உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவு  மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

13 comments on “உப்பு, ரொம்பத் தப்பு

  1. நாம் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்வதினால் தான் முடி உதிர்கிறதாம்… குறைவாக உப்பு சேர்த்து சாப்பிடுவர்களுக்கு முடி உதிரும் பிசச்சனை இராது என எங்கோ படித்த ஞாபகம்…

    Like

  2. அட ! இது தலையாய செய்தியாச்சேப்பா ! 🙂 சரி, வைகோ க்கு கல்யாணம் ஆயிடுச்சா ? பையன் எங்கே இருக்கான் இப்போ ?

    Like

  3. உப்பு ரொம்ப சாப்பிட வேணாம்ன்னு சேவியர் அண்ணா நல்ல செய்தி சொல்றார்.அதுக்கு ஏன் விக்கி பொண்ணுங்களை இழுக்கிறார்?தலை போறப்ப கூட நாங்கதானா கிடைச்சோம் உங்களுக்கு?

    Like

  4. எப்படி பாஸ், சின்னதா ஒரு பதிவு போடறீங்க, வெட்பிரஸ் அலேக்க உங்க பதிவ முதல் பத்துல காட்டுது. என்ன மர்மம்மோ?

    நல்ல பதிவு…பொட்டாஸியம் கலந்த உப்பு இதயத்துக்கு நல்லது, ஐயோடின் உப்பு போன்றவற்றையும் பற்றி எழுதியிருக்கலாமோ?

    Like

  5. //குறைவாக உப்பு சேர்த்து சாப்பிடுவர்களுக்கு முடி உதிரும் பிசச்சனை இராது என எங்கோ படித்த ஞாபகம்…//

    அடடா… இப்படி ஒரு மேட்டரைச் சொன்னா உப்பை நம்ம மக்கள் மொத்தமா ஓரம் கட்டிடுவாங்களே !!! 🙂

    Like

  6. //சாப்பாட்டில் அதிக உப்பை சேர்ப்பது பெண்களின் சதி வேலை என நான் நினைக்கிறேன்//

    😀 கல்யாணம் ஆகாத பையன் என்ன வேணும்ன்னாலும் பேசலாம் 😉

    Like

  7. //உப்பு ரொம்ப சாப்பிட வேணாம்ன்னு சேவியர் அண்ணா நல்ல செய்தி சொல்றார்.அதுக்கு ஏன் விக்கி பொண்ணுங்களை இழுக்கிறார்?தலை போறப்ப கூட நாங்கதானா கிடைச்சோம் உங்களுக்கு//

    புருஷனுக்கு தலையில நிறைய முடி இருந்தா அழகா, இளமையா தெரிவான்…
    இளமையா தெரிஞ்சா நாலு பொண்ணுங்க லுக் வுடலாம்…
    நாலு லுக்குக்கு இவன் ஒரு பதில் லுக் வுடலாம்….
    இப்படி சங்கிலித் தொடர் பிரச்சனை.

    அதனால சோத்துல (விஷம் வைக்கிறது போல ) விஷமம் வெச்சு தலையை வழுக்கையாக்கி விடறது பொண்ணுங்க. இப்படிச் சொல்றது நான் இல்லை.. விக்கி ! விக்கி… விக்கி !!!

    Like

  8. //எப்படி பாஸ், சின்னதா ஒரு பதிவு போடறீங்க, வெட்பிரஸ் அலேக்க உங்க பதிவ முதல் பத்துல காட்டுது. என்ன மர்மம்மோ?
    //

    உங்களை மாதிரி நண்பர்கள் நம்ம தளத்தை நம்பி வந்து வாசிக்கறதனால தான் முரளி 🙂

    //

    நல்ல பதிவு…பொட்டாஸியம் கலந்த உப்பு இதயத்துக்கு நல்லது, ஐயோடின் உப்பு போன்றவற்றையும் பற்றி எழுதியிருக்கலாமோ?

    //

    ஆமா… நல்ல ஐடியாவாச்சே 🙂 நன்றி.

    Like

Leave a comment