனத்துக்குரியது. இது தமிழ் படங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை தருகிறது என்பது உண்மை.

  மெல் கிப்ஸனின், அபோகலிப்ப்டோ பாத்திருக்கிறீர்களா?

  Like

 8. மாறுபட்ட விமர்சனம். இம்மாதிரி படங்களை குடும்பத்தினருடன் பார்ப்பது கஷ்டமாகத்தான் உள்ளது…

  Like

 9. Xeviver Vannakam

  “இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை”

  yes xevier I have the same idea about that film

  Puduvai siva

  Like

 10. சேவியர்!

  சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதில் தோன்றியதை சொல்லாமல் விட்டால் நான் நல்லவன், உத்தமன் என்று பெயரெடுக்க முடியுமென்றாலும் தோன்றியதை அவ்வப்போது சொல்லிவிடுவதால் மனநோய்க்கு ஆளாகாமல் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

  குசேலன் படத்தை நீங்கள் புகழ்ந்து தள்ளியதும், சுப்பிரமணியபுரம் படத்தை நிராகரித்திருப்பதையும் காணும்போது வெகுஜனங்களோடு மாறுபட்டு நின்று தனித்து தெரிகிறோம் என்று காட்டத்தானோ என்று ஒரு சிறு ஐயம்.

  என் கருத்துக்கு விளக்கமெல்லாம் எதுவும் தர தேவையில்லை. இது என் கருத்து மட்டுமே 🙂

  Like

 11. //இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்.//

  அதுக்கும் விமர்சனம் எழுதலாமே?

  Like

 12. //படத்திலேயே தெரிகிறது.//

  அதுக்கெல்லாம் ஞானக் கண் வேணூமாண்ணே.. எனக்கு தெரியலிங்களே…

  Like

 13. //சோக் நகர் சைக்கோக் கொலையாளி//

  ஓ… இவங்க ரெண்டு பேரும் தானா அது. படத்துக்காக கொலை செய்து பார்த்து ட்ரேய்னிங் எடுத்திருப்பாங்களோ.

  Like

 14. //:)) மாறுப்பட்ட கோணத்திலே விமர்சனமே வரலைன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்..//

  மாறுபட்டக் கோணத்துக்காக எழுதவில்லை. மனதில் பட்டதை எழுதினேன் 😀

  Like

 15. //இந்தப் படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக குசேலனை//

  குலேலனைப் பார்ப்பதற்கு பதிலாக நாயகனைப் பார்க்கலாமே?

  சுப்ரமணியபுரத்தில் கிளு கிளுப்பு காட்சிகள் ஏதும் இல்லாமல் போர் அடிச்சிட்டாங்கண்ணே. என்ன மாதிரி நல்ல பசங்களும் படம் பார்கிறாங்கனு தெரிய வேண்டாமா அவுங்களுக்கு.

  Like

 16. ////மீண்டும் ஒரு இரத்தக் களறியை நோக்கி நகர்கிறது தமிழ் சினிமா. பருத்தி வீரன் முன் மொழிய, சுப்ரமணிய புரம் வழிமொழிய வழியப்போகிறது //
  மிக சரியாக எழுதியுள்ளீர்கள்.//

  நன்றி சந்திரன். உலகமே பாராட்டுகிறது என்பதற்காக அனைத்தையும் கண்மூடித் தனமாக ஆதரிக்காத உங்கள் மனதுக்கு நன்றிகள்.

  Like

 17. //
  நானும் ரத்தத்தை எதிர்க்கிறேன்…ஒரு நாயகன் தாதாக்கதையாக வந்து ஆரம்பித்து இன்னும் தாதாக்களின் ரத்தக்களறி ஓயவில்லை…

  அதற்க்குள் இப்படி ஆரம்பித்துவிட்டனரா?

  பி.கு. : நான் இன்னும் இந்த இரண்டையும் பார்க்கவில்லை
  //

  பாருங்க, உங்களுக்கே புரியும் 🙂

  Like

 18. //சுப்ரமணியபுரத்தை இதனாலேயே பார்க்கவில்லை. பருத்திவீரன் பற்றி மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள். தமிழ் மக்களின் ரசனை அதீதமானது… வன்முறைக்காட்சிகளாகட்டும், கிளுகிளுப்புக்காட்சிகளாகட்டும் எல்லாமே அதீத விளிம்பு நிலையையே பிரதிபலிப்பது மிகுந்த வருந்தக்கூடிய விஷயம்தான்!//

  உண்மை ! நன்றி.

  Like

 19. //சில வருடங்களுக்கு முன் இது போல் ஒரே தாதா படங்களாக வந்தது . இடையில் சிறிது இடைவேளை. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்//

  ஆமா.. இனிமே கலைக் கண்ணோட்டத்தில் நிறைய கொலைப்படங்கள் வரும்… !

  Like

 20. //வன்முறையைச் சற்று குறைத்திருக்கலாம் எனபது என் வாதம்.
  //

  நன்றி தமிழ்ப்பறவை. உங்கள் பார்வைக்கு.

  Like

 21. //ஆட்டோவில் கழுத்தை அறுக்கும் காட்சி சற்று அதீத வன்முறைதான். //

  அதே !

  //
  மெல் கிப்ஸனின், அபோகலிப்ப்டோ பாத்திருக்கிறீர்களா
  //

  ஐயோ… அதைப் பற்றி சொல்லாதீங்க.

  Like

 22. //மாறுபட்ட விமர்சனம். இம்மாதிரி படங்களை குடும்பத்தினருடன் பார்ப்பது கஷ்டமாகத்தான் உள்ளது…//

  உண்மை சரவணகுமார். குழந்தைகளோடு படம் பார்க்கும் போது வரும் அவஸ்தை பாசமுள்ள பெற்றோருக்குத் தான் தெரியும்.

  Like

 23. //Xeviver Vannakam

  “இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை”

  yes xevier I have the same idea about that film

  Puduvai siva
  //

  நன்றி புதுவை சிவா.

  Like

 24. //சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதில் தோன்றியதை சொல்லாமல் விட்டால் நான் நல்லவன், உத்தமன் என்று பெயரெடுக்க முடியுமென்றாலும் தோன்றியதை அவ்வப்போது சொல்லிவிடுவதால் மனநோய்க்கு ஆளாகாமல் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.//

  அந்த ஒரே காரணத்துக்காகத் தான் மிக நெருக்கமான அறிவு ஜீவிகளெல்லாம் புகழ்ந்து தள்ளும் விஷயத்தைப் பற்றி கூட என் மனதுக்குப் பட்டதையே சொல்லி விடுகிறேன். புரியாத கவிதையைப் படித்து எல்லோரும் கை தட்டுகிறார்கள் என தட்டும் குழுவில் நான் இல்லை. அதனால் தான் மன நோயோ, மன அழுத்தமோ இல்லாமல் இருக்கிறேன் 😀

  //
  குசேலன் படத்தை நீங்கள் புகழ்ந்து தள்ளியதும், சுப்பிரமணியபுரம் படத்தை நிராகரித்திருப்பதையும் காணும்போது வெகுஜனங்களோடு மாறுபட்டு நின்று தனித்து தெரிகிறோம் என்று காட்டத்தானோ என்று ஒரு சிறு ஐயம்.//

  குசேலனை புகழ்ந்து தள்ளவில்லை விமர்சனங்கள் சொல்லுமளவுக்கு மோசமில்லை என்று தான் சொன்னேன். சுப்பிரமணிய புரம் மோசமென்று நான் எழுதிய போது என்னைத் திட்டி மட்டுமே பின்னூட்டங்கள் வரும் என நினைத்தேன். ஆனால் எனது பார்வையே பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை அறியும் போது வெகுஜனங்களோடு சேர்ந்து தான் இருக்கிறேன் எனும் மகிழ்ச்சி தலை தூக்குகிறது. 🙂

  //

  என் கருத்துக்கு விளக்கமெல்லாம் எதுவும் தர தேவையில்லை. இது என் கருத்து மட்டுமே
  //

  கருத்துக்கும், வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙂

  Like

 25. //சுப்ரமணியபுரத்தில் கிளு கிளுப்பு காட்சிகள் ஏதும் இல்லாமல் போர் அடிச்சிட்டாங்கண்ணே//

  அடடா !!! மலேஷியாவில இல்லாத கிளு கிளுப்பு படமா தம்பி 😉

  Like

 26. /அதுக்கெல்லாம் ஞானக் கண் வேணூமாண்ணே.. எனக்கு தெரியலிங்களே//

  டான்ஸ் வருதான்னு மட்டுமே பாத்திட்டு இருந்தா வேற ஒண்ணும் தெரியாதுப்பா…

  Like

 27. சேவியர்,
  //காட்சிகளை இயல்பாய் காட்டினால் அதுவே அற்புதமான படம் என சில அறிவு ஜீவிகள் நினைக்கின்றனர். அந்தப் படங்கள் நல்லாயில்லை என்று சொன்னால் ஏதோ அவர்களுடைய ரசனையின் மதிப்பு மக்கள் மத்தியில் பலவீனப்படுவதாக நினைக்கிறார்கள். நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. //

  உங்களின் இந்தக் கருத்தோடு நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.
  நான் இந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. காரணம், விமர்சனம் படித்தபொழுதே, இந்தப் படத்தயெல்லாம் என்னால் ரசிக்க முடியாது என்பது புரிந்தததால். பருத்திவீரனும் இன்னும் பார்க்கவில்லை. நானும் அறிவு ஜீவி கிடையாது!!

  Like

 28. நன்றி யோசிப்பவர். மனதைக் களங்கப்படுத்தாத திரைப்படங்களே இன்றைய உலகிற்குத் தேவை. கலை மனித மதிப்பீடுகளைக் கட்டியமைப்பதாக இருப்பதே சமூகத் தேவை.

  Like

 29. //ஆனால் எனது பார்வையே பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை அறியும் போது //

  ஹி ஹி ஹி… ஐயோ ஐயோ…. பதிவு எழுதுறது தப்புனு சொல்லி ஒரு பதிவு போட்டு பாருங்க அத ஆதரிச்சி கூட ஒரு பத்து பின்னூட்டம் விழும். அதாவது ஒத்தக் கருத்துடைய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என சொல்ல வரேன்.

  Like

 30. //குசேலனை புகழ்ந்து தள்ளவில்லை விமர்சனங்கள் சொல்லுமளவுக்கு மோசமில்லை என்று தான் சொன்னேன். சுப்பிரமணிய புரம் மோசமென்று நான் எழுதிய போது என்னைத் திட்டி மட்டுமே பின்னூட்டங்கள் வரும் என நினைத்தேன். ஆனால் எனது பார்வையே பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை அறியும் போது வெகுஜனங்களோடு சேர்ந்து தான் இருக்கிறேன் எனும் மகிழ்ச்சி தலை தூக்குகிறது.//

  குசேலன் தோல்வி அடைந்ததும், சுப்பிரமணியபுரம் வெற்றி அடைந்ததைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

  Like

 31. //அதாவது ஒத்தக் கருத்துடைய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என சொல்ல வரேன்.
  //

  அதானே பாத்தேன் !

  Like

 32. //
  குசேலன் தோல்வி அடைந்ததும், சுப்பிரமணியபுரம் வெற்றி அடைந்ததைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
  //

  அதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கிறதில்லையே 🙂 படம் பாத்தோமா, புடிச்சிருந்துதா ? இல்லையா… அவ்ளோ தான் நம்ம ஏரியா. 🙂

  Like

 33. வன்முறை அதிகமாக இருந்தால் அது சைக்கோ படமா?????
  அப்படி பார்த்தால் இப்போது தமிழில் வரும் பல படங்கள் சைக்கோ படங்களே!!!

  Like

 34. அன்பு சேவியர்,
  இந்த படத்தை பார்க்க அறிவுஜீவியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரே ஆள் ஐம்பது பேரை பந்தாடுவதும் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும், கதாநாயகி உடைமாற்றுவதை திருட்டுத்தனமாக ரசிப்பதும் என நடைமுறைக்கு ஒத்துவராத காட்சிகளுடன் கூடிய படங்கள் தான் நல்ல படங்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ என தோன்றுகிறது.

  சுப்ரமணியபுரத்தில் சில காட்சிகள் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம். அதற்காக படத்தை சைக்கோ படம் என்ற ரீதியில் விமர்சனம் செய்வது எதற்கு என புரியவில்லை.

  Like

 35. அன்பு சேவியர்,
  இந்த படத்தை பார்க்க அறிவுஜீவியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரே ஆள் ஐம்பது பேரை பந்தாடுவதும் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும், கதாநாயகி உடைமாற்றுவதை திருட்டுத்தனமாக ரசிப்பதும் என நடைமுறைக்கு ஒத்துவராத காட்சிகளுடன் கூடிய படங்கள் தான் நல்ல படங்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ என தோன்றுகிறது.

  சுப்ரமணியபுரத்தில் சில காட்சிகள் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம். அதற்காக படத்தை சைக்கோ படம் என்ற ரீதியில் விமர்சனம் செய்வது எதற்கு என புரியவில்லை.

  Like

 36. சேவியர்ஜி..

  வாழ்ந்து கெட்டவர்களின் கதையை கிட்டத்தட்ட நம்பும்விதத்தில் பெருவாரியான மக்களுக்குப் பிடிக்கும்வகையில் காட்சிகளை கற்பனையில் வடித்து நாடக ஆக்கத்தைப் போல் படமாக்கியிருக்கும் ஒரு விஷயம் இது.. வன்முறை இதில் இருக்கத்தான் செய்யும். படத்தின் அடிநாதமே வன்முறையால் கெட்டவர்களின் கதை என்பதுதான்..

  நானும் எனது விமர்சனத்தில் எழுதியிருந்தது போல் கழுத்தறுப்பு காட்சிகளிலெல்லாம் கை தட்டல்கள் பிறக்கிறது எனில் மக்களின் மனோபாவங்கள் மாறிவிட்டன என்றுதான் அர்த்தம். அந்த மாற்றத்தை உண்டு பண்ணியது சினிமா மட்டுமே அல்ல.. நாட்டின் இயல்பும்தான்..

  தினம், தினம் படுகொலைகள், பழிக்குப் பழி வாங்கல்கள் என்று நாடு முழுக்கவே நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இதனைப் படிக்காத நாட்களே இல்லாத ஒரு நிலையில் மக்கள் இதனை மிக எளிதாகத்தானே எடுத்துக் கொள்வார்கள். அல்லது எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள்..

  இதில் சைக்கோ என்று நீங்கள் கூறியிருப்பது ஒரு கொலைகாரக் கூட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றியத் திரைப்படம்தான் இது.. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்காது.. கொஞ்ச நாட்கள்தான்.. வேறு ஏதாவது ஒரு திரைப்படம் வந்து திசை திருப்பத்தான் செய்யும்.. இப்போது இந்த சீஸன் என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்..

  வெட்டுக்குத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களும் வெற்றி பெறவில்லையே.. ஒரு பருத்திவீரன், ஒரு சுப்பிரமணியபுரம்தானே..

  இவைகளுக்கும் பிரதிநிதித்துவம் நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிடில் இதனுடைய பாதிப்புகள் எவை என்பதும் நமது சந்ததியினருக்குத் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.

  உங்களுடைய வித்தியாசமான பார்வைக்கு எனது வாழ்த்துகள்..

  Like

 37. //நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும், கதாநாயகி உடைமாற்றுவதை திருட்டுத்தனமாக ரசிப்பதும் என நடைமுறைக்கு ஒத்துவராத காட்சிகளுடன் கூடிய படங்கள் தான் நல்ல படங்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ//

  எப்போது அப்படி சொன்னேன் என்பதைச் சொல்லி விட்டு விவாதியுங்கள்.

  Like

 38. உண்மைத் தமிழன், உங்கள் மனம் திறந்த விரிவான, வெளிப்படையான, அர்த்தமுள்ள பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல. எடுத்தோம் கவிழ்த்தோம் அவமானப்படுத்தினோம் என இல்லாமல் சக மனித கரிசனையோடு நீங்கள் அணுகிய விதம் மனதை தொடுகிறது.

  நன்றிகள் பல.

  Like

 39. சுப்பபிரமணியபுரம் , பருத்தி வீரன் , பிதா மகன் சேர்த்து ஒரு முடிச்சுப்போடலாம் – அந்த முடிச்சு வன்முறை.

  எதுக்கு கஞ்சாக் கருப்பு அவன் நண்பனைக் காட்டிக் கொடுக்கனும்?

  துரோகம், நட்பு, காதல் எதற்கும் காரணம் தேவையில்லை என்றாலும் இவை அனைத்தும் ஒரே படத்தில் அர்த்தங்களின்றி வருவது அந்த படத்தை அநர்த்தமாக்கி விட்டது.
  ஒரு வேலை சசி அதைத் தான் சொல்கிறாறோ – வாழ்க்கையே அநர்த்தம் என்று 🙂

  விருது கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது இதுவே.

  Like

 40. குசேலன், சுப்ரமணியபுரம் இரண்டுக்குமே என்னைவிட மாற்றுக் கருத்து கொண்டுள்ளீர்கள்.
  வன்முறையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கதை என்பதால், சுப்ரமணியபுரம் அவ்வாறு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆட்டோவில் வைத்துக் கொலை செய்த சம்பவம் ஏதோ மிதமிஞ்சிய கற்பனை இல்லை. இந்த நாட்டில் நடந்தேறியிருக்கிறது.
  நிச்சயமாக இது குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய படம் இல்லை. படத்திற்கு A சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

  இது ஒரு சைக்கோத் திரைப்படமா?
  வேட்டையாடு விளையாடு படத்தில் இரண்டு பேர் வருகிறார்களே, பெண்களைக் கெடுத்துக் கொலை செய்து, விரல்களைத் தொங்கவிட்டு, அது தான் என்னைப் பொறுத்தவரையில் ஒரு சைக்கோத் திரைப்படம். பரமனும், அழகரும் சைக்கோ கொலைகாரர்கள் இல்லை. நம் நாட்டு அரசியல்வாதிகளால் இன்றும் கூட உருவாக்கப்படுகிற அடியாட்களில் இருவர்.

  மனிதர்கள் எப்போதும் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பவர்கள்.
  ராமனும் ராவணனும் நமக்குள்ளேயே இருக்கின்றனர்.
  நாம் எப்போதுமே ஒரு கதாபாத்திரத்தை ராமனாகவோ, ராவணனாகவோப் பார்க்கத் தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். அப்படியில்லாமல் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், எப்படி ராவணனாக மாற்றப் படுகிறார்கள் என்பதை நடுநிலையில் இருந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
  எந்த ஒரு இடத்திலும், அவர்கள் நல்லவர்கள் என்றும் சொல்லவில்லை. கெட்டவர்கள் என்றும் சொல்லவில்லை. அவர்கள் இரண்டும் கலந்தவர்கள்;உங்களையும் என்னையும் போன்ற சக மனிதர்கள்; எனக்குத் தெரிந்தவரை இயக்குனர் இதை [இந்த நடுநிலையை] செவ்வனே செய்து இருக்கிறார். அது தான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

  இவை என்னுடைய கருத்துக்கள். எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை.

  சதீஷ்.

  Like

 41. சேவியர் கலைப்படைப்பை அதன் முழு பரிமாணத்தோடு நீங்கள் விமர்சனம் செய்ய முயலவில்லை என்று தோன்றுகிறது.

  முதலாவது அதீத வன்முறைக்காட்சிகள் இருப்பதாலேயே இதை ஒரு சைக்கோப்படம் என்று சொல்லி இருப்பது. எல்லா திரைப்படங்களும் “வானத்தைப் போல” மாதிரியே வந்திருந்தால் ஒரே ஹிஸ்டீரியா டைப்பாய் போயிருந்திருக்கும். போக்கிரி, திருப்பாச்சி, சரவணா போன்ற படங்களின் பின்னால் சொல்லி இருக்கும் வன்முறைகளுக்கும், இந்த படத்தில் நிறைந்திருக்கும் வன்முறைகளுக்கும் அதிகமாகவே வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் வன்முறைக்காட்சிகளை வைத்து படங்களை புறம் தள்ள ஆரம்பித்து விட்டால் அபோகாலிப்டோ, ப்ரேவ்ஹார்ட், டியர்ஸ் ஆஃப் த சன், சேவிங் பிரைவேட் ரியான், எனிமி அட் த கேட்ஸ், ப்ளாக் ஹாக் டவுன்… இன்னும் பல படங்களை நாம் பார்க்காமலே இருந்திருக்க வேண்டும்.

  நான் மேலே சொல்லி இருக்கும் படங்கள் எல்லாமே வெகு சன ரனைக்குட்பட்ட படங்களே. அறிவு ஜீவிகளுக்காக என்று எடுக்கப்பட்ட படங்கள் அல்ல.

  சேவியர் ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாய் தமிழ் சினிமா தமிழ் மக்களை, தமிழ் மண்ணை, தமிழர்களின் பழக்க வழக்கங்களை பதிவு செய்யாமl இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. எப்போதாவது வரும் ஒரு சில படங்கள் மட்டும் இன்னும் ஒரு பிடிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

  முதலில் சுப்ரமண்யபுரம் ஒரு அறிவு ஜீவிப் படமே இல்லைங்க. இப்போதெல்லாம் வெகுஜன ரசனை, வணிக சினிமா, மக்கள் விரும்புவது என்ற பெயரில் தான் இத்தகைய சினிமாக்களின் நியாயங்கள் சுட்டிக்காட்டப் படுகிறது. இங்கே வருந்தத் தக்க விஷயமே இத்தகைய சினிமாக்கள் மட்டும்தான் சரியானவை என்று அவ்வப்போது எதிர்படும் சில குரல்கள்.

  ஆச்சர்யமாய் போய் விட்டது. அந்தக் குரல்களில் உங்களுடையதும் சேர்ந்து ஒலித்த போது.

  பதிவர் முரளி கண்ணன் ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக்காடியது போல தமிழ் தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் சிலவான “சிறு நகரங்களின் மீதான புறக்கணிப்பு”, தனி மனித ஆராதனை செய்யும் வகையிலான படங்கள், நுகர்வுப்பண்டங்களாய் பயன்படுத்தப் படும் நாயகிகள் மற்றும் துணை நடிகைகள், காதல் என்ற ஒன்றைத் தாண்டி படங்கள் எடுக்க முன்வராதது என்று பல இருக்கின்றது.

  கருப்புசாமி குத்தகைதாரர் என்ற ஒரு படத்தை சில நாட்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருந்த போது, உரையாடல்களின் போது என்னவோ வித்தியாசமாய் தென்பட்டது. கவனிக்கையில்தான் புலப்பட்டது நாயகன் கரணை அவரது நண்பர்கள் வாடா போடா என்றும், திட்டியும் கூப்பிடுவார்கள். எத்தனை படங்களில் நாயகர்கள் சாதாரணமானவர்களாய் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் களையப்பட வேண்டிய குறைபாடுகள் எக்கச்சக்கமாய் மலிந்து கிடக்கின்றன.

  குசேலன் படமும் இவை மற்றும் இன்னும் பல குறைபாடுகளையும் தன்னகத்தே கொண்டு வந்திருக்கும், திரைப்படமே. அந்த படம் உங்களுக்கும் பிடித்துப் போவதற்கும் எனக்கோ அல்லது மற்றவர்க்கு பிடிக்காமல் போவதற்கோ பல காரணங்களிருக்கலாம். அவை தனிப்பட்ட உரிமைகளும் கூடவே. அதை மறுக்கவுமில்லை.

  ஆனால் சுப்ரமணிய புரம் போன்றதொரு திரைப்படத்தை சைக்கோப்படம் என்று சொல்வது உறுத்தலாய் இருக்கிறது. தவறாய் நினைத்துக் கொள்ளாதிர்கள். அதிர்ச்சி மதிப்பீடுகளிற்காக வைக்கப்பட்ட தலைப்போ என்று ஒரு கணம் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. இன்னொரு உறுத்தல் அறிவு ஜீவிகளுக்கான படம் என்று சொல்லி தவறான, சினிமா எனும் காட்சி ஊடகத்தை சரியாய் புரிந்து கொள்ளாமல், வெளி வரும் படங்களை ஆதரிப்பது. கெட்ட வார்த்தைகளாக்கப்பட்டு விட்ட வார்த்தைகளில் இந்த அறிவாளிகள் என்ற வார்த்தையை தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

  இங்கே உங்களது சுப்ரமண்ய புரம் விமர்சனமும் சரி குசேலனின் விமர்சனமும் சரி இரண்டையுமே அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் மட்டுமே அணுகியிருக்கிறீர்கள். அதனைத்தாண்டியதான கட்புல ஊடகத்தின் மீதான விமர்சனமாய் அமைய வில்லை என்பது எனது கருத்து.

  //இவைகளுக்கும் பிரதிநிதித்துவம் நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிடில் இதனுடைய பாதிப்புகள் எவை என்பதும் நமது சந்ததியினருக்குத் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.//

  இதை இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன். இன்னும் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களை பக்கம் பக்கமாய் பட்டியலிடலாம்தான். இந்த சூழ் நிலையில் வந்திருக்கும் இது போன்ற படம் கோடை மழையப் போன்று ஒரு சிலீர் பரவசத்தை உண்டு பண்ணியிருக்கும் வேளையில் நீங்கள் இந்த விமர்சனத்தை வைத்திருக்கிறீர்கள்.

  பார்வையாளார்களை முட்டாள்களாய் நினைத்து எடுக்கப்படும் எந்த படத்தைப் பார்க்கும் போதும் சுய மரியாதையின் பொருட்டு எனக்குள் கோபம் எழுவது தவிர்க முடியாதாய் விட்டது. குசேலன் உள்ளிட்ட பல வணிகப்படங்கள் அந்த ரகத்தினைச் சேர்ந்தவையே. இதற்கு அர்த்தம் எல்லா படங்களும் உலக சினிமா தரம் சார்ந்ததாகவோ அல்லது பொழுது போக்கு அம்சமற்றதாய் வர வேண்டும் என்பதல்ல. கில்லி, மொழி,காதல், சந்திரமுகி போன்றவையும் வணிக ரீதியிலான படங்கள்தான். ஆனால் குசேலன், குருவி போன்ற திரைப்படங்கள் அப்படிப்பட்டதல்ல. பார்வையாளர்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயலும் இன்னொரு முயற்சி அவ்வளவே.

  பி.கு: நீங்கள் சொல்வது தவறு. நான் சொல்வதுதான் சரி என்று எதையும் நிறுவ வர வில்லை. எனது பார்வையில் உங்களது விமர்சனம் தவறான கண்ணோட்டம் என்பதே. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றி.

  Like

 42. //இப்படிப் பட்ட திரைப்படங்களின் வெற்றி மீண்டும் சைக்கோ இயக்குனர்களை தமிழுக்கு இறக்கு மதி செய்துவிடுமோ எனும் பயம் மிளிர்கிறது. // உங்களின் பல வரிகளை ரிப்பீட்டு போட வேண்டியிருப்பதால் மொத்த பதிவுக்குமே ஒரு ரீப்பீட்டு. நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று வைத்திருக்கிறேன், குருவிக்கு எழுதியதே போதும். என் மனதிலும் இதை ஒட்டியே கருத்துகள் இருந்தன.

  ஒரு வெற்றியை அடுத்து நம் ஆட்கள் எளிதாக அடுத்த தளத்துக்கு பயணிப்பார்கள். பருத்தியில் இருவர், இதில் பலர், அடுத்து சுமார் 50, 60, அதன்பின்னர் தியேட்டரிலேயே அரிவாளை வைத்துக்கொண்டு நிற்பார்கள், நம்மை வெட்டிச்சாய்ப்பார்கள்..

  சமூகத்திலிருந்தே கதைகள் வருகின்றன என்று ஜல்லியடிப்பார்கள். சிறுபான்மை விஷயங்களை ஏன் எடுத்துக்கொள்கிறார்கள் / கொல்கிறார்கள்? கனியிருப்ப ஏன் காயைக் கவர்கிறார்கள்.?

  நல்ல பதிவு, வாழ்த்துகள் சேவியர்.! (அதே நேரம்.. உங்கள் பிற பதிவுகளை நான் இன்னும் படித்ததில்லை, ஆகவே லக்கி கூறுவது உண்மையாக இருக்குமானால் அவருக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கொள்கிறேன்)

  Like

 43. //1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்.

  //

  same thing applies to your bible stories correct ? :-))
  I assume you are the one who posted some bible-based stories correct? If I am wrong I am sorry.

  If some one wanted to know who had how any wives and why he had babies with servant can retrieve from the root source correct? why on the earth anyone wants your book? :-))))) …but you wanted to write and it is reaching some people who looks for stories correct ?

  **

  I know this is just your view about the movie and you are not generalizing that, but you should have the same scale for your also correct?

  Even for a very worst movie (/story/..anything … ) in the world there was a team/individual behind that and they tried their level best to deliver a best based on what they believed in and of course within their limits. They did just to make their living or just out of some interest.

  If this movie is rated as an A for its violence then you must have avoided that.

  No offence just wanted to say.

  The only thing I am worried about Tamil movie and the Tamil moviegoers is both never cared about the movie ratings. Even for an A rated movie you can see a 6 year old Kid with their father and mother. Education is nothing to do here; I always see almost all colors of people doing this. Forget about the people like our fathers/mother generation, you can see this behavior in current so-called IT generation too.

  The only thing I am worried about tamil movie and the tamil movie goer si both do not care about the movie ratings. Even for a A rated movie you can see a 6 year old Kid with their father and mother. Education is nothing to do here, I always see almost all colors of people doing this.

  If any movie (Ex:Subramaniapuram) associated with violence then censorship board to rate the movie according to its rating system. If you say Subramaniapuram is a violent one , then movie should be rated as 18 and above ‘A’.

  If a movie is rated as ‘A’ as 18 and above then people should respect the rating.

  If this movie is not rated appropriately the blame is not on the censorship board. Movies primary aim is to entertain, with/without violence/sex/good/bad/etc…. Individual need to decide the kind of entertainment they want.

  Like

 44. அன்பின் சேவியர்,

  சமீபத்தில் தமிழில் வந்த மிக படங்களில் மிக நல்லப் படம் என நான் மதிப்பிட்டிருப்பது இந்த படத்தைதான்.ஊர் உலகத்தில் நிகழாதது ஏதும் சொல்லப்படவில்லையே இந்த படத்தில்?!

  சரி , போக்கிரி , திருப்பாச்சி யில் இல்லாத வன்முறையா? இந்த படத்தில் இருக்கிறது?!

  Like

 45. Ok… Xaviar I found the link for the story that I mentioned earlier.

  http://xavi.wordpress.com/2008/07/04/jacob/

  You know what .. you narrated a story (or had interested to bring a simple version of bible story) which has violence too ..

  **

  Without acceptance from a girl how come a man can have sex with her?
  That is the worst violence compare to any thing you have mentioned here about the Subramaniyaburam. :-))) correct ?

  A man had interested on one girl but ended up marrying the other girl…later he marries the same old lover… having sex with servants without their consent …just by the request of wives to make babies … it goes like that…

  you never thought about the servant and the violence used on her correct?
  I would say that is the worst violence compared to this movie.

  **

  So you have multiple ‘violence scales’ one for your story and for other people story.

  If you say that is from bible and very old time…something like … ‘some one just recorded the happenings as a story’…. then you need to look outside to see what is the reality here.

  Maduari Tha. Krishanan murder is the one example.

  May be this movie register the Tamil politics culture for future generation like your story.

  Like

 46. சுப்பிரமணியபுரம் 2008ல் நடப்பதாக காட்டியிருந்தால்,வாகனங்கள் , ஆயுதங்கள் மாறியிருக்கும், அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு சராசரி வன்முறை படம் ஆகியிருக்கும். இக்கால வன்முறை நாயகர்கள் முன்னால் இப்படம் கவனிக்கப்படாமல் போயிருக்கும். இயக்குனரின் உத்தி புத்திசாலித்தனமானது, ஆனால் வன்முறை இல்லாமல் ஒரு அழகான 80களை எடுத்திருக்கலாம் குறைந்தபட்சம் வன்முறை காட்சிகளை காண்பிக்காமல் உணர்த்தியிருக்கலாம்.

  Like

 47. //மனிதர்கள் எப்போதும் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பவர்கள்.
  ராமனும் ராவணனும் நமக்குள்ளேயே இருக்கின்றனர்.
  நாம் எப்போதுமே ஒரு கதாபாத்திரத்தை ராமனாகவோ, ராவணனாகவோப் பார்க்கத் தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். அப்படியில்லாமல் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், எப்படி ராவணனாக மாற்றப் படுகிறார்கள் என்பதை நடுநிலையில் இருந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.//

  நன்றி சதீஷ். வருகைக்கும், உங்கள் கருத்தை தெளிவாகப் பதிவு செய்தமைக்கும்.

  Like

 48. // நீங்கள் சொல்வது தவறு. நான் சொல்வதுதான் சரி என்று எதையும் நிறுவ வர வில்லை//

  நன்றி நந்தா… வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும்.

  சுப்ரமணியபுரம் படம் நல்லாயில்லை என்று சொல்வதே ரசனையற்றவனின் பார்வை எனும் குரலையே உங்கள் வார்த்தைகளும் பிரதிபலிக்கின்றன. இருந்தாலும் தனிநபர் பாய்ச்சலற்ற உங்கள் விரிவான விமர்சனத்துக்கு நன்றிகள். 🙂

  Like

 49. //நல்ல பதிவு, வாழ்த்துகள் சேவியர்//

  நன்றி தமிரா… பிடிக்காத விஷயத்தைப் பிடிக்கவில்லை என சொல்லும் நேர்மையை இப்போதெல்லாம் அரிதாகவே காண முடிகிறது. எனக்குப் பிடித்திருந்தால் எல்லோருக்கும் பிடித்ததாய் தான் இருக்கவேண்டும் எனும் வன்முறை கருத்துத் திணிப்பையே பலரும் நியாயப்படுத்துகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

  Like

 50. //சரி , போக்கிரி , திருப்பாச்சி யில் இல்லாத வன்முறையா? இந்த படத்தில் இருக்கிறது?!//

  நன்றி பிரியன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  ஒன்று மட்டும் எனக்குப் புரியவே இல்லை. சுப்ரமணிய புரம் நல்லாயில்லை என்று சொன்னால் அதைவிட மோசமான படங்களைப் பட்டியலிட்டு நியாயம் கற்பிக்க முயல்வது ஏனோ ? நான் என்ன திருப்பாச்சி படத்துக்கு ஆஸ்கார் கொடுக்கவேண்டும் என்று சொன்னேனா. அந்தப் படங்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதியதில்லை 🙂

  ஊடகங்கள் படத்தைப் பிரபலப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர் என்பது தான் உண்மை. படம் பார்த்து முடிக்கும் போது இதுக்குத் தான இத்தனை ஆர்ப்பாட்டமா சே… என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

  Like

 51. //சுப்பிரமணியபுரம் 2008ல் நடப்பதாக காட்டியிருந்தால்,வாகனங்கள் , ஆயுதங்கள் மாறியிருக்கும், அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு சராசரி வன்முறை படம் ஆகியிருக்கும். இக்கால வன்முறை நாயகர்கள் முன்னால் இப்படம் கவனிக்கப்படாமல் போயிருக்கும். இயக்குனரின் உத்தி புத்திசாலித்தனமானது, ஆனால் வன்முறை இல்லாமல் ஒரு அழகான 80களை எடுத்திருக்கலாம் குறைந்தபட்சம் வன்முறை காட்சிகளை காண்பிக்காமல் உணர்த்தியிருக்கலாம்//

  அன்பின் குடுகுடுப்பை… உங்கள் இந்தப் பின்னூட்டம் ஒன்றே போதும் ஒட்டு மொத்தமாய் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அழகான பதிலாய்.

  நன்றிகள் பல.

  Like

 52. //சுப்ரமணிய புரம் நல்லாயில்லை என்று சொன்னால் அதைவிட மோசமான படங்களைப் பட்டியலிட்டு நியாயம் கற்பிக்க முயல்வது ஏனோ ?//

  ஒன்று ஏன் படம் பிடிக்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கத்தைத் தரலாம். அல்லது பின்னூட்டப் பெட்டியை மூடி வைக்கலாம்.

  தமிழக மக்கள் (பொதுவா இந்திய மக்கள்னும் வச்சிக்கலாம்) திரை ஊடகத்தை பார்க்கும் பார்வைக்கும், மற்றவர் பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. திரைப்படம் நீதிக் கருத்துக்களை போதிப்பதற்கும், அரசியல் சித்தாந்தாங்களை தெரிவிப்பதற்கும், மக்களின் ஏழ்மை/இல்லாமையை மறக்கச் செய்யும் போதையாக மட்டுமே கருத வேண்டியதில்லை. அதைத் தாண்டி திரை ஊடகத்தின் வீச்சை உணர்ந்து, அது வாழ்க்கையை, சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் காண முடிந்தால் நந்தா கூறும் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றுப் பார்வையினை புரிந்து கொள்ள, இந்தியாவில் திரைப்படத்தின் இலக்கணங்களின் வரைமுறையைத் தாண்டி எடுக்கப்பட்ட அயல் நாட்டுப் படங்களைப் பாருங்கள் என்றால், அது சக பதிவர்களை கேலி செய்வது போலிருக்கும். மன்னிக்கவும், ஆனால் கூறாமல் இருக்க முடியவில்லை.

  Like

 53. //ஒன்று ஏன் படம் பிடிக்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கத்தைத் தரலாம். .//

  படத்தில் என்ன பிடித்திருக்கிறது, என்ன பிடிக்கவில்லை, ஏன் பிடிக்கவில்லை என்பதை விமர்சனத்திலேயே சொல்லியிருக்கிறேன்

  //

  தமிழக மக்கள் (பொதுவா இந்திய மக்கள்னும் வச்சிக்கலாம்) திரை ஊடகத்தை பார்க்கும் பார்வைக்கும், மற்றவர் பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. திரைப்படம் நீதிக் கருத்துக்களை போதிப்பதற்கும், அரசியல் சித்தாந்தாங்களை தெரிவிப்பதற்கும், மக்களின் ஏழ்மை/இல்லாமையை மறக்கச் செய்யும் போதையாக மட்டுமே கருத வேண்டியதில்லை. அதைத் தாண்டி திரை ஊடகத்தின் வீச்சை உணர்ந்து, அது வாழ்க்கையை, சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் காண முடிந்தால் நந்தா கூறும் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். //

  நந்தா கூறும் கருத்துக்களை புரிந்து கொண்டேன் ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தான் புரியவேயில்லை.

  இன்னொன்று சொல்ல வேண்டியிருக்கிறது. கலையை வெறும் கலைக்கண்ணோடு மட்டும் பார்க்க வேண்டும் என்னும் கொள்கை எனக்கிருந்தால் பேசாமல் வழக்கம் போல குறும்படங்களை மட்டுமே பார்த்து காலம் தள்ளிக் கொண்டிருப்பேன். திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தின் வீரியத்தை உணர்ந்ததால் தான் கலாச்சாரச் சீரழிவை படுக்கையறை வரை வினியோகிக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எதிராகவும், கலை எனும் போர்வையில் வினியோகிக்கப்படும் “துரோகம் ஒன்றும் தவறில்லை” எனும் போதனைகளுக்கு எதிராகவும் அவ்வப்போது எழுத நேர்ந்து விடுகிறது. அது உங்களை ரொம்பவே உறுத்துகிறதெனின் மன்னியுங்கள்.

  //

  இந்த மாற்றுப் பார்வையினை புரிந்து கொள்ள, இந்தியாவில் திரைப்படத்தின் இலக்கணங்களின் வரைமுறையைத் தாண்டி எடுக்கப்பட்ட அயல் நாட்டுப் படங்களைப் பாருங்கள்
  //

  நான் இந்தியப் படங்களைப் பார்ப்பது எப்போதேனும் என்பதால் தான் இப்படிப் பட்ட விமர்சனங்களை வைக்க வேண்டியிருக்கிறது.

  அப்படியே, நீங்கள் அயல்நாட்டுப் படங்கள் என குறிப்பிடுவது எந்த நாட்டுப் படங்களை என்றும் சொல்லிவிடுங்கள். ஏனெனில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே அயல்நாட்டுப் படங்கள் எனும் எண்ணம் பலருக்கும் உண்டு !

  Like

 54. // கலை எனும் போர்வையில் வினியோகிக்கப்படும் “துரோகம் ஒன்றும் தவறில்லை” எனும் போதனைகளுக்கு //

  சேவியர்,
  இந்த படத்தில் ‘துரோகம் ஒன்றும் தவறில்லை’ என்று போதிக்கப்படுகிறதா என்ன ?

  இது தான் உங்கள் புரிதல் என்றால் இத்தனை பேர் இங்கு மாங்கு மாங்கென்று பின்னூட்டம் போட்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  Like

 55. அன்பின் ஜோ, உங்கள் புரிதலைச் சொல்லுங்கள்…

  Like

 56. //வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி பலூண் மாமா….//

  :-)))) …I thought you will get made at me … Neenga romba nalavaru. :-))

  Like

 57. இல்லை 🙂 எனது கருத்தைப் பதிவு செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதை மறுத்துச் சொல்ல உங்களுக்கும் அதே உரிமை இருக்கிறது. சக மனிதர்களின் கருத்துக்களை நான் எப்போதுமே மதிப்பவன். 😀

  Like

 58. ////
  //நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும், கதாநாயகி உடைமாற்றுவதை திருட்டுத்தனமாக ரசிப்பதும் என நடைமுறைக்கு ஒத்துவராத காட்சிகளுடன் கூடிய படங்கள் தான் நல்ல படங்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ//

  எப்போது அப்படி சொன்னேன் என்பதைச் சொல்லி விட்டு விவாதியுங்கள்.
  ////

  உங்கள் விமர்சனத்திலிருந்து…

  >>> எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக குசேலனைக் கோயில் கட்டிக் கும்பிடலாம். <<<

  மேலே சொல்லப்பட்ட காட்சிகள் குசேலனில் இடம் பெற்றுள்ளதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

  – சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்.

  Like

 59. // சக மனிதர்களின் கருத்துக்களை நான் எப்போதுமே மதிப்பவன்.//

  Thanks for not taking my comments as personal ..it was just an expression (too much may be.. ) based on your thoughts expressed here in this post ..nothing beyond that . :-))

  **

  oops… typo in my earlier comment // get mad * at me // sorry ..

  Like

 60. /மேலே சொல்லப்பட்ட காட்சிகள் குசேலனில் இடம் பெற்றுள்ளதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

  – சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்
  //

  இப்படிச் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். எனவே எனது குசேலன் பட விமர்சனத்தையும் (வேண்டுமானால் பாடல்களுக்கான விமர்சனத்தையும்) பார்த்தால் குசேலனில் எது பிடித்திருந்தது, எது பிடிக்கவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம்

  – வேதாளம் 🙂

  Like

 61. //Thanks for not taking my comments as personal ..it was just an expression (too much may be.. ) based on your thoughts expressed here in this post ..nothing beyond that . :-)) //

  மிக்க நன்றி. அடிக்கடி வாருங்கள், உங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

  Like

 62. //அன்பின் ஜோ, உங்கள் புரிதலைச் சொல்லுங்கள்…//
  // கலை எனும் போர்வையில் வினியோகிக்கப்படும் “துரோகம் ஒன்றும் தவறில்லை” எனும் போதனைகளுக்கு //

  சேவியர்,
  “துரோகம் ஒன்றும் தவறில்லை” என்ற போதனையை நான் இந்த படத்தில் பெற்றதாக நினைவில்லை ..எந்த இடம் அவ்வாறு போதிக்கிறது உங்கள் புரிதலை சொன்னால் நன்றாக இருக்கும் .

  Like

 63. நல்ல விமர்சனம்.. இந்த படம் மட்டும் அல்ல இதை ஒத்தே முன்பு வெளியான பருத்தி வீரன் பிதாமகன் நந்தா போன்ற படங்களும் இதே சைக்கோ வகை தான்.

  இதுக்கு எல்லாம் அவார்டு …:(

  இதுக்கு பேசாமா மாயஜால்லா ஆள் இல்லாம் தனி ஆளா நல்ல ஏஸில தசாவதாரம் படம் பார்த்துட்டு வரலாம்.. 🙂

  திரைப்படம் என்பது அடிமட்ட ஆட்களையும் சேர்கிறது என்பதை மனதில் நிறுத்தி இதை போல சைக்கோ படம் எடுக்கும் இயக்குநர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும்

  நான் கடவுள் எனற மற்றும் ஒரு சைக்கோ படம் விரைவில் வர இருக்கிறது

  Like

 64. அறிவு ஜீவிகள் பார்த்துத் தான் படம் இவ்வளவு நாளாய் அரங்கம் நிறைந்து ஓடுகிறதோ?

  ஒருவேளை நீங்கள் தான் அறிவுஜீவியோ என்னவோ?

  சைக்கோ என்பது கொலை ரத்தம் மட்டுமல்ல…

  புதுமைகளையும் மாறுதல்களையும் கண்மூடி மறுதலிக்கும் குணமும் கூடத் தான்.

  Like

 65. //சேவியர்,
  “துரோகம் ஒன்றும் தவறில்லை” என்ற போதனையை நான் இந்த படத்தில் பெற்றதாக நினைவில்லை ..எந்த இடம் அவ்வாறு போதிக்கிறது உங்கள் புரிதலை சொன்னால் நன்றாக இருக்கும் //

  நீங்கள் படத்தைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.

  நம்பியிருக்கும் மூன்று ஜீவன்களை திட்டமிட்டே துரோகமிழைக்கும் அரசியல் வாதியும், உயிருக்கு உயிராய் இருக்கும் காதலனை சகட்டு மேனிக்கு வெட்டிக் கொல்ல கையளிக்கும் காதலியும், கூடவே இருக்கும் நண்பனை பணத்துக்காக படுகொலைக்குக் கையளிக்கும் நண்பனும் உங்களுக்கு துரோகத்தைச் சொல்லவில்லையெனில் மன்னியுங்கள்… இதுகுறித்த உங்கள் புரிதல் உயர்ந்த தளத்தில் இருக்கிறது. எனது ரசனை இன்னும் அந்த அளவுக்கு உயர்வடையவில்லை என்றே கருதிக் கொள்கிறேன்.

  Like

 66. //சைக்கோ என்பது கொலை ரத்தம் மட்டுமல்ல…

  புதுமைகளையும் மாறுதல்களையும் கண்மூடி மறுதலிக்கும் குணமும் கூடத் தான்
  //

  அப்படியா ? சைக்கோ என்பதன் விளக்கம் புதுமையாய் இருக்கிறது. அறிவுஜீவிகள் பார்த்து படம் ஓடுகிறது என்று யார் சொன்னதோ தெரியவில்லை. எப்படியோ என்னை சைக்கோ என்றதற்காகக் கோபமில்லை பொன். சுதா. வருகைக்கு நன்றி.

  Like

 67. ‘நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை.’

  நண்பரே நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் படத்தை இது நாள் வரை ரசிப்பவர்கள் அறிவுஜீவிகள் என்றல்லவா பொருள்படுகிறது.

  சைக்கோ என்பது மனப் பிறழ்வு… இன்னும் பல விரிந்த அர்த்த தளத்தில் இயங்கும் ஒரு சொல் ….

  Like

 68. //நீங்கள் படத்தைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.//

  என்னத்தை சொல்ல ? படம் பார்க்காமலேயே எப்படி நான் அந்த போதனையப் பெறவில்லையென சொல்ல முடியும்?

  //நம்பியிருக்கும் மூன்று ஜீவன்களை திட்டமிட்டே துரோகமிழைக்கும் அரசியல் வாதியும், உயிருக்கு உயிராய் இருக்கும் காதலனை சகட்டு மேனிக்கு வெட்டிக் கொல்ல கையளிக்கும் காதலியும், கூடவே இருக்கும் நண்பனை பணத்துக்காக படுகொலைக்குக் கையளிக்கும் நண்பனும் உங்களுக்கு துரோகத்தைச் சொல்லவில்லையெனில் மன்னியுங்கள்…//

  ஆம் துரோகத்தை சொல்லியிருக்கிறார்கள் ..யார் இல்லையென்றது ? ஆனல் நீங்கள் சொன்னது ““துரோகம் ஒன்றும் தவறில்லை” எனும் போதனைகளுக்கு”.. ஒரு நிகழ்வை காட்டியிருக்கிறார்கள் .அதில் துரோகமும் இருக்கிறது .ஆனால் துரோகம் ஒன்றும் தவறில்லை என்ற போதனை எங்கே இருக்கிறது ஐயா ? என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை

  //இதுகுறித்த உங்கள் புரிதல் உயர்ந்த தளத்தில் இருக்கிறது. எனது ரசனை இன்னும் அந்த அளவுக்கு உயர்வடையவில்லை என்றே கருதிக் கொள்கிறேன்//
  கடும் சொற்கள் கூறாமல் இருத்தல் மட்டும் உயர்வு அல்ல சகோதரரே .இப்படி நல்ல சொற்களிலேயே நாசூக்காக வஞ்சப்புகழ்ச்சி செய்வது எந்த ரகம்?

  Like

 69. //நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை.’

  நண்பரே நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் படத்தை இது நாள் வரை ரசிப்பவர்கள் அறிவுஜீவிகள் என்றல்லவா பொருள்படுகிறது.

  சைக்கோ என்பது மனப் பிறழ்வு… இன்னும் பல விரிந்த அர்த்த தளத்தில் இயங்கும் ஒரு சொல்
  //

  அன்பின் சுதா, படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை என்று தான் சொன்னேன். பார்ப்பவர்களால் படம் ஓடுகிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் ரசிக்க வேண்டுமென கட்டாயம் ஒன்றும் இல்லையே.

  ஆனால், இந்தப் படம் நல்லாயிருக்கிறது என நிறுவினால் தான் விமர்சகர் வட்டாரத்தில் மதிப்பு என கருதுபவர்களைக் குறித்தே நான் குறிப்பிடுகிறேன்.

  சைக்கோ ஒரு மனப் பிறழ்வு என அருமையாய் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மை !! தன்னை அறிவு ஜீவியாய் காட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பலரிடமும் இந்த மனப் பிறழ்வின் நிழலாட்டம் தெரிவதுண்டு.
  (சத்தியமாய் நான் உங்களைச் சொல்லவில்லை, தவறாய் எண்ண வேண்டாம் )

  Like

 70. //ஒரு நிகழ்வை காட்டியிருக்கிறார்கள் .அதில் துரோகமும் இருக்கிறது .ஆனால் துரோகம் ஒன்றும் தவறில்லை என்ற போதனை எங்கே இருக்கிறது ஐயா ? என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை
  //

  இதற்கு நான் ஏதாவது பதிலைச் சொன்னால் வஞ்சப் புகழ்ச்சி என்பீர்கள். எனவே நிறுத்திக் கொள்கிறேன். தெரியாமல் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

  Like

 71. //திரைப்படம் என்பது அடிமட்ட ஆட்களையும் சேர்கிறது என்பதை மனதில் நிறுத்தி இதை போல சைக்கோ படம் எடுக்கும் இயக்குநர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும்//

  உண்மை ! பிம்பங்களை அப்படியே வாழ்க்கையில் பிரதிபலிக்க நினைக்கும் சாதாரண (அறிவு ஜீவியில்லாத) மனிதன் தான் இத்தகைய படங்களினால் பாதிக்கப்படுகிறான்.

  சரி விடுங்க….

  படம் ஸ்லோவா ஓடினா அது நல்ல படம் என்னும் எண்ணம் விமர்சகர்களிடையே நிலவும் வரை நாம் பேசி எந்தப் பயனும் இல்லை.

  Like

 72. //நம்பியிருக்கும் மூன்று ஜீவன்களை திட்டமிட்டே துரோகமிழைக்கும் அரசியல் வாதியும், உயிருக்கு உயிராய் இருக்கும் காதலனை சகட்டு மேனிக்கு வெட்டிக் கொல்ல கையளிக்கும் காதலியும், கூடவே இருக்கும் நண்பனை பணத்துக்காக படுகொலைக்குக் கையளிக்கும் நண்பனும் உங்களுக்கு துரோகத்தைச் சொல்லவில்லையெனில் மன்னியுங்கள்…//

  It is realistic in all our times. I dont know why you rate this movie in different way than others . But thanks for different view .

  Like

 73. xavier – Miga sariana vimarsanagal – Subramaniapuram & Kuselan…
  Nengal kandipaga “xavier thirai parvai” enum oru tholaikatchi nigazchi nadathalam

  Like

 74. அட… வாப்பா.. நாடோடி.. எப்படி இருக்கே ? ரொம்ப நாளா ஆளையே காணோம் ? நக்கல் மட்டும் இன்னும் குறையவே இல்லை 🙂 எங்கே இருக்கே ? தாய்நாடா ? தாய்லாந்தா /

  Like

 75. திரைகளில் பிசுபிசுப்பாய் தமிழனின் ரசனையும், ரத்தமும்////

  இந்த வரிகளை தவிர உங்கள் விமர்சனத்தில் எந்த ஒரு நல்ல விஷயமுமே இல்லையே?
  வன்முறைகள் மட்டும் தான் உங்கள் வக்கிர கண்ணனுக்கு தென் பட்டதோ?
  விட்டால் குசேலனை நல்ல படம், காரணம் அதில் எந்த வன்முறையும் இல்லை என்று சொனாலும் சொல்லுவீங்க.. ஹையோ ஹையோ .. சுத்த காமெடி ஆளுப்பா ..

  Like

 76. /
  குசேலன் படத்தை நீங்கள் புகழ்ந்து தள்ளியதும், சுப்பிரமணியபுரம் படத்தை நிராகரித்திருப்பதையும் காணும்போது வெகுஜனங்களோடு மாறுபட்டு நின்று தனித்து தெரிகிறோம் என்று காட்டத்தானோ என்று ஒரு சிறு ஐயம்.//////
  ஓஒ அவனா நீயியி … இப்ப புரிஞ்சிரிச்சி.. உங்க ரசனையே ரசனை தான்… வாழ்க

  Like

 77. குசேலனை புகழ்ந்து தள்ளவில்லை விமர்சனங்கள் சொல்லுமளவுக்கு மோசமில்லை என்று தான் சொன்னேன். சுப்பிரமணிய புரம் மோசமென்று நான் எழுதிய போது என்னைத் திட்டி மட்டுமே பின்னூட்டங்கள் வரும் என நினைத்தேன். ஆனால் எனது பார்வையே பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை அறியும் போது வெகுஜனங்களோடு சேர்ந்து தான் இருக்கிறேன் எனும் மகிழ்ச்சி தலை தூக்குகிறது. ////////

  ஆஹா ஆஹா புல்லரிகுது.. உங்களுக்கு தான் என்ன பெரிய ரசனை..
  சும்மா போவியா?

  Like

 78. அன்பின் சேவியர்,

  சமீபத்தில் தமிழில் வந்த மிக படங்களில் மிக நல்லப் படம் என நான் மதிப்பிட்டிருப்பது இந்த படத்தைதான்.ஊர் உலகத்தில் நிகழாதது ஏதும் சொல்லப்படவில்லையே இந்த படத்தில்?!

  சரி , போக்கிரி , திருப்பாச்சி யில் இல்லாத வன்முறையா? இந்த படத்தில் இருக்கிறது?!

  well said Priyan.. this Xavier has something personal against Sasikumar or actors

  Like

 79. //சும்மா போவியா?
  //

  ஓ… இந்த ரகமா நீ… அப்ப சரி !!!! சுப்ரமணியபுரம் புடிக்கும் உனக்கு ! 😀

  Like

 80. /திரைகளில் பிசுபிசுப்பாய் தமிழனின் ரசனையும், ரத்தமும்////

  இந்த வரிகளை தவிர உங்கள் விமர்சனத்தில் எந்த ஒரு நல்ல விஷயமுமே இல்லையே
  //

  உங்களை மாதிரி திறமையா எனக்கு எழுதத் தெரியாதுப்பா ! 🙂

  Like

 81. அன்புள்ள சேவியர்,

  உங்கள் விமர்சனம் மற்றும் சக நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து படித்தேன்.

  கோர வன்முறையை சித்தரிக்கும் விதத்தை நீங்கள் ஆமோதிக்காமல் அதை தமிழ் சினிமாவுக்கு ஒரு அபாய முன்னுதாரனமாக கூறியிருப்பதில் எனக்கு சம்மதமே. அதுவும், அந்த ஆட்டோ காட்சி மனிதன் மிருகமாக மாறும் மோச நிலையை காட்டுகிறதோ இல்லையோ, cat on the wall போன்று இருப்பவர்களை மிருகமாக மாற்றும் தீய சக்தி இருப்பதாகவே தோன்றுகிறது.

  எனக்கு ஒரு பெரும் குறை என்னவென்றால், இவ்வளவு அழகாக படம் எடுத்து, அதை எல்லோருக்கும் சென்றடைய வைக்காமல் அதீத மிருக உணர்வை காண்பித்து விட்டாரே என்று தான்.

  இந்த படத்துக்கு U/A சர்டிபிகேட் கொடுத்திருப்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது; இருந்தும், சில நண்பர்கள் இங்கு குறிப்பிட்டிருப்பதை படிக்கையில் கவலையாக உள்ளது. அந்த ஆட்டோ காட்சியை பார்க்கும்போது, அமைதியும், மன உளைச்சலும், இறுக்கமும் நிலவ வேண்டிய திரை அரங்குகளில், விசிலும் ஆரவாரமும் நிறைந்திருந்தால், சசிகுமார் சாதிக்க நினைத்ததை அடையாமல் வெரும் மிருக வெறியை மட்டுமே (by-product) நன்கொடையாக அளிக்க முடிந்திருக்கிறது.

  இந்த negative அம்சங்களை அப்புறப்படுத்தி இந்த படத்தை பார்க்கையில், மிக அற்புதமான படைப்பாக நினைகிறேன். மேலும் …. எழுதுகிறேன்.

  Like

 82. //1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்//

  இந்த விஷயத்தில் என் கருத்து மாறுபட்டிருக்கு.

  பொதுவாக இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நம்மை பற்றிய கடந்த கால நிகழ்ச்சிகளை அனுபவித்து, ஆராய்ச்சி செய்து வழங்கும் பக்குவத்தை காண்பது மிக அரிது.

  எனக்கு நினைவு தெரிந்தவரை, தூர்தர்ஷனில் 90s துவக்கத்தில் ஒளிபரப்பாகிய “சாணக்யா” தொடர் ஓர் சகாப்தமாக விளங்கியது. பண்டைக்கால இந்தியாவை (200-100 BC ?) முடிந்த அளவு ஆராய்ந்து, அழகான வடிவில் வழங்கினார் அதன் இயக்குனர்/நடிகர் சந்திரப்ரகாஷ் த்விவேதி.

  பிறகு, நீண்ட இடைவெளிக்குப்பின் கமலின் ஹே ராம் இந்திய சுதந்திரம் அடையும் ஆண்டுகளின் கொல்கத்தாவை நன்றாக ப்ரதிபலித்தது. தங்கர் பச்சானின் அழகி-யும் பழைய கிராமப்புற வாசத்தை கண் முன் நிறுத்தியது.

  Period பாடங்களை வழங்குவதில் அற்புதமான நுணுக்கங்கள் பல கையாள வேண்டும். இதுவரை, இந்த வகை படைப்புகளில் மக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணமாக நிறைய படங்கள் வராததும் ஒரு காரணம்.

  சுப்ரமணிபுரத்தில், நான் ரசித்தவை:
  – சாலைகளில் அதிகமான போக்குவரத்து இல்லாத ஒரு அமைதி
  – சைக்கிள் பாருக்கு அடியில் விளம்பர தகடு இருபக்கமும் (பளிச் மஞ்சள் நிறத்தில்)
  – எடுபிடி வேலை செய்த மூவருக்கும், பணம் வழங்கும்போது பழைய 10 ரூபாய் கட்டுகள்; ஆம், ஒரு கட்டில் 100 இருக்கும் – 1000 ரூபாய் ஒரு நல்ல தொகையாய் தான் இருந்தது.
  – ஆரவாரமில்லாத ஆடைகள்

  அற்புதமான characterisation (பழைய கே. பாலசந்தர்/ பாரதிராஜா படங்களை நினைவூட்டும் வகையில்); அருமையான இசை, இனிமையாக இழையோடும் காதல், நறுக்கான, ஆனால் மணிரத்னம் போன்று urban-அல்லாத யதார்த்த வசனங்கள்.

  மொத்தத்தில், ஒரு நல்ல முயற்சியின் விளைவு. Graphic வன்முறையை கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் எங்கோ போயிருக்கும்.

  Like

 83. ஆர். ஸ்ரீனிவாசன் சொன்ன கருத்துக்களுடன் பெரும்பாலும் உடன்படுக்கிறேன். வன்முறைக் காட்சிகளை மிகக் கோரமாகக் காட்டுவது தமிழ்ப் (இந்தியப் ?) படங்களின் பல வெற்றிச் சூத்திரங்களில் ஒன்றாகி விட்டது. பிதாமகன் படம் வெளிவந்த பொழுது இது தொடர்பாக திண்ணையில் ஒரு கட்டுரை எழுதினேன். அதன் சுட்டி இங்கே:

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=60312115&format=html

  ஆனாலும் அந்தக் கடைசிக் காட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சுப்பிரமணியபுரம் தமிழ்த் திரைப் பட உலகில், ‘அழகி‘க்குப் பிறகு வந்த மைல்கல் என்று சொல்வேன். (மைல் கல் என்று நான் குறிப்பிடுவது முந்தைய சூத்திரங்களிலிருந்து மாறுபட்ட, பல நேரங்களில் புதிய சூத்திரம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் படம் – சில எடுத்துக்காட்டுகள் பராசக்தி, நிழல் நிஜமாகிறது, அரங்கேற்றம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பதினாறு வயதிலே, ஒருதலை இராகம், அழகி, கருத்தம்மா … சூத்திரப் படங்களுக்கு எடுத்துக்காட்டாக பெரும்பாலான எம்.ஜி.ஆர்., இரஜினி, மற்றும் விஜய் படங்களைச் சொல்லலாம். சமூகக் கேட்டை விளைவிக்கும் எதிர்மறையான மைல்கல் படங்களுமுண்டு. சங்கரின் அனைத்துப் படங்களையும் இந்தப் பட்டியலில் போடலாம்).

  சுப்பிரமணியபுரம் ஒரு மைல்கல் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். மிக முக்கியமான ஒன்று – யதார்த்தத்துடனும், அதே நேரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பிப் பார்த்து வெற்றியடையச் செய்யும் பல நேர்மையான திரைப்பட உத்திகளுடனும் மிக எளிய ஒரு படத்தை எந்தவித அலட்டலும், ஆடம்பரமுமில்லாத ஒரு புதுமுகக் குழு உருவாக்கியது பாராட்டுக்குரியது.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

  Like

 84. மிக விரிவான, அழகான, ஆழமான, சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் பார்வைக்கு எனது முதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஸ்ரீனிவாசன்.

  நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்திலும் உடன் படுகிறேன். எனது விமர்சனமும் படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை மீதானதே தவிர படம் எடுத்திருக்கும் விதத்தையோ, படத்தில் காலத்தை கண்முன் நிறுத்த எடுத்துக் கொண்ட சிரத்தையையோ எந்த விதத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.

  உங்கள் கவனிப்பிற்கும், நேர்த்தியான பார்வைக்கும், கருத்துக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

  Like

 85. //சுப்பிரமணியபுரம் ஒரு மைல்கல் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். மிக முக்கியமான ஒன்று – யதார்த்தத்துடனும், அதே நேரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பிப் பார்த்து வெற்றியடையச் செய்யும் பல நேர்மையான திரைப்பட உத்திகளுடனும் மிக எளிய ஒரு படத்தை எந்தவித அலட்டலும், ஆடம்பரமுமில்லாத ஒரு புதுமுகக் குழு உருவாக்கியது பாராட்டுக்குரியது//

  மிகச் சரியாகச் சொன்னீர்கள் சங்கரபாண்டி. நன்றி உங்கள் கருத்துக்கு. வன்முறை, சமூகத்தை தவறான வழிக்கு இட்டுச் செல்ல காரணியாய் இருத்தல் எனும் இரண்டு விஷயங்கள் தவிர்த்து சுப்ரமணியபுரத்தின் மீது எனக்கு எந்த விதமான எதிர் விமர்சனங்களும் இல்லை 🙂

  Like

 86. அன்பின் சங்கரபாண்டி உங்கள் பிதாமகன் விமர்சனம் படித்தேன்… வெகு அருமை. இப்படிப்பட்ட விமர்சனங்களே தேவை. சமூக வளர்ச்சிக்கு.

  Like

 87. pasamulla xavier…
  nakkal illai xavier ..unmaiyai than solgiren….
  nanrai ullathu subramaniapuram ena anaivarum solla odipoi parthal..
  kathi kuthugal…aruvalvetugal…kazhuthuarupugal…
  athu subramaniapuram illai…sudugadupuram…
  ungal vimarsanam matume nan parthu paditha varail en parvaiodu othupoi irunthanthu…
  ungalai pol samoga akkarai ulla oruvaral matume ippadi vimarsanam seiya mudiyum..
  Nanrigaludan …ennamum thainatai vittu thailandil irukum NADODI!!

  Like

 88. திரு.சேவியர்,
  தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி.

  திரு.சங்கரபாண்டி,
  உங்கள் பிதாமகன் விமர்சனம் படித்தேன்; அருமையான தமிழில், ஆழ்ந்த கருத்துக்கள். என்றேனும், இவ்வாறு என்னால் எழுத முடிந்தால், பெருமிதம் அடைவேன்!

  சுப்ரமணிய புரத்தில், என்னால் (personally) ஏற்றுக்கொள்ள முடியாத இன்னொரு விஷயம் – “ஒரு சாராசரி தமிழ் வாலிபனுடைய ‘treshold for animal instincts’ இவ்வளவு தான்” என்பது போன்ற சித்தரிப்பு. அநீதி இழைக்கப்படிருப்பது, சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாம் புரிந்தும், கொலை வெறி அவ்வளவு எளிதாக ஏறக்கூடிய ஒன்றா என கவலைப் பட வைக்கிறார் சசிகுமார் 😦

  சாதரணமாக, இப்படி வெறியுடன் அலையும் நபர்களை சினிமாவில் அணுகும் விதம்:
  (a) அவன் அப்படிப்பட்டவன் தான் (வில்லன் ஆயிற்றே); விவரங்கள் தேவை இல்லை !
  (b) அவனால், இள வயதிலேயே மனநிலை கோளாறால், இப்படி உணர்ச்சியற்ற காரியங்களை செய்ய முடிகிறது; சராசரி மனிதர்களாகிய ரசிகர்கள் பாதிக்கபட அவசியம் இல்லை !

  இந்த படத்திலோ, பல முறை ஓய்வில், தனிமையில், சிந்திக்க வாய்ப்பு இருக்குமாறு காட்சிகள் தோன்ற வைக்கும்; அடடா, இவர்களுக்கு நல்லதை சொல்ல, மாற்று பாதை/ வழி காட்ட (அம்மாவை தவிர்த்து) வேறு எந்த நண்பனோ, பெரியவரோ இல்லையா என ஏங்கவும் வைக்கிறார் இயக்குனர். ஒரு விதத்தில், இப்படி எவ்வளவோ இளைஞர்களுக்கு, வழிகாட்டி கிடைக்காமல் சீரழிவதும் உண்மை தானே எனவும் தோன்றுகிறது.

  எந்த வித பெரிய ஆசையும் இல்லாமல், பணப் பித்தோ, ஆபாச எண்ணங்களோ இல்லாமல், ideology தரும் மாயையும் இன்றி, கிள்ளி எறியாத amateurish மொரட்டுத்தனமும், பிடிவாதமும் மட்டுமே சில வாலிபர்களை கொலை வெறியோடு சுழல வைக்கும் ஆபத்து, உண்மையான ஆபத்து தான்.

  அந்த கதாபாத்திரங்களின் தனி வாழ்க்கை நேர்த்தியும், எளிமை கலந்த வறுமையும் (ஒரு கொலை முயற்சிக்குப்பின் அவர்கள் சைக்கிளில் -doubles – தப்பிக்கும் காட்சி அவர்கள் மீது வருத்தத்தையும், அனுதாபத்தையும் தர வைக்கிறது), ஒரு சாதாரண கொலையாளியை பார்த்து புறக்கணிக்கும் ரசிகர் கண்களை இழுத்து, கவலைப்பட வைக்கிறது.

  Like

 89. ஸ்ரீனிவாசன், உங்களுடைய விமர்சனம் வெகு நேர்த்தி. உங்கள் கருத்துக்களும், எழுத்து நடையும் அருமை !!!

  நன்றி உங்கள் கருத்துக்களுக்கு…

  Like

 90. சினிமாவால் சமூகம் கெட்டதா.. சமூகத்தால் சினிமா கெட்டதா..?? ஆனால் இரண்டுமே.. நல்ல சினிமா இல்லை..

  Like

 91. தற்பொழுதான் உங்களுடைய சுப்புரமணியபுரம் படத்தினை பற்றிய விமர்சனதை படித்தேன். பருத்திவீரன், சுப்புரமணியபுரம் இரண்டு படங்களை பார்த்த பொழுது எனக்கு தோன்றியதையே நீங்களும் பிறதிபளித்துள்ளீர்கள்.

  Like

 92. /தற்பொழுதான் உங்களுடைய சுப்புரமணியபுரம் படத்தினை பற்றிய விமர்சனதை படித்தேன். பருத்திவீரன், சுப்புரமணியபுரம் இரண்டு படங்களை பார்த்த பொழுது எனக்கு தோன்றியதையே நீங்களும் பிறதிபளித்துள்ளீர்கள்.//
  மிக்க நன்றி ஜீவன்

  Like

 93. My Opinion is bloody poor taste of Tamil Nadu are Paruthi Veeran & Subramaniapuram. Another point are we Tamils are sadists to encourage Vadivel’s comedy. He is getting slaps,blows and by showing his pain making fans to laugh. Why we can encourage Vivek’s diplomatic comedy and pictures like old logical stories of MGR, Shivaji and Rajni. Kamal eventhough is genius, could not give his pictures which can be understood by even a layman, which is the sole failure of his films. This is the fate of our Tamil Nadu. O God.

  Like

 94. //intha padathai pathi thappa pesa unga evanukkume thaguthi kidaiyathu
  //

  ஏய் ஐய்யா சாமி, நீ ஆளைக் காமி என ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது 😀

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s