பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

21 comments on “பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு

 1. //போட்டோ சூப்பர்//
  //நல்ல தகவல் //

  வருகைக்கும், கருத்துக்கும் 😉 நன்றி சிவா.

  //மீ தி பர்ஸ்ட்ட்???

  //

  ஆமா.. நன்றி 😀

  Like

 2. //eippa n tha thai thai pal kodukkiral, ahthu yellam antha kaalam//

  அப்படியெல்லாம் இல்லை… தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நிறையவே இருக்கிறது நம் நாட்டு அன்னையரிடம். 🙂

  Like

 3. //thai pal yennum punitham pathi vivaathikkum pothu, photo va rasikkiran eivan//

  டென்ஷன் ஆகாதீங்க…. ஆஸ்கர் அழகி போட்டோவைப் பதிவிட்ட என்னைத் திட்டலாம் நியாயம்….

  Like

 4. Kurippugal Arumai. Oru Chinna vendukol, Tahyavu Seithu Tamilnattu pengal(Thaimargal) or Nalla Photo-vai podavum.sila jollu partigal ithai thavaraaga payanpaduthugirargal.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s