தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

47 comments on “தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 1. ஜப்பானில் தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக படிச்சேன்… இதற்கெல்லாம் பணமும் வாழ்க்கை பயமும் ஒரு காரணம் இல்லையா? என்ன வாழ்க்கை இது?

  Like

 2. அது வேலைப் பளு தலைவா, ‘பழு’ அன்று.
  அது என்ன தலைப்பில் மட்டும் சென்னை இருக்கிறது?

  Like

 3. நண்பர் சேவியரே!

  தாங்கள் தற்போது பதிந்துள்ள தகவல். உண்மையாயிருக்கக் கூடும்.
  ஏனெனில் அதற்கான உதாரணமாக நான் இருக்கிறேன்.

  எப்படி, அதற்கான காரணம்……

  நான் கிராமபுரத்தை சேர்ந்தவன், அந்த கிராமத்திலிருந்து முதல் முறையாக கல்லூரியை எட்டிப் பார்த்து, எம் சி ஏ முடித்தவன். இதுவரை எஙகளூரில் கல்வியின் மூலம் முன்னேறியவர்கள் இல்லை. எங்கும் வறுமை மையமிட்டுள்ளது. யாரும் அதனை முறியடித்து செல்ல முற்படுவதில்லை. என் கல்வி முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆயினும் என் முயற்சிகள் நின்றுவிடவில்லை. இதுவரை யாரிடமும் என் நிலைமை விளக்கி உதவி கோரியதில்லை. ஆனால் சமீப காலமாக மன உளைச்சல் கிளர்ந்துள்ளதை உணர முடிகிறது. அதன் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வளர்ந்து வருகிறது. வேலை இல்லாத காரணத்தால் நான் என் வீட்டிற்கு சென்று 1.5 வருடங்களாகிறது.

  இதனை இங்கு தெரிவிப்பது அனுதாபம் தேடும் செயலல்ல….

  நன்றி

  இராஜா – பெங்களூரூ

  Like

 4. என் வாழ்வின் போக்கு மாறியிருப்பதால் நண்பரிகளிடமிருந்து விளகிச் சென்று கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், நான் விரைவில தவறான முடிவை எடுக்க நேர்ந்தால் என்னால் யாரும் பாதிக்கப் பட கூடாது என்ற எண்ணமே. நல்லா இருப்பவர்களை வாழ்த்த நினைக்கிறேன். அவ்வளவே. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமோ? என் கிராமம் தோன்றி சுமார் 350 வருடங்களாகின்றனவாம். ஆரம்ப காலத்தில் இங்கே வந்து குடியேரியவர்கள் பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களைச் சேர்ந்தவர்கள் என என் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். நம் நாடு சுதந்திரம் அடைந்து 60 வருடங்களைத் கடந்துள்ளது. ஆயினும் எங்களூரைப் போன்ற எண்ணற்ற கிராமங்கள் இன்னும் கல்வி, மருத்துவம், சாலை, அறிவியல், விஞ்ஞானம் போன்றவை இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. முக்கியமாக கல்வியில் இன்னும் முன்னேறாதிருப்பதே மிகப் பெரிய பின்னடைவு தானென நினைக்கிறேன். எனது இன்றைய நிலைமைக்கு காரணம் கல்வியில் முன்னோடி இல்லாதது தான்.

  உங்கள் கருத்துக்களை தெரியப் படுத்தவும் மேலும் என் போன்றவர்கள் எண்ண செய்ய வேண்டும். நான் தமிழகத்தை சேர்ந்தவன் வேலை தேடி அலைய இங்கு சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

  நன்றி
  இராஜா-பெங்களூர்.

  Like

 5. /ஜப்பானில் தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக படிச்சேன்… இதற்கெல்லாம் பணமும் வாழ்க்கை பயமும் ஒரு காரணம் இல்லையா? என்ன வாழ்க்கை இது?//

  நல்ல நண்பர்கள் கூடவே இல்லாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

  Like

 6. /அது வேலைப் பளு தலைவா, ‘பழு’ அன்று.//

  தப்பு தான் மாத்திக்கறேன் 🙂

  //
  அது என்ன தலைப்பில் மட்டும் சென்னை இருக்கிறது?
  /

  சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன 😉

  Like

 7. /நான் கிராமபுரத்தை சேர்ந்தவன், அந்த கிராமத்திலிருந்து முதல் முறையாக கல்லூரியை எட்டிப் பார்த்து, எம் சி ஏ முடித்தவன். இதுவரை எஙகளூரில் கல்வியின் மூலம் முன்னேறியவர்கள் இல்லை. எங்கும் வறுமை மையமிட்டுள்ளது. யாரும் அதனை முறியடித்து செல்ல முற்படுவதில்லை. என் கல்வி முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை, //

  வியப்பாய் இருக்கிறது. எம்.சி.ஏ முடித்து இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்கவில்லை என்பது. இணைய தளங்களில் விண்ணப்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  உங்கள் ரெஸ்யூமை எனது xavier.dasaian @ g m a i l.com க்கு அனுப்புங்கள். முடிந்த உதவிகளை நிச்சயம் செய்கிறேன்.

  Like

 8. நண்பர் சேவியர்,

  2002ல் எம்சிஏக்கான அரசு நுழைவுத் தேர்வெழுதி குடந்தை அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது, ஆனால் இயற்கை விளையாடிவிட்டது. எனக்கான சேர்க்கை கடிதம் கிடைக்கவில்லை, அதன் காரணமாக ஓராண்டு காலம் இடை நிறுத்தம் ஏற்பட்டது, அச்சமயத்தில் கல்லூரி HODயிடம் கேட்டதற்கு நாங்கள் அழைப்புக் கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார் இயலாமையால் அந்த ஆண்டு முதல் சோதனைகள் ஆரம்பமாயின. பின்பு 2003ல் நுழைவுத் தேர்வில் தேர்வாகி 2003-2006ல் கல்வி முடிந்தது.

  * இதுதான் இன்னும் சோதனை. எந்த நிறுவனமும் 60% சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான் இண்டர்வியூவிற்கு அழைத்தார்கள்.

  * நான் அதிஷ்ட்ட்சாலியா? துரதிஷ்டசாலியா?

  * காலம் முடிவு சொல்லட்டும்

  நன்றி
  இராஜா-பெங்களூரூ.

  (உங்களுக்கு இந்த விளக்கம் போதுமானதாக இருக்கலாம். இன்றும் நான் எண்ணுவது நான் எங்கோ தவறு செய்திருக்கிறேன். அதை நான் கண்டுபிடிக்க வேண்டும்)

  Like

 9. நண்பர் சேவியர்,

  (முந்திய மறுமொழி இதற்குப் பின் வரவேண்டியது)

  எனது பயணத்தில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான சிலவற்றை விளக்க முற்படுகிறேன்.

  *1997 ஜனவரியில்! அப்போது நான் வீட்டை விட்டு ஓடி விட்டேன், (காரணம் என்ன என்று சரியாக ஞாபகம் இல்லை) பிறகு என்னை தேடி கண்டுபிடித்து ( ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்) பிப்ரவரி இறுதியில் அதே வருடம், கொண்டு வந்து 10ம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதச் செய்தனர். நான் பெற்ற சொற்ப மதிப்பெண் 288/500.

  பின்னர் 11, 12 ஆகிய வகுப்புகளில் கணினியை தேர்ந்தெடுத்து பயின்றேன். நான் சுமாராக படிப்பவன் கல்விப் பாடங்களை, (ஆனால் பிற விஷயங்களை ஆழ்ந்து நோக்கும் பார்வை! 1993லிருந்து நூலக அனுபவம் உள்ளவன், தொடர்ந்து பல்வேறு துறை சம்பந்தமாக படித்தேன். இன்றும் தொடர்கிறது). இதனை குறிப்பிடு வதற்கு காரணம் எங்களூரிலிருந்து அரசு முன் மாதிரிப் பள்ளியில் 1992ல் சேர்க்கப் பட்டேன் நான் தனியாளாக பள்ளி சென்று வரவேண்டிய காரணத்தால் எனக்குள் புத்தகங்களை தேடி படிக்கும் ஞானம் வந்ததாக நினைக்கிறேன்.

  * அதன் பிறகு B.Sc., யிலும் கணினி அறிவியல் பயின்றேன், சில குடும்ப சிக்கல்கள் காரணமாக முதலாமண்டில் 8 பேப்பர்ஸ் அரியர் வைக்க வேண்டியதாயிற்று. பின்பு கடும் முயற்சியால் (நான் தமிழ் வழியில் வந்தேன் பள்ளிகளில்) இரண்டாம் ஆண்டு முடிவில் அனைத்து அரியர்களிலும் தேர்வு பெற்றேன். ஆக கடும் போராட்டத்துக்குப் பின் இரண்டாண்டு முடிந்தது. இறுதி ஆண்டில் 3வது ப்ராஜக்ட் மற்றும் இன்ன பிற காரணத்தால். அதிக கவனம் செலுத்த இயலாமல் 69 சதவீதத்தில் தேறினேன்.

  Like

 10. அன்பின் ராஜா… உங்கள் கதை வலியூட்டுகிறது. உங்களுக்கு வேலை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். வேலை கிடைக்க ஏதேனும் உதவி செய்ய என்னால் இயலுமானால் செய்கிறேன்.

  Like

 11. Hi Xavier
  My Dear Friend,

  Lets laugh for the inconsistent life and mystery which is unvisible to humanities. Just we can take everything as joy that are bad or good, we should survive for the rest of life that is also secret in universe. Who know the fact of circulating time.

  Just we get relax.

  Thanks
  RAJA – BANGALORE

  Like

 12. “அப்பா! இந்த சேவியர் அங்கிள் எழுதி இருக்கறதைப் படிச்சுப் பாருங்களேன்”

  “அப்பாவுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. நீயும் கண்டதையும் படிச்சிட்டிருக்காம டியூஷனுக்குக் கிளம்பற வழியப் பாரு”

  “அம்மா”

  “ஷ்ஷூ இன்னும் நீ கிளம்பலியா, அம்மாவுக்கு மாதர் சங்க மீட்டிங் இருக்கு. நைட் லேட்டாத் தன் வருவேன். டியூஷன்ல இருந்து வந்து ஃப்ரிட்ஜ்ல இருந்து ப்ரட் எடுத்து சாப்பிட்டுட்டு தூங்கணும். ஓகே?”

  *

  அப்புறம் ஏன் உங்க பட்டியல் பெருகாது?

  Like

 13. ராஜா சார்,

  ஒரு சுவர்ப்படத்தில் படித்த வாசகம்: “உங்களுடைய இத்தனை வருட, இத்தனை மாத, இத்தனை நாட்கள், இத்தனை மணி நேர வாழ்க்கையை சபலமான ஒற்றை விநாடி தீர்மானிப்பதா?”

  Like

 14. Hai Ratnesh,

  I dont try to say that committing suicide is correct solution for everything.
  There is option in that one is planning another accidental. But Im also not in the position to do. Sometimes getting like that thoughts.

  Thanks
  RAJA – BGL

  Like

 15. ஹாய் இரத்னேஷ்,

  நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எண்ணவில்லை. ஆயினும் கவலைகள் நெருக்கும் போது (அதீத போதையில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு நிச்சயமாக தெரியாது, (எனக்கு எந்த விதமான தீய பழக்கவழக்கங்களும் இல்லை)) என் நினைவிலிருந்து தவறி ஏதாவது நடந்துவிட்டால், யாரால் தடுக்க முடியும். தவறுகள் செய்து விட்டு தப்பிக்க முடியாமல் விழிப்பவர்கள், திட்டமிட்டு தங்களை முடித்துக் கொள்வார்கள். எம் போன்றவர் செயல், முடிவு, கணிக்க இயலாதது.

  நான் சூழ்நிலைக் கைதியல்ல, எவை என்னை நெருக்குகிறதோ, அதனை முறிக்க இயம்புகிறேன். நான் எண்ணை தனிமைப் படுத்தி தொடர்புகளுக்கு அப்பால் இருப்பது ஒரு விதத்தில் நான் விடுதலை அடைய உதவக் கூடும்.

  இவைகளால் தான் முன்னோர்கள்
  “நல்லதே நினை நல்லதே நடக்கும்” என்று சொல்லி இருக்கிறார்களோ?

  நன்றி
  இராஜா-பெங்களூரூ

  Like

 16. hello sir,
  i read raja letter in ur blog, this story applicable to me,but now i start in new business ie IFA (mutual fund advisor),its starts well level
  now my business is begining stage only. i think it will takes in stable in a 6 months .that time i want some men power.if raja interested he will join with me.
  pls forward raja.
  in my detail
  i completed mba finance in 2001 but not yet get good job,so i start business .if raja doesn,t get job with in 6 months pls conduct me through mail.

  bye sir.

  Like

 17. .யாரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.உலகத்தின் மீது வெருப்பு,என் எதிர்காலம் குறித்த பயம்,எல்லாம் சேர்ந்து என்னையும் அந்த படுகுழியில் தள்ள முயற்சிக்கின்றன.இப்போது மலேசியாவில் தங்கி வேலை பார்க்கிறேன்.இன்னும் 20 தினங்களில் விசா முடிந்து இந்தியா திரும்புகிறேன்.அதன் பிறகே என் நிலை என்ன என்பது தெரியவரும்.அதுவரை அந்த முடிவை ஒத்திவைத்துள்ளேன்.கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.எங்காவது ஓடிப் போய் விடலாமா? என தோன்றுகிறது.
  //என்னைப் போன்று விரக்தியில் உள்ளவர்கள்,வாழ்க்கையை வெறுத்து வாழ்பவர்கள் அனைவரின் வேதனைகளை பகிர்ந்து கொள்ள நீங்கள் ஒரு பதிவை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

  Like

 18. Hai Dear / Friend / Sir / Mr. Selvam,

  உங்களுக்கு தயக்கம் இல்லை எனில் என்ன பிரச்சினைகள் என்று இங்கு பகிர்ந்து கொள்ளவும். யாரேனும் அதற்கான தருவாயில் இருப்பின் தற்காத்துக் கொள்ள உதவும். நேரடியாகவோ அல்லது கோடிட்டு காட்டியோ குறிப்பிடலாம். முதலில் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எதனால் அவ்வாறான எண்ணங்கள் எழுகின்றன என்பது போன்றவற்றை….. நமக்கு நேர்ந்தது மற்றொருவருக்கு நிகழாதிருக்க

  நன்றியுடன்
  இராஜா – பெங்களூரூ

  Like

 19. //என் வாழ்வின் போக்கு மாறியிருப்பதால் நண்பரிகளிடமிருந்து விளகிச் சென்று கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், நான் விரைவில தவறான முடிவை எடுக்க நேர்ந்தால் என்னால் யாரும் பாதிக்கப் பட கூடாது என்ற எண்ணமே. நல்லா இருப்பவர்களை வாழ்த்த நினைக்கிறேன். அவ்வளவே//நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எண்ணவில்லை. ஆயினும் கவலைகள் நெருக்கும் போது (அதீத போதையில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு நிச்சயமாக தெரியாது, (எனக்கு எந்த விதமான தீய பழக்கவழக்கங்களும் இல்லை)) என் நினைவிலிருந்து தவறி ஏதாவது நடந்துவிட்டால், யாரால் தடுக்க முடியும். தவறுகள் செய்து விட்டு தப்பிக்க முடியாமல் விழிப்பவர்கள், திட்டமிட்டு தங்களை முடித்துக் கொள்வார்கள். எம் போன்றவர் செயல், முடிவு, கணிக்க இயலாதது.

  //நான் சூழ்நிலைக் கைதியல்ல, எவை என்னை நெருக்குகிறதோ, அதனை முறிக்க இயம்புகிறேன். நான் எண்ணை தனிமைப் படுத்தி தொடர்புகளுக்கு அப்பால் இருப்பது ஒரு விதத்தில் நான் விடுதலை அடைய உதவக் கூடும்.//
  நான் என்ன சொல்ல விரும்புகிறேனா அதையே நீங்களும் சொலியிருக்கிறீர்கள்.நன்றி ராஜா

  Like

 20. unga uyir ungal urimai illai

  purinthu kollungal nanapargaley

  ethanaiyo per uyir valvathargaga poradikondu erukirargal

  neengal tharkolai patri yosigathergal

  entha prachanai vanthalum ethirthu nillungal

  kaduval ungal pakkam nirparaga

  Like

 21. ஏம்ப்பா எல்லாரும் இப்படி விரக்தியா இருக்கீங்க….. நாங்களெல்லாம் +2 வில் நல்ல மார்க் எடுத்து அதுக்கு மேல படிக்க வசதி இல்லாம 50 காசு, ஒரு ரூபாய்க்கு பட்டாணி, நிலக்கடலை, பொரி கடலை வித்துருக்கோம்…. வாழ்க்கை அங்கேயேவா முடிஞ்சு போச்சு… +2 படிச்ச நானே இப்ப மாசம் 30,000 ரூபாய் வெளிநாட்டில் சம்பாதிக்கிறேன். இந்தியா வந்தா 15,000 ரூபாய்க்கு குறையாம வேலை ரெடியா இருக்கு. நீங்க எல்லாம் எனக்கே புரியாத என்னன்னமோ படிச்சு இருக்கீங்க… போங்கப்பா போய் இந்த வறட்டுக் கெளரவத்தை விட்டுட்டு என்ன வேலை கிடைச்சாலும் பாருங்க… நீங்க தான் டாடா, பிர்லா எல்லாம்…. தைரியமில்லா ஆளுங்களா இருக்கீங்க

  Like

 22. enakum sila samayangalil appadi thondruhirathu. karanam kathal than. engalukul nalla udanbadu irukirathu. anal jathi peyari solli pirikirarhal. indiavil innum intha palakkam maravillai. nangal iruvarum kalyanam seithukonndu oru pillai petru innoru pillai thathu eduka asai pattom. en appa mana nilai sari illathavar. sonthangal ellorum suyanala vathigal. appa ippadi iruppathal yarum ottuvathillai. periyavargalin aasiyudan than kalyanam seiya ninakirom. avargalukku theriyamal seivathai throhamaha ninaikirom. avaruku veru pen parkirarhal. ammavitkaha vala asai. athe samayam innoru pennodu avarai ninathu kooda parka mudiavillai. intha vethanai thinam thinam anubavippathrku ore adiyai poi vidalam endru thondruhirathu. nagal iruvarum pesinal avarin petror thatkolai seithu kolvom endru mirattuhindranar. avrum ennai maranthu vidu endru ennidam solhirar. intha nilamayil enna seiya mudium?

  Like

 23. தோழி கோமதி… வாழ்க்கை என்பது காதலுடன் முடிகிறது என நினைப்பது தான் முட்டாள் தனம். காதல் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்யவேண்டுமென்றால் இன்றைய தேதியில் பூமியில் யாருமே மிஞ்சியிருக்க மாட்டார்கள்.

  சில வருடங்கள் கழித்து, நீங்கள் தற்கொலை செய்யாததற்காய் ரொம்பவே சந்தோஷப்படுவீர்கள். அப்போது வந்து பின்னூட்டமிடுங்கள்.

  Like

 24. நான் தற்கொலை செய்துக்கொள்ள விரும்புகிறேன். என்னால் முடியவில்லை இந்த உலகில் வாழ்வதற்கு. எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். உங்களில் யாருக்கவடு நல்ல மனதிருந்தால் எனக்கு தற்கொலை செய்துக்கொள்ள உதவி செயுங்கள். நான் இலங்கை நாடைச்செர்ந்டவன். வாழ்கையில் தோல்விகளை அதிகம் சந்தித்த மனிதன் நான் சாஜஹான்.

  Like

 25. ஷாஜகான் நீங்க ரொம்ப தப்பான முடிவை எடுத்து இருக்கீங்க..
  தற்கொலை செய்து கொண்டால் மாத்திரம் உங்களது பிரச்சினை முடிந்து விடும் என்று என்னுகிர்களா ?
  உங்களது பெயரை பார்க்கும் பொது நீங்கள் ஒரு முஸ்லிம் என்று நினைக்கிறான்..
  இஸ்லாம் மதத்தில் தற்கொலை பற்றி என்ன சொல்லப் படுகிறது ? நீங்க அல்லாஹ்வை ஈமான் கொள்ளவில்லையா ?
  நீங்கள் எடுத்த முடிவிற்கு என்னதான் அப்படி காரணம் சொல்ல போறிங்கள் ?
  இந்தப் பதிவை ஒருமுறை வாசித்து பாருங்கள்..
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  ராஜ மிகவும் வருத்தமாக இருந்தது உங்கள் பதிவை பார்க்கும் பொது…..
  உங்களுக்கு வேலை கிடைக்க நானும் இறைவனை பிராதிக்கிரன்..
  உங்கள் பதிவு கடைசியாக பதிவாகி உள்ளது..
  இல் நீங்கள் ஒரு புதிய வாழ்கை வாழ்ந்து கொண்டு இருபிர்கள் என்று நம்புகிறேன்..
  காலம் நிச்சயம் பதில் சொல்லும்..
  ============================================
  நானும் ஒருவகையில் பதிகப் பட்டவன் தான்.. ஆனால் உங்களைப் போன்று வாழ்கையில் சோர்வடையவில்லை..
  ஒரு எதிர் நேச்சல் போட்டுகொண்டு இருக்கிறேன் .. எனது கதையா அறிய : https://sirippu.wordpress.com/2009/12/06/cheating/

  Like

 26. //நான் தற்கொலை செய்துக்கொள்ள விரும்புகிறேன். என்னால் முடியவில்லை இந்த உலகில் வாழ்வதற்கு. எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள்//

  எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்று ஆத்திரத்தில், தற்கொலை அது இது என்ன நீங்களே உங்களை ஏமாற்ற முயலலாமா சகோதரா ?

  Like

 27. unga uyir ungal urimai illai……………………. INTHA LINE SUSIDE PANNA PAYANTHAVANGA SONNATHU……………..

  Like

 28. //unga uyir ungal urimai illai……………………. INTHA LINE SUSIDE PANNA PAYANTHAVANGA SONNATHU……………..//

  வாழப் பயந்தவர்கள் ஒளியும் இடம் தானே தற்கொலைச் சுரங்கம் !

  Like

 29. Dear sir, Nanum Tarkolai seidhu kolla mudiveduthen en enral enakum inge iruka pudikkavillai ennai en kanvar ellar munnilailum asingapaduthivitar

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s