குண்டாயிருக்கீங்களா ? நீங்க அறிவாளிதான் போல !!!

உங்க உடம்பு ரொம்ப குண்டா இருக்கா ?, நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !! என்கிறது கனடா நாட்டு ஆராய்ச்சி ஒன்று. மூளையைக் கசக்கி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமனாக வாய்ப்பு இருக்கிறது என்பதே அந்த ஆராய்ச்சியின் மையம்.

அதாவது நல்ல அறிவு சார்ந்த வேலைகளைச் செய்யும் போது உடலுக்கு நிறைய கலோரி சக்தி தேவைப்படுகிறதாம். எனவே அந்தத் தேவையை நிவர்த்தி செய்ய அதிகம் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகுமாம். அதிகம் சாப்பிட்டால் குண்டாவோம் என்பதைத் தனியே சொல்லவும் வேண்டுமா ?

இவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் பல்வேறு தேர்வுகளை வைத்து ஒவ்வொரு தேர்வுக்கும் எவ்வளவு கலோரி உடலுக்குத் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கெடுத்திருக்கிறார்கள். குறைவாக மூளையைப் பயன்படுத்த வேண்டிய வேலை செய்தவர்களுக்கு மிகவும் குறைவாகவே சக்தி தேவைப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் கலோரி, செய்யும் வேலையைப் பொறுத்து மூன்று கலோரியோ முன்னூறு கலோரியோ என ஒழுங்கில்லாமல் அதிகரிக்குமாம். இப்படி அதிகரிக்கும் போது உடலுக்கு ஏதாவது சாப்பிட வேண்டி வருகிறது, அது உடலில் சேர்கிறது.

இவர்களுக்கு குருதிச் சோதனையும் நிகழ்த்தப்பட்டது. தேர்வுக்கு முன் குருதி சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். பிறகு தேர்வின்போதும் சோதனை செய்திருக்கிறார்கள். முதலில் அமைதியாய் இருந்த குளுகோஸ் அளவும் இன்சுலின் அளவும் மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய அறிவு சார் வேலை வந்தபோது எக்குத் தப்பாக எகிறியிருக்கிறது.

இது உடலுக்கு அதிக உணவு வேண்டுமெனக் கேட்கும். உட்கார்ந்து மூளையைக் கசக்கி வேலை செய்பவர்கள் பொதுவாகவே உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். எனவே இவர்கள் அதிகம் உண்டு, குறைவாய் உடற்பயிற்சி செய்து அதிக எடையுடன் கூடியவர்களாக மாறி விடுகின்றனர்.

இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவைச் சொல்லியிருக்கிறது கனடாவின் கியூபக் நகரில் அமைந்துள்ள லாவல் பல்கலைக்கழகம்.

இனிமேல் யாராவது, “என்னப்பா ரொம்ப குண்டாயிட்டே, தொப்பை வேற யானைக் குட்டியாயிடுச்சு” என்று கிண்டலடித்தால்,

“என்னப்பா… உன்னை மாதிரியா, எனக்கு மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டியிருக்கு இல்லையா” என சிரித்துக் கொண்டே சொல்லி விடுங்கள்.

19 comments on “குண்டாயிருக்கீங்களா ? நீங்க அறிவாளிதான் போல !!!

 1. //இனிமேல் யாராவது, “என்னப்பா ரொம்ப குண்டாயிட்டே, தொப்பை வேற யானைக் குட்டியாயிடுச்சு” என்று கிண்டலடித்தால்,

  “என்னப்பா… உன்னை மாதிரியா, எனக்கு மூளையைக் கசக்கி வேலை செய்ய வேண்டியிருக்கு இல்லையா” என சிரித்துக் கொண்டே சொல்லி விடுங்கள்.//

  பதிவு எழுதுவது எந்த வகையில் வரும் என்று சொன்னீர்கள் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் பதில் தயாரித்துக் கொள்ளலாம்.

  Like

 2. Intha araichi mudivigalai engal melathigarigaluku anupi vaithal mega ubayogamaga irukum.!!!!gymku povathai niruthuvathai thavira veru vaxhi illai….. 🙂

  Like

 3. ஆஹா! சரியான உடற்பயிற்சி செய்யாமல் குண்டான என்னைப்போல் சோம்பேரிகளை அறிவு ஜீவியாக்கின சேவியெருக்கும் அனந்த கோடி நன்றிகள்.
  கமலா

  Like

 4. //ஆஹா! சரியான உடற்பயிற்சி செய்யாமல் குண்டான என்னைப்போல் சோம்பேரிகளை அறிவு ஜீவியாக்கின சேவியெருக்கும் அனந்த கோடி நன்றிகள்.//

  Me tooooooooooooooooooo.

  first, I want to tell this to my huband, he is not believing me at all.

  Like

 5. //first, I want to tell this to my huband, he is not believing me //
  அடடா!
  அடப்பாவமே எந்த ஹஸ்பண்டு நம்மை அறிவு ஜீவின்னு ஒத்துக்கப் போறாங்க?
  நாமளே ஜாலியாக சொல்லிக்கிட்டு ஜாலியா வலம் வராம எதுக்கு ஹஸ்பண்டுகிட்ட போய் சொல்லி வேண்டாத பகையை வளர்க்கிறீங்க?
  நான் என்ன சொல்ல வரேன்னா ஹஸ்பண்டு தவிற மத்தவங்க கிட்ட சொல்லி சந்தோஷப்படுவோமே.
  எப்படி?
  ஜாலியாஹக்
  கமலா

  Like

 6. /பதிவு எழுதுவது எந்த வகையில் வரும் என்று சொன்னீர்கள் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் பதில் தயாரித்துக் கொள்ளலாம்.

  /

  பெரிய கேள்வி… என்னிடம் பதிலில்லை 😀

  Like

 7. /Intha araichi mudivigalai engal melathigarigaluku anupi vaithal mega ubayogamaga irukum.!!!!gymku povathai niruthuvathai thavira veru vaxhi illai….. //

  நீயே ஒரு மேலதிகாரியாச்சேப்பா… உனக்கு மேலதிகாரி யாரு 😉

  Like

 8. /ஏதோ உண்டாயிருக்குறிங்களானு கேட்குற மாதிரி இருக்கு //

  என்னாடா… அண்ணனை இன்னும் காணோமேன்னு பாத்தேன் 😀

  Like

 9. /ஆஹா! சரியான உடற்பயிற்சி செய்யாமல் குண்டான என்னைப்போல் சோம்பேரிகளை அறிவு ஜீவியாக்கின சேவியெருக்கும் அனந்த கோடி நன்றிகள்.
  கமலா

  //

  நான் இல்லீங்க… ஏதோ பெரியமனுஷங்க ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க 😀

  Like

 10. /Me tooooooooooooooooooo.

  first, I want to tell this to my huband, he is not believing me at all.

  //

  ஒல்லியா இருக்கிற ஹஸ்பண்டுகளுக்கு வர பிரச்சனையே இது தான் 😀

  Like

 11. /நாமளே ஜாலியாக சொல்லிக்கிட்டு ஜாலியா வலம் வராம எதுக்கு ஹஸ்பண்டுகிட்ட போய் சொல்லி வேண்டாத பகையை வளர்க்கிறீங்க//

  அட உலகமே !!!!

  Like

 12. நான் மூளையையும் பாவிக்குறதில்லை. உடம்பையும் பாவிக்கிறதில்லை. அப்ப ஏன் குண்டாயிருக்கிறன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s