இப்படியும் ஒரு நோய் !


ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போது உங்கள் உடலெல்லாம் தொப்பல் தொப்பலாக குருதியில் குளித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

அது உங்கள் உடலில் இருந்து வழிந்த குருதி எனவும், உடலில் காயம் ஏதும் ஏற்படாமலேயே உங்கள் உடலிலுள்ள குருதி சும்மா வழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தால் உங்கள் அதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் ?

அந்தப் பேரதிர்ச்சியில் இருக்கின்றாள் பதின்மூன்றே வயதான சிறுமி டிவிங்கில் திவேதி. கண்கள், தலை, மூக்கு, காது , கை, கால்கள் என உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் திடீர் திடீரென குருதி வழிய, உடலில் குருதியின் அளவு குறைந்து போய் பலவீனமும், வலியுமாய் கடந்த ஒரு வருடமாக கடின வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள் இந்த சிறுமி.

வெளி நாடுகளுக்குச் சென்றெல்லாம் மருத்துவம் பார்க்குமளவுக்கு வசதியற்ற இந்தச் சிறுமி வசிப்பது உத்திரபிரதேசத்தில். ஏதேனும் செய்து தன் மகளைக் காப்பாற்ற வேண்டுமே என தாய் தவியாய் தவித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கிறார் இவருடைய சகோதரி.

எல்லா கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விண்ணப்பங்கள் வைத்தாயிற்று. ஏதேனும் ஒரு கடவுள் மனமிரங்கி இந்த நோயைக் குணமாக்க மாட்டாரா எனும் ஏக்கத்தில் தவிக்கிறாள் சிறுமி. ஒரு நாள் ஐந்து தடவை முதல் இருபது தடவைகள் வரை உடலில் இருந்து குருதி வழிய துயரத்துடன் கழிகின்றன இவளுடைய பொழுதுகள்.

இப்படி ஒரு நோய் இருப்பதனால் பள்ளிக்கூடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டு தனியே வீட்டில் அமர்ந்து படிக்கும் நிலை இவளுக்கு. நண்பர்கள் யாரும் இல்லை, வந்து நட்புடன் உரையாடுவார் யாருமில்லை என நோயின் வலியை நிராகரிப்பின் வலி மிஞ்சுகிறது.

டைப் 2 வான் வில்பிராண்ட் நோயாய் இருக்கலாம் என லண்டன் மருத்துவர் டிரியோ புரோவன் தெரிவிக்க, டைப் 2 பிளாட்லெட் டிஸார்டராய் இருக்கலாம் என அகில இந்திய மருத்துவக் கழகம் தெரிவிக்க, ஊரிலுள்ளவர்களோ இது கடவுளின் சாபம் என குடும்பத்தினரை நோக்கிக் கூச்சலிடுகின்றனர்.

துயரங்களின் கூட்டுத் தொகையாய் நகரும் இந்தச் சிறுமியின் வாழ்க்கையில் ஒரு புதுமை நடந்தேறவேண்டும், இந்த நோய்கள் விரைந்தோட வேண்டும் என உங்களைப் போலவே விரும்புகிறது எனது மனதும்.

22 comments on “இப்படியும் ஒரு நோய் !

 1. படித்தவுடன் மனசு சரியில்ல ! ரொம்ப பாவம் அவள்!
  சீக்கிரம் குணமாகட்டும்.

  Like

 2. i pray good help to the girl.help is very going on your indian peoples.so i pray to give help mind.and i things one subject in the school studies in helping mind ok.

  Like

 3. கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
  சீக்கிரம் உதவிகள் கிடைத்து குணமாகட்டும்.

  Like

 4. 😦

  மேற்கண்ட பின்னூடங்களில் இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்கள்… இறைவனை வேண்டி இந்நோய் குணமாகும் என்றால் இது ஏற்படவும் இறைவன் தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்…

  அச்சிறுமி குணமடைய வாழ்துகிறேன்…

  Like

 5. துயரமான நோய். நோய் குணமடையட்டும் என்பதே அனைவரின் விருப்பமும். உங்கள் மனித நேய மனங்களைப் பதிவு செய்தமைக்கு நன்றிகள். உங்கள் மானசீக வாழ்த்துக்கள் நிச்சயம் அந்தச் சிறுமியை பலமடையச் செய்யும். நன்றிகள்.

  Like

 6. i felt very sorry for the little girl. she has to approach nd get cured by a qualified doctor. i pray to GOD the almighty to cure her ills. she can recite the DHANVANTHIRI SLOGA. to know this she can approach the SASTRIJI at her place. may GOD bless the child.

  Like

 7. திவேதிக்கு ஏற்பட்டுள்ள வினோதமான வியாதியை படிக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. விரைவில் நலம் பெற வாழ்த்துகின்றேன்.

  Like

 8. மிகவும் கவலையாக இருக்கிறது. அந்த சிறுமி குணமடைய வாழ்துகிறேன்.
  //ஊரிலுள்ளவர்களோ இது கடவுளின் சாபம் என குடும்பத்தினரை நோக்கிக் கூச்சலிடுகின்றனர்//
  இது அடுத்த கொடுமை.

  Like

 9. FOR ALL THE DISEASES TREATMENT IS AVAILABLE. TRY TO CONTACT ALTERNATIVE MEDICINE SIDES LIKE ACUPUNCTURE, AYURVEDIC, SIDDHA, UNANI, HOMEOPATHY IMMEDIATELY.

  DR. M.A. KABEER, MD
  FROM LONDON

  Like

 10. //FOR ALL THE DISEASES TREATMENT IS AVAILABLE. TRY TO CONTACT ALTERNATIVE MEDICINE SIDES LIKE ACUPUNCTURE, AYURVEDIC, SIDDHA, UNANI, HOMEOPATHY IMMEDIATELY.

  DR. M.A. KABEER, MD
  FROM LONDON
  //

  யுனானி ???? ம்ம்ம்ம்ம்….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s