இறந்தவர்களின் நினைவாக என்ன செய்வார்கள் ? பழங்காலமெனில் நடுகற்கள், தற்போது நினைவகங்கள். எதிர்காலத்தில் ?
இந்த கேள்விக்கு விடையாய் வந்திருக்கிறது சுவிட்சர்லாந்திலுள்ள அல்கோர்டான்ஸா எனும் நிறுவனம். இவர்கள் இறந்தவர்களின் அருகாமை எப்போதும் பிரியமானவர்களுடன் இருக்கக் கூடிய ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.
அதாவது இறந்தவர்களின் எலும்புகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் இருந்து வைரம் தயாரிக்கின்றனர் !
இந்த வைரங்களை இறந்தவர்களின் நினைவாக வைத்திருந்தால் மறைந்து போனவர்களின் நினைவும், அருகாமையும் எப்போதும் கூடவே இருக்கும் என்பதால் இப்படிப்பட்ட வைரங்களைத் தயாரிக்க மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.
பலர், இது இறந்தவர்களை அவமதிக்கும் செயல் என எதிர்க்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் உடலை எரியூட்டுவதை எதிர்ப்பதால் ஆன்மீக அமைப்புகளிடமிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பொதுமக்களிடையே இத்தகைய வைரம் தயாரித்தலுக்கு பரவலான கிடைத்துள்ளது.
இது ஒரு நல்ல செயல். சிலர் கல்லறைத் தோட்டங்களில் சென்று கசிந்துருகி கண்ணீர் விட்டு வருவார்கள். நாங்கள் கைகளிலேயே இறந்தவர்களை எப்போதும் இருக்க வைக்கிறோம் என்கிறார் இந்த நிறுவன இயக்குனர் வெய்ட் பிரீமர்.
சரி… இப்படி ஒரு வைரம் தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு என தேடினால், சுமார் மூன்றே கால் இலட்சம் ரூபாய்கள் என்கிறது தகவல்.
சுமார் மூன்றே கால் இலட்சம் ரூபாய்கள் தானே.வைரமான எம் பெற்றோர்கள் வைரமாகவே இருப்பார்களே எங்களோடு.
பெற்றோர்கள் என்றதும் “டக்”என்று மூளையில் ஒரு பொறி.
4 பிள்ளைகள் என்றால் வைரம் எந்தப் பிள்ளையோடு!
LikeLike
அட ! நல்ல கேள்வி 😀
LikeLike
வைரம் எப்படி அம்மாவை நினைவு படுத்தும் என்பது எனக்கு தெரியவில்லை, எனக்கு அம்மாவின் வாசம் வீசும் சேலையே அம்மாவின் அருகாமையை உணர்த்தும்.
LikeLike
அண்ணா,விக்கின்னு ஒருத்தர் மலேசியால இருந்து வருவாரே.
எங்காச்சும் கண்டீங்களா?இல்ல “காணவில்லை”ன்னு அறிவித்தல் குடுத்துத் தேடணுமா?
LikeLike
ammaavai ninaikka ethuvumee thevaiyillai. manathu onRu irunthaal poothum.
anputan
kamala
LikeLike
//ஆனால் பொதுமக்களிடையே இத்தகைய வைரம் தயாரித்தலுக்கு பரவலான கிடைத்துள்ளது.//
பரவலான வைடம் கிடைத்துள்ளதா அண்ணே?
LikeLike
ஐயய்யோ… எல்லா நாளிகைகளிலும் என்னை காணவில்லை எனும் செய்தி…. கோடான கோடி இரசிகர்கள் வரிசையில் நின்று நாளிகை கேட்கிறார்களாம்… லட்சக் கணக்கில் போன் கால்… கை பேசி வெடித்து சிதரிவிட்டது… எல்லாம் ஹேமாவின் சதி வேலை தானா?
LikeLike
//அதாவது இறந்தவர்களின் எலும்புகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் இருந்து வைரம் தயாரிக்கின்றனர் ! //
இனி சுடுகாட்டில் இறந்தவர் சாம்பல் கூட மிஞ்சாதே…
LikeLike
///NAMMA URIL KALLARAI KATTA PANAM ILLAI
//VAIRAMA???
LikeLike
//எனக்கு தெரியவில்லை, எனக்கு அம்மாவின் வாசம் வீசும் சேலையே அம்மாவின் அருகாமையை உணர்த்தும்//
தொட்டுட்டீங்க… கள்ளிக்காட்டு இதிகாசம் ஞாபகத்துக்கு வருது.
LikeLike
//விக்கின்னு ஒருத்தர் மலேசியால இருந்து வருவாரே.
எங்காச்சும் கண்டீங்களா?இல்ல “காணவில்லை”ன்னு அறிவித்தல் குடுத்துத் தேடணுமா?
//
தம்பி ரொம்ப பிஸியாயிட்டான் 😀
LikeLike
//ammaavai ninaikka ethuvumee thevaiyillai. manathu onRu irunthaal poothum.
//
அசத்தல் !
LikeLike
//பரவலான வைடம் கிடைத்துள்ளதா அண்ணே?///
ஆதரவுப்பா 😀
LikeLike
//இனி சுடுகாட்டில் இறந்தவர் சாம்பல் கூட மிஞ்சாதே…
//
இப்ப எல்லாம் எங்கே சுடுகாடு… சும்மா சுவிட்ச் போட்டா, கையில சாம்பல் 🙂
LikeLike
/////NAMMA URIL KALLARAI KATTA PANAM ILLAI
//VAIRAMA???//
அதானே 😦
LikeLike
கிறிஸ்துவ அமைப்புகளின் எதிர்ப்பைப் பற்றிக் கூறியிருந்தீர்கள் அல்லவா? கத்தோலிக்கரான எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார். கீழ்ப்பாக்கம் பழைய கல்லறைத் தோட்டத்தில் அவர்களுடைய குடும்பக் கல்லறை இருக்கிறது. அமெரிக்காவில் எரியூட்டிய அவருடைய மனைவியின் சாம்பலை இங்கே கொண்டு வந்து கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்தார். ஒரு வேளை அமெரிக்காவில் இது அங்கீகரிக்கப்பட்ட சவ அடக்க முறையாக இருக்குமோ?
LikeLike
அப்படியா ? தெரியவில்லை !! பொதுவாகவே அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே கிறிஸ்தவ வழக்கம். 🙂 வேறு வழியில்லேன்னா என்ன பண்ணுவாங்க பாவம் 🙂
LikeLike