புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

 

வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம்.

சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.

கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.

இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?

நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.

இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம்.  நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.

புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.

இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.

32 comments on “புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

 1. இதை பற்றி விஜய கோபால் சாமி சித்தப்பு ஏற்கனவே சொன்னாரு… சீனா போன போது தேடி பாருன்னு கேட்டாரு. சித்தப்புக்கு இந்த மாசம் திருமணமாம். போன் போட்டு ஒரு வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா போன் கிடைக்க மாட்டுது. தெலுங்குல மிஷின் பேசுது :(.

  என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகம் கிடைக்குமா? ‘பேட்டரி’ முடிஞ்சாலோ இல்ல மின்சாரம் இல்லைனாலோ ஒன்னும் வாசிக்க முடியாது…

  Like

 2. நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. விலை, கிடைக்கும் விவரம் பற்றி எல்லாம் சொல்ல வேண்டாமா?

  Like

 3. /பேட்டரி’ முடிஞ்சாலோ இல்ல மின்சாரம் இல்லைனாலோ ஒன்னும் வாசிக்க முடியாது…//

  ஒரு பாட்டரி வாங்கி போடறது பெரிய மேட்டரா தம்பி… கரண்டு கட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை 😀

  Like

 4. /விலை என்ன்வென்று சொல்லவில்லையே நீங்கள்//

  பிரிட்டனில் கிடைக்கிறதாம், விலை 199 பவுண்டுகள். வாங்கினால் நூறு பிரபலமான ஆங்கில நாவல்களின் இ-புக் இலவசமாம் !!!

  Like

 5. //நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. விலை, கிடைக்கும் விவரம் பற்றி எல்லாம் சொல்ல வேண்டாமா?

  //

  மன்னியுங்கள், விடுபட்டு விட்டது. பிரிட்டனில் கிடைக்கிறது. விலை 199 பவுண்டுகள். 100 நாவல்கள் இலவசம் 🙂

  Like

 6. இரவல் கொடுத்தவை திரும்ப வராமல் எவ்வளவோ புத்தகங்கள் போய்விட்டன. இதை இரவல் கொடுக்க / கேட்க முடியாது, எளிதில் தவிர்க்கலாம்.

  என்னதான் மின்புத்தகம், ஈபேப்பர் வந்தாலும் புத்தகமாக வாங்கிப் படித்தால் தான் திருப்தி வருகிறது.

  Like

 7. மிக நல்ல விஷயம்.
  இந்திய மக்கள் வாங்கும் விலையில் அரசு இதை சந்தைபடுத்தினாலோ , பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமான மானியம் வழங்கியோ கட்டாயம் விநியோகம் செய்தால் மாணவர்களுக்கு பொதி மூட்டை சுமப்பது நிச்சயம் குறையும்.

  Like

 8. //பிரிட்டனில் கிடைக்கிறது. விலை 199 பவுண்டுகள். 100 நாவல்கள் இலவசம்//

  ஒரு “நல்ல” நண்பரைத் தேட வேண்டிய அவசியம் இருக்கும் போலிருக்கிறதே!

  Like

 9. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு தான். என் கணவருக்கு நிச்சயம் இது தேவைப்படும். ஊருக்கு செல்லும் போதெல்லாம் புத்தகத்திற்கின்றே தனி பை வைத்திருப்பார். அதை தூக்கவே முடியாது அந்த அளவுக்கு எடை இருக்கும். லெட்சுமணன் சொன்ன மாதிரி தமிழ் புத்தகத்தையும் படிக்க முடியுமா!

  Like

 10. சோனி ரீடரில் யூனிகோடுக்கு சப்போர்ட் இல்லை.

  சோனி ரீடர் போலவே அமேசானின் கிண்டில் (Kindle) என்ற புத்தகம் படிக்கும் கருவி இருக்கு. பல வேலைகள் செய்யும் ஆனால் பார்க்க நம்ம காயாலங்கடை டப்பா மாதிரியே இருக்கும்!

  Like

 11. //இந்திய மக்கள் வாங்கும் விலையில் அரசு இதை சந்தைபடுத்தினாலோ , பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமான மானியம் வழங்கியோ கட்டாயம் விநியோகம் செய்தால் மாணவர்களுக்கு பொதி மூட்டை சுமப்பது நிச்சயம் குறையும்///

  அட ஆமா ! நல்ல ஒரு சிந்தனை.

  Like

 12. //மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு தான். என் கணவருக்கு நிச்சயம் இது தேவைப்படும். ஊருக்கு செல்லும் போதெல்லாம் புத்தகத்திற்கின்றே தனி பை வைத்திருப்பார். அதை தூக்கவே முடியாது அந்த அளவுக்கு எடை இருக்கும். லெட்சுமணன் சொன்ன மாதிரி தமிழ் புத்தகத்தையும் படிக்க முடியுமா//

  நல்லது ரதிதேவி. ஒண்ணு வாங்கி குடுங்க 🙂 தமிழ் … தெரியல…

  Like

 13. //சோனி ரீடரில் யூனிகோடுக்கு சப்போர்ட் இல்லை.

  சோனி ரீடர் போலவே அமேசானின் கிண்டில் (Kindle) என்ற புத்தகம் படிக்கும் கருவி இருக்கு. பல வேலைகள் செய்யும் ஆனால் பார்க்க நம்ம காயாலங்கடை டப்பா மாதிரியே இருக்கும்!

  /

  பல கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டீங்க. நன்றி 🙂 பார்டர்ஸ் கூட Iliad என்றொரு ரீடர் வைத்திருப்பதாகக் கேள்வி.

  Like

 14. //199 பவுண்டு… யப்பா.. என் மாத சம்பளமே அதுக்குப் போயிடும்… வேணாம் டாய் சாமி

  //

  என்ன மயூரேசன் இப்படி சொல்லிட்டீங்க 😉

  Like

 15. /Onnu Oru rubainu rationla kodupangala???????

  //

  ரேஷன்ல என்ன குடுத்தாலும் மோசம்னு நினைக்கிறவங்க அதையும் வாங்க மாட்டாங்க 😀

  Like

 16. //eppadi irunthalum puthakathai thaluvikondu padikum sugam ithil kidai yathuenpathu than unmai//

  எல்லாமே முதலில் அப்படித் தான் தோன்றும். கணினியில் எழுதுவது கூட ஒருகாலத்தில் இப்படித் தான் விமர்சிக்கப்பட்டது. 🙂

  Like

 17. என்னதான் சொன்னாலும், புதுசா ஒரு புத்தகம் வாங்கினா வருமே அந்த மாதிரி வாசம் வருமா சொல்லுங்க.. 🙂
  நம்ம சாய்ஸ் புத்தகம்தான்.. ( atleast இன்னும் கொஞ்ச நாளைக்கு )

  Like

 18. என்னதான் இருந்தலும் புக் மதிரு வருமா????

  இப்பவே ! கம்ப்யூட்டர்,டி.வி பாக்கதங்கரங்க அதை வாங்கினால் எதையுமே பக்கதன்னு செல்லுவாங்க!!!!

  Like

 19. //என்னதான் சொன்னாலும், புதுசா ஒரு புத்தகம் வாங்கினா வருமே அந்த மாதிரி வாசம் வருமா சொல்லுங்க..
  நம்ம சாய்ஸ் புத்தகம்தான்.. ( atleast இன்னும் கொஞ்ச நாளைக்கு )

  //

  எனக்கும் அப்படித் தான் 🙂 எப்போதுமே பழக்கத்தை மாத்திக்க கொஞ்சம் நாளாகும் ! 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s