வரும் வழியில்… : ஒரு ரூபாய் அரிசி எப்படி ?


வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.

இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.

தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.

கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?

உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.

வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!

அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !

ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.

“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “

“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”

“சும்மா தாம்மா.. சொல்லுங்க “

“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.

எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.

உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?

ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !

25 comments on “வரும் வழியில்… : ஒரு ரூபாய் அரிசி எப்படி ?

 1. //அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ? // ஆளுங்கட்சி எதை செய்தாலும் எதிர்ப்பதுதான் தற்போதைய அரசியல்.

  Like

 2. அதென்னமோ நான் பார்ர்ர்ர்ர்ர்ர்ர்த்த வரையில் ரேஷன் அரிசியில் எலி புழுக்கை, கொஞ்சம் கல், தூசி, லைட் காபி கலரில், பழுத்துப் போனது போல, கொஞ்சம் துர்நாற்றம் [ஒருவேளை எலியோட வேலையா இருக்குமோ?] இப்படித் தான் விற்கப்படுகிறது….. பெரும்பாலும் கிராமங்களில்…..!

  அவர்கள் குறைந்த விலையில் வழங்குவது குற்றமில்லை. மொத்தமாக வினியோகிக்கும் அரிசியை மில்லில் கொடுத்து தீட்டி (தீட்டல்) தந்தால் அனைவருமே அதனை உண்ணலாம். அதுபோல கிடங்கை ஆடு, மாடு, கோழி, எலி, பூனை, கரப்பான் பூச்சி, எறும்பு போன்றவைகளிலிருந்து காப்பாற்றினால் தரம் இன்னும் நன்றாக இருக்கும்.

  இந்த மாற்றமெல்லாம் இல்லாத பட்சத்தில் எந்த ஆட்சியில் கொடுத்தாலும் ரேஷனில் அரசியல் (வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மிக அதிகமே…!!!) இருக்கும்

  Like

 3. Please stop talking nonsense like this. We are cooking the same rice in our house. If any body wants come to my home to eat. In TN we are having poor people those who are not having one rupee also to eat in village areas. Don’t think and talk by seeing the situation in chennai.

  Like

 4. பெரும்பாலும் நகரங்களில் நல்ல அரிசியாகவே போடுகிறார்கள். ஏனென்றால் அங்கு கேள்வி கேட்பார்கள் போல. ஆனால் பெரும்பாலான சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் புழுத்துபோன அரிசியையே போடுகிறார்கள். ரேசனுக்கு மூட்டைகள் வந்தவுடன் குத்திப்பார்த்து நல்ல அரிசி மூட்டையை தனியாக பிரித்து எடுத்து வைத்து விடுகிறார்கள். இதுதான் நடக்கிறது……

  Like

 5. வீட்டில் ரேஷன் அரிசியை வாங்குகிறோம் என்று சொல்வதையே கூட கௌரவக் குறைச்சலாகக் கருதுகிற மக்களுக்கிடையே வெளிப்படையாக இப்படி ஒரு பதிவு எழுதியமைக்காகவே சேவியருக்கு ஒரு பெரிய சல்யூட்.

  அலுவலக உணவகங்களில் உள்ள உணவுகளைக் குறித்து சக ஊழியர்களுக்கு எப்போதும் தாழ்வான எண்ணமே இருந்து வருகிறது. அத்தகைய கேலியான பேச்சுகளின் போது “இதுவும் கிடைக்காத எத்தனையோ மக்கள் இன்னும் இருக்கிறார்களே” என்று எண்ணிக் கொள்வேன்.

  சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பட்டிணிச் சாவுகளை செய்திகளின் வாயிலாக அறிந்ததிலிருந்து உணவின் அருமை முழுமையாகப் புரிந்தது. அன்றிலிருந்து என் தட்டு அல்லது இலைக்கு வரும் உணவில் ஒரு அரிசி கூட வீணாகாத அளவுக்கு சாப்பிட்டு வருகிறேன். சமைக்கும் போதும் வேண்டிய அளவுக்கு மேல் சமைப்பதில்லை.

  ஏதோ தோன்றியதை எழுதியிருக்கிறேன். பிடித்திருந்தால் கடைசிப் பத்தியில் சொல்லியிருந்ததை அனைவரும் பின்பற்றுங்களேன்.

  Like

 6. //வீட்டில் ரேஷன் அரிசியை வாங்குகிறோம் என்று சொல்வதையே கூட கௌரவக் குறைச்சலாகக் கருதுகிற மக்களுக்கிடையே வெளிப்படையாக இப்படி ஒரு பதிவு எழுதியமைக்காகவே சேவியருக்கு ஒரு பெரிய சல்யூட்//

  இன்றைய நிலையில் நான் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும்.. பள்ளி பருவத்தில் மதிய உணவு திட்டததாலும் / ரேஷன் அரிசியாலும் பயன் அடைந்தவன் என்று சொல்வதில் பெருமையே..

  //சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பட்டிணிச் சாவுகளை செய்திகளின் வாயிலாக அறிந்ததிலிருந்து உணவின் அருமை முழுமையாகப் புரிந்தது. அன்றிலிருந்து என் தட்டு அல்லது இலைக்கு வரும் உணவில் ஒரு அரிசி கூட வீணாகாத அளவுக்கு சாப்பிட்டு வருகிறேன். சமைக்கும் போதும் வேண்டிய அளவுக்கு மேல் சமைப்பதில்லை//

  விஜய் சொல்வது சரியே..

  சேவியர் அண்ணன்,

  ஒரு ரூபாய்க்கு பதிலாக… 4/- என்று இருந்தாலும் பரவாயில்லை கடத்தல் மன்னர்கள் செய்யும் வேலையை (பாலிஸ்) அரசே செய்து வழங்கினால் இன்னும் மக்கள் பலன் அடைவார்கள்… அல்லது ஏற்கனவே அரவை நடைபெறும் இடங்களிலேயே அதன் தரத்தை உயர்த்த முயற்சிக்கலாம்… முடியாது என்பது கிடையாது. அரசு அதிகாரிகளின் ஏளனமான போக்கு தான் காரணம். பலரை பார்க்கலாம் வீட்டிலோ ஆலயம் போன்ற இடங்களிலோ பிச்சை வழங்கும் போது ஒரு வித ஏளனபோக்குடன் விட்டெறிவார்கள், அது போலத்தான். மலிவு விலையில் வழங்கும் போது யார் தட்டி கேட்க முடியும் என்று இவர்களது மன நிலையும்..

  அரிசி கடத்தல் செய்திகளில் இருந்தே அதன் தரம் உயர்த்த படலாம் என்பதும் அப்படி உயர்த்தினால் அதில் கிடைக்க கூடிய லாபமும் அனைவருக்கும் தெரிந்ததே…

  வரும் காலங்களில் உணவு போன்ற துறைகளை கரை படியா ஒரு அரசு அதிகாரியிடமோ.. அல்லது ஒரு சமுக ஆர்வலரிடமோ ஒப்படைக்க வேண்டும், அரசியல் வாதிகளிடம் இருக்கும வரை லாப நோக்கத்தோடு தான் செயல் படுவார்கள், மக்களின் அக்கறை பேனப் பட போவதில்லை..

  இன்றை பொருளாதர நெருக்கடியில் இத்திட்டத்தினால் பல ஏழை குடும்பங்கள் பயனடைகின்றன என்பது உண்மையே.

  Like

 7. What you have written is OK. If opposing every move of the government is just a politics then this is what they (DMK) do when they are in the opposite side.

  Like

 8. Good post. Thanks !
  1)”வீட்டில் ரேஷன் அரிசியை வாங்குகிறோம் என்று சொல்வதையே கூட கௌரவக் குறைச்சலாகக் கருதுகிற மக்களுக்கிடையே வெளிப்படையாக இப்படி ஒரு பதிவு எழுதியமைக்காகவே சேவியருக்கு ஒரு பெரிய சல்யூட்//

  2)From the age of 6 years to age of 19 ( 13 years ). i had only ரேஷன் அரிசி .My family is little big . 7 members. So i can tell “ரேஷன் அரிசியாலும் பயன் அடைந்தவன் என்று சொல்வதில் பெருமையே”

  Its a good rice. Because of அர(சி)சியல் , its going waste almost (அரிசி கடத்தல்). If it is not good why அரிசி கடத்தல்???

  its a good thittam.

  இன்றை பொருளாதர நெருக்கடியில் இத்திட்டத்தினால் பல ஏழை குடும்பங்கள் பயனடைகின்றன என்பது உண்மையே.

  thai-tamilan
  bangkok
  Note : i do not know how to tpye in tamil.

  Like

 9. //ஆளுங்கட்சி எதை செய்தாலும் எதிர்ப்பதுதான் தற்போதைய அரசியல்.//

  தற்போதைய என்றில்லை, இந்திய அரசியல் இப்படித் தான் காலங்காலமாய் 🙂

  Like

 10. //அவர்கள் குறைந்த விலையில் வழங்குவது குற்றமில்லை. மொத்தமாக வினியோகிக்கும் அரிசியை மில்லில் கொடுத்து தீட்டி (தீட்டல்) தந்தால் அனைவருமே அதனை உண்ணலாம். அதுபோல கிடங்கை ஆடு, மாடு, கோழி, எலி, பூனை, கரப்பான் பூச்சி, எறும்பு போன்றவைகளிலிருந்து காப்பாற்றினால் தரம் இன்னும் நன்றாக இருக்கும்.

  //

  உண்மை ராஜா. கருத்துக்கு நன்றிகள் 🙂

  Like

 11. //Please stop talking nonsense like this. We are cooking the same rice in our house. If any body wants come to my home to eat. In TN we are having poor people those who are not having one rupee also to eat in village areas. Don’t think and talk by seeing the situation in chennai.//

  நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலை பாலாஜி. ஆனா, வருகைக்கு நன்றி 😉

  Like

 12. /ரேசனுக்கு மூட்டைகள் வந்தவுடன் குத்திப்பார்த்து நல்ல அரிசி மூட்டையை தனியாக பிரித்து எடுத்து வைத்து விடுகிறார்கள்//

  ஆமா… உண்மை தான் 🙂 நானும் பார்த்திருக்கிறேன். இருப்பதில் நல்லதை எடுப்பது !

  Like

 13. //சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பட்டிணிச் சாவுகளை செய்திகளின் வாயிலாக அறிந்ததிலிருந்து உணவின் அருமை முழுமையாகப் புரிந்தது. அன்றிலிருந்து என் தட்டு அல்லது இலைக்கு வரும் உணவில் ஒரு அரிசி கூட வீணாகாத அளவுக்கு சாப்பிட்டு வருகிறேன். சமைக்கும் போதும் வேண்டிய அளவுக்கு மேல் சமைப்பதில்லை.

  //

  நான் சிறுவயதிலிருந்தே அப்படித் தான். பசுமரத்தாணி போல பதிந்திருக்கின்றன பெற்றோரின் அறிவுரைகள் 🙂

  Like

 14. சாய்கணேஷ், ரொம்ப அருமையா படிப்படியா சொல்லியிருக்கீங்க. கேட்கவேண்டிய இடத்தில் கேட்டு, கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் சந்தோசம் !

  Like

 15. /What you have written is OK. If opposing every move of the government is just a politics then this is what they (DMK) do when they are in the opposite side.

  //

  அதே ! மறுக்கவில்லை 🙂

  Like

 16. /ம்ம்ம்ம் என்ன சொல்ல…//

  அதையும் யாராச்சும் வந்து சொல்லித் தருவாங்களா என்ன ? 😀

  Like

 17. நான் பார்த்த வரையில் கூட சமீபகாலமாக ரேஷனில் வழங்கப்படும் அரிசி நன்றாக உள்ளது.. அரசியல் ஆதாயத்துக்கு சொல்வது போல, அவ்வளுவு மோசம் இல்லை.. சில நேரங்களில் , வெளி மார்க்கெட்டில் 20 ரூ விற்கும் அரிசியை விட இது நன்றாக உள்ளது.. நாம் வாங்கும் போது எந்த மூட்டை பிரிக்கப்படுகிறது என்பது பொருத்து நமக்கு சுமாரான அல்லது நல்ல அரிசி கிடைக்கும்.. அதிர்ஷ்டம் இருக்கவேண்டும்.. மற்றபடி மோசமெல்லாம் இல்லை..

  Like

 18. tku mr saviour nd all our friends who hav sent the marumozhi. one thing, i also agree tat in the ration they issue good rice but it is not quality rice. every other person is recommending that the rice should be polished before issuing at the ration. this is a disservice as v lose the necessary nutrients we get from the rice if we polish the same. though the cooked rice may look, as we say, like malligai poovu, it is not healthy. what the government to do is to remove the dirt nd other alien matters from the rice nd shd issue it. the rationshop employees shd also adhere to ‘kadamai, kanniyam nd kattuppadu’. bye nd take care.

  Like

 19. oru roopaaiku arisi kidaipathu vena nejama irukalam thala… Aaana neenga TOP la pottu iruka One Rupee Note kidaikaradhu romba kastam…

  Oru roopaiku adha eduthu varra Shipping charge a patthathu… apuram epdi… Arisi oru roopaiku tharraan na ada vida kammiya Mannu dhan kidaikum… so adha mix panni thanduduvanga…

  Like

 20. yes
  it is true. i use only this rice for idli and dosa without adding anyother rice. the idli and dosa comes very finely

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s