சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்

சிவப்புத் திராட்சைக்கு இப்போதெல்லாம் சந்தையில் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. விதையில்லாத பச்சை திராட்சை, அல்லது அவசர கோலத்தில் வாங்கப்படும் பழச்சாறுகள் இவையே வீடுகளை நிறைக்கின்றன. அதுவும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற மக்களை முட்டாளாக்கும் கடைகளில் வித விதமாய் பழச்சாறு பாட்டில்கள் புதிது புதிதாய் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பழச்சாறுகளில் இருப்பது பெரும்பாலும் சருக்கரையும், தண்ணீரும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும். சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் என்னும் இனிப்பான ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர் யூ.கே ஆராய்ச்சியாளர்கள்.

சிவப்புத் திராட்சையில் அதிக நார்சத்து மற்றும் விஷத்தன்மையை எதிர்க்கும் பொருட்கள் அதிகம் இருப்பதாகவும் இது உடலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பைக் குறிப்பதன் மூலமாக இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வலிமை இந்த சிவப்புத் திராட்சைக்கு இருக்கிறதாம்.

பழச்சாறுகளின் கதை வேறு. அதைக் குடிப்பதனால் பல்வேறு நோய்கள் தான் வருகின்றன. சமீபத்தில் பழச்சாறுகள் தொடர்பாக வெளியான ஒரு ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டுகிறது.

அதாவது பழச்சாறுகள் நாம் அருந்தும் மருந்தின் வீரியத்தைக் குறைத்து நோயிலிருந்து சுகம் பெறுவதில் சிக்கலை உருவாக்குமாம். குறிப்பாக இதய நோய், குருதி அழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்தின் வீரியத்தை இந்த பழச்சாறுகள் தடுக்கின்றனவாம்.

மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும்போது வெறும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் எனவும், பழச்சாறுகள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இப்போது பழச்சாறு அருந்துவது மருந்தையே செயலற்றதாக்கிவிடும் எனும் செய்தி கூடுதல் கலவரமூட்டுகிறது.

இது மட்டுமன்றி அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் நிகழ்த்திய ஆய்வு ஒன்று, தினமும் ஒரு கோப்பை திராட்சைப் பழச்சாறு (கடைகளில் கிடைப்பது) அருந்தினால் உடல் எடை அதிகரிப்பதுடன், சருக்கரை வரும் வாய்ப்பையும் அதிகரிக்கும் என எச்சரித்திருக்கிறது.  கூடவே பழச்சாறுகள் பல்லையும் சேதப்படுத்துமாம்.

சிவப்புத் திராட்சை சாப்பிடுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பழச்சாறுகளை ஒதுக்குங்கள் அவை உடலுக்கு ஊறி விளைவிக்கின்றன. என்பதே இந்த இரண்டு ஆய்வுகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் சாராம்சமாகும்.

கனியிருப்பச் சாறு கவர்ந்தற்று எனச் சொல்லத் தோன்றுகிறதல்லவா ?

Advertisements

31 comments on “சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்

 1. புதியத் தகவல்களுக்கு நன்றி சேவியர்..

  ஆனால் சிகப்புத் திராட்சை நம்மைப் போன்றவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில்தான் கிடைக்கிறதா..? தெரியவில்லையே..

  Like

 2. சிகப்பு திராட்சைன்னா கறுப்பு திராட்சையா? (என் கேள்வி ரொம்ப அபத்தமா இரூக்கோ?)

  இங்கே பொதுவா கறுப்பு அல்லது பச்சை திராட்சைகள்தானே கிடைக்கிறது. செந்நிற திராட்சிகளை இம்போர்டேட் திராட்சை என்று சொல்லி கால் கிலோவே குறைந்தது 50 ரூபாய்க்கு விற்கிறார்களே…

  இதன் பின்னாலும் பழச்சாறுகளை புறக்கணிக்கப் பாருங்கள் என்பதன் பின்னாலும் வேறு எந்த வித வணிக நோக்கமும் இல்லையே…

  எதை எடுத்தாலும் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கிறது. நம் நாட்டு அரசியல் என்னை இப்படி மாற்றி இருக்கிறது. 🙂

  Like

 3. து ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.
  கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்
  அண்மையில் சகபதிவர் வி.ஜே.சந்திரன் அவர்களை பற்றி யாழில் எழுதிய போது கிடைத்த ஒரு நல்ல இணைப்பு. சமையல்கட்டிற்கு மிகவும்

  Like

 4. //சிகப்பு திராட்சைன்னா கறுப்பு திராட்சையா? (என் கேள்வி ரொம்ப அபத்தமா இரூக்கோ?)//

  Both are same.

  It is a good anti-oxidant.

  Like

 5. ஆஹாஇ
  மிக நல்ல விடயம்.
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்

  Like

 6. /////good Xavi for me don’t know bofore
  ///wine also get it from graps//

  அதுக்காக வைன் குடிக்கிறது நல்லதுன்னு நினைச்சுக்காதீங்க..

  Like

 7. //ஆனால் சிகப்புத் திராட்சை நம்மைப் போன்றவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில்தான் கிடைக்கிறதா..? /

  ஓ… கருப்புத் திராட்சையும், சிவப்புத் திராட்சையும் வேறு வேறா ???

  Like

 8. //சிகப்பு திராட்சைன்னா கறுப்பு திராட்சையா? (என் கேள்வி ரொம்ப அபத்தமா இரூக்கோ?)
  //

  இரண்டும் ஒன்று என்று தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் 😀

  //

  இதன் பின்னாலும் பழச்சாறுகளை புறக்கணிக்கப் பாருங்கள் என்பதன் பின்னாலும் வேறு எந்த வித வணிக நோக்கமும் இல்லையே…

  //

  வணிக நோக்கம் இருக்கிறதா தெரியவில்லை. எதற்கும் சந்தேகமாய் இருந்தால் http://www.dailymail.co.uk/health/article-1047217/Red-grapes-wonder-cure-high-blood-pressure-cholesterol.html இந்தத் தளத்தையும்… கூடவே இருக்கும் இணைப்புகளையும் சென்று பாருங்கள் 😉

  //
  எதை எடுத்தாலும் சந்தேகப்பட வேண்டியதாய் இருக்கிறது. நம் நாட்டு அரசியல் என்னை இப்படி மாற்றி இருக்கிறது
  //

  நட்பிலும், உறவுகளுக்கு இடையேயான பாசக் கட்டமைப்பிலும் சந்தேகம் வராதவரை பிழையில்லை 😀

  Like

 9. //கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்
  அண்மையில் சகபதிவர் வி.ஜே.சந்திரன் அவர்களை பற்றி யாழில் எழுதிய போது கிடைத்த ஒரு நல்ல இணைப்பு//

  எதைச் சொல்றீங்க ? புரியலையே !

  Like

 10. ////சிகப்பு திராட்சைன்னா கறுப்பு திராட்சையா? (என் கேள்வி ரொம்ப அபத்தமா இரூக்கோ?)//

  Both are same.

  It is a good anti-oxidant.
  //

  நன்றி இந்தியன் தகவலுக்கு 🙂

  Like

 11. நான் நிறையச் சிவப்புத் திராட்சை சாப்பிடுகிறேன்.அப்போ எனக்கு உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவைகள் வராது.நம்பறேன்.OK வந்தா…. அப்புறமா அதுக்கும் நீங்கதான் பதிவு போடணும் அண்ணா.

  Like

 12. சேவியர் அந்த தொடுப்பில் சிகப்பு திராட்சை என்ற பெயரில் குறிப்பிட்டிருப்பது இங்கே இம்போர்ட்டட் திராட்சை என்ற பெயரில் விற்கப்படும் திராட்சை வகையைத்தான் குறிக்கின்றது.

  எப்படியாயினும் பழச்சாறுகள் உடலுக்கு கெடுதி அல்ல. அவை மருந்துகளின் வீரியத்தை குறைக்கும். அவ்வளவே. போதுமான கால இடவெளியில் நாம் பழச்சாறுகளை அருந்துவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. (அந்த கட்டுரையிலிருந்து எனது புரிதல்)

  Like

 13. //நான் நிறையச் சிவப்புத் திராட்சை சாப்பிடுகிறேன்.அப்போ எனக்கு உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவைகள் வராது.நம்பறேன்.OK வந்தா…. அப்புறமா அதுக்கும் நீங்கதான் பதிவு போடணும் அண்ணா.

  //

  கண்டிப்பா தங்கச்சி…

  Like

 14. //சேவியர் அந்த தொடுப்பில் சிகப்பு திராட்சை என்ற பெயரில் குறிப்பிட்டிருப்பது இங்கே இம்போர்ட்டட் திராட்சை என்ற பெயரில் விற்கப்படும் திராட்சை வகையைத்தான் குறிக்கின்றது.
  //

  நன்றி நந்தா.

  //
  எப்படியாயினும் பழச்சாறுகள் உடலுக்கு கெடுதி அல்ல. அவை மருந்துகளின் வீரியத்தை குறைக்கும். அவ்வளவே. போதுமான கால இடவெளியில் நாம் பழச்சாறுகளை அருந்துவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. (அந்த கட்டுரையிலிருந்து எனது புரிதல்)

  //

  இந்தக் கட்டுரை பல்வேறு மருத்துவக் குறிப்புகளிலிருந்து ஒரு நாளிதழுக்காகத் தயாரிக்கப்பட்டது. அந்த இணைப்பு ஒரு சில தகவல்களுக்கானது மட்டுமே. 🙂 பாழச்சாறுகள் கெடுதல் என குறைந்தது நூறு ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன.

  Like

 15. உங்கள் தளத்தைப் பார்த்தேன். நீங்களும் நண்பன் தான் 🙂 புதிய நண்பன் என வைத்துக் கொள்கிறேன் 😀 நன்றி வருகைக்கு.

  Like

 16. திரைபடங்களில் முதலிரவு காட்சிகளில் திராட்சை பழம் வைக்கப்படுவதற்கான காரணம் என்னவோ?

  Like

 17. நல்ல தகவல் அண்ணா.

  நம்ம கொல்லையில் பூச்சி மருந்தடிக்காமல் கிடைக்கும் சீத்தா பழம் பப்பாளி , வாழை , பலா பழங்கள் அதை விட்ட நல்லது.

  Like

 18. மருந்துகளோட‌ வீரியத்தை குறைக்குதுன்னா நல்லதுன்னு தான் நினைக்க வேண்டி இருக்கு. பக்க/பின் விளைவுகளை உண்டாக்கற அதிக வீரிய மருந்துகள் தானே அதிகமா புழங்குது. (பழச்சாறு என்றால் நீங்கள் குறிப்பிடுவது ‍ பதப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை சாறுகளை என்று நினைக்கிறேன். ஃபிரெஷ் ஜூஸில் இந்த பிரச்சினை இருக்காது)

  Like

 19. பயனுள்ள் பதிவு
  சில காலம் முன்பு வரை அதிகமாக பலசாறினை அருந்தினேன்
  இப்போது பழங்கள் மட்டும்தான்
  சிகப்பு திராட்சை எனக்கு மிகவும் பிடித்தது

  Like

 20. /திரைபடங்களில் முதலிரவு காட்சிகளில் திராட்சை பழம் வைக்கப்படுவதற்கான காரணம் என்னவோ?//

  ஒவ்வொண்ணா எடுத்து மெதுவா சாப்பிடட்டும்ன்னு தான். மத்தபடி ஷங்கர் படத்தில வரது மாதிரி டிக்கிலோனா விளையாட அல்ல 😉

  Like

 21. /நம்ம கொல்லையில் பூச்சி மருந்தடிக்காமல் கிடைக்கும் சீத்தா பழம் பப்பாளி , வாழை , பலா பழங்கள் அதை விட்ட நல்லது//

  100% ஒத்துக் கொள்கிறேன் தங்கையே.

  Like

 22. //பழச்சாறு என்றால் நீங்கள் குறிப்பிடுவது ‍ பதப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை சாறுகளை என்று நினைக்கிறேன். ஃபிரெஷ் ஜூஸில் இந்த பிரச்சினை இருக்காது)
  //

  ஆம். பழங்களைப் பிழிந்து நாமே அருந்தும் சாறு மிகவும் நல்லது ! அதுக்கெல்லாம் பொறுமையின்றி நாம பாட்டில் வாங்கினா.. அது கெடுதல் !

  Like

 23. /இப்போது பழங்கள் மட்டும்தான்
  சிகப்பு திராட்சை எனக்கு மிகவும் பிடித்தது//

  நல்ல ஆரோக்கியவான் ன்னு சொல்லுங்க ! சூப்பர் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s